முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, January 6, 2021

ராமேசுவரம்-திருச்சி ரெயில் 9 மாதத்துக்கு பிறகு மீண்டும் இயக்கம்!!

No comments :

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் அனைத்து ரெயில்களும் முழுமையாக ரத்து செய்யப்பட்டன. அதன் பின்னர் படிப்படியாக பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட்டு வருகின்றன. ராமேசுவரத்தில் இருந்து தினமும் சென்னைக்கு 2 ரெயில்களும், வாரத்தில் ஒரு முறை ஒடிசா மாநிலம் செல்லும் ஓகா எக்ஸ்பிரஸ் மற்றும் புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

 

கடந்த 9 மாதத்துக்கு பிறகு ராமேசுவரம்-திருச்சி இடையே நேற்று முதல் மீண்டும் இயக்கப்பட்டது. நேற்று காலை 7 மணி அளவில் திருச்சியில் இருந்து 10 பெட்டிகளுடன் புறப்பட்ட இந்த ெரயில் காரைக்குடி, தேவகோட்டை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம் மற்றும் பாம்பன் ரெயில்  பாலம் வழியாக பகல் 12 மணி அளவில் ராமேசுவரம் ெரயில் நிலையம் வந்தடைந்தது.

 


பின்னர் இந்த ரெயில்  மீண்டும் பிற்பகல் 2.50 மணி அளவில் ராமேசுவரம் ரெயில்   நிலையத்தில் இருந்து அதே வழியாக திருச்சிக்கு புறப்பட்டது.

 

9 மாதத்திற்கு பிறகு ராமேசுவரம்-திருச்சி இடையே இயக்கப்பட்டுள்ள இந்த ரயில் சிறப்பு ரெயிலாகவும், அதுபோல் முன்பதிவு செய்து மட்டுமே பயணம் செய்யும் வகையிலும் இயக்கப்படுகிறது.

 

இதே போல் ராமேசுவரம்-மதுரை வழித்தடத்திலும் வழக்கம்போல் பயணிகள் ரெயிலை இயக்க வேண்டும் என்று பயணிகளும், பொதுமக்களும் ரெயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.