முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, November 7, 2021

நவ. 12 ஆம் தேதி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பேச்சுப்போட்டி!!

No comments :

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஜவாஹர்லால் நேரு பிறந்த தினத்தையொட்டி வரும் நவ. 12 ஆம் தேதி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பேச்சுப்போட்டி நடத்தப்படுகிறது.

 

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் ம. சுசிலா சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

 

முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு பிறந்த தினத்தையொட்டி வரும் 12 ஆம் தேதி ராமநாதபுரத்தில் உள்ள சுவார்ட்ஸ் பள்ளியில் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

 


அதன்படி, பள்ளி மாணவர்களுக்கு முற்பகலிலும், கல்லூரி மாணவர்களுக்கு பிற்பகலிலும் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்கள், தொழிற் பயிற்சி மைய மாணவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்கலாம்.

 

போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு

முதல் பரிசு ரூ.5 ஆயிரம்,

இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம்,

மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

 

போட்டிகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் இருவர் தனியாகத் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் சிறப்புப் பரிசு வழங்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.