முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, November 17, 2021

ராமநாதபுரத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு நவ. 20 ஆம் தேதி திறன் போட்டிகள்!!

No comments :

 

நூலக வாரவிழாவை முன்னிட்டு ராமநாதபுரத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நவ. 20 ஆம் தேதி நடைபெற உள்ளன.

 

இதுகுறித்து மாவட்ட நூலகர் ஜி.ஞானஅற்புத ருக்மணி தெரிவித்ததாவது:

 

ராமநாதபுரம் மாவட்ட நூலகம் சார்பில் தேசிய நூலக வார விழா நிறைவு நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ. 21) பகலில் நடைபெறுகிறது.



விழாவை முன்னிட்டு பள்ளிக் குழந்தைகளுக்கு நவ. 20 ஆம் தேதி சனிக்கிழமை மாலையில் கட்டுரை, பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

 

இதில் வெற்றி பெறும் குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் பரிசுகள், பாராட்டுச் சான்றுகள் வழங்கப்படவுள்ளன.

 

விழாவில் நூலக வாசகர் வட்ட பிரமுகர்கள் மற்றும் நூலக அதிகாரிகள் பங்கேற்கின்றனர் என தெரிவித்துள்ளார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

சென்னை பட்டாளம் பகுதியில் முஸ்லிம்_யூத்_லீக் சார்பாக வெள்ள நிவாரணப்பணி!!

No comments :

 

சென்னை பட்டாளம் பகுதி கனகராய தோட்டம் (காவா மோடு) என்ற பகுதியில் சுமார் 75 க்கும்  மேற்பட்ட குடும்பத்திற்கு எந்த ஒரு நிவாரணப் பொருட்களும் வரவில்லை என்ற செய்தியை அறிந்து சென்னை மண்டலம் சென்னை மண்டல #முஸ்லிம்_யூத்_லீக் சார்பாக நேற்றைய தினம் உரிய நேரத்தில் அனைத்து  சமுதாய மக்கள் பயன்பெறும் வகையில் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. 

 


பயனாளிகளுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் அல்ஹாஜ் *KAM முஹம்மது அபூபக்கர்* Ex.MLA. அவர்கள் நிவாரண பொருட்களை அனைவருக்கும் வழங்கினார்

 

இந்த நிவாரணப்ணியில் ஏராளமான சமூக அர்வலர்கள் பங்கு கொண்டனர்.

 

தகவல்: கீழை ஹமீது ராஜா


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.