Friday, October 3, 2025
ராமநாதபுரம் மாவட்டத்துக்கு 9 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்!!
ராமநாதபுரம் மாவட்டத்துக்கு 9 புதிய அறிவிப்புகளை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
ரூ.30 கோடியில் ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை 6 வழிச்சாலையாக
மாற்றப்படும்.
திருவாடானை, ஆர்.எஸ். மங்கலம் பகுதியில் முக்கிய கண்மாய்கள்
ரூ.18 கோடியில் மேம்படுத்தப்படும்.
கடலாடி வட்டத்தில் உள்ள கண்மாய் ரூ.2.6 கோடியில் சிக்கல்
கண்மாய் ரூ.2.3 கோடியில் மறுசீரமைப்பு.
பரமக்குடியில் ரூ.4.5 கோடியில் புதிய அலுவலக கட்டடம்
கட்டப்படும்.
ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம் நவீன வணிக வளாகமாக
மாற்றப்படும்.
ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரியில் ரூ.10 கோடி செலவில்
புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டப்படும்.
கீழக்கரை நகராட்சிக்கு ரூ.3 கோடியில் புதிய அலுவலகக்
கட்டடம் கட்டப்படும்.
கமுதியில் விவசாயிகள் நலன் கருதி ரூ.1 கோடியில்
100 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதனக் கிடங்கு அமைக்கப்படும்
உள்ளிட்ட 9 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வெளியிட்டார்.
செய்தி: தினசரிகள்
Tuesday, September 23, 2025
ராமநாதபுரத்தில் HU வில்வித்தை மிஷன் புதிய ரேஞ்ச்!!
ராமநாதபுரத்தில் HU வில்வித்தை மிஷன் புதிய அதிநவீன வில்வித்தை ரேஞ்சை செப்21ம் தேதி தொடங்கியது
ராமநாதபுரம், தமிழ்நாடு - HU வில்வித்தை மிஷன் சமீபத்தில் கீழக்கரை
சாலையில் உள்ள ECR பாலம் அருகே அதன் புத்தம் புதிய வில்வித்தை ரேஞ்சைத் திறந்து வைத்தது.
இந்த நிகழ்வில் டாக்டர் ஜோசப் ராஜன், லெப்டினன்ட் ரவிச்சந்திரன்
ராமவன்னி, திரு. சதக் இஸ்மாயில் மற்றும் மாவட்ட விளையாட்டு அதிகாரி திரு. தினேஷ் உள்ளிட்ட
சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
HU வில்வித்தை மிஷனின் முக்கிய சிறப்பம்சங்கள்:
முன்னோடி சாதனைகள்:
தமிழ்நாட்டில் நவீன வில்வித்தைக்கான முதல் பள்ளி
சுழற்சி மற்றும் கூட்டு வில் பயிற்சியில் முன்னோடிகள்
சான்றிதழ்கள் மற்றும் அங்கீகாரம்
உலக வில்வித்தை நிலை 3 சான்றளிக்கப்பட்ட பயிற்சியாளரைக் கொண்ட
தமிழ்நாட்டின் ஒரே பள்ளி
தமிழ்நாடு வில்வித்தை சங்கம் (TAAT) மற்றும் தமிழ்நாடு அரசால்
அங்கீகரிக்கப்பட்டது
பயிற்சித் திட்டங்கள்:
தொடக்கநிலை முதல் சர்வதேச பதக்கம் வென்றவர் வரை 8 நிலைகளில் கட்டமைக்கப்பட்டுள்ளது
நிலைத்தன்மையின் தொடுதலைச் சேர்க்கும் வகையில், தொடக்க விழாவில்
மரம் நடும் விழாவும் இடம்பெற்றது, இது இயற்கைக்குத் திரும்பக் கொடுப்பதற்கான மிஷனின்
உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
பயிற்சி வாய்ப்புகள்:
தொடக்கப் பயிற்சி: தனிப்பயனாக்கப்பட்ட பயிற்சி மற்றும் உபகரண பயன்பாடு
உட்பட 3 மாத திட்டத்திற்கு ₹23,200
மேம்பட்ட திட்டங்கள்: திறன் அளவை அடிப்படையாகக் கொண்ட ரிகர்வ்,
காம்பவுண்ட் மற்றும் இந்திய சுற்று பயிற்சிக்கான தனிப்பயனாக்கப்பட்ட கட்டணங்கள்
புகழ்பெற்ற வில்வித்தை மற்றும் தற்காப்புக் கலை வழிகாட்டியான ஷிஹான்
ஹுசைனியின் கீழ் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களால் வழிநடத்தப்படும் HU வில்வித்தை மிஷன்
திறமையான வில்லாளர்களை வளர்ப்பது மட்டுமல்லாமல், ஒவ்வொரு மாணவரிடமும் விடாமுயற்சி,
கவனம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மதிப்புகளை வளர்க்கவும் பாடுபடுகிறது.
செய்தி: கீழை ஹமீது ராஜா, விளையாட்டு பயிற்சியாளர்
Friday, May 23, 2025
கீழக்கரை நகராட்சி பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கததைக் கண்டித்து சுயேச்சை உறுப்பினர் பொதுமக்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டம்!!
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சி ஒன்றாவது வார்டு
பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, நகர்மன்றக்
கூட்டத்திலிருந்து சுயேச்சை உறுப்பினர் வெளிநடப்பு செய்தார்.
கீழக்கரை நகாட்சி ஒன்றாவது வார்டு பகுதியில் ரூ. ஒரு கோடி
மதிப்பிட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், பணிகள்
தொடங்கப்படவில்லை.
இந்த நிலையில், நகர்மன்ற மாதாந்திர சாதாரணக் கூட்டம் அலுவலகக்
கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு நகர் மன்றத் தலைவர் செகனாஸ் ஆபிதா தலைமை
வகித்தார். துணைத் தலைவர் ஹமீது சுல்தான் முன்னிலை வகித்தார். நகர் மன்ற உறுப்பினர்கள்,
அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், ஒன்றாவது வார்டு சுயேச்சை உறுப்பினர்
முகம்மது பாதுஷா தனது வார்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், கழிவு நீர்க் கால்வாய் அமைக்க
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து வெளிநடப்பு செய்தார்.
மேலும், தனது வார்டு பொதுமக்களுடன் இணைந்து நகராட்சி நிர்வாகத்தைத்
கண்டித்து, அலுவலக வளாகத்துக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
Friday, April 4, 2025
தாம்பரம் - ராமேசுவரம் இடையே ஏப்.6-ஆம் தேதி முதல் புதிய ரயில்!!
தாம்பரம் - ராமேசுவரம் இடையே ஏப்.6-ஆம் தேதி முதல் புதிய ரயில்
இயக்கப்படவுள்ள நிலையில், அதற்கான முன்பதிவு வெள்ளிக்கிழமை (ஏப்.4) தொடங்குகிறது.
இது குறித்து தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்
குறிப்பு:
ராமேசுவரம் பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி
ஏப்.6-ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளார். இதை முன்னிட்டு ராமேசுவரத்துக்கு கூடுதலாக ஒரு
தினசரி புதிய ரயிலை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி,
தாம்பரத்தில் இருந்து இரவு 6.10-க்கு புறப்படும் ரயில் (எண்: 16103) மறுநாள் காலை
5.40-க்கு ராமேசுவரம் சென்றடையும்.
மறுமார்க்கமாக ராமேசுவரத்தில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும்
ரயில் மறுநாள் அதிகாலை 3.45-க்கு தாம்பரம் வந்தடையும்.
இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர்,
சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி,
காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் ஆகிய ரயில் நிலையங்களில்
நின்று செல்லும்.
இந்த ரயிலுக்கான முன்பதிவு வெள்ளிக்கிழமை (ஏப்.4) காலை 8 மணிக்கு
தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Wednesday, February 26, 2025
ராமநாதபுரம் மாவட்டத்தில் 17 முதல்வர் மருந்தகங்களை முதல்வர் திறந்து வைத்தார்!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் 17 முதல்வர் மருந்தகங்களை முதல்வர்
மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
மாவட்டத்தில்,
ராமேசுவரம்,
பரமக்குடி,
கமுதி,
மண்டபம்,
வாலாந்தரவை,
திருப்பாலைக்குடி,
திருவாடானை,
செல்வநாயகபுரம்,
முதுகுளத்தூர்,
அபிராமம்,
ராமநாதபுரம் வெளிப்பட்டினம்,
ஆனந்தூர்,
ஆர்.எஸ்.மங்கலம்,
கீழமுந்தல்,
கடலாடி,
திருவரங்கம்,
முதுகுளத்தூர்
ஆகிய 17 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிகளில் ராமநாதபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்
காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் செ.முருகேசன், கூட்டுறவுத்
துறை மண்டல இணைப் பதிவாளர் ஜுனு, ராமநாதபுரம் நகர் மன்றத் தலைவர் ஆர்.கே.கார்மேகம்,
துணைத் தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம், நகர்மன்ற உறுப்பினர் தன
பாண்டியம்மாள், கூட்டுறவுத் துறை கண்காணிப்பு அலுவலர் மீனாட்சி
சுந்தரம், அரசுத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
ராமநாதபுரம் முதல்வர் மருந்தகத்தில் நடைபெற்ற விற்பனை தொடக்க
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முன்னிலை வகித்தார். இதில்,
பால்வளத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.
ராஜகண்ணப்பன் குத்துவிளக்கேற்றி விற்பனையைத் தொடங்கி வைத்து,
மருந்தகத்தைப் பார்வையிட்டார்.
செய்தி: தினமணி
Wednesday, February 19, 2025
கீழக்கரையில் பிப்-21ம் தேதி UPSC - TNPSC போட்டி தேர்வுகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்!!
போட்டி
தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உற்சாகமான செய்தி!
கீழக்கரையில் உள்ள அனைத்து மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு அழைப்பு! யுபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி போன்ற அரசுத் தேர்வுகளில்
தேர்ச்சி பெற விரும்புகிறீர்களா?
21 பிப்ரவரி 2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4 மணிக்கு கீழக்கரையில் உள்ள விழிப்புணர்வு
நிகழ்ச்சிக்கு எங்களுடன் சேருங்கள்.
போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற உங்களுக்கு உதவும் வாய்ப்புகள் மற்றும் ஆதாரங்களைக்
கண்டறியவும். எங்கள் நிபுணர்கள்
உங்களுக்கு வழிகாட்டுவார்கள்:
தேர்வுக்கான தயாரிப்பு
உத்திகள்
படிப்பு பொருட்கள்
மற்றும் ஆதாரங்கள்
தொழில் வாய்ப்புகள்
மற்றும் வளர்ச்சி
இடம்: தக்வா
அகாடமி ஆஃப் எக்ஸலன்ஸ், KECT மஸ்ஜித் வளாகம், நியூ ஈஸ்ட் தெரு, கீழக்கரை-623517
இப்போது பதிவு செய்யவும்: https://forms.gle/naYmkJogurQB4ySNA
உங்களை மேம்படுத்தி
உங்கள் திறனைத் திறக்க இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
தமிழ்நாட்டின் ஒளிமயமான
மனங்களை வடிவமைப்பதில் ஒரு பகுதியாக இருங்கள்!
Saturday, February 1, 2025
கீழக்கரை நூரானியா பள்ளியில் தற்காப்பு கலை குறித்த கருத்தரங்கம், ஸ்பெயின் வீரர் பங்கேற்பு!!
இராமநாதபுரம் Elite Martial Arts சார்பில் நடந்த இன்டர் ஸ்கூல் போட்டிக்கு நடுவராக
வந்திருந்த ஸ்பெயின் நாட்டைச்
சேர்ந்த
Mixed Martial Arts jiu jitsu Champion Prof. ஃபெர்னான்டோ
கீழக்கரை நூரானியா பள்ளிக்கு வருகை புரிந்து மாணவர்களுக்கு இக்கலையைப் பற்றி போதித்தார்.
தற்காப்புக் கலை பற்றி மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அவருக்கு பள்ளி சார்பில் மேலாளர் சுபைர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். அவருடன்
elite உமர் முக்தார் மற்றும் ஹமீது ராஜா ஆகியோர் வந்திருந்தனர்.
Monday, January 20, 2025
இராமநாதபுரத்தில் சர்வதேச பிரேசிலியன் ஜியூ-ஜிட்ஸு செமினார் & பயிற்சி முகாம்!!
சர்வதேச பிரேசிலியன் ஜியூ-ஜிட்ஸு செமினார் & பயிற்சி முகாம்
தேதி: ஜனவரி 26, 2025
இடம்: இராமநாதபுரம்
7 முறை ஐரோப்பிய சாம்பியன் மற்றும் 5 முறை உலக சாம்பியன் ஆகியவருடன் பயிற்சியில் கலந்து கொள்ள இப்பொழுதே வருக!
நிகழ்ச்சி அட்டவணை:
• பதிவுபெறுதல்: காலை
6:00 am முதல் 7:00am வரை
• பயிற்சி முகாம்: காலை 7:00 முதல் 9:00am வரை
யார் கலந்து கொள்ளலாம்:
• புதியவர்களும் வரவேற்கப்படுகிறார்கள்! கலைகளில் முன் அனுபவம் தேவையில்லை.
சிறப்பு அம்சங்கள்:
·
ராப்பிள் டிரா பரிசு: 8 கிராம் தங்க நாணயம் வெல்லும் வாய்ப்பு!
·
பதிவு கட்டணம்: ₹999/-
·
விதிமுறைகள்: 85 பேர் பதிவு செய்யப்பட்டது உறுதியாக இருந்தால் மட்டுமே ராப்பிள் டிரா நடைபெறும்.
பதிவிற்கான தொடர்பு:
சிறந்தவர்களுடன் பயிற்சி பெறவும், பெரும் வெற்றியை அடையவும் இந்நிகழ்ச்சியை தவற விடாதீர்கள்
சாதாரண பதிவு: ₹399/-
Thursday, January 16, 2025
ராமநாதபுரம் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் -ல் பணியாற்ற 18ம் தேதி ஆள் தேர்வு!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் 108 அவசர ஊர்தியில் பணியாற்ற மருத்துவ
உதவியாளர், ஓட்டுநர் பணியிடங்களுக்கு வருகிற 18-ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது.
இது குறித்து 108 அவசர ஊர்தி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
த.தமிழ்செல்வன் புதன்கிழமை கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் இயக்கப்படும் 108 அவசர ஊர்திகளில் அவசரகால
மருத்துவ உதவியாளர் பணிக்கான முதல்கட்ட நேர்முகத் தேர்வு பார்திபனுர் ஆரம்ப சுகாதார
வளாகத்தில் செயல்படும் 108 அவசர ஊர்தி அலுவலகத்தில் வருகிற 18-ஆம் தேதி காலை 10 மணி
முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெற இருக்கிறது.
தகுதி:
வயது 19-லிருந்து 30-க்குள் இருக்க வேண்டும். பிஎஸ்சி நர்சிங்,
ஜிஎன்எம், டிஎம்எல்டி, ஏஎன்எம் (12 ஆம் வகுப்புக்குப் பிறகு 2
ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைஃப் சயின்ஸ் படிப்புகளான பிஎஸ்சி விலங்கியல்,
தாவரவியல், பயோ டெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி ஆகியவற்றில் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை:
முதலில் எழுத்துத் தேர்வு. மருத்துவம் சார்ந்த அடிப்படை முதலுதவி,
செவிலியர் தொடர்பான அடிப்படை அறிவு பரிசோதிக்கப்படும். இறுதியாக மனிதவளத் துறையின்
நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
மாத ஊதியமாக ரூ.15,635 வழங்கப்படும்.
ஊர்தி ஓட்டுநருக்கான கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, ஓட்டுநர்
உரிமம் பெற்று மூன்று ஆண்டுகள், பேட்ஜ் எடுத்து ஓராண்டு நிறைவடைந்து இருக்க வேண்டும்.
வயது 24 முதல் 35 -க்குள் இருக்க வேண்டும்.
மாத ஊதியம் ரூ.15,450.
நேர்முகத் தேர்வுக்கு வருபவர்கள் அசல் சான்றிதழுடன் கலந்து கொள்ள
வேண்டும்.
மருத்துவ உதவியாளர் பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்கள் 12 மணி
நேர இரவு, பகல் ஷிப்ட் முறைகளில் தமிழ்நாடு முழுவதும் பணியமர்த்தப்படுவர்.
நேர்முகத் தேர்வுக்கு கல்வித் தகுதி, ஓட்டுநர் உரிமம், முகவரிச்
சான்று. அடையாளச் சான்று ஆகியவற்றின் அசல் சான்றிதழ்களைக் கொண்டு வர வேண்டும்.
மேலும், இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு 8754439544.
7397444156,7397724828 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.
Wednesday, January 8, 2025
ராமநாதபுரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு பொருட்களை ரேசன் கடைகளுக்கு இறக்கும் பணி தீவிரம்!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு
பொருட்களை ரேசன் கடைகளுக்கு இறக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
தமிழக அரசு சார்பில் தைத் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு ரேசன்
கார்டுதாரர்கள் அனைவருக்கும்
முழுகரும்பு,
ஒரு கிலோ பச்சரிசி,
ஒரு கிலோ சர்க்கரை
வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவை 9ம் தேதி முதல் வழங்கப்படுவதையொட்டி ரேசன் கடை பணியாளர்கள்
கார்டுதாரர்களுக்கு வீடு வீடாக சென்று டோக்கன்களை விநியோகம் வருகின்றனர்.
நாளை மறுநாள் முதல் 13ம் தேதி வரை பொங்கல் பொருள் வழங்கப்படுவதையொட்டி
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம், ராமநாதபுரம், கீழக்கரை, திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம்,
பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர் மற்றும் கடலாடி ஆகிய தாலுகாக்களில் உள்ள 554 முழுநேர
கடைகளுக்கும், 775 பகுதிநேர கடைகளுக்கும் கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு
பொருட்கள் இறக்கும் பணி நேற்று முதல் துவங்கியுள்ளது.
மேலும் ரேசன் கடைகளில் விலையில்லா வேட்டி, சேலையும் வழங்கப்படுவதால்,
வழக்கமான உணவு பொருட்கள் ஒரே தவணையாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போதே ரேசன்
கடைகள் களைகட்டி காணப்படுகிறது. மாவட்டத்தில் முழுநேர ரேசன் கடை 556, பகுதி நேர ரேசன்
கடை 228 என 784 கடை உள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 4 லட்சத்து 2 ஆயிரத்து 107 ரேசன்
கார்டு தாரர்கள் பொங்கல் தொகுப்பை பெற்று பயனடைவார்கள்.