முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, October 27, 2021

வீரதீரச் செயல்களில் ஈடுபட்ட குழந்தைகள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் வீரதீரச் செயல்களில் ஈடுபட்ட குழந்தைகள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து மாவட்ட ஆட் சியர் சங்கர்லால் குமாவத் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

 

சமூகநலம் சத்துணவு திட்டத் துறை மூலம் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தைத் திருமணங்களைத் தடுக்கவும், பாடுபட்டு வீரதீரச் செயல் புரிந்துவரும் 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் வகையில், அதற்கான மாநில விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 


சேவை புரிந்த குழந்தைக்கு தேசிய பெண் குழந்தை தினத்தில் (ஜன.24) பாராட்டுப் பத்திரமும், ரூ.1 லட்சத்துக்கான காசோலையும் வழங்ப்படுகிறது.

 

எனவே, தகுதியான பெண் குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

விண்ணப்பங்களை தலைமையாசிரியர் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர், காவல்துறை, தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அலுவலர்கள் வாயிலாக, மாவட்ட சமூகநல அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

விவசாயிகள் அங்ககச்சான்று பெற விண்ணப்பிக்கலாம்!!

No comments :

மாவட்டத்தில் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை மட்டும் பயன்படுத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் அங்ககச்சான்று பெற விண்ணப்பிக்கலாம்.

 

விவசாயிகள் தனி நபராகவோ அல்லது குழுவாகவோ பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அங்கக விளை பொருட்களை பதப்படுத்துவோர், விற்பனை, ஏற்றுமதி செய்பவரும் பதிவு செய்யலாம். 


இதற்கு பண்ணையின் பொது விபரகுறிப்பு, பண்ணையின் வரைபடம்,ஆண்டு பயிர்த்திட்டம், மண், பாசன நீர் பரிசோதனை விபரம், நில ஆவணம், ஆதார் அட்டை நகல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றுடன் கட்டணம் செலுத்த வேண்டும்.கால்நடை வளர்ப்பு, தேனி வளர்ப்பு, வனப்பொருள் சேகரிக்கும் நபர்களும் பதிவு செய்யலாம். 



சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ரூ.2700, 

பிற விவசாயிகள் ரூ.3200, 

விவசாயிகள் குழுப்பதிவிற்கு ரூ.7200 

மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ரூ.9400 

என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.விபரங்களுக்கு விதைச்சான்று உதவி இயக்குனரை அணுகலாம்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.