(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, November 11, 2021

ராமநாதபுரம் மாவட்டத்தில் 191.10 மில்லி மீட்டர் மழை பதிவு!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் புதன்கிழமை காலை வரையில் 191.10 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

 

மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. மழையால் மாவட்டத்தில் உள்ள 1,691 வேளாண்மைக் கண்மாய்களில் திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் உள்ள பெரும்பாலான கண்மாய்கள் 70 சதவீதம் தண்ணீர் நிரம்பிக் காணப்படுகின்றன. கமுதி, முதுகுளத்தூர் பகுதிகளில் உள்ள வேளாண்மைக் கண்மாய்களில் பெரும்பாலானவை 40 சதவீதம் தண்ணீரால் நிரம்பியுள்ளன.

 


இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை மாலை முதல் புதன்கிழமை காலை வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு (மி.மீட்டரில்):

 

ராமநாதபுரம் 3,

மண்டபம் 17.60,

ராமேசுவரம் 23.40,

பாம்பன் 25.40,

தங்கச்சிமடம் 22.20,

பள்ளமோர்க்குளம் 5.,

திருவாடானை 13.80,

தீர்த்தாண்டதானம் 19.8,

தொண்டி 16.50,

வட்டாணம் 21.30,

ஆர்.எஸ்.மங்கலம் 9.10,

பரமக்குடி 5,

முதுகுளத்தூர் 2.20,

கமுதி 4.40,

கடலாடி 2.40

 

என மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 191.10 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதன்படி 15 இடங்களில் சராசரியாக 11.94 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

 

புதன்கிழமை காலை மற்றும் பகலில் ஓரிரு இடங்களில் சாரல் மழையே பெய்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment