முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, November 30, 2021

கீழக்கரை நகராட்சியில் வார்டு மறுவரை குளறுபடிகளைச் சீரமைக்கக் கோரி ஆட்சியரிடம் மனு!!

No comments :

கீழக்கரை நகராட்சியில் வார்டு மறுவரையறையில் உள்ள குளறுபடிகளைச் சீரமைக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை பொதுமக்கள் மனு அளித்தனர்.

 

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள 21 வார்டுகளும் மறுவரையறைக்கு உள்படுத்தப்பட்டு சமீபத்தில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நகராட்சியில் மொத்த மக்கள் தொகை 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 47,730 பேர் உள்ளனர். ஆனால் வார்டுகள் மறுவரையில் முறையாக வாடுகளில் தெருக்கள் சேர்க்கப்படாத நிலையே உள்ளது. மேலும் வாக்காளர்களை சேர்ப்பதிலும் குளறுபடி காணப்படுகிறது. அதன்படி 598 பேர் தங்களது எதிர்ப்புகளை மனுக்களாக கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தில் அளித்துள்ளனர்.

 





இந்நிலையில், கீழக்கரை வார்டு மறுவரையறை குளறுபடிகளை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர்.

 

அப்போது அவர்கள் கூறியது:

 

நகராட்சித் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், கீழக்கரையில் வார்டு மறுவரையறை குளறுபடியை சீர்படுத்திய பிறகே தேர்தலை நடத்த வேண்டும். ஏற்கெனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் வார்டு குளறுபடிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம் என்றனர்.


செய்தி:
கீழை ஹமீது ராஜா


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.