முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, September 28, 2022

ராமநாதபுரம் நகராட்சிக்கு புதிய கமிஷனரை நியமனம் செய்ய கோரிக்கை!!

No comments :

மாவட்ட தலைநகரான ராமநாதபுரம் நகராட்சியில் மூன்று மாதங்களாக கமிஷனர் பணியிடம் காலியாக இருப்பதால் வரி வசூல், நகர வளர்ச்சி திட்டப்பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. விரைவில் புதிதாக கமிஷனர் நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. 50 ஆயிரம் குடியிருப்புகளில் ஆண்டுக்கு ரூ.17கோடி வரை வரி வசூலிக்கப்பட வேண்டும். நடப்பாண்டில் 25 சதவீதமாக சொத்துவரி, குடிநீர், பாதாள சாக்கடை, தொழில்வரி ஆகிய வரி வசூல் வெகுவாக குறைந்துள்ளது. நகராட்சியில் 157 பேர் பணியாற்றுகின்றனர். தற்காலிக பணியாளர்களும் உள்ளனர். மாதந்தோறும் ரூ.60 லட்சம் வரை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டியுள்ளது.

போதிய நிதியின்றி நகராட்சி நிர்வாகம் திணறுகிறது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு கமிஷனர் சந்திரா நீண்ட விடுப்பில் வெளியூர் சென்று விட்டார். இதனால் கடந்த 3 மாதங்களாக கமிஷனர் பணியிடம் காலியாக உள்ளது. காரைக்குடி கமிஷனர் லட்சுமணன் கூடுதல் பொறுப்பில் உள்ளார். இவரும் வாரத்தில் ஒருநாள் வந்து செல்கிறார்.

 


முழு நேர கமிஷனர் இல்லாததால்,

நகராட்சி வரி வசூல் மற்றும்
நகரில் ரூ.3 கோடி மதிப்பிலான டிஜிட்டல் நுாலகம் பணி, பஸ்ஸ்டாண்ட் விரிவாக்கம் பணி,
வீடுகளுக்கு குடிநீர் விநியோகம்,
பாதாளசாக்கடை செப்பனிடுதல்

உள்ளிட்ட நகர வளர்ச்சிப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

 

தற்போது தலைவர் கார்மேகம் மேற்பார்வையில் ஊரணி வரத்து வாய்க்கால்களை துார்வாரும் பணி துவங்கியுள்ளது. இப்பணிகளை விரைந்து செயல்படுத்த ராமநாதபுரம் நகராட்சிக்கு புதிய கமிஷனரை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும், என மக்கள் வலியுறுத்தினர்.

செய்தி: தின்சரிகள்



(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.