Wednesday, November 12, 2025
ராமநாதபுரம் மாவட்ட அளவிலான எரிபந்து போட்டியில் பேர்ல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வெற்றி!!
ராமநாதபுரம் மாவட்ட அளவிலான எரிபந்து போட்டியில் 19 வயதுக்குட்பட்ட
மாணவியர்களுக்கான போட்டி நேற்று 11/11/2025 அன்று நடைபெற்றது.
மண்டல அளவில் வெற்றி பெற்ற 8 பள்ளிகல் கலந்து கொண்ட இந்த போட்டியில் கீழக்கரை பேர்ல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல் இடத்தைப் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பள்ளியின்
தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்

