Saturday, June 18, 2022
ராமநாதபுரம் மாவட்ட புதிய கலெக்டராக திரு. ஜானிடாம் வர்கீஸ் பொறுப்பேற்றுக்கொண்டார்!!
ராமநாதபுரம் புதிய
கலெக்டராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜானிடாம் வர்கீஸ் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினைக்கு
முக்கியத்துவம் கொடுப்பேன் என்று தெரிவித்தார்.
பணி பொறுப்பு
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த சங்கர்லால் குமாவத் மாற்றப்பட்டு அவருக்கு
பதிலாக மாவட்டத்தின் 26-வது கலெக்டராக ஜானி டாம் வர்கீஸ் நியமிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து
நேற்று பிற்பகலில் அவர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தனது பணி பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.
அதன்பின்னர் அவர்
நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசு மக்களுக்காக
செயல்படுத்தி வரும் அனைத்து திட்டங் களும் ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு முழுமையாக
போய் சேருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கை களையும் மேற்கொள்வேன். குறிப்பாக இந்த மாவட்டத்தின்
குடிநீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து அனை வருக்கும் தடையின்றி குடிநீர்
கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.
ராமநாதபுரம் மாவட்டம்
மத்திய அரசின் வளர்ந்து வரும் முன்னோடி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு இருப்பதால் அதற்கான
திட்டங்கள் அனைத்தையும் மக்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
வரலாற்று முக்கியத்துவம்
வாய்ந்த ராமநாதபுரம் மாவட் டத்தில் கலெக்டராக பொறுப்பேற்றதில் மகிழ்ச்சி அடை கிறேன்.
இந்த மாவட்டத்தில் தலைநகரில் அரசுப்பள்ளி இல்லை என்பதால் அரசின் கவனத்திற்கு கொண்டு
சென்று நடவடிக்கை எடுப்பேன்.
குழந்தை திருமணங்களை
தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். நடவடிக்கை நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டு உள்ள
ராமநாதபுரம் ரெயில்வே மேம்பாலம் பணியை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மாற்றுத்திறனாளிகள் துறையில் நான் பணியாற்றி வந்து உள்ளதால் அந்த துறையில் உள்ள திட்டங்களை
அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் கிடைக்க செய்வேன்.
இவ்வாறு தெரிவித்தார்.
அப்போது கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன்,
மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் பாண்டியன், உதவி அலுவலர் வினோத் உடன் இருந்தனர்.
செய்தி: தினசரிகள்
No comments :
Post a Comment