முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, May 10, 2016

திமுக ஆட்சி வந்தவுடன் கீழக்கரை நகராட்சியில் கொள்ளையடித்தவர்கள் சிறைக்கு செல்வார்கள்! ஜவாஹிருல்லா பேச்ச!!

No comments :
திமுக ஆட்சி வந்தவுடன் கீழக்கரை நகராட்சியில் கொள்ளையடித்தவர்கள் சிறைக்கு செல்வார்கள்! ஜவாஹிருல்லா பேச்ச!!

கீழக்கரையில் மமக வேட்பாளர் ஜவாஹிருல்லா தீவிர வாக்கு சேக ரிப்பில் ஈடுபட்டார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 16ம் தேதி நடைபெற உள்ள நிலை யில், கீழக்கரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப் பில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் திமுக கூட்டணி கட்சியான மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லா கீழக்கரையில் 500 பிளாட், 200பிளாட், மேலத் தெரு, தெற்குத்தெரு, சின்னகடைத்தெரு, கிழக்குத்தெரு, நடுத்தெரு, வடக்குத் தெரு ஆகிய பகுதிகளுக்கு திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேரித்தார்.


மேலும் அவர், வீடு வீடாகவும் மசூதி, தேவாலயம், கோயில் ஆகியவற்றில் உள்ள முக்கிய பிரமுகர்களை யும் சந்தித்து வாக்கு கேட்டார்.

கீழக்கரையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் ஜவாஹிருல்லா பேசியதாவது….

நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்து தனி தாலுகா, குப்பை கிடங்கு வசதி உள்ளிட்ட கீழக்கரைக்கு கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன்.
கீழக்கரையில் பள்ளிகளுக்கு நிதி உதவி, கழிப்பறை வசதி உள்ளிட்ட பல்வேறு நலப்பணிகளை எம் எல் ஏ நிதியிலிருந்து செய்துள்ளேன் இதில் ஒரு நயா பைசா நான் கையூட்டு பெற்றதாக யாராவது சொல்ல முடியுமா ? சவாலாக கேட்கிறேன். ஆனால் ஒரு திட்டத்தை செயல்படுத்தினால் எவ்வளவு கமிசன் பெறலாம் என்ற நோக்கத்தில் செயல்படும் அதிமுக அரசின் அத்தாட்சிதான் இந்த கீழக்கரை நகராட்சி.


கீழக்கரை நகராட்சிக்கு ஆணையாளர் என்ற பொறுப்பை பெற்று தந்தவன் நான். கீழக்கரையில் இரண்டு நேர்மையான முஹம்மது முஹைதீன் மற்றும் முருகேசன் என்ற ஆணையாளர்கள் மாற்றப்பட்டார்கள். இதிலிருந்தே இந்த நகராட்சியை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணம் இந்த அதிமுக நகராட்சிக்கு இல்லை என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கீழக்கரை நகராட்சியில் நடைபெறாத பணிகளுக்கு நகராட்சி நிர்வாகமே பொறுப்பு.திமுக ஆட்சி வந்தவுடன் தற்போதை நகராட்சி நிர்வாகத்தில் நடைபெற்ற ஊழல்கள் அம்பலப்படும் .மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள் சிறைக்கு செல்வார்கள்.

இவ்வாறு பேசினார்.


இதில் கீழக்கரை திமுக நகர செயலாளர் பசீர் அகமது, நிர்வாகிகள் ஜமால் பா ரூக், கென்னடி, சாகுல் ஹமீது, நசுருல்லா, மமக எம் எல்ஏ அஸ்லம் பாஷா, நிர்வாகிகள் சேக் முஹம்மது, பாக்கர், சிராஜூதீன், கோஸ் முஹம்மது, காங். கிருஷ்ணமூர்த்தி, அஜ்மல் கான், முஸ்லீம் லீக் லெப்பை தம்பி, புதிய தமிழகம் கலீல் மற்றும் கூட்டணி கட்சி களை சேர்ந்த நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தி: திரு. அஸ்கர் அலி, திமுக

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்டத்தில் தபால் ஓட்டு பதிவிற்கான சிறப்பு முகாம் மே, 10-11 தேதிகளில் நடக்கிறது!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் பணி அலுவலர்கள் தபால் ஓட்டு பதிவிற்கான சிறப்பு முகாம் இன்றும்(மே 10), நாளையும்(மே 11) நடக்கிறது.

கலெக்டர் நடராஜன் கூறியதாவது,

ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, முதுகுளத்தூர் சட்டசபை தொகுதிகளில் தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்ட 6,347 பணியாளர்களுக்கு தபால் ஓட்டு பதிவிற்கான சிறப்பு முகாம் இன்றும் ( மே 10), நாளையும்(மே 11) நடக்கிறது.

இதுவரை தபால் ஓட்டு பதிவு செய்யாத அலுவலர்கள் தங்களுக்கு எந்த தொகுதியில் ஓட்டு உள்ளதோ, அந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அலுவலகத்திற்கு சென்று ஓட்டு பதிவு செய்து கொள்ளலாம்.ராமநாதபுரம் தொகுதி வாக்காளர்கள் ராமநாதபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்திலும்,
திருவாடானை தொகுதி வாக்காளர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்திலும், பரமக்குடி தொகுதி வாக்காளர்கள் பரமக்குடி சப் கலெக்டர் அலுவலகத்திலும்,
முதுகுளத்துõர் தொகுதி வாக்காளர்கள் முதுகுளத்துõர் தாலுகா அலுவலகத்திலும் நடக்கும் சிறப்பு முகாம்களில் தபால் ஓட்டுகளை பதிவு செய்யலாம்.

மே 7ல் நடந்த பயிற்சி வகுப்பில் தபால் ஓட்டு சீட்டு பெற்றுக்கொண்டோர் இரண்டு நாள் சிறப்பு முகாமில் ஓட்டு சீட்டு உறையை அந்தந்த தொகுதிக்குரிய பெட்டிகளில் போடலாம்என்றார்.

செய்தி: தினசரிகள்(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியில் சரி செய்யப்படுமா மின் நிலைமை?!!

No comments :
பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியில் சரி செய்யப்படுமா மின் நிலைமை?

பரமக்குடி எமனேஸ்வரம் முழுக்க கடந்த 10 நாட்களாகவே இரவு 8 மணியிலிருந்து குறைந்த அழுத்த (Low voltage) மின்விநியோகம்...

கொளுத்தும் கோடை வெயில் காலத்தில் நிம்மதியாக இரவு பொழுதில் உறங்கச் செல்ல மின்விசிறியையோ, குளிரூட்டியையோ (A/C) பயன்படுத்திட இயலா அவதியில் எமனேஸ்வரம் மக்களது வேதனை தீர்ப்பதற்கு நடவடிக்கை தேவை.பரமக்குடி மின் வாரியம் விரைந்து நடவடிக்கை எடுத்திட 04564-225696 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டால் பதிலளிப்போர் யாருமிலர்...

தமிழ்நாடு மின்மிகை மாநிலமென்றும், மின் தேவையில் தன்னிறைவு பெற்ற மாநிலமென்றும் ஆட்சியர்கள் சொல்வதை உண்மைபடுத்துவார்களா மின்வாரிய அதிகாரிகள்...?

அ.சேக் அப்துல்லா
இராமநாதபுரம்.(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)