முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, September 27, 2016

குவைத்தில் மாபெரும் இஸ்லாமிய சமூக / கல்வி / இலக்கிய மாநாடு!!

No comments :
குவைத்தில் முதல் முறையாக "குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)" ஏற்பாடு செய்யும்

 "மாபெரும் இஸ்லாமிய சமூக / கல்வி / இலக்கிய மாநாடு"(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் நாள் 40 பேர் வேட்பு மனு தாக்கல்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு தாக்கல் முதல் நாளான திங்கள்கிழமை 40 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோர் திங்கள்கிழமை முதல் அக்டோபர் 3-ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 170 வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.  

முதல் நாளான திங்கள்கிழமை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் அன்பு பகுருதீன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தேவிபட்டினம் பகுதி கவுன்சிலராகவும் இருந்து வரும் இவர், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணனிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். இவர்  ஒருவர் மட்டுமே ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு மனு தாக்கல் செய்துள்ளார்.கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மொத்தம் 3075 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். 

முதல் நாளான திங்கள்கிழமை வார்டு உறுப்பினர் பதவிக்கு 39 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். 3910 உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட வேண்டியுள்ள நிலையில் முதல் நாளான திங்கள்கிழமை 40 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் அருகே பல்லுயிர் பரவல் பூங்கா திறப்பு!!

No comments :
ராமநாதபுரம் அருகே பட்டினம் காத்தான் வேல்நகரில் கோல்டன் ரோட்டரி சங்கத்தின் சார்பில் புதுப்பிக்கப்பட்ட ஊரணியில் பல்லுயிர் பரவல் பூங்கா அமைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

விழாவிற்கு கோல்டன் ரோட்டரி சங்கத் தலைவர் லெ.செந்தில்குமார் தலைமை வகித்தார்.சங்கம் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பல்லுயிர் பரவல் பூங்காவை ராமநாதபுரம் ஏ.எஸ்.பி.எஸ்.சர்வேஷ்ராஜ் திறந்து வைத்தார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன், ரோட்டரி மாவட்ட ஆளுநர் கே.விஜயகுமார் மரக்கன்றுகளை நட்டனர். 

சங்க மாவட்ட ஆளுநர்(தேர்வு)டாக்டர்.ஏ.சின்னத்துரை அப்துல்லா மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை திறந்து வைத்தார். ரோட்டரி சங்க பட்டயத் தலைவர் ஆ.ரவிச்சந்திர ராமவன்னி, சங்க துணை ஆளுநர் பி.என்.சந்திரன் ஆகியோர் பல்லுயிர் பரவல் பூங்காவில் 148 அரியவகை மூலிகை மரங்கள் நடப்பட்டிருப்பதாகவும் அவற்றின் மகத்துவம் குறித்தும் பேசினர். 

முன்னதாக விழாவுக்கு, திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ம.ஆத்மா கார்த்திக், அரு,சுப்பிரமணியன், விதைகள் அமைப்பின் தலைவர் அ.ஜெயமுரளி, வர்த்தக சங்கத் தலைவர் பா.ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோல்டன் ரோட்டரி சங்க செயலாளர் ஹ.மணிகண்டன் வரவேற்றார்.


விழாவில் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் அண்ணன் மகன் ஷேக் சலீம், வழக்குரைஞர்கள் பி.முனியசாமி, சோமசுந்தரம், தொழிலதிபர் ரமணா காந்தி, பாம்பன்பாலா, பாலச்சந்தர், சாத்தையா, கவிஞர் மாணிக்கவாசகம், பா.ஜ.க.மாவட்டத் தலைவர் முரளீதரன், கல்வி ஆலோசகர் சங்கரலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)