முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, June 22, 2022

ராமநாதபுரத்தில் ஜூன் 23ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்!!

No comments :

ராமநாதபுரம் வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வழக்கமாக வெள்ளிக்கிழமை நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமானது, வியாழக்கிழமை (ஜூன் 23) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரான செ. மதுகுமார் செவ்வாய்க்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு:

 

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், வாரத்தில் வெள்ளிக்கிழமைதோறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதில், பத்தாம் வகுப்பு தேர்ச்சியடைந்தோர் முதல் பட்டதாரிகள் வரையில் தகுதிக்கு ஏற்ப தனியார் துறையினர் தங்களுக்கான பணியாளர்களைத் தேர்வு செய்து பணி நியமன ஆணைகளை வழங்கி வருகின்றனர்.

 


இந்நிலையில், ஜூன் 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் ஏர்வாடியில் சந்தனக்கூடு விழா நடைபெறுவதால், உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த வேலைவாய்ப்பு முகாமை, வியாழக்கிழமை (ஜூன் 23) நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

எனவே, வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்புவோர் தங்களது கல்விச் சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் வியாழக்கிழமை காலையில், ராமநாதபுரம் பட்டினம்காத்தானில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வரலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ராமநாதபுரம் பொறியியல் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்!!

No comments :

ராமநாதபுரம் அருகே உள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியில், பொதுவான பொறியியல் பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி முதல்வர் ஜோ. ஜெகன் செவ்வாய்க்கிழமை விடுத்தள செய்திக் குறிப்பு:

 

ராமநாதபுரம்-தேவிபட்டினம் சாலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி வளாகத்தில், பொறியியல் பட்டப்படிப்பில் சேருவோர் விண்ணப்பிக்கும் வகையில் இணையதள சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

 


தமிழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பில் சேருவோருக்காக அமைக்கப்பட்ட 110 மையங்களில், இக்கல்லூரி வளாக மையமும் ஒன்றாகும். எனவே, இக்கல்லூரி வளாகத்தில் அரசின் வழிகாட்டுதலின்படி, தினமும் காலை 9 முதல் மாலை 5 மணி வரையில் விண்ணப்பிக்கும் வசதி உள்ளது.

 

விண்ணப்பிக்க விரும்புவோர், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்து கல்லூரிக்கு நேரில் வரவேண்டும். உரிய அனைத்து ஆவணங்களையும் கொண்டு வரவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.