முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, December 10, 2017

உரிமம் பெறாத உணவு வணிகர்களுக்கு சிறை தண்டனை – கலெக்டர்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் உணவுபொருள் வணிகம் செய்யும் உணவு வணிகர்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன்கீழ் உரிமம் மற்றும் பதிவு சான்று கட்டாயம் பெறவேண்டும் என மாவட்டம் முழுவதும் உள்ள உணவு வணிகர்களுக்கு அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் மொத்தம் உள்ள 9,715 உணவு வணிக நிறுவனங்களில் 5,156 பேர் மட்டுமே உரிமம் மற்றும் பதிவுசான்று பெற்று உள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உணவகங்கள்மளிகை கடைகள்பேக்கரிகள்இறைச்சி கடைகள்டீக்கடைகள்பால் வியாபாரிகள்சாலையோர உணவு வியாபாரிகள்உணவுப்பொருள் உற்பத்தியாளர்கள்உணவு பொருள் மொத்த விற்பனையாளர்கள்திருமண மண்டபத்தில் உணவு தயாரிப்போர்அரிசி ஆலைகள் மற்றும் பால் எண்ணெய் உள்ளிட்ட அனைத்து உணவு பொருள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள்உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டப்படி உரிமம் பெற வேண்டும். உரிமத்தை பெற விரும்புவோர் www.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.




ஆண்டு ஒன்றுக்கு ரூ.12 லட்சத்திற்கு குறைவாக வணிகம் செய்யும் உணவு வணிகர்கள் பதிவுச்சான்று பெற ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். ஆண்டு ஒன்றுக்கு ரூ.12 லட்சத்திற்கு மேல் வணிகம் செய்யும் உணவு வணிகர்கள் உரிமம் பெற ரூ.2000 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். ஒரு டன் உற்பத்தி திறன் உள்ள உணவு வணிகர்கள் ரூ.3000-மும், 2 டன் உற்பத்தி திறன் உள்ள உணவு வணிகர்கள் ரூ. 5000-மும் கட்டணமாக செலுத்த வேண்டும்.

இந்த கட்டணம் ஓராண்டிற்கு மட்டுமே செல்லுபடியாகும். உணவு பாதுகாப்பு துறையின் உரிமத்தை 5 ஆண்டுகள் வரை அதற்குரிய கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பித்த விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து நகல் எடுத்து கையொப்பமிட்டு இணையதளத்தில் விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் மாவட்ட நியமன அலுவலர் உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் இணைப்பில் கூறப்பட்டுள்ள சான்று ஆவணங்களுடன் சமர்ப்பிக்கவேண்டும். ஏற்கனவே உரிமம் பெற்றுள்ள உணவு வணிகர்கள் உரிமம் காலாவதி தேதிக்கு 30 நாட்களுக்கு முன்பாக புதுப்பிக்கவேண்டும். புதுப்பிக்க தவறுபவர்களுக்கு பழைய உரிமம் எண் வழங்கப்படமாட்டாது.

உணவு பாதுகாப்பு துறையின் கீழ் பதிவு சான்று பெற தகுதி உள்ள உணவு வணிகர்கள் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொது இ-சேவை மையங்களில் விண்ணப்பித்து பதிவு சான்று பெற்றுக்கொள்ளலாம். இதற்கு பதிவு கட்டணத்துடன் 30 சதவீதம் கூடுதலாக செலுத்த வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை உரிமம் மற்றும் பதிவுசான்று பெறாத உணவு வணிகர்களிடம் 14 நாட்களுக்குள் உரிமம் மற்றும் பதிவு சான்று பெறக்கோரி முறைப்படி நோட்டீசு வழங்கப்படும்.

இந்த நோட்டீசு அறிவிப்பு பெற்ற பிறகு வருகிற 31-ந்தேதிக்குள் உரிமம் மற்றும் பதிவு சான்று பெறாத வணிகர்களின்மீது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் குற்றவியல் வழக்கு தொடரப்பட்டு 6 மாத சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.

மேலும் உணவுப்பொருள் தொடர்பான புகார்களை 94440 42322 என்ற எண்ணிலோ, 04567- 231170 என்ற மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலக தொலைபேசியிலோ தெரிவிக்கலாம்.
இத்தகவலை மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)