Tuesday, June 30, 2015
ஜூலை 1 முதல் அமீரக AIR INDIA பயணிகளுக்கு HAND LUGGAGE கட்டுப்பாடு!!
ஐக்கிய அரபு அமீரகம்( U.A.E) நாடுகளில் இருந்து ‘ஏர் இந்தியா’ விமானங்களில் தாயகம் வரும் பயணிகளின் எட்டு கிலோவுக்கு மேற்பட்ட ஹேன்ட் லக்கேஜுக்கு வரும் முதல் தேதியில் இருந்து கூடுதல் கட்டணம் அதாவது 8கிலோவுக்கு மேல் உள்ள ஒவ்வொரு கிலோவுக்கும் 60
திர்ஹம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா விமானங்களில் தற்போது பயணிகள் தங்களுடன் கைச்சுமையாக (ஹேன்ட் லக்கேஜ்) சுமார் 8 கிலோ பொருட்களை கொண்டுவர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அதிகபட்ச அளவையும் தாண்டி சிலர் 10-15 கிலோ கூடுதல் சுமையை கொண்டு வருவதுண்டு.
ஏர் இந்தியா விமானங்களில் தற்போது பயணிகள் தங்களுடன் கைச்சுமையாக (ஹேன்ட் லக்கேஜ்) சுமார் 8 கிலோ பொருட்களை கொண்டுவர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அதிகபட்ச அளவையும் தாண்டி சிலர் 10-15 கிலோ கூடுதல் சுமையை கொண்டு வருவதுண்டு.
இதைப்போன்ற உபரி சுமை கொண்டு வருபவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு மறுநாளே, இந்த திட்டத்தை உடனடியாக கொண்டுவரும் உத்தேசம் ஏதுமில்லை என விமானத்துறை இணை மந்திரி கூறியிருந்தார்.
இந்நிலையில், ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து ‘ஏர் இந்தியா’ விமானங்களில் தாயகம் வரும் பயணிகளின் ஹேன்ட் லக்கேஜுக்கு வரும் ஜூலை மாதம் முதல் தேதியில் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணமில்லா கைச்சுமையாக அனுமதிக்கப்பட்டுள்ள 8 கிலோவுக்கு மேல் கூடுதலாக கொண்டுவரும் ஒவ்வொரு கிலோவுக்கும் 60 திர்ஹம் (சுமார் ஆயிரம் ரூபாய்) வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஷார்ஜா மற்றும் துபாய் விமான நிலையங்களின் நுழைவுப் பகுதியில் புதிய எடை போடும் இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன.
ராமேசுவரத்துக்கு கூடுதல் ரயில்களை இயக்க கோரிக்கை!!
ராமேசுவரத்துக்கு கூடுதல் ரயில்களை இயக்க தென்னக ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமநாதபுரம் வர்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ராமநாதபுரம் வர்த்தக சங்க அலுவலகத்தில் ரோட்டரி சங்க ஆளுநராக தேர்வு செய்யப்பட்டுள்ள டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, அரிமா சங்க ஆளுநராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆடிட்டர் எம்.ஏ.சுந்தர்ராஜன் ஆகியோருக்கு பாராட்டு விழா, புதிதாக தேர்வு செய்யப்பட்ட ராமநாதபுரம் நகை வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா மற்றும் வர்த்தக சங்கப் பொதுக்குழு கூட்டம் ஆகியன நடைபெற்றன.
விழாவிற்கு சங்கத் தலைவர் பா.ஜெகதீசன் தலைமை வகித்து சேவைச் சங்கங்களுக்கு புதிதாக ஆளுநராக தேர்வு செய்யப்பட்ட இருவருக்கும் சால்வை அணிவித்து நினைவுப் பரிசுகளை வழங்கினார். புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ராகவனுக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. வர்த்தக சங்கத்தின் செயலாளர் குப்தா.கோவிந்தராஜன் பொதுக்குழு கூட்ட தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார்.
கூட்டத் தீர்மானங்கள் வருமாறு:
ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் நிறுத்தப்படும் வடமாநில சுற்றுலாப் பயணிகளின் கார் கண்ணாடிகளை உடைத்து பொருள்களை திருடுவது அதிகரித்துள்ளது. இத்திருட்டுச் சம்பவங்களைத் தடுக்க மாவட்ட நிர்வாகமும், போலீஸ் நிர்வாகமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு அனுமதியில்லாமல் பல இடங்களில் ராமநாதபுரம் நகரில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை அகற்ற வேண்டும்.
ராமேசுவரத்திற்கு கூடுதலாக ரயில்களை இயக்க தென்னக ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இவ்விழாவிற்கு சங்க முன்னாள் தலைவர் கு.தனபாலன்,துணைத்தலைவர்கள் என்.ஆர். குருசாமி, எஸ்.என்.மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துணைத்தலைவர் என்.ஏ.வாசுதேவன் வரவேற்றார். சங்க இணைச்செயலாளர் பி.ஆர்.என்.ராஜாராம் பாண்டியன் நன்றி கூறினார். விழாவில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆ.ரவிச்சந்திர ராமவன்னி, வர்த்தக சங்க இணைச் செயலாளர் வைகிங். எம்.எஸ். கருணாநிதி, ரோட்டரி சங்க துணை ஆளுநர் பி.முனியசாமி, தலைவர் நானா என்ற நாகரத்தினம்,நிர்வாகி ஜெ.சுகுமார், தமிழ்ச்சங்க துணைத் தலைவர் குழ.விவேகானந்தன் ஆகியோர் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
செய்தி:
தினமணி