முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, June 17, 2020

இலவச பேருந்து பயண அட்டை வரும் ஆகஸ்ட் மாதம் வரை செல்லுபடியாகும் - கலெக்டர்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டையை வரும் ஆகஸ்ட் மாதம் வரையில் புதுப்பிக்கத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் மாவட்டம் முழுவதும் சென்று வருவதற்கும், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் மாற்றுத்திறனாளி மாணவர்கள், பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள பயண சலுகை அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.


கடந்த 2019-2020 ஆண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட அரசுப் பேருந்து பயண சலுகை அட்டையை வரும் ஆகஸ்ட் வரை புதுப்பிக்காமல் பயன்படுத்திக் கொள்ளலாம். 

மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண்ணில் (04567-231410) தொடர்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


செய்தி: தினசரிகள்

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.