முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, January 31, 2018

ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை - போலீஸ்!!

No comments :
ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் போலீசார் அறிவிப்பை டூவீலர் ஓட்டுநர்கள் கண்டுகொள்ளாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மதுரை, ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராமநாதபுரத்தில் ஒரு லட்சத்திற்கும் மேலான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மாவட்டத்தில் பொதுமக்களின் நலன் கருதி புதிய, பழைய பஸ் ஸ்டாண்டுகள் உள்ளது. தினமும் 300க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. நகர பஸ்களில் சுமார் 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் தினமும் வந்து செல்கின்றனர்.

தினந்தோறும் வெளியிடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் ராமநாதபுரத்தின் மத்திய பகுதியில் இயங்கி வரும் பஸ் ஸ்டாண்டிற்கு அதிகளவில் வருவதால் காலை, மாலை நேரங்களில் கூட்டம் நெரிசல் உள்ளது. அரசு, தனியார் பஸ்களிலும் பயணிகள் கூட்டம் எப்போதும் நிரம்பி வழிகிறது. போக்குவரத்தை சரி செய்ய போலீசார் புதிய சட்ட முறைகளை கொண்டு வந்தாலும் பொதுமக்கள் அதை உணர்ந்து கொள்வது கிடையாது.

ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் வெளியேறும் பகுதி, பஸ்களை நிறுத்தும் டிராக் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் டூவிலர் வாக னங்களை நிறுத்தக் கூடாது என அறிவிப்பு செய்துள்ளனர்.

இதை கண்டுகொள்ளாமல் பஸ் ஸ்டாண்டிற்குள் டூவீலரில் வரும் வாகன ஓட்டுநர்கள் அங்கேயே நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் தினந்தோறும் அப்பகுதியில் பஸ்களை நிறுத்த முடியாமல் பஸ் டிரைவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். ஏற்கனவே நெரிசலாக உள்ள பகுதியில் தொடர்ந்து வாகனங்களை நிறுத்துவதால் ஏற்படும் பிரச்னைகளை பொதுமக்கள் உணர்ந்து தங்கள் வாகனங்களை பஸ் ஸ்டாண்டின் வெளியிடங்களில் நிறுத்த முயற்சி செய்ய வேண்டும்.

போக்குவரத்து போலீசாரிடம் கேட்டபோது, போலீசார் பற்றாக்குறை காரணமாக குறைந்த அளவு போலீசாரே  தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இந்நிலையில் முறையான அறிவிப்பு இருந்தும் பலர் பஸ் ஸ்டாண்டின் உள்ளே வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.

பஸ் ஸ்டாண்டில் உள்ளே நிறுத்தப்படும் வாகன ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.


மக்கள் ஒத்துழைப்பும், போலீசாரின் தொடர் கண்காணிப்பும் நிரப்பமாக இருந்தால் கண்டிப்பாக இந்த போகுவரத்து நெரிசலை கட்டுப்படுத்தலாம்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Sunday, January 28, 2018

ராமநாதபுரத்தில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க ஆர்ப்பாட்டம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க சார்பில் ராமநாதபுரம் அரண்மனை முன்பு தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுப.த.திவாகரன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன்முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்திபொதுக்குழு உறுப்பினர் அகமது தம்பிமுன்னாள் எம்.பி.பவானி ராஜேந்திரன்முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் முருகவேல்திசைவீரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.



ராமநாதபுரம் நகர் தி.மு.க. செயலாளர் கார்மேகம் வரவேற்று பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏழை மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கக்கூடிய இருமடங்கு பஸ்கட்டண உயர்வினை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் சுப.த.திவாகரன் பேசியதவாது:- இலவச திட்டங்களை அறிவித்து அதன்மூலம் மக்களிடம் ஓட்டுகளை பெற்று ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க அரசு நிர்வாக திறன் இன்றி செயல்படாமல் முடங்கிபோய் உள்ளது. அ.தி.மு.க. அரசு பஸ் கட்டணத்தை அதிரடியாக இருமடங்கு உயர்த்தி உள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இதனால், கிராமப்புற ஏழை மக்கள் அன்றாடம் பஸ்சில் வேலைகளுக்கு செல்லும் அலுவலர்கள், கூலித்தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். மத்திய பா.ஜ.க. அரசும், தமிழக அரசும் மக்களை வாட்டி வதைத்து வருகின்றன. பஸ் கட்டண உயர்வினை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். அப்படி வாபஸ்பெறாவிட்டால் தி.மு.க. சார்பில் சிறைநிரப்பும் போராட்டம் நடத்தப்படும். மக்கள் பிரச்சனைக்காக தி.மு.க. தொடர்ந்து போராடும். இவ்வாறு பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சமத்துவ மக்கள் கழகம் தலைவர் எர்ணாவூர் நாராயணன், தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் இன்பாரகு, விவசாய அணி துரை, பி.டி.ராஜா, கவிதாகதிரேசன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் தெய்வேந்திரன், துணை தலைவர் பாரிராஜன், நகர் தலைவர் கோபி, வட்டார தலைவர் சேதுபாண்டி பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ரஜீசேதுபதி, நகர் தலைவர் மாரியப்பன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

கீழக்கரை ”அல் அமீன்” நடத்திய கட்டுரை போட்டிக்கான பரிசளிப்பு விழா!!

No comments :


கடந்த பல வருடங்களாக சமூக சேவையில் அயராது ஈடுபட்டு வருகிறது கீழக்கரை வடக்குத் தெரு அல் அமீன் சகோதர்கள் அமைப்பு;
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக மாணவ
, மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டி நடத்தினர்.

இப்போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

வெற்றி பெற்றவர்கள் விபரம்:








புகைப்பட தொகுப்பு:













வெற்றி பெற்ற சகோதரிகளுக்கு முகவை முரசு சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.


செய்தி: திரு. ஷகீல் ரவூஃப், அல் அமீன், கீழை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Saturday, January 27, 2018

ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் காட்சிப்பொருளாக ஆட்டோமேடிக் டிக்கெட் இயந்திரம்!!

No comments :
  
ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் பயன்பாடு இல்லாமல் ஆட்டோமேடிக் டிக்கெட் இயந்திரம் உள்ளதால் பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். ராமநாதபுரத்தை சுற்றிலும் அதிக கிராமங்கள் உள்ள நிலையில்ரயில் கட்டணமும் பஸ் கட்டணத்தை விட குறைவாக இருப்பதால் மதுரை-ராமேஸ்வரம்திருச்சி-ராமேஸ்வரம் பாசேஞ்சர் ரயில்களில் செல்ல ஏராளமான பயணிகள் தினந்தோறும் ரயில் நிலையம் வருகின்றனர். ரயில் நிலையத்தில் ஏற்கனவே பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் தற்போது கூட்டமான நேரங்களில் தானியங்கி முறையில் இயங்கும் ஆட்டோமேடிக் டிக்கெட் வென்டரிங் இயந்திரம் பயனில்லாமல் வெறும் காட்சி பொருளாக பிளாட்பாரத்தில் உள்ளது. 

இந்த இயந்திரத்தை இயக்க ஏடிஎம் கார்டு போல ஸ்மார்ட்கார்டு வேண்டும். அதை தனியாக ரயில்வேயில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள வேண்டும். அதன் பின்பு தேவைக்கேற்ப அதில் பணத்தை செலுத்தி அந்த கார்டை நாம் பயன்படுத்தி கொள்ளலாம். ரயிலில் நாம் செல்லும் இடத்தை மானிட்டரில் தேர்வு செய்தால் தனியாக டிக்கெட் வந்து விடும்.




இந்த இயந்திரத்தை பயன்படுத்த தெரியாதவர்களுக்கு விளக்கம் அளித்து டிக்கெட் எடுத்து கொடுப்பதற்காக ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி உள்ளிட்ட ரயில்நிலையங்களில் ரயில்வே பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். தற்போது ராமேஸ்வரம், பரமக்குடியில் இந்த இயந்திரம் முறையாக இயங்கி வருகிறது. ராமநாதபுரத்தில் இதற்கென அமர்த்தப்பட்ட பணியாளர்கள் பணிக்கு வருவது கிடையாது. இந்த இயந்திரம் குறித்த விழிப்புணர்வும் யாருக்கும் இல்லை. இதனால் கூட்ட நேரங்களிலும் பயணிகள் வழக்கம்போல் டிக்கெட்டை எடுக்க வரிசையிலேயே  நிற்க வேண்டியுள்ளது. 

ரயில்வே அதிகாரிகள் வரும் காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க இந்த இயந்திரத்தின் பயன்பாட்டை பயணிகளிடம் தெரிவித்து அதை இயக்க பணியாளர்களை அமர்த்தினால் கூட்ட நெரிசலை தவிர்க்கலாம் என் பயணிகள் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.


சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனிப்பார்களா?

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Monday, January 22, 2018

பேருந்து கட்டண உயர்வைக்கண்டித்து பல இடங்களில் மாணவர்கள்கள் போராட்டம்!!

No comments :


தமிழக அரசு பஸ்கட்டணத்தை உயர்த்தியதைக் கண்டித்து தமிழகத்தில் பல கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் நேற்று பல பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இன்று மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். பேருந்து உயர்வை கண்டித்து அனைத்து கல்லூரி மாணவர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திங்கட்கிழமையன்று யாரும் கல்லூரிக்கு செல்ல வேண்டாம்..கல்லூரி முன் நின்று அமைத்தி போராட்டம் செய்ய வேண்டும். இதனோடு பொது மக்கள் மற்றும் ஆசிரியர்களும் பங்கேற்க்கும் படி கேட்டுக்கொள்கிறோம் என்ற செய்தி வாட்ஸ்அப்பில் பரவியது.

இதனையடுத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். எனினும் கல்லூரிக்கு சென்ற பல மாணவர்கள் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து போராட்டத்தில் குதித்தனர்.


திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் தஞ்சாவூரில் குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர். வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரி முன்பாக அமர்ந்த மாணவிகள், கட்டணம் இருமடங்கானதால் ஊரில் இருந்து கல்லூரிக்கு வர சிரமப்படுவதாக கூறினர். 17 ரூபாய் இருந்த கட்டணம் 35 ரூபாயாக உயர்ந்து விட்டதாகவும், பஸ்பாஸ் கூட நிறுத்தி விடுவார்கள் என்றும் கூறினர்.

இதேபோல அருப்புக்கோட்டை கல்லூரி மாணவ, மாணவிகளும் போராட்டத்தில் குதித்தனர். அரியலூரில் 3000 கல்லூரி மாணவர்களும் பஸ் கட்டண உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக மாணவர் போராட்டம் வெடித்தது. திருப்பூரில் அரசு சிக்கண்ணா கலை கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூரில் தனியார் கல்லூரி மாணவர்களும் போராட்டம் நடத்தினர். புதிய பேருந்து நிலையத்தில் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல விழுப்புரம் அரசு கலை கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். நாகையில் பாரதிதாசன் உறுப்பு கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கடந்த ஆண்டு இதே நேரத்தில் ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போது பஸ் கட்டண உயர்வுக்காக போராடி வருகின்றனர்.

நன்றி: ஒன் இந்தியா


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Sunday, January 21, 2018

தமிழக அரசின் 'இருசக்கர வாகன திட்டம்; முழு விவரம்!!

No comments :
தமிழக அரசின் 'இருசக்கர வாகன திட்டம்': விண்ணப்பிக்க தகுதியுள்ள பெண்கள் யார்?- முழு விவரம்

தமிழக அரசு அறிவித்துள்ள அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் வாகனம் பெற விண்ணப்பிக்கும் தகுதியுள்ள பெண்கள் யார் என்பது குறித்து அரசு வெளியிட்டுள்ள குறிப்பு வருமாறு:

பயனாளிகளின் தகுதி:

கியர் இல்லாத அல்லது தானியங்கி கியருடன் கூடிய 125.சிசி எந்திரத் திறன் கொண்ட புதிய இரு சக்கர வாகனங்களுக்கு வாகன விலையில் ரூ.25000/- அல்லது 50% வாகன விலை இதனில் குறைவான தொகை பயனாளிக்கு அரசினால் வழங்கப்படும்..

இரு சக்கர வாகனம் ஜனவரி.01.2018க்குப் பின்னர் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்..

பயனாளிகளின் பணியாற்றும் தகுதி:

1.நிறுவனப் பணியிலுள்ள மற்றும் முறைசாரா பணியிலுள்ள பெண்கள்.

2. கடைகள் மற்றும் இதர நிறுவனங்களிலுள்ள பெண்கள்.

3.அரசு சார்பு நிறுவனம், தனியார் நிறுவனம், சமுதாய அமைப்புகள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள்.

4.பெண்; வங்கி ஒருங்கிணைப்பாளர் மற்றும் பெண் வங்கி வழி நடத்துநர்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார (பெண்); ஆர்வலர்கள்..



வயது வரம்பு வருமான வரம்பு மற்றும் இதர தகுதிகள்:

தமிழ்நாட்டை சார்ந்த 18 முதல் 40 வயது வரையுள்ள இருசக்கர வாகன உரிமம் பெற்றுள்ள பெண்கள், ஆண்டு வருமானம் ரூ.2,50,000/- க்கு மிகாமல் உள்ள பெண்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்படாத தொழிற்பிரிவுகளில் பணியாளராக பதிவு செய்தவர்கள், சுயதொழில் புரிவோர், சொந்தமாக சிறுவணிகம் செய்வோர், கடைகள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர், அரசு உதவி பெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

கிராம வறுமை ஒழிப்பு சங்கம், மாவட்ட கற்றல் மையம் ஆகியவற்றில் தொகுப்பூதியம், தினக்கூலி, ஒப்பந்த ஊதியம் அடிப்படையில் பணி புரியும் மகளிர். வங்கி ஒருங்கிணைப்பாளர், சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆஷா பணியாளர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு 40 மிகாமல் இருக்க வேண்டும். ஆதரவற்ற பெண்கள், இளம் விதவைகள், மாற்றுத்திறனாளி மகளிர், 35 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத மகளிர், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மகளிர், திருநங்கைகளுக்கு முன்னுரிமை.

மனுக்கள் பெறும் தேதி ஜனவரி 22, 2018 முதல் பிப்ரவரி 05, 2018 வரை
ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்களிலும், மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களிலும் வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட மனுக்கள் பிப்ரவரி 5, 2018 வரை சம்மந்தப்பட்ட அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளப்படும்..

கடன் வசதி
பயனாளிகள் தங்களுக்கு விருப்பமுள்ள 125.சிசி திறன் கொண்ட இரு சக்கர வாகனத்தினை சொந்த நிதியிலிருந்து அல்லது இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிலுள்ள வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் மூலம் கடன் வசதி பெற்றும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்..
மனுவுடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
* பிறந்த தேதிக்கான சான்றிதழ்
* இருப்பிடச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, இருசக்கர வாகன உரிமம், ஆதார் அடையாள அட்டையின் நகல்
உரிய அலுவலரால் வழங்கப்பட்ட இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் - நகல்.
வேலை வழங்கும் அலுவலரால்/நிறுவனத்தால் வழங்கப்படும் வருமான சான்றிதழ் அல்லது சுய வருமானச் சான்றிதழ்.
நிறுவனத்தலைவர்/ சங்கங்கள் மூலம் ஊதியம் பெறுபவர்களின் ஊதியச் சான்றிதழ்.
ஆதார் அடையாள அட்டை.
எட்டாம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வி தகுதியுள்ளவர்களின் சான்றிதழ்கள்.
கடவுச்சீட்டு அளவுள்ள புகைபடம்.
சிறப்புத் தகுதி பெற விரும்புவோர் அதற்குரிய சான்றிதழ்.
சாதிச் சான்றிதழ் (தாழ்த்தப்பட்ட/பழங்குடியினர் )
உரிய அலுவலரால் வழங்கப்பட்ட மாற்றுதிறனாளி அடையாள அட்டை
இருசக்கர வாகனத்தின் விலைப்புள்ளி.



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரத்தில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்கட்டண விபரம்!!

No comments :


ராமநாதபுரத்தில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்கட்டணம் வருமாறு (பழைய கட்டணம் அடைப்பு குறிக்குள்) :

மதுரை ஒன் டூ ஒன் சர்வீஸ்-112(75),
மதுரை எக்ஸ்பிரஸ் பஸ்கள்-100(67),
திருச்சி-100(67),
தஞ்சாவூர்-172(114),
திருச்செந்துார்- 145(98),
கோவை-272(190),
சேலம்-306(210),
சிதம்பரம்-280(185),
செங்கோட்டை-195(132),
ராமேஸ்வரம்-47(32),
காரைக்குடி-85(56),
துாத்துக்குடி-104(70),
பட்டுக்கோட்டை-95(82).

டவுன் பஸ்களில்:
(ராமநாதபுரம் அரண்மனையில் இருந்து): ராமநாதபுரம் அரண்மனையில் இருந்து பழைய பஸ்ஸ்டாண்ட் வரை ரூ.6:00(5:00) கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

கலெக்டர் அலுவலகம்-8(6),
கீழக்கரை-15(10),
பெரியபட்டினம்-20(12),
ஏர்வாடி-20(12),
தேவிப்பட்டினம்-15(10),
ஆற்றாங்கரை-20(12),
அழகன்குளம்-20(10)


நன்றி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Tuesday, January 16, 2018

கோ-ஆப்டெக்ஸ் வேலை வாய்ப்பு; +2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

No comments :
தமிழ்நாடு கோ-ஆப்டெக்ஸ் அறிவிப்பு வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கோ ஆப்டெக்ஸ் பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு கோ-ஆப்டெக்ஸ் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 20 ஆகும் தமிழ்நாடு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெறுவோர் பணியிடங்கள் விவரங்கள்: பெங்களூர்
மும்பை
விஜயவாடா.

தமிழ்நாடு கோ-ஆப்டெக்ஸில் வேலை வாய்ப்பு பெற ஆப்லைனில் விண்ணப்பிக்கலாம். கோ- ஆப்டெக்ஸ் பணிக்கு விண்ணப்பிக்க இறுதி தேதி  ஜனவரி 22,2018 தமிழ்நாடு கோஆப் டெக்ஸ் பணியின் பெயர்கள்: அஸிஸ்டெண்ட் சேல்ஸ்மேன்
அஸிஸ்டெண்ட் சேல்ஸ்வுமன்.


கல்வித்தகுதி : பனிரெண்டாம் வகுப்பு / பியூசி அங்கிகரிக்கப்பட்ட பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 40 வயதுக்குள் இருப்பவர் மட்டுமே கோ- ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் பணிக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர்க்கு 5 வருடம் வயது வரம்பு தளர்வு ஒபிசி பிரிவினர்க்கு 3 வருடம் வயது வரம்பு தளர்வு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடம் வயது வரம்பு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவை சேர்ந்த மாற்றுதிறனாளிகளுக்கு 15 வருட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒபிசி பிரிவைச் சேர்ந்த மாற்றுதிறனாளிகள் 13 வருடம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் பணிக்கு விண்ணப்பிப்போர்கள் எழுத்து தேர்வு, பர்சனல் இண்டர்வியூ, டாக்குமெண்ட் வெரிபிகேசனுக்கு பிறகு வேலைக்குவாய்ப்புக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழ்நாடு கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் பணிவாய்ப்பு பெற விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ லிங்கினை கொடுத்துள்ளோம்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு அறிக்கை இணைப்பை முழுவதுமாக படித்து விண்ணப்பிக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பத்தை தேவையான தகவல்ள் மற்றும் சான்றிதழுடன் இணைத்து விண்ணப்பிக்கவும்.

பெங்களூர் முகவரி:

சீனியர் ரீஜினல் மேனேஜெர்
கோ-ஆப்டெக்ஸ் ரீஜினல் ஆபிஸ் 
நம்பர் 138, கோவிந்தப்பா ரோடு,
காந்தி பசார் பசவன்குடி,
பெங்களூர் பின் கோடு 560004.

மும்பை பணியிடத்திற்கான முகவரி:

தி ரிஜினல் மேனேஜெர்
கோ-ஆப்டெக்ஸ் ரிஜினல் ஆபிஸ்
நம்பர்.204,யுதயாக் மந்தீர்
நம்பர்.2,7 - பீதாம்பீர் லேன் மகிம் வெஸ்ட்,
மும்பை பின் கோடு -400016

விஜயவாடா முகவரி :


தி ரிஜினல் மேனேஜெர்
கோ-ஆப்டெக்ஸ் ரிஜினல் ஆபிஸ்
கதவு எண் 29-2-5, ப்ர்ஸ்ட் ,
ராமந்தீர் ஸ்டீரிட்,
கோவிந்தர்பேட் ,
விஜைவாடா.

வாழ்த்துக்கள்!!

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Monday, January 15, 2018

ITI படித்தவர்களுக்கு வட இந்திய ரயில்வேயில் வேலை வாய்ப்பு!!

No comments :


மத்திய அரசின் கீழ்  இயங்கும் ரயில்வே நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பை தகுதியுடையோர் பயன்படுத்தி கொள்ளலாம்.

வட இந்திய ரயில்வே செல்லில் வட இந்திய ரயில்வேயின் வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வட இந்திய ரயில்வே செல்லில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

ரயில்வேயின் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் விவரங்கள் :

அப்பிரண்டிஸ் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம் :3162

முக்கிய தேதிகள் : வட இந்திய ரயில்வேக்கு விண்ணப்பிக்க ஆரம்ப தேதி டிசம்பர் 28, 2017 இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி தேதி ஜனவரி 27 ஜனவரி 2018

ரயில்வே பணியிடங்கள் நாடு முழுவதும் உள்ளன. வட இந்திய ரயில்வே செல்லில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

கல்வித்தகுதி :  ரயில்வேயில் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்ட கல்வித்தகுதியாக பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புகள் அதிகாரப்பூர்வ கல்வி நிறுவனத்தில் படித்து ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.



வயது வரம்பு: வடக்கு ரயில்வேயில் பணிக்கு விண்ணப்பிக்க 15 முதல் 24 வயது வரையுள்ளோர் விண்ப்பிக்கலாம். எஸ்சிஎஸ்டி பிரிவினர்க்கு 5 வருடம் வயது வரம்பில்  தளர்வு உண்டு ஒபிசி பிரிவினர்க்கு மூன்று வருடம் வயது வரம்பு தளர்வும், எக்ஸ் சர்வீஸ் ஆட்களுக்கும்  மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கும்  பத்து வருடம் வயது வரம்பு தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

வட இந்திய ரயில்வே பணிக்கு  ஆட்கள்  டெஸ்டுகள் மூலமா தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும். எஸ்சிஎஸ்டி மற்றும் எக்ஸ் சர்வீஸ்மேன் மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.


ரயில்வேயில் வேலை வாய்ப்பு பெற அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் http://www.rrcnr.org/Default.aspx கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை முழுவதுமாக படிக்கலாம்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

குழந்தைகள் காப்பகத்தில் பொங்கல் விழா கலெக்டர் பங்கேற்பு!!

No comments :
ராமநாதபுரத்தில் உள்ள ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலெக்டர் முனைவர் நடராஜன் கலந்துகொண்டு கரும்பு மற்றும் இனிப்புகளை வழங்கினார்.

ராமநாதபுரம் சமூகநலத்துறையின் கீழ் இயங்கி வரும் சத்தியா அம்மையார் நினைவு ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் விழாவில் மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன்  நேரில் சென்று ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் பண்டிகையில் பங்கேற்று, ஆதரவற்ற குழந்தைகளுக்கு கரும்பு மற்றும் இனிப்புகளை வழங்கினார். 

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழர்களின் கலாச்சாரமானது இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையினை அடிப்படையாக கொண்டதாகும். நம் முன்னோர்கள் அனைவரும் உழவுத்தொழிலை பிரதானமாக கொண்டு வாழ்ந்தார்கள். அந்த வகையில் உழவுக்கு உறுதுணை புரியும் இயற்கையை வணங்கி நன்றி சொல்லும் விதமாகவும், கால்நடைகளை தொழுது நன்றி தெரிவிக்கும் விதமாகவும், சுற்றத்தாருடன் அன்பு பாராட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையிலும் பொங்கல் பண்டிகை , மாட்டுப்பொங்கல், காணுப்பொங்கல் ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றன.  

அதனடிப்படையில் தமிழர்களின் கலாச்சார திருவிழாவான பொங்கல் பண்டிகையினை ஆதரவற்ற குழந்தைகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் இராமநாதபுரத்தில் சமூகநலத்துறையின் கீழ் இயங்கி வரும் சத்தியா அம்மையார் நினைவு ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.  மேலும் காணும் பொங்கல் திருநாளான 16.01.218 அன்று அரியமான் கடற்கரையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை கவர்ந்திடும் வகையில் பல்வேறு கடல்நீர் சாகச விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பொங்கல் கலைவிழா நிகழ்ச்சிகள் நடத்திட திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

பண்டிகை தினங்களை  மாணவ, மாணவியர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதைப் போல கல்வி கற்பதையும் கொண்டாட்டமாக கருதி ஆர்வத்துடன் கல்வி கற்றிட வேண்டும். விஷன் 2022 திட்டத்தின் கீழ் நமது இராமநாதபுரம் மாவட்டத்தினை தமிழகத்தின் முன்னோடி மாவட்டமாக திகழ செய்வதற்கு  தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதனை இந்த நல்ல நாளில் தெரிவித்துக் கொள்வதோடு அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பேசினார். 

இவ்விழாவில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன் உள்பட அரசு அலுவலர்கள், குழந்;தைகள் கலந்து கொண்டனர்.
செய்தி: தினபூமி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)