முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, August 19, 2018

10 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் பள்ளிகளிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு பதிவு செய்துகொள்ளலாம்!!

No comments :
10 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு பதிவு செய்துகொள்ளலாம் எனவும், இதற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வரத் தேவையில்லை எனவும் ராமநாதபுரம் ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களது கல்வித் தகுதியினை தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாகவே கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் நேரடியாக இத்துறையின் இணையதளம் வாயிலாக பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டை வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வர வேண்டும் என்ற அவசியம் இல்லை. நேரில் வருவதால் மாணவர்களுக்கு பொருள் செலவு, கால விரயம், தேவையற்ற அலைச்சல் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் போன்றவற்றை தவிர்க்கலாம்.


கடந்த 16 ஆம் தேதியிலிருந்து வரும் 30 ஆம் தேதி வரை 15 நாள்களுக்கு ஒரே பதிவு மூப்பில் அவரவர்கள் பயின்ற பள்ளியிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணி நடைபெற்று வருகிறது.


சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களும் தங்களது கல்வித்தகுதியை வேலைவாய்ப்புத் துறையின் இணையதளத்திலேயே பதிவு செய்யலாம். அல்லது அவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி பதிவு செய்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)