முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, February 11, 2021

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரியில் நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கை!!

No comments :

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரிக்கு ஆகஸ்டில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும், என சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை செயலர் எஸ்.நடராஜன் தெரிவித்தார்.

 

 

சுகாதாரத்துறையில் நடைபெற்று வரும் திட்டங்களை ஆய்வு செய்வதற்காகவும் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள் கட்டமைப்பு, சிகிச்சை பிரிவுகளில் வசதிகள், தேவைகள் குறித்து ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஷில்பா, அஜய் யாதவ், எஸ்.நடராஜன், சிவஞானம், டீபக் ஜேக்கப் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 


 

இவர்களில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை செயலரான எஸ்.நடராஜன் தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, கடலுார், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.நேற்று அவர் ராமநாதபுரம் புதிய அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை கட்டுமானப்பணிகளை பார்வையிட்டார்.பின்னர் அவர் கூறியதாவது: கட்டடப்பணிகள் 48 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

 

 

நடப்பு ஆண்டில் ஆகஸ்ட் முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும்.பணிகள் நிலைமை குறித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்வேன். மருத்துவமனையில் சிகிச்சை வசதிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்துள்ளேன், என்றார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.