Friday, June 24, 2022
ராமநாதபுரத்தில் வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வீடுகள் பெற விண்ணப்பிக்கலாம்!!
ராமநாதபுரத்தில்
பட்டணம்காத்தான் பகுதியில் கட்டப்பட்டுள்ள வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில்
வீடுகளைப் பெற விண்ணப்பிக்கும் சிறப்பு முகாம்கள் வரும் 28, 29 (செவ்வாய், புதன்) ஆகிய
தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து
மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ராமநாதபுரம்
பட்டணம்காத்தான் பகுதியில் 264 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
வீடுகள்
ராமநாதபுரம் நகராட்சிக்குள்பட்ட பயனாளிகளுக்கு ஒதுக்கப்படவுள்ளன.
நகர்ப்புற
வீடற்ற, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு முன்னுரிமை அளித்து வீடுகள் ஒதுக்கப்படவுள்ளன.
இதில்
பயனடைய விரும்புபவர்கள் வரும் 28 மற்றும் 29 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்
நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களில் பங்கேற்கலாம்.
பயனாளிகள்
ரூ.5 ஆயிரத்துக்கான கேட்பு வரைவோலையை செயற்பொறியாளர்,
தமிழ்நாடு
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்
என்ற
முகவரிக்கு விண்ணப்பத்துடன் இணைத்து வழங்கலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments :
Post a Comment