(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, November 7, 2022

கீழக்கரை பகுதியில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேக்கம், தரமான சாலை அமைக்க கோரிக்கை!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி மக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.

 


கீழக்கரை தெற்கு தெரு பள்ளிவாசல் மற்றும் இஸ்லாமியா பள்ளி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் நடந்து செல்கின்றனர். தொழுகைக்காக ஏராளமான மக்கள் பள்ளிவாசல் வந்து செல்கின்றனர்.நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக செல்கிறது, இந்த நிலையில் ஜும்மா பள்ளிவாசல் செல்லும் வழியில் உள்ள சாலை பள்ளங்களுடன் சகதி நிறைந்த தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதியடைகின்றனர்.

 

கீழக்கரை நகராட்சிக்கு புதிய சாலை அமைக்கும் பணிக்காக அரசு பல்வேறு நிதிகள் ஒதுக்கீடு செய்த நிலையிலும் முக்கியமான சாலை நீண்ட நாட்களாக மோசமான நிலையில் காட்சியளித்து, எவ்வித நடவடிக்கையும் இல்லாமல் இருப்பது இந்த பகுதி மக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால நடவடிக்கையில் இந்த பகுதியில் தரமான முறையில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

செய்தி: மாலை மலர்

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment