முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, December 27, 2020

கீழக்கரை ஜே வி சி கைப்பந்து குழுவின் 29 வது ஆண்டு கைப்பந்து போட்டி!!

No comments :


கீழக்கரை வடக்கு தெரு மணல் மேட்டில் ஜே வி சி கைப்பந்து குழுவின் 29 வது  ஆண்டு கைப்பந்து போட்டி நடைபெற்றது .

 

இப்போட்டியில் பல ஊர்களில் இருந்து 30க்கும்  மேற்பட்ட அணியினர் கலந்து கொண்டனர் .

 

முதல் பரிசு ரூ 12 ஆயிரத்தை எப் பி டைலர் அணியும்,

2-வது பரிசு ரூ 10 ஆயிரத்தை  ஆர் கன்ஸ்டிரக்சன் அணியும் ,

3-வது பரிசு ரூ 8ஆயிரத்தை மாரியூர் முஹப்பது பாய்ஸ் &

4-வது பரிசு  ரூ 6 ஆயிரத்தை ஜே வி சி அணியும் வென்றது .

 
கால் இறுதி  போட்டிக்கு தகுதி பெற்ற அணிக்கு தலா  ஆயிரம் ரூபாய் வழங்கபட்டது .

 


ஏறாளமானோர் கண்டு களித்த இப்போட்டியினை வடக்கு தெரு ஜமாத் தலைவர் ஹாஜி கே எஸ் ரெத்தின முஹம்மது துவங்கி  வைத்தார் . இறுதி  நாளன்று போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கீழக்கரை புரவலர்கள் பரிசுகள் வழங்கினர் .

 

ஏற்பாடுகளை அல் ஜதீத் வாலிபால் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

 

செய்தி: திரு. நஸ்ருதீன், அல் ஜதீத் வாலிபால் க்ளப்


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழக மைய மாணவர் சேர்க்கை!!

No comments :

 

ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் இயங்கிவரும் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழக மையத்தில் நடப்பு ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்துவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து ராமநாதபுரத்தில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரி நிர்வாகத் தரப்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

 ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழக மையம் செயல்பட்டு வருகிறது.

 


இங்கு நடப்பு ஆண்டுகக்கான மாணவ, மாணவியர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. இளநிலைப் படிப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், வேதியியல், கணினி அறிவியல், வணிகவியல், வணிகவியல் பெரு நிறுவன செயலகம் ஆகிய துறைகளும், முதுகலையில் தமிழ், ஆங்கிலம், கணிதம், வேதியியல், கணினி அறிவியல், வணிகவியல், வணிக பெரு நிறுவன செயலகம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கான சேர்க்கை நடைபெறுகிறது.

 

பாடப்பிரிவுகள் குறித்த கூடுதல் தகவல்களுக்கு திறந்த நிலைப் பல்கலைக்கழக மண்டல அலுவலகம் (மதுரை) 0452-2458966 என்ற தொலைபேசி எண் மற்றும் 9791234586 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ஔவையார் விருதுக்கு டிச.29 க்குள் விண்ணப்பிக்கலாம்!!

No comments :

 

உலக மகளிர் தினவிழாவினையொட்டி பெண்களின் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்தவர்கள் ஔவையார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: 

உலக மகளிர் தினவிழா ஆண்டுதோறும் மார்ச் 8 இல் கொண்டாடப்பட்டு வருகிறது. 2020-21 ஆம் ஆண்டிற்கான உலக மகளிர் தினவிழா அன்று பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தவருக்கு ஔவையார் விருது வழங்கப்படவுள்ளது.

 


இதற்கு தகுதியான நபர்கள் டிச.29 க்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்போர் தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட 18 வயதிற்கு மேற்பட்ட பெண்ணாகவும், சமூகநலனைச் சேர்ந்த நடவடிக்கைகள், பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகளில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருக்கவேண்டும். தகுதியானவர்கள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூகநல அலுவலகத்தை அணுகி இணைப்புப் படிவம் பெற்று முழுமையாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நிரப்பி வழங்கவேண்டும்.

 

மேலும் இதுகுறித்த விவரங்களுக்கு 04567-230466 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Sunday, December 20, 2020

ராமநாதபுரம் நகராட்சியில் சாக்கடை அடைப்புகளை அகற்றும் ரோபோ எந்திரத்தை கலெக்டர், எம்.எல்.ஏ தொடங்கி வைத்தனர்!!

No comments :

ராமநாதபுரம் நகராட்சியில் மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ. ஆகியோர், பாதாள சாக்கடை அடைப்புகளை அகற்றும் ரோபோ எந்திரத்தை தொடங்கி வைத்தனர்.

 

மனிதர்களைக் கொண்டு கழிவுநீர் தொட்டி மற்றும் பாதாள சாக்கடைகளில் பணி செய்யும்போது எதிர்பாராத விதமாக உயிரிழப்புகள் ஏற்படுவதை கருத்தில் கொண்டு மனித கழிவுகளை மனிதனே அகற்றுவது தவறு என சட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

இத்தகைய சூழ்நிலைகளை முற்றிலுமாக தவிர்த்திடும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ராமநாதபுரம் நகராட்சியில் ஓ.என்.ஜி.சி.சமூக பொறுப்பு நிதி ரூ.45 லட்சம் மதிப்பில் ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவனம் சார்பாக பாதாள சாக்கடை அடைப்புகளை அகற்றும் ரோபோ எந்திரம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

 


ராமநாதபுரம் நகராட்சியில் 10,500-க்கும் மேற்பட்ட பாதாள சாக்கடை இணைப்புகளும் 2,100-க்கும் மேற்பட்ட மனிதன் உட்புகும் நுழைவுகள் உள்ளன. இவற்றில் கழிவு நீர் செல்ல தடை ஏற்படும் பட்சத்தில், அதனை உடனே சரிசெய்ய இந்த ரோபோ எந்திரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

 

இந்த எந்திர ரோபோ ஜென் ரோபோடிக் இன்னோவேஷன் எனும் திருவனந்தபுரத்தை சார்ந்த நிறுவனம் வடிவமைத்து உள்ளது.இந்த ரோபோடிக் எந்திரத்தில் ஆபத்தான விஷ வாயுக்களை கண்டறியும் வசதி, எளிய முறையில் இயக்கும் வசதி, குறைவான எடை, கேமரா வசதி மற்றும் தண்ணீர் உட்போகா வண்ணம் அமைக்கப்பட்டு இருப்பதால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மிகவும் பயனாக அமைந்துள்ளது.

 

முதற்கட்டமாக ராமநாதபுரம் நகராட்சியில் செயல்படுத்தப் பட்டுள்ள இந்த ரோபோ எந்திரத்தின் செயல்திறன் மற்றும் பயன்பாட்டை பொறுத்து மாவட்டத்தின் பிற உள்ளாட்சி அமைப்புகளையும் தேவைக்கேற்ப இந்த எந்திரத்தை பயன்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Monday, December 14, 2020

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இன மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

 

அரசு, அரசு உதவிபெறும், தனியார் கல்வி நிறுவனங்களில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் பி.சி., எம்.பி.சி., டி.என்.சி.,பிரிவு மாணவர்களுக்கு இளங்கலை பட்டபடிப்பிற்கு இலவச கல்வி திட்டத்தின் கீழ் நிபந்தனையின்றி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

 


முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

 

தகுதியுள்ள மாணவர்கள் அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களில் விண்ணப்ப படிவங்களை பெற்று விண்ணப்பிக்க வேண்டும். இணைய தளம் மூலம் விண்ணப்பிப்பதற்கும், கேட்புகளை சமர்பிக்க டிச.,31 வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

 

 

மேலும் விபரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்,

என கலெக்டர்தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Tuesday, December 8, 2020

ராமநாதபுரம் மாவட்டத்தில் காளான் வளர்ப்பு / கண்காணிப்பு கேமரா இலவச பயிற்சி!!

No comments :

ராமநாதபுரம் மாவட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் சார்பில், காளான் வளர்ப்பு, கண்காணிப்பு கேமரா, பாதுகாப்பு அலாரம், ஸ்மோக் டிடெக்டர் பொருத்தல், பழுதுபார்த்தல் ஆகிய பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

 


கிராம பகுதியைச் சேர்ந்த 19 முதல் 45வயதிற்குட்பட்டவர்கள் கலந்துகொள்ளலாம்.

 

காளான் வளர்ப்பு பயிற்சிக்கு டிச.,10க்குள்,

பிறபயிற்சிகளுக்கு டிச., 17க்குள்

04567- 221 612, 80567 71986 என்ற எண்களில் பெயரை முன்பதிவு செய்ய வேண்டும் என மைய இயக்குனர் கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Sunday, December 6, 2020

விவசாய நிலங்களில் ஏற்பட்டுள்ள சேதங்களை ஆய்வு செய்த அதிகாரிகள்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, சாயல்குடி, ராமேசுவரம், ராமநாதபுரம், கீழக்கரை, ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் பரமக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட நயினார்கோவில் ஒன்றியம் முத்துப்பட்டினம், வாணியவல்லம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீரில் மூழ்கி அழுகிம் வரும் நெல் மற்றும் மிளகாய் செடிகள் சேதமாகி வருகின்றன.

 

ராதாபுளி வருவாய் கிராமத்தில் 518 எக்டேர் பரப்பில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 5 ஏக்கர் பரப்பில் நெற்பயிர் நீரில் மூழ்கி உள்ளது. 25 ஏக்கர் பரப்பில் மழைநீர் தேங்கி பயிர் சாய்ந்துள்ளது. முட்கள் நிறைந்து இருப்பதால் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது, வாணியவல்லம் கிராமத்தில் கோ -51 ரக நெல் பயிர் மழையால் சாய்ந்துள்ளது. வாணியவல்லம் கிராமத்திலும் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

 


இதுகுறித்த தகவல் அறிந்த மாவட்ட சிறப்பு அதிகாரி தர்மேந்திர பிரதாப் யாதவ் மற்றும் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் பரமக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட நயினார்கோவில் பகுதியில் புரவி புயல் மழை சேதம், மழைநீரால் விவசாய நிலங்களில் ஏற்பட்டுள்ள சேதங்களை நேரில் பார்வையிட்டு விவசாயிகளிடம் விவரங்களை கேட்டறிந்தனர்.

 

அப்போது மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் சேக் அப்துல்லா, வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பானு பிரகாஷ், நயினார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் கணேஷ்பாபு, ஊராட்சி தலைவர்கள் வாணியவல்லம் நாகநாதன், நயினார்கோவில் ஜோதிமணி உள்பட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

செய்தி: தினத்தந்தி


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Wednesday, November 18, 2020

வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

No comments :

வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் விருதுக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக, மதுரை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ந. லெனின் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:

 

தமிழகத்தில் வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்வரால் குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகிறது. வீர, தீர செயல்புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே இப் பதக்கத்தை பெற தகுதி படைத்தவராவர். பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்படும் இந்த பதக்கத்தைப் பெற வயது வரம்பு கிடையாது.2021-ஆம் ஆண்டு வழங்கப்பட உள்ள இப் பதக்கத்துக்கு தகுதியானவர்களைத் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வீர, தீர செயல்கள் மற்றும் அவை தொடர்பான ஆவணங்களுடன், மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையுடன் வழங்கப்பட வேண்டும்.

 

எனவே, வீர, தீர செயல்கள் புரிந்த தகுதியுள்ளவர்கள் https://awards.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பம் மற்றும் விவரங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.

 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நவம்பர் 19-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றார்

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Monday, November 16, 2020

ராமநாதபுரம் மாவட்ட புதிய கலெக்டர் பொறுப்பேற்றுக்கொண்டார்; பிரியாவிடை பெற்ற திரு.வீரராகவராவ் !!

No comments :

ராமநாதபுரம் கலெக்டராக பணியாற்றி வந்த வீரராகவராவ் வேலைவாய்ப்புத்துறை இயக்குனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் ராமநாதபுரம் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவர் நேற்று ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வீரராகவராவிடம் இருந்து தனது பணி பொறுப்புகளை பெற்றுக்கொண்டார்.

 

புதிய கலெக்டராக பணிஏற்ற பின்னர் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

 

ராமநாதபுரம் மாவட்டத்தின் 23-வது கலெக்டராக பணி ஏற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழக அரசு ஏராளமான மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைய முன்னுரிமை அளித்து செயல்படுவேன். இங்கிருந்து செல்லும்போது இதில் மனநிறைவு பெற்றுதான் செல்வேன். கொரோனா நோய் பரவல் ராமநாதபுரம் மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

 

கொரோனா பரவல் 2-வது அலை வந்துவிடாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். பின்தங்கிய மாவட்டமான ராமநாதபுரத்தில் தொழில்வளர்ச்சி கிடைத்தால் முன்னேற்றமடையும். பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அதற்குரிய சாத்தியக்கூறுகள் ஆராய்வது தொடர்பாக எனது உழைப்பு நிச்சயம் இருக்கும். கல்வி மற்றும் சுகாதாரத்தில் கவனம் செலுத்தி முக்கியத்துவம் பெறும் வகையில் செயல்படுவேன்.

 


தற்போது கொரோனா பரவல் காரணமாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் திறந்ததும் நூற்றுக்கு நூறு சதவீதம் தேர்ச்சி பெற திட்டம் வைத்துள்ளேன். அதனை செயல்படுத்தி மாவட்டத்தில் அனைவரையும் தேர்ச்சி பெற வைப்பேன். ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர் ஆய்வு மேற்கொண்டு குறைபாடுகளை நீக்கி அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

 

கடந்த 2003-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்ட துணை கலெக்டராக பணியை தொடங்கி 2004-2006 வரை உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி பாப்பாபட்டி கீரிப்பட்டி தேர்தலை நடத்தியவர். 2007-ல் மதுரை மேற்கு இடைத்தேர்தலுக்கு தேர்தல் அதிகாரியாகவும், 2009-11 ஆண்டு வரை மதுரை மாவட்ட வருவாய் அதிகாரியாகவும், 2011-12-ம் ஆண்டு வரை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராகவும், 2012-13-ல் தஞ்சாவூர் சுகர் மில்ஸ் மூத்த செயல் அலுவலராகவும், 2013-15-ம் ஆண்டு வரை அண்ணாமலை பல்கலைக்கழக சிறப்பு பிரிவில் வருவாய் அதிகாரியாகவும் பணியாற்றி இருக்கிறார். 2015-17 முதல்-அமைச்சர் அலுவலக துணை செயலாளராகவும், 2017-ல் ஐ.ஏ.எஸ். பதவி உயர்வு பெற்று மறுவாழ்வு துறை இயக்குனராக பணியாற்றி உள்ளார்.

 

இதன்பின்னர் தற்போது ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக பணிநியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய கலெக்டரின் பூர்வீகம் கன்னியாகுமரி மாவட்டம் என்பதும் பிறந்து வளர்ந்தது திருநெல்வேலி மாவட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


புதிய கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் அவர்களுக்கு நம் முகவை முரசு சார்பாக வாழ்த்துக்கள்

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Sunday, November 15, 2020

ராமநாதபுரம் மாவட்டத்தில் நவ.16 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!!

No comments :

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் நவ.16 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

 

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி 2021 ஜன.1 ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

 


இதனடிப்படையில் முதற்கட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், திருவாடானை, முதுகுளத்தூர், பரமக்குடி உள்ளிட்ட நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல், நவ.16 இல் அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தீபாவளி விற்பனை கடும் பாதிப்பு!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் தீபாவளி விற்பனை பாதிக்குப்பாதியாக ரூ.2 கோடி வரை குறைந்து விட்டதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜவுளி, வீட்டுஉபயோக பொருட்கள், பட்டாசு, ஸ்வீட்கடைகளில் வியாபாரம் ரூ.4கோடி வரை நடைபெறும். ஆனால் இவ்வாண்டு கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கால் பொதுமக்களிடம் பணப்புழக்கம் குறைந்துள்ளது.

 


 

இதனால் எதிர்பார்த்த அளவிற்கு தீபாவளி விற்பனை இல்லை. பட்டாசு, ஜவுளி வியாபாரத்தில் ரூ. பல லட்சம் மதிப்பிலான சரக்கு தேக்கமடைந்துள்ளன. கடன் வாங்கி முதலீடு செய்த வியாபாரிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

செய்தி; தினசரிகள்(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Sunday, November 1, 2020

பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் மரியாதை செலுத்தினர்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவாலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் அக்டோபர் 30-ந் தேதி முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா நடைபெறும். இதில் கலந்து கொள்ள முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் மதுரை வந்து தங்கினார்.

 

நேற்று காலையில் காரில் மதுரையில் இருந்து புறப்பட்டு 9.20 மணிக்கு பசும்பொன் வந்தார். அவருடன் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், டாக்டர் விஜயபாஸ்கர், காமராஜ், பாஸ்கரன், ஓ.எஸ்.மணியன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பலர் உடன் வந்தனர்.

 

பின்னர் அனைவரும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

 


இதை தொடர்ந்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

 

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 113-வது ஜெயந்தி விழாவும், 58-வது குருபூஜை விழாவும் சிறப்பாக நடைபெறுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவர் 1908-ம் ஆண்டு பிறந்தார். அவர் இந்திய சுதந்திர போராட்டத்தின் போது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் ஆங்கிலேயரை எதிர்த்தார். இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து இளைஞர்களை திரட்டி, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தியாக செம்மல் ஆவார்.

 

1920-ம் ஆண்டு அப்போதைய மதராஸ் மாகாணத்தில் மதுரை, ராமநாதபுரம், நெல்லை ஆகிய மாவட்டங்களில் நடைமுறையில் இருந்த குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிராக தேவர் மேற்கொண்ட போராட்டம் அப்போது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கியது.

 

1937-ம் ஆண்டு மாநில தேர்தலில் ராமநாதபுரத்தில் இருந்து தேவர் போட்டியிட்டார். ஆங்கில அரசால் வேட்பாளராக நிறுத்தப்பட்ட பலம் வாய்ந்த ராமநாதபுரம் சேதுபதி மன்னரை எதிர்த்து மகத்தான வெற்றி பெற்றவர். அதை தொடர்ந்து 1946-ம் ஆண்டு சென்னை மாகாணம் தேர்தலிலும் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 1948-ம் பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ்நாட்டின் தலைவரானார். 1937 முதல் 1962-வரை நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டு அத்தனை தேர்தல்களிலும் அவர் வெற்றி பெற்றவர்.

 

தேசியத்தையும், ஆன்மிகத்தையும் அடிப்படையாக கொண்டு அவர் ஆற்றிய சொற்பொழிவு அவருக்கு தெய்வதிருமகனார் என்ற பெயரை பெற்று தந்தது. தேவர் பிறந்ததும், மறைந்ததும் அக்டோபர் 30-ந் தேதி என்பது குறிப்பிட்டத்தக்கது. அவர் வாழ்ந்த நாட்கள் 20 ஆயிரத்து 75 நாட்கள், சிறையில் இருந்தது 4 ஆயிரம் நாட்கள். தேவர் பிறந்தநாளான அக்டோபர் 30-ந் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று 1979-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். அறிவித்தார். அன்றைய தினத்தில் இருந்து ஆண்டு தோறும் பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டு அரசு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

 

1994-ம் ஆண்டு சென்னை நந்தனத்தில் தேவருக்கு முழுதிருவுருவ வெண்கல சிலையை ஜெயலலிதா அமைத்து திறந்து வைத்தார். மேலும் பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தை சீரமைத்து தற்போது நினைவகம் புதுப்பொலிவுடன் திகழ்கிறது. அ.தி.மு.க. சார்பில் தேவரின் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்படும் என்று 2010-ம் ஆண்டு ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி 2014-ம் ஆண்டு ஜெயலலிதா பசும்பொன் கிராமத்திற்கு நேரில் வந்து 13 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

தேவருக்கு அரசு விழா மற்றும் சென்னையில் முழு உருவ வெண்கல சிலை, பசும்பொன்னில் தேவருக்கு தங்க கவசம் என அவருக்கு மென்மேலும் பெருமை சேர்க்கும் பணிகளை அ.தி.மு.க. தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

 

மேலும் அ.தி.மு.க. அரசால் பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அணையா விளக்கு, பால்குடம், முளைப்பாரி மண்டபம், முடி காணிக்கை செலுத்தும் கட்டிடம், குடிநீர்வசதி, பேவர்பிளாக் சாலை வசதி, பொதுக்கழிப்பிட வசதி என பல்வேறு பணிகளும் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் தேவருக்கு அனைத்து சிறப்புகளையும் செய்தது அ.தி.மு.க. அரசுதான் என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன்.

 

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

 

செய்தி: தினத்தந்தி


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Monday, October 19, 2020

துபாய் - தெய்ரா வில் வரும் அக்-23ம் தேதி ரத்ததான முகாம்!!

No comments :

துபாய் ஈமான் கல்சுரல் செண்டர் 23.10.2020 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் ரத்ததான முகாமை நடத்த இருக்கிறது.

இந்த ரத்ததான முகாம் துபாய் ரத்ததான மையத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது.

கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்த சமயத்தில் அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு ரத்தத்தின் தேவை அதிகமாக இருந்து வருகிறது. இந்த சேவையில் பங்கு கொண்டு தன்னார்வலர்கள் ரத்ததானம் செய்ய முன் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ரத்ததானம் செய்ய விரும்புவோர்

நிஜாம் :  050 352 5305

ஹிதாயத் :  050 51 96 433

ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தங்களது விருப்பத்தை பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 


குறிப்பு:

ரத்ததானம் செய்ய வருபவர்கள்

கண்டிப்பாக காலை உணவு சாப்பிட்டு வர வேண்டும்.

வெளிநாடு சென்று வந்த ஒரு மாதம் ஆகியிருக்க வேண்டும்.

விசிட் விசாவில் இருப்பவர்கள் ரத்ததானம் செய்ய அனுமதியில்லை. 


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Sunday, October 18, 2020

ராமநாதபுரம் மாவடட்த்தில் 'ஹலோ போலீஸ்' அலைபேசி எண் அறிமுகம்!!

No comments :

ராமநாதபுரத்தில் பொது மக்கள் தங்களின் குறைகளை உடனுக்குடன் தெரிவிக்க வசதியாக 'ஹலோ போலீஸ்' 83000 31100 என்ற அலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

இந்த எண்ணில் பொதுமக்கள் தங்களது பகுதியில் நடைபெறும் சட்டவிரோதமான செயல்கள், மணல் கடத்தல், போதைப்பொருட்கள் விற்பனை, சூதாட்டம், லாட்டரி விற்பனை மற்றும் பிற ரகசிய தகவல்களை தெரிவிக்கலாம். 

மேலும் போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் மனுக்களை பெற மறுத்தாலோ, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் இருந்தாலோ, குற்றவாளியை கைது செய்யாமல் இருப்பது, விசாரணையில் திருப்தி இல்லாமல் இருந்தாலும் ஹலோ போலீஸ் எண்ணில் தெரிவிக்கலாம்.

 

மேலும் மாவட்ட எஸ்.பி., யை 87782 47265 எண்ணில் நேரடியாக தொடர்பு கொள்ளலாம். தகவல் கொடுப்பவர்கள் பற்றிய விபரங்கள் மிகவும் ரகசியமாக வைத்துக்கொள்ளப்படும் என எஸ்.பி., கார்த்திக் தெரிவித்துள்ளார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Thursday, October 15, 2020

ராமநாதபுரம் மாவட்டத்தில் இலவச கட்டாயக் கல்வி; நவம்பர் 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க நவம்பர் 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறுபான்மையற்ற தனியார் மற்றும் தனியாருக்குச் சொந்தமான மழலையர், தொடக்க மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் நுழைவு வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

அதனடிப்படையில் 156 பள்ளிகளில் 1,999 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. விதிமுறைப்படி நடத்தப்பட்ட மாணவர் சேர்க்கையில் 1173 பேர் மட்டுமே நுழைவு வகுப்பில் சேர்ந்துள்ளனர். ஆகவே, தற்போது 118 பள்ளிகளில் 826 இடங்களில் மாணவ, மாணவியர் சேர்க்கப்பட வேண்டியுள்ளது.
காலியிடங்களில் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவு, சிறப்புப் பிரிவு, எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், சுகாதாரமற்ற தொழில் செய்வோரது குழந்தைகள், மூன்றாம் பாலின குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் நலிவடைந்தோர் குழந்தைகள் ஆகியோர் சேர்க்கப்படுவர். இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை திங்கள்கிழமை (அக்.12) தொடங்கியுள்ள நிலையில், தற்போது செவ்வாய்க்கிழமை வரையில் 11 பேர் மட்டுமே விண்ணப்பித்திருப்பதும் தெரியவந்துள்ளது.

 

எல்கேஜியில் சேர கடந்த ஜூலையில் 3 வயது முடிவடைந்தும், ஒன்றாம் வகுப்பில் சேர கடந்த ஜூலையில் 5 வயது நிரம்பியவராகவும் இருத்தல் அவசியம். மாவட்ட முதன்மைக் கல்வி மற்றும் வட்டாரக் கல்வி அலுவலகங்களிலும் வட்டார வளமையத்திலும் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, வரும் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க உரிமம் பெற அக்-23க்குள் விண்ணப்பிக்கலாம்!!

No comments :

தீபாவளிப் பண்டிகைக்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க உரிமம் பெறுவதற்கு வரும் 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

 

வரும் நவம்பர் 14 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்காலிகப் பட்டாசு விற்பனை கடைகள் வைக்க உரிமம் பெற விரும்புவோர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

 


விண்ணப்பம் செய்வோர் வெடிபொருள் சட்டம், விதிகளை முறையாகக் கடைப்பிடித்து பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பாதுகாப்பான இடத்தைத் தேர்வு செய்து ஆட்சேபணை இல்லாத இடத்திற்கு மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

 

விண்ணப்பிக்கும் போது விண்ணப்பங்களின் பிரதிகள்-5,

கடையின் வரைபடம், மனுதாரரின் மார்பளவு வண்ண புகைப்படங்கள்-2,

மனுதாரர் உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளராக இருப்பின் அதற்கான ஆவணங்கள் மற்றும்

நடப்பு நிதியாண்டில் வீட்டு வரி ரசீது செலுத்தியதற்கான நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

 

பட்டாசுக் கடை வைக்க உரிமம் கோரும் இடம் வாடகை கட்டடம் எனில், இடத்தின் பத்திர நகல் மற்றும்

வீட்டு வரி செலுத்திய ரசீது நகலுடன் கட்டட உரிமையாளரிடம் ரூ. 20-க்கான முத்திரைத் தாளில் பெறப்பட்ட அசல் வாடகை ஒப்பந்தப் பத்திரம் மற்றும்

உரிய கணக்குத் தலைப்பின் கீழ் அரசுக் கணக்கில் பாரத ஸ்டேட் வங்கியில் உரிமக் கட்டணம் செலுத்தியதற்கான அசல் ரசீது

ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

 

விண்ணப்பங்கள் வரும் 23 ஆம் தேதி மாலைக்குள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு வரும் நவம்பர் 1 ஆம் தேதிக்குள் பட்டாசு விற்பனை செய்ய உரிமம் வழங்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Thursday, October 8, 2020

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை!!

No comments :

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை திட்ட ஆவணங்களை சமா்ப்பிக்க கால அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

 


தமிழக அரசின் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை திட்டத்தில் பயன்பெறுவோா் ஆண்டு தோறும் பணியில் இல்லை என தெரிவிக்கும் சுய உறுதி மொழி ஆவணம் சமா்ப்பிப்பது அவசியம். கரோனா பரவல் பொதுமுடக்கம் காரணமாகக் கடந்த மாா்ச் இறுதி முதல் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை பெற்றுவரும் பயனாளிகள் சுயஉறுதி மொழி ஆவணத்தை அளிக்கமுடியவில்லை.

 

அதனால், சுயஉறுதி மொழி ஆவணம் சமா்ப்பிக்க கடந்த ஆகஸ்ட் வரை 3 மாதத்திற்கு ஏற்கெனவே கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. தற்போது சுய உறுதிமொழி ஆவணம் வழங்குவதற்கு செப்டம்பா் (2020) முதல் பிப்ரவரி (2021) வரை மேலும் 6 மாத காலத்திற்கு கால நீட்டிப்பு அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

ஆகவே, சுயஉறுதிமொழி ஆவணத்தை தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமா்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Wednesday, October 7, 2020

காரில் கடத்திய 288 மது பாட்டில்கள் பறிமுதல்: 2 போ் கைது!!

No comments :


ராமநாதபுரத்தில் வாகனச் சோதனையின்போது காரில் கடத்திவரப்பட்ட 288 மதுப்பாட்டில்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து 2 பேரைக் கைது செய்தனா்.

 

ராமநாதபுரம் அருகேயுள்ள திருப்புல்லாணி-ஏா்வாடி சாலையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை மாலை வாகனச் சோனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வேகமாக வந்த காரை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, காரில் மதுப்பாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து 288 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா், காரில் வந்த புதுமாயாகுளத்தைச் சோ்ந்த சக்திவேல் (40), முத்துகுமாா் (31) ஆகியோரை கைது செய்தனா்.

 

இதனால், திருப்புல்லாணி காவல் நிலைய காவலா் செய்யது அல்பானை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் பாராட்டி வாழ்த்தி பரிசளித்தாா்.

 

செய்தி: தினமணி


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Tuesday, October 6, 2020

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா குறைகிறது, மக்கள் மகிழ்ச்சி!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு செப்டம்பர் முதல் குறைந்து தற்போது ஒற்றை இலக்கத்திற்கு வந்துள்ளது.

 

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் மே, ஜூன், ஜூலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. தற்போது பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரித்தது.சுகாதாரத்துறை அதிகாரிகளின் துரித நடவடிக்கைகளால் தற்போதைய நிலையில் தொற்று எண்ணிக்கை பத்துக்கும் குறைவாக உள்ளது.


மாவட்டத்தில் இதுவரை 5629 பேர் பாதிக்கப்பட்டதில் 5346 பேர் குணமடைந்துள்ளனர். 120 பேர் பலியாகினர். ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கொரோனா வார்டில் 14 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

 


 

ராமநாதபுரம் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார் கூறியதாவது:மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், 11 ஒன்றியங்களில் தலா இரண்டு வீதம் 22 நடமாடும் பரிசோதனை முகாம் மூலம் தினமும் 850 முதல் 900 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.இதில் ஒற்றை இலக்கத்தில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை உள்ளது. 


மாவட்டத்தில் கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் உள்ளது.ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் வெளிநாட்டு பக்தர்களுக்கு அங்குள்ள சோதனை சாவடியில் மருத்துவக் குழுவினர் கொரோனா பரிசோதனை செய்கின்றனர். தினமும் குறைந்தது 40 பரிசோதனை நடக்கிறது, என்றார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Thursday, October 1, 2020

நாளை அக்-2 முதல் சென்னை-ராமேஸ்வரம் சேது எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து!!

No comments :

ராமேஸ்வரம்- சென்னை இடையே 6 மாதத்திற்கு பின் அக்.,2ல் சேது எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து துவங்க உள்ளது.


மார்ச் 24ல் துவங்கிய ஊரடங்கினால் ரயில், பஸ் போக்குவரத்து முடங்கியது. செப்.,1 முதல் பொது போக்குவரத்து துவங்கியும், ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை இல்லை.இந்நிலையில் 6 மாதத்திற்கு பின் ராமேஸ்வரம், சென்னை இடையே அக்., 2 முதல் 5ம் தேதி வரை சேது எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் அக்.,2 ல் சென்னை எழும்பூரில் மாலை 5:45க்கு புறப்பட்டு விழுப்புரம், திருச்சி, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் வழியாக அக்.,3 அதிகாலை 4:25க்கு ராமேஸ்வரம் வந்து சேரும்.

 

 

அக்.,3 இரவு 8:25க்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு அக்.,4 காலை 7:15க்கு சேரும் என தென்னக ரயில்வே தெரிவித்துஉள்ளது. இதனையடுத்து நேற்று பாம்பன் பாலத்தில் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடந்தது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ராமநாதபுரம்-கீழக்கரை மேம்பால பணி போக்குவரத்தை மாற்றம் செய்ய திட்டம்!!

No comments :

ராமநாதபுரம்-கீழக்கரை சாலையில் ரெயில்வே கேட் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க புதிய சாலை மேம்பாலம் அமைக்க கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கப்பட்டது. நெடுஞ்சாலை துறையின் மூலம் ரெயில்வே சாலை மேம்பாலம் அமைக்க நிலம் கையகப்படுத்த ரூ.5 கோடியே 14 லட்சம், கட்டுமானப் பணிகளுக்கு தொழில்நுட்ப அங்கீகாரமாக ரூ.25 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேம்பாலமானது, மொத்தம் 720 மீட்டர் நீளத்திலும், 12 மீட்டர் அகலத்திலும் அமைக்கப்படுகிறது.

 

தற்போது தேசிய நெடுஞ்சாலை பகுதியில் 7 தூண்களுடன் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. இந்த பணிகள் நடைபெற தொடங்கினால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படும்.இதன்காரணமாக வாகனங்களை மாற்றுவழியில் திருப்பி விடுவது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் இருந்து ராமேசுவரம், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று திரும்பி வரும் புறநகர் பஸ்களை பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று தேவிபட்டினம் விலக்கு வழியாக பேராவூர் சாலையில் வந்து புதிய பஸ்நிலையத்தை அடையும் வகையில் மாற்றிவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

 


இதே மார்க்கமாக இருவழிகளிலும் சென்றுவரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர டவுன் பஸ்கள் சென்றுவருவதற்கு மாற்றுவழி குறித்து மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை, வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

 

நகர் பஸ்கள் பழைய பஸ் நிலையம், குமரையாகோவில், பாரதிநகர், கலெக்டர் அலுவலகம், பட்டணம்காத்தான் பகுதிகளுக்கு சென்றுவர வேண்டிய நிலை உள்ளதால் அதற்கேற்ப வழித்தடங்களை மாற்றிஅமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேணிக்கரையில் இருந்து செட்டியதெரு, அரண்மனை சாலை வழியாகவும், புதிய பஸ் நிலையத்தில் இருந்து சின்னக்கடை சாலை வழியாக குமரையா கோவில் விலக்கு பகுதிக்கு சென்றுவருவது உள்ளிட்ட பல வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

 

40 முதல் 50 நாட்களில் மேம்பால தூண்கள் அமைக்கப்படும் என்றும் அதன்பின் மேற்பகுதியில் மட்டுமே வேலை நடக்கும் என்பதால் கீழே சாலையில் அந்த வழியாக வாகனங்கள் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Tuesday, September 29, 2020

ராமநாதபுரம் மாவட்டத்தில் முழுமையாக பஸ்களை இயக்குவது எப்போது?!!

No comments :

 ராமநாதபுரம் மாவட்டத்தில் 70 சதவீதத்திற்கும் குறைவான அரசு பஸ்கள் இயக்கப்படுவதால் மக்கள்நெரிசலில் அவதிப்படுகின்றனர்.

 

 

முழுமையாக பஸ்களை இயக்குவது எப்போது, என்ற கேள்வி எழுந்துள்ளது.கொரோனா ஊரடங்கு விதிமுறை முழுமையாக தளர்த்தப்படவில்லை. பொதுமக்களின் நலன் கருதி அரசு பஸ்கள் செப்.,1 முதல் இயக்கப்படுகின் றன. ஆனால் இன்னும் ஏராளமான கிராமங்களுக்கு பஸ் போக்குவரத்து துவங்கவில்லை. நகர் பகுதிகளிலும் 70 சதவீதத்திற்கும் குறைவான பஸ்களே இயக்கப்படுகின்றன.

 

 

மக்கள் பஸ்சுக்காக காத்துஇருக்கும் நிலை உள்ளது. அலுவலக வேலை நேரங்களிலும் குறைவான பஸ்களே இயக்கப்படுவதால் பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. குறைவான பஸ்களே இயக்கப்படுவதால் பல ஊர்களுக்கு செல்லும் பஸ்களில் நெரிசலில் மக்கள் பயணிக்கின்றனர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு முன்பு 120 டவுன் பஸ்கள் உட்பட 323 அரசு பஸ்கள்பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டன.

 


 

மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து மாவட்டத்திற்குள் 100 பஸ்கள் வரை இயக்கப்பட்டன. இதன்படி 423 பஸ்கள் இயக்கப்பட்டதில் தற்போது 296க்கும் குறைவான பஸ்களே இயக்கப்படுகின்றன.ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் நலங்கிள்ளியிடம் கேட்ட போது, கொரோனா பரவலை தடுக்க அரசு உத்தரவின்பேரில் தற்போது 70 சதவீதம் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

 

 

அக்.1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டால் 80 சதவீதம் பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.கிராமங்களில் மக்கள் டூவீலர் பயணத்திற்கு மாறியுள்ளனர். பஸ்களை இயக்க கோரிக்கை விடுத்தால் இயக்குகிறோம்.பொதுவாக இரவு 7:00 மணிக்கு மேல் மக்கள் வெளியூர் செல்வதை தற்போது விரும்புவதில்லை. இதனால் இரவு நேர பஸ் இயக்கம் குறைக்கப்பட்டுஉள்ளது. இயல்பு நிலை வரும் வரை இந்த நிலை தொடரும், என்றார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Monday, September 28, 2020

ராமநாதபுரம் கல்வி அலுவலக அதிகாரி உள்பட 5 பேர் கைது; போலி நியமன சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த வழக்கு!!

No comments :

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்கள் குரூப்-4 தேர்வு மூலம் நிரப்பப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள 41 பணியிடங்களை நிரப்புவதற்கு கலந்தாய்வு நடத்தப்பட்டதில் 37 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. மீதம் உள்ள 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள 2 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு சிவகங்கையை சேர்ந்த பெண் ஒருவர் மட்டுமே தேர்வாகி பணியில் சேர்ந்துள்ளார். மீதம் உள்ள ஒரு பணியிடம் அந்த பள்ளியில் காலியாக இருந்தது.இந்த சூழ்நிலையில் ராமநாதபுரம் சூரங்கோட்டை வலம்புரி நகரை சேர்ந்த தர்மராஜ் மகன் ராஜேஷ் (வயது 32) மேற்கண்ட பணிக்கு தான் தேர்வாகி உள்ளதாக கூறி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கையெழுத்துடன் கூடிய பணி நியமன ஆணையை கொண்டு வந்து சிக்கல் அரசு மேல்நிலை பள்ளியில் பணியில் சேர்ந்துள்ளார். அந்த பணிநியமன ஆணை சான்றிதழின் மேல் தலைமை ஆசிரியருக்கு சந்தேகம் ஏற்பட்டு விசாரித்து பார்த்தபோது அது போலியான உத்தரவு என்பது தெரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்த ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் கிடம் புகார் செய்தார்.

திடுக்கிடும் தகவல்கள்

அவரது உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு திருமலை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இளநிலை உதவியாளர் பணியிடத்துக்கு பலரிடம் ரூ.5 லட்சம் வீதம் பணம் வாங்கி கொண்டு போலி நியமன ஆணை வழங்கி உள்ளது தெரிய வந்தது. முதன்மை கல்வி அலுவலக இருக்கை பணி கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ராமநாதபுரம் பெரியார் நகரில் வசித்து வரும் குருந்தலிங்கம் மகன் கண்ணன் (47) என்பவர் இந்த மோசடிக்கு மூளையாக இருந்து செயல்பட்டது தெரிய வந்தது.


இவர் முதன்மை கல்வி அலுவலர் மூலம் வழங்கப்பட்ட பணி நியமன ஆணையை கலர் ஜெராக்ஸ் எடுத்து அதில் பெயரை மாற்றி வேலைக்காக காத்திருந்தவர்களிடம் தலா ரூ.5 லட்சம் வரை பெற்றுக்கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கி உள்ளார். இந்த மோசடிக்கு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி யூனியன் அலுவலக உதவியாளர் எஸ்.காவனூரை சேர்ந்த முத்து மகன் கேசவன் (45) உடந்தையாக இருந்து அவரும் 2 பேரை வேலைக்கு சேர்த்துவிட்டுள்ளார்.

இவர்கள் மூலம் மேற்கண்ட ராஜேஷ் மற்றும் பரமக்குடி அண்ணாநகரை சேர்ந்த கலைவானன் (26), பரமக்குடி பாரதிநகர் சாத்தையா மகன் சதீஷ்குமார் (33), மண்டபத்தை சேர்ந்த ராமநாதபுரம் பாரதிநகரில் வசித்து வரும் மனோஜ் ஆகியோர் தலா ரூ.5 லட்சம் கொடுத்து பணி நியமன ஆணை பெற்றுள்ளனர். பெரிய அளவில் நடந்துள்ள இந்த மோசடியை தொடர்ந்து போலீசார் முதன்மை கல்வி அலுவலக கண்காணிப்பாளர் கண்ணன், பரமக்குடி யூனியன் அலுவலக உதவியாளர் கேசவன், ராஜேஷ், சதீஷ்குமார், கலைவாணன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மனோஜை போலீசார் தேடிவருகின்றனர்.

ஒப்புகை சான்று

இந்த மோசடி தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் முதன்மை கல்வி அலுவலகத்திற்கு சென்று விசாரித்தபோது மேற்படி கண்காணிப்பாளர் கண்ணன் எதுவுமே தெரியாததுபோன்று விசாரணைக்கு ஒத்துழைத்து உரிய ஆவணங்களை வழங்கி நல்லவர் போல நடித்துள்ளார். இதனால் அவர் மீது போலீசாருக்கு எந்த சந்தேகமும் ஏற்படவில்லை. இதன்பின்னர் சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களிடம் விசாரித்தபோது கண்ணன் வசமாக சிக்கி கொண்டுள்ளார்.

பரபரப்பு

பணியில் சேர்ந்த அனைவரின் பட்டியலையும் பரிசோதித்தபோதுதான் மேற்கண்ட 4 பேரும் மோசடியாக சேர்ந்துள்ளது தெரியவந்தது. போலி பணி நியமன சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததால் சம்பளம் போடுவது, பணியாளர் பதிவேடு தயார் செய்தல், வருகை பதிவேடு உள்ளிட்டவற்றில் சிக்கி கொள்வோம் என்ற அடிப்படை தகவல் அறிந்தும் முதன்மை கல்வி அலுவலக கண்காணிப்பாளர் துணிச்சலுடன் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதுதான் கல்வித்துறை அலுவலர்கள் மட்டுமல்லாது அனைத்து அரசு அலுவலர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் முறைகேடு நடந்து பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது இளநிலை உதவியாளர் பணிநியமனத்திலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


செய்தி: தினத்தந்தி


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.