முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, June 27, 2021

ராமநாதபுரம் நகரிலிருந்து நாளை (ஜூன் 28) முதல் பேருந்து போக்குவரத்து!!

No comments :

ராமநாதபுரம் நகரிலிருந்து திங்கள்கிழமை (ஜூன் 28) முதல் மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலைப் பரவலைத் தடுக்கும் வகையில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. கடந்த 3 வாரங்களாக பேருந்துகள் இயக்கம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமுடக்க தளர்வுகளை அரசு அறிவித்துள்ள நிலையில், ராமநாதபுரத்திலிருந்து மதுரை உள்ளிட்ட இடங்களுக்கு பேருந்துகள் திங்கள்கிழமை (ஜூன் 28) முதல் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியது:

ராமநாதபுரத்திலிருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

 

அதே நேரத்தில் தஞ்சாவூர், திருவாதவூர், பட்டுகோட்டை, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படாது.

 

ராமநாதபுரம் பகுதியிலிருந்து புதுக்கோட்டைக்கு செல்லும் பேருந்துகள் எஸ்.பி.பட்டினம் வரை இயக்கப்படும். ராமநாதபுரம் நகர் பேருந்துகள், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை விதிகளைப் பின்பற்றி இயக்கப்படும் என்றனர்.

 

செய்தி: தினமணி


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

இலவச கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள

62 மெட்ரிக் பள்ளிகளில் 1043 இடங்கள்,

90 நர்சரி தொடக்க பள்ளிகளில் 841,

2 சுயநிதி பள்ளிகளில் 16

 

என மொத்தம் 1900 இடங்களுக்கு அரசின் இலவச கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் எல்.கே.ஜி., 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது. தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் ஜூலை 5-ந்தேதி முதல் ஆகஸ்டு 3-ந்தேதி வரை இணைய வாயிலாக சேர்க்கை நடைபெற உள்ளது. ஜூலை 3-ல் இடஒதுக்கீடு அனுமதிக்கப்பட்ட இடங்கள் குறித்த விவரம் கல்வித்துறை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

 


ஜூலை 5-ந்தேதி முதல் ஆகஸ்டு 3-ந்தேதி வரை www.rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப் பிக்கலாம்.ஆகஸ்டு மாதம் 9-ல் தகுதி வாய்ந்த மாணவர் பட்டியல் வெளியிடப்படும். ஆகஸ்டு 10-ல் இட ஒதுக்கீட்டிற்கு மேல் கூடுதலாக விண்ணப்பங்கள் இருந்தால் குலுக்கல் நடைபெறும். முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த வட்டார வள மைய அலுவலகம் ஆகிய இடங்களில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

 

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் சந்திரகலா தெரிவித்து உள்ளார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.