முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, November 14, 2022

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!!

No comments :

ராமநாதபுரம் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற சிறுபான்மை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 

சிறுபான்மை மாணவர்கள் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23 கல்வி ஆண்டில் 1-ம் முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

 

அதேபோல 11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை ஐ.டி.ஐ, ஐ.டி.சி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உள்பட படிப்பவர்களுக்கு மேற்படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

 


மேலும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக்கல்வி படிப்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த கல்வி உதவித்தொகையை பெற மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

 

இதற்கான கால அவகாசம் இந்த மாதம் 15 மற்றும் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

தகுதியான மாணவ, மாணவிகள் பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு 15-ந்தேதி வரையிலும்,

பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கு 30-ந்தேதி வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

 

தகுதி வாய்ந்த சிறுபான்மையின மாணவ- மாணவிகள் மேற்படி காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து பயனடையலாம். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம்.

 

இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.