முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, August 23, 2022

டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கான அறிவிப்பாணை, செப்-21 விண்ணப்பிக்க கடைசி நாள்!!

No comments :

டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி 4 பிரிவுகளில் தலைமை செயலக பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக 161 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

சட்டம் மற்றும் நிதித்துறையை தவிர்த்த தலைமை செயலக பிரிவு அலுவலர் பணியில் 74 பேர்,
நிதித்துறையின் தலைமை செயலக பிரிவு அலுவலர் பணியில் 29 பேர்,
சட்டம் மற்றும் நிதித்துறையை தவிர்த்த தலைமை செயலக உதவியாளர் பணிக்கு 49 பேர்,
நிதித்துறைக்கான தலைமை செயலக உதவியாளர் பிக்கு 9 பேர்

என மொத்தம் 161 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தலைமை செயலக பிரிவு அலுவலர் (சட்டம் மற்றும் நிதித்துறை தவிர), தலைமை செயலக பிரிவு அலுவலர் (நிதித்துறை) பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.36,400 முதல் ரூ.1,34,200 வரையும்,


சட்டம் மற்றும் நிதித்துறையை தவிர்த்த தலைமை செயலக உதவியாளர் மற்றும் நிதித்துறைக்கான தலைமை செயலக உதவியாளர் பணிக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.73,700 வரையும் சம்பளம் கிடைக்கும்.

தலைமை செயலக பிரிவு அலுவலர் (சட்டம் மற்றும் நிதித்துறை தவிர), தலைமை செயலக பிரிவு அலுவலர் (நிதித்துறை) பணி ஆகியவற்றுக்கு விண்ணப்பம் செய்வோர் 35 வயதுக்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

நிதித்துறையை தவிர்த்த தலைமை செயலக உதவியாளர் மற்றும் நிதித்துறைக்கான தலைமை செயலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 30 வயதுக்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். விண்ணப்பத்தாரர்களின் வயதானது 01.07.2022 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.

தலைமை செயலக பிரிவு அலுவலர் (சட்டம் மற்றும் நிதித்துறை தவிர), சட்டம் மற்றும் நிதித்துறையை தவிர்த்த தலைமை செயலக உதவியாளர் மற்றும் நிதித்துறைக்கான தலைமை செயலக உதவியாளர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

 

தலைமை செயலக பிரிவு அலுவலர் (நிதித்துறை) பணிக்கு பிகாம் (B.com), பொருளாதாரம் (Economics), புள்ளியியல் (Statistics) பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பம் செய்யும்போது ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல்லுக்காக ரூ.150,

தேர்வு கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் குரூப் 5 ஏ தேர்வுக்கு இன்று முதல் வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

செப்டம்பர் 26ம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 18 ஆம் தேதி எழுத்துத்தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.