(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, October 13, 2021

ராமநாதபுரம் மாவட்டத்தில் உரம் விநியோகம் தொடர்பாக புகார் அளிக்க மொபைள் எண்கள் அறிவிப்பு!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் உரம் விநியோகம் தொடர்பாக விவசாயிகள் புகார் அளிப்பதற்காக, அதிகாரிகளின் செல்லிடப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

இது குறித்து மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) ஆ.ம. காமாட்சி கணேசன் செவ்வாய்க்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு:

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் சம்பா பருவ நெல் விதைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது வரை மாவட்டத்தில் 543 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. இதுவரை 1,08,000 ஹெக்டேரில் நெல் சாகுபடி நடந்துள்ளது. தற்போது, நெல் 25 நாள்கள் பயிராக வளர்ந்துள்ளன.
இப்பயிருக்கு அடியுரமாக இட யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள், கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனையாளர்களிடம் இருப்பு வைத்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

மாவட்டத்தில் 134 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் 127 தனியார் உர விற்பனை நிலையங்கள் உள்ள நிலையில், உரத் தட்டுப்பாடு ஏதுமில்லை.

 

யூரியா 2,416 மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி. 1,240 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 172 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ் 1,306 மெட்ரிக் டன்னும், சூப்பர் பாஸ்பேட் 127 மெட்ரிக் டன்னும் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் இருப்பு உள்ளன.

 

விவசாயிக்கு அதிகபட்சம் 5 மூட்டை உரங்கள் மட்டுமே விற்கவேண்டும்.

 

மாவட்டத்தில் 82 உர விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், விதி மீறிய 4 கடைகளுக்கு உர விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் உரிமம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

 

உர விநியோகம் தொடர்பாக விவசாயிகள் புகார்களை தெரிவிக்க, மாவட்ட அளவில் வேளாண்மை உதவி இயக்குநர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) - 9443094193,

வேளாண்மை அலுவலர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) -9443861390. வட்டார அளவில் வேளாண்மை உதவி இயக்குநர், ராமநாதபுரம் - 978856733,

வேளாண்மை உதவி இயக்குநர் (திருப்புல்லாணி மற்றும் உச்சிப்புளி) - 9443226130,

வேளாண்மை உதவி இயக்குநர் (திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம்) -9750052410,

வேளாண்மை உதவி இயக்குநர் (பரமக்குடி) - 9443619721, வேளாண்மை உதவி இயக்குநர், (நயினார்கோவில் மற்றும் சத்திரக்குடி) - 9443090564,

வேளாண்மை உதவி இயக்குநர் (கமுதி) - 8870167153,

வேளாண்மை உதவி இயக்குநர் (முதுகுளத்தூர்) - 9443642248, வேளாண்மை உதவி இயக்குநர் (கடலாடி) -9942237653

 

ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment