முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, November 18, 2020

வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

No comments :

வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் விருதுக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக, மதுரை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ந. லெனின் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:

 

தமிழகத்தில் வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்வரால் குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகிறது. வீர, தீர செயல்புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே இப் பதக்கத்தை பெற தகுதி படைத்தவராவர். பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்படும் இந்த பதக்கத்தைப் பெற வயது வரம்பு கிடையாது.2021-ஆம் ஆண்டு வழங்கப்பட உள்ள இப் பதக்கத்துக்கு தகுதியானவர்களைத் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வீர, தீர செயல்கள் மற்றும் அவை தொடர்பான ஆவணங்களுடன், மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையுடன் வழங்கப்பட வேண்டும்.

 

எனவே, வீர, தீர செயல்கள் புரிந்த தகுதியுள்ளவர்கள் https://awards.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பம் மற்றும் விவரங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.

 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நவம்பர் 19-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றார்

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.