முகவை முரசு

வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே! ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே! நன்றென்று கொட்டு முரசே! இந்த நானில மாந்தருக் கெல்லாம்.

Monday, March 18, 2019

SBI வங்கிகளில் ஏ.டி.எம். அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி!!

No comments :
பாரத ஸ்டேட் வங்களிகளில் இனி ஏ.டி.எம். அட்டை இன்றி ரகசிய குறியீட்டு எண் மூலம் பணம் எடுக்கும் முறை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டு, கமுதியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு செயல்விளக்கமாக செய்து காட்டப்பட்டது.

இதுவரை ஏ.டி.எம். இயந்திரங்களில் ஏ.டி.எம். அட்டை மூலம் மட்டுமே பணம் எடுக்கும் முறை அமலில் இருந்தது. தற்போது ஒருவர் தனக்கு வேண்டிய நபருக்கு பணத்தை அனுப்ப ஏ.டி.எம். இயந்திரத்தில் வங்கிக் கணக்கு எண், தொகை மற்றும் ரகசிய குறியீட்டு எண் ஆகியவற்றை பதிவு செய்து, இந்த ரகசிய எண்ணை நாம் யாருக்கு பணம் அனுப்புகிறோமோ அவரிடம் கூறிவிட்டால் அந்த எண்ணை பயன்படுத்தி ஏ.டி.எம். இயந்திரத்தில் பணத்தை ஏ.டி.எம். அட்டை இல்லாமல் எடுத்துக் கொள்ளலாம்.இவ்வசதி இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கமுதி பாரத ஸ்டேட் வங்கியில் இத்திட்டத்தின் அறிமுக விழா திருச்சி மண்டல தலைமை அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், கமுதி கிளை மேலாளர் ராஜ்குமார் முன்னிலையில் நடைபெற்றது. பின்னர் வாடிக்கையாளர்களுக்கு ஏ.டி.எம். அட்டை இன்றி ரகசிய எண் மூலம் பணம் எடுக்கும் முறை செயல் விளக்கம் மூலம் செய்து காட்டப்பட்டது.


செய்தி: தினசரிகள்

(செய்திகள், விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்.)

Sunday, March 17, 2019

ராமநாதபுர மாவட்டத்ட்தில் ரூ.43 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் - கலெக்டர்

No comments :

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட தேர்தல் அதிகாரி வீரராகவ ராவ் தலைமையில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலைத்த கண்காணிப்பு குழுவினர் மேற்கொண்ட தணிக்கையின்போது முறையான ஆவணமின்றி பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருட்களின் விவரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது மாவட்ட தேர்தல் அதிகாரி கூறியதாவது:- 

இந்திய தேர்தல் ஆணையத்தின் நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து மாவட்டத்தில் தேர்தல் மாதிரி நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் நன்னடத்தை விதி மீறல்களை கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்டத்தில் 12 பறக்கும்படை குழுக்கள், 12 நிலைத்த கண்காணிப்பு குழுக்கள், வீடியோ குழுக்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் அரசு பொது கட்டிடங்களில் உள்ள அரசு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள், விளம்பரச் சின்னங்களையும், தனியார் கட்டிடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள் போன்றவற்றை அகற்ற உரிய கால அவகாசம் வழங்கப்பட்டு இதுவரை மொத்தம் 17,945 விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன.


இதில் அரசு பொதுக் கட்டிடங்களில் 12,677 விளம்பரங்களும், தனியார் கட்டிடங்களில் 5,268 விளம்பரங்களும் அடங்கும். உரிய கால அவகாசம் வழங்கியும் முறையே விளம்பரங்களை அகற்றாமல் இருந்த வகையில் 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் பறக்கும்படை, நிலைத்த கண்காணிப்பு குழு அலுவலர்கள் மேற்கொண்ட தணிக்கையின் மூலம் 15 நிகழ்வுகளில் மொத்தம் ரூ.43 லட்சத்து 26 ஆயிரத்து 850 மதிப்பில் பணம், பொருட்கள் முறையான ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுஉள்ளது.

குறிப்பாக ரூ.15 லட்சத்து 9 ஆயிரத்து 850 மதிப்பிலான இந்திய பணமும், ரூ.28 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பில் வெளிநாட்டு பணமும் அடங்கும். இதுதொடர்பாக சுங்கத்துறை மற்றும் வருமானவரி துறை ஆகிய துறைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருள் குறித்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்கப்பட்டு, மாவட்ட கருவூலத்தில் செலுத்தப்படும். சம்பந்தப்பட்ட நபர் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க 7 நாட்கள் காலஅவகாசம் வழங்கப்படும். அவ்வாறு சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களை நிதி விடுவிப்பு குழு முறையே ஆய்வு செய்து சரியாக இருக்கும் பட்சத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணமானது சம்பந்தப்பட்ட நபரிடம் திரும்ப வழங்கப்படும். உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் வங்கிகள் மூலமாக மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைகளை கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதவிர மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. முதன்முறை வாக்காளர்கள், மாற்றுத்திறன் கொண்ட வாக்காளர்கள், மூத்த குடிமக்கள் என அனைத்து தரப்பு வாக்காளர்களும் வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை ஆகியோர் உடனிருந்தனர்.


செய்தி: தினத்தந்தி

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்; ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Tuesday, March 12, 2019

தேர்தல் நன்னடத்தை விதிகள் மற்றும் ‘சுவிதா’ செயலி அறிமுக விளக்க கூட்டம்!!

No comments :
இந்திய தேர்தல் ஆணையத்தின் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அறிவிப்பினை தொடர்ந்து ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய தேர்தல் நன்னடத்தை விதிகள் தொடர்பான விழிப்புணர்வு குழு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் வீரராகவ ராவ் பேசியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல்-2019 தொடர்பான அறிவிப்பை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் மாதிரி நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் என அனைவரும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை முறையே கடைபிடிப்பது அவசியமாகும். குறிப்பாக அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் தாங்கள் மேற்கொள்ளும் பிரசார பொதுக்கூட்டங்கள், பேரணிகள், பயன்படுத்தும் வாகனங்கள், ஒலிபெருக்கிகள், தற்காலிக தேர்தல் அலுவலகங்கள், ஹெலிகாப்டர், ஹெலிகாப்டர் இறங்குதளம் உட்பட அனைத்து விதமான தேர்தல் நடவடிக்கைகளுக்கும் மாவட்ட தேர்தல் அலுவலரின் முன் அனுமதி பெற வேண்டும்.
மசூதிகள், தேவாலயங்கள், கோவில்கள் அல்லது வழிபாட்டுக்குரிய பிற இடங்களை தேர்தல் பிரசார மேடையாக பயன்படுத்தக்கூடாது.

தேர்தல் பிரசாரத்தின் போது சாதி, சமய, மொழி அல்லது வகுப்பினரிடையே வேறுபாடுகளை தூண்டுகிற விதமாகவோ, பதற்றமான சூழ்நிலையை உருவாக்குகிற விதமாகவோ நடவடிக்கைகள் மேற்கொள்ளக்கூடாது. மேலும் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வீடு வீடாக நேரிடையாகவோ, எஸ்.எம்.எஸ்., வாட்ஸ்-ஆப் செயலி உள்ளிட்ட குறுஞ்செய்தி மூலமாகவோ, தொலைபேசி அழைப்பு மூலமாகவோ என எந்தவிதத்திலும் பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது. மீறினால் தேர்தல் நன்னடத்தை விதிமீறலாக கருதப்பட்டு சட்டப்படி முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்படும்.

அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கு சிரமமின்றி முன்அனுமதி பெற ஏதுவாகவும், தேர்தல் நடவடிக்கைகளில் வெளிப்படை தன்மையை உறுதி செய்யும் வகையிலும் சுவிதா என்ற செயலி நடைமுறை படுத்தப்பட்டு உள்ளது. அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் இந்த செயலி மூலமாக மட்டுமே முன்அனுமதி பெற முடியும். அதன்படி இந்த செயலி மூலம் முன்அனுமதி கோரி பெறப்படும் மனுக்களை ஆய்வு செய்து தகுதியான மனுக்கள் மீது ஒற்றைச்சாளர முறையில் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல வாக்காளர்களை கவரும் விதமாக பணமாகவோ, பொருளாகவோ பரிசுப்பொருட்கள் வழங்குதல் கூடாது. மீறினால் வாக்கிற்காக பணம் கொடுப்போர் மற்றும் பெறுவோர் என இருதரப்பினர் மீதும் குற்றவியல் தடுப்பு நடைமுறை சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் எந்தவொரு வேட்பாளரையோ அல்லது வாக்காளரையோ சுதந்திரமாக வாக்களிக்க விடாமல் மிரட்டி அடக்கு முறைகளில் ஈடுபடுதல் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களின் மீது குற்றவியல் தடுப்பு நடைமுறை சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதுதவிர சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்களை பொறுத்தவரையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தேர்தல் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அரசு அலுவலக கட்டிடங்களில் உள்ள அரசு நலத்திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள், சின்னங்கள் ஆகியவற்றை மறைக்கவும், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சியின் சின்னங்கள், அறிவிப்புகள் ஆகியவற்றை 48 மணி நேரத்திற்குள்ளும், தனியார் இடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், சின்னங்கள் ஆகியவற்றை 72 மணி நேரத்திற்குள்ளும் அகற்ற கால நிர்ணயம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலை பின்பற்ற அனைத்து அரசுத்துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளும் இதனை முறையே பின்பற்ற வேண்டும்.

மேலும் எந்தவொரு அரசு கட்டிடத்திலும், நகரப்பகுதிகளிலும் சுவர் விளம்பரம் செய்வதற்கு 100 சதவீதம் அனுமதி கிடையாது. ஊரகப்பகுதிகளில் உள்ள தனியார் கட்டிடங்களில் சம்பந்தப்பட்ட உரிமையாளரின் அனுமதியோடு முறையே தேர்தல் நடத்தும் அலுவலரின் முன்அனுமதி பெற்று விளம்பரம் மேற்கொள்ளலாம். அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் பிரசார பொருட்களில் தமிழ்நாடு அரசு தடை விதித்து அறிவித்துள்ள ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.


அந்த வகையில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ள மாதிரி நன்னடத்தை விதிமுறைகளை முறையே பின்பற்றி மக்களவை தேர்தல்-2019 பணிகளை சுமுகமான முறையில் நடத்த அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சுமன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்; ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Monday, March 11, 2019

ராமநாதபுரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை!!

No comments :

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில், தேர்தலுக்கு பயன்படுத்தக் கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு குறித்து அனைத்துக்கட்சியினர் முன்னிலையில் சனிக்கிழமை சோதனையிட்டு சரிபார்க்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, முதுகுளத்தூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. வரும் மக்களவைத் தேர்தலில் இந்த சட்டப்பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்துவதற்காக பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திலிருந்து முதல்கட்டமாக 3,310 மின்னணு வாக்கு செலுத்தும் இயந்திரங்கள் மற்றும் 1,800 வாக்குப்பதிவு இயந்திரங்களும் கொண்டுவரப்பட்டன.

மேலும் இரண்டாம் கட்டமாக, வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை சரிபார்க்கும் இயந்திரங்கள் 1800 ஆகிய வந்தடைந்தன. இந்த இயந்திரங்கள் ராமநாதபுரம் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூட சேமிப்பு கிட்டங்கியில் வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் இயக்கம் குறித்து முதல்நிலை சரிபார்த்தல் பணி நடைபெற்றது.அதன்படி தற்போது 3,295 வாக்கு செலுத்தும் இயந்திரங்கள், 1,771 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1,729 வாக்களித்ததை சரிபார்க்கும் தணிக்கை இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்திலிருந்து 300 வாக்கு செலுத்தும் இயந்திரங்கள், 300 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 600 வாக்காளர் சரிபார்க்கக்கூடிய தணிக்கை இயந்திரங்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளன. அவற்றின் செயல்பாடானது அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் முதல்நிலை சோதனை செய்யப்பட்டன, இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் சனிக்கிழமை பார்வையிட்டார். 4 நாள்களுக்கு இயந்திர திறன் சோதனை நடத்தப்படும்.


மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள அறைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், வாக்குப்பதிவு இயந்திர சோதனையின்போது அலுவலர்களோ, அரசியல் கட்சி பிரமுகர்களோ செல்லிடப்பேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்; ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, டார்ச் லைட் சின்னம்!!

No comments :
லோக்சபா தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. தேர்தல் ஆணையம் இதற்கான அறிவிப்பை தற்போதுதான் வெளியிட்டது.

வருகின்ற லோக்சபா தேர்தலில் இந்த சின்னத்தில் கீழ்தான் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கிடைத்து இருக்கும் டார்ச் லைட் சின்னத்தை வைத்து, கமல்ஹாசன் தமிழக அரசியலில் புதிய ஒளி பாய்ச்சுவாரா என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விருப்பப்பட்ட சின்னங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஏற்கனவே டார்ச் சின்னம் பெறுவது குறித்த தனது ஆசையை வெளிப்படுத்தி இருந்தார். தற்போது அதேபோல் அவருக்கு அந்த சின்னம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

தமிழக அரசியலில் மாற்றம் கொண்டு வருவதே தனது நோக்கம் என்று கமல்ஹாசன் தெரிவித்து வருகிறது. அரசியலை சுத்தம் செய்ய போகிறேன் என்று கமல்ஹாசன் கூறி வருகிறார். இந்த நிலையில் அரசியலில் ஒளி ஏற்றும் விதமாக அவரது பேச்சுக்கு ஏற்றபடி தற்போது டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்த சின்னத்தை அவர் எப்படி பயன்படுத்துகிறார் என்பதை பொறுத்துதான் அவரது அரசியல் திறமை தெரிய வரும். இதை அவர் எப்படி பிரபலப்படுத்துவார் என்று காலம்தான் பதில் சொல்லும். சின்னத்தின் பொருளுக்கு ஏற்றபடி தமிழகத்தில் ஒளி பாய்ச்சுவாரா என்பதை பொறுத்திருந்தான் பார்க்கலாம்.(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

2014ம் ஆண்டின் ராமநாதபுர தொகுதி நாடாளமன்ற தேர்தல் முடிவுகள்- ஒரு பார்வை!!

No comments :

2014ம் ஆண்டின் நாடாளமன்ற தேர்தலில், கட்சிகள் பெற்ற வாக்கு விபரங்கள்;Candidate Name
Party
No. of Votes
Result
Anwhar Raajhaa.A
AIADMK
405945
Winner
Mohamed Jaleel .S
DMK
286621
1st Runner Up
Kuppuramu .D
BJP
171082
2nd Runner Up
Thirunnavukkarasar .Su
INC
62160
3rd Runner Upகடந்த நாடாளமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தொகுதி பிரதிநியாக நாடாளமன்றம் சென்றவர் அதிமுக வைச்சார்ந்த திரு. அன்வர் ராஜா.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Sunday, March 10, 2019

தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி - இந்திய நாடாளமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது!!

No comments :


லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் - தேர்தல் ஆணையர்


முதல் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 11ம் தேதி நடைபெறும்
லோக்சபா 2ம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 18லோக்சபா 3ம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 23
லோக்சபா 4ம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 29
லோக்சபா 5ம் கட்ட வாக்குப் பதிவு மே 6
லோக்சபா 6ம் கட்ட வாக்குப் பதிவு மே 12
லோக்சபா 7ம் கட்ட வாக்குப் பதிவு மே 19

தேர்தல் முடிவுகள் மே 23ம் தேதி அறிவிக்கப்படும்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Thursday, March 7, 2019

ராமநாதபுரம் மாவட்டத்தில் இலவச தையல் இயந்திரம் பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் பெறுவதற்கு தகுதி வாய்ந்த மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டத்தில் கை, கால் பாதிக்கப்பட்ட மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளன.

மேலும் மிதமான மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் மற்றும் 75 சதவீதத்துக்கும் மேல் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி குழந்தைகளின் தாய்மார்களுக்கும், அவர்கள் வருவாய் ஈட்டும் வகையில் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளன.ஆகவே, 18 வயது முதல் 45 வயது வரை உள்ள கை, கால் பாதிக்கப்பட்ட காது கேளாத, மிதமான மனவளர்ச்சி குன்றிய மற்றும் 75 சதவீதத்துக்கு மேல் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளின் தாய்மார்களும்


மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தைப் பெற்று உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 13 புதிய பஸ்கள்!!

No comments :
தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் நடைபெற்ற விழாவில் போக்குவரத்து துறையின் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 500 புதிய அரசு பஸ்களை தொடங்கி வைத்தார்.

அவற்றில் காரைக்குடி மண்டலத்திற்கு 22 பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 13 பஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து ராமநாதபுரம் புதிய பஸ் நிலைய வளாகத்தில் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள புதிய பஸ்களை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

இதேபோல ராமநாதபுரம் நகர் கிளையின் மூலம் தெற்குத்தரவை வரை செல்லும் பஸ்(வழித்தட எண்–17) பள்ளி மாணவர்களின் வசதிக்காக வள்ளிமாடன்வலசை வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
புதிதாக தொடங்கி வைக்கப்பட்டுள்ள இந்த பஸ்களில் ராமநாதபுரம் புறநகர் கிளையின் மூலம்
ராமேசுவரம்–சிதம்பரம் வழித்தடத்தில் ஒரு பஸ்சும்,
ராமேசுவரம்–மதுரை வழித்தடத்தில் 3 பஸ்களும்,
ராமேசுவரம்–பழனி வழித்தடத்தில் ஒரு பஸ்சும் தொடங்கி வைக்கப்பட்டது.

மேலும்
ராமநாதபுரம்–மதுரை வழித்தடத்தில் 3 பஸ்களும்,
பரமக்குடி–தஞ்சாவூர் வழித்தடத்தில் 2 பஸ்களும்,
கமுதி–திருச்சி வழித்தடத்தில் 2 பஸ்களும்,
முதுகுளத்தூர்–மதுரை வழித்தடத்தில் ஒரு பஸ் இயக்கப்படுகிறது.

அதன்படி மாவட்டத்தில் முதல்கட்டமாக 35 புதிய பஸ்களும், இரண்டாம் கட்டமாக 12 புதிய பஸ்களும், மூன்றாம் கட்டமாக 11 புதிய பஸ்களும், நான்காம் கட்டமாக 9 புதிய பஸ்களும், தற்போது புதிய பஸ்களும் என 5 கட்டங்களாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

வீரர், வீராங்கனைகள் ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!!

No comments :
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாநிலத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி, பல்கலைக்கழகத்தில் பயிலும் சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன.

இத்திட்டத்தின்கீழ்
உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரமும், கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு ரூ.13 ஆயிரமும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

1.7.2017 முதல் 30.6.2018 வரையிலான கால கட்டத்தில் தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.குழு போட்டிகளாயின் முதல் 2 இடங்களையும், தனிநபர் போட்டிகளாயின் முதல் 3 இடங்களையும் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். தேசிய அளவிலான போட்டிகள் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்கள், இந்திய பள்ளி விளையாட்டுகள் கட்டமைப்பு இந்திய விளையாட்டு ஆணையம், மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மற்றும் அகில இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கம் ஆகியவற்றினால் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

இத்தகைய ஊக்கத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை வருகிற 12–ந்தேதிக்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கலாம்.


இந்த தகவலை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Tuesday, March 5, 2019

ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு!!

No comments :
ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட புதிய பஸ் நிலையத்தில் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் ஒவ்வொரு கடைகளாக பிளாஸ்டிக் பயன்பாடு இருக்கிறதா எனவும் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுத்தக்கூடிய வகையில் நடைபாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறதா எனபது குறித்து நேரில் பார்வையிட்டார்.

அதன் பின்னர் மாவட்ட கலெக்டர் கூறியதாவது:–

தமிழ்நாடு முதல்–அமைச்சரின் உத்தரவின்படி ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டிற்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து கண்காணிப்பதற்காக நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியம் வாரியாக மொத்தம் 37 குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில் ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட புதிய பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் தாள், தெர்மகோல் தட்டுகள், தெர்மகோல் குவளைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், அனைத்து விதமான பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தேநீர் கப்புகள், பிளாஸ்டிக் கொடிகள், நெய்யாத பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்கள், தண்ணீர் பாக்கெட்டுகள் ஆகியவற்றின் பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வியாபாரிகளிடமும், கடைகளுக்கு வரும் பெரும்பான்மையான பொதுமக்களிடமும் பிளாஸ்டிக் ஒழிப்பு தடை குறித்த விழிப்புணர்வு உள்ளது. பொருட்கள் வாங்கும் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக்கினை தவிர்த்து பேப்பர்கள், வாழை இழைகளில் பொட்டலமாக வழங்குவதை காணமுடிகிறது. இது ஆரோக்கியமான மாற்றமாகும். பூக்கடைகளை ஆய்வு செய்த போது வியாபாரிகள், மூங்கில் கூடைகள் மற்றும் பனை ஓலை பெட்டிகள் பயன்படுத்தி வருவது பாராட்டுக்குரியதாகும். இந்த நிலை மாவட்டம் முழுவதும் தொடர்ந்தால் நிச்சயமாக பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலுமாக தவிர்க்கப்படும். மேலும் பொதுமக்கள் சிரமப்படாதவாறு ஆக்கிரமிப்புகள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், பஸ் நிலையத்தினை தூய்மையாக பராமரிக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


இவ்வாறு அவர் கூறினார். 

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்!!

No comments :
ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ளும் கிறிஸ்தவர்கள் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்திலிருந்து ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ளும் கிறிஸ்தவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.20 ஆயிரம் பயண நிதியுதவியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் கிறிஸ்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ண ப்பத்தை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்

அல்லது


என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தும், விண்ணப்பித்தலுக்கான நிபந்தனைகள், வழிமுறைகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ் இணைப்புகளுடன் அஞ்சல் மேல் உறையில்
"ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம்"
என்று குறிப்பிட்டு

மேலாண்மை இயக்குநர்,
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்,
கலச மஹால்,
பாரம்பரிய கட்டடம் (முதல் தளம்),
சேப்பாக்கம்,
சென்னை -5


என்ற முகவரிக்கு மார்ச் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும் என அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Wednesday, February 27, 2019

கஞ்சா கடத்திக் கொண்டு வந்ததாக இளைஞர் கைது!!

No comments :
ஆந்திரத்தில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு கஞ்சா கடத்திக் கொண்டு வந்ததாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை எழும்பூருக்கு சர்கார் விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை வந்தது. இந்த ரயிலில் வந்திறங்கிய பயணிகளை மாநில போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் ரகசியமாக கண்காணித்தனர்.


அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் ஒரு பெரிய பையுடன் வந்த இளைஞரை பிடித்து போலீஸார் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர், ராமநாதபுரம் மாவட்டம்  தொண்டி பகுதியைச் சேர்ந்த செ.பிரசன்னா (24) என்பதும், அவர் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து கஞ்சாவை கடத்திக் கொண்டு வருவதும் தெரியவந்தது. | இதையடுத்து போலீஸார், பிரசன்னாவை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும் விசாரணையில், பிரசன்னா அந்த கஞ்சாவை ராஜமுந்திரியில் ரூ.40 ஆயிரத்துக்கு வாங்கியிருப்பதும், ராமநாதபுரத்தில் அதை ரூ.3 லட்சத்துக்கு விற்க திட்டமிட்டு ரயிலில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.


இது தொடர்பாக போலீஸார், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் நகராட்சியில் குப்பைகளை அள்ளுவதற்கு பேட்டரி வாகனங்கள்!!

No comments :
ராமநாதபுரம் நகராட்சியில் குப்பைகளை அள்ளுவதற்கு ரூ.50.40 லட்சம் செலவில் பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகளிலும் தினமும் சுமார் 28 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. அவை பட்டினம்காத்தான் பகுதியில் திறந்த வெளியில் குவிக்கப்பட்டு வருகின்றன. தூய்மை இந்தியா திட்டத்தின்படி நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை அந்தந்த இடத்திலேயே உரமாக்கி மறுசுழற்சிக்கு உள்ளாக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 4 இடங்களில் குப்பைகளை நுண்ணிய உரமாக்கும் மையங்கள் தலா ரூ.50 லட்சத்தில் அமைக்கப்பட்டுவருகின்றன, நகரில் குப்பைகளை சேகரிக்கும் வகையில் தலா ரூ.1.80 லட்சம் மதிப்பிலான 16 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. அவற்றில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளை தனித் தனியாகச் சேகரிக்க 4 வாளிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனத்தை ஆண்களும், பெண்களும் எளிதில் இயக்கலாம் என்று அதிகாரிகள் கூறினர்.


இதைத் தவிர சிறிய ரக குப்பை சேகரிக்கும் 4 லாரிகளும் வாங்கப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றும் ரூ.5.40 லட்சம் மதிப்புடையவை. குப்பைகளைத் தரம் பிரித்து சேகரிக்க வாகனங்கள் வாங்கிய நிலையில், அதை பயன்படுத்தி குப்பைகளை உரமாக்கும் மையம் செயல்பட பல மாதங்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது.

ஆனால் குப்பைகளைத் தரம் பிரித்து வாகனங்கள் மூலம் சேகரிக்க அனைத்து நடவடிக்கையும் எடுத்துள்ளதாக நகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் கூறினர்.

 மேலும், நகராட்சியில் தற்போது 94 சுகாதாரப் பணியாளர்கள் நிரந்தரப் பணியில் உள்ளனர். இவர்களில் ஒப்பந்தப்பணி அடிப்படையில் 83 பேர் பணிபுரிகின்றனர். தூய்மை இந்தியா திட்டத்தின்படி 155 பேர் விரைவில் பணியில் சேர்க்கப்படவுள்ளனர். அதன்படி நகராட்சியில் மொத்தம் 342 பேர் சுகாதார பணியில் சில மாதங்களில் ஈடுபடுத்தப்படுவர் என்றும் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)