முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, April 30, 2016

மனிதன் - தமிழ் திரை விமர்சனம்!!

No comments :
நடிகர்கள்: உதயநிதி, ஹன்சிகா, ராதாரவி, பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா
ஒளிப்பதிவு: ஆர் மதி
இசை : சந்தோஷ் நாராயணன்
தயாரிப்பு: ரெட்ஜெயன்ட்
இயக்கம்: ஐ அகமது

ஜாலி எல்எல்பி என்ற இந்திப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இந்த மனிதன். முகவரியற்ற நடைபாதைவாசிகளுக்கான சமர்ப்பணம் என்று முடியும் இந்தப் படம் உண்மையாகவே அப்படி ஒரு உணர்வைத் தருகிறதா... பார்க்கலாம்.

பொள்ளாச்சியில் உதவாக்கரை வக்கீல் என்று பெயரெடுத்த உதயநிதிக்கு மாமாவின் அழகான பெண் ஹன்சிகா மீது காதல். எப்படியாவது அவரை திருமணம் செய்ய நினைக்கும் அவருக்குபெண் கொடுக்க மறுக்கிறார் மாமா. காரணம் எந்த வழக்கிலும் வெற்றி பெற முடியாத உப்புமா வக்கீல் என்று இவருக்கு இருக்கும் பெயர்! ஒரு நாள் ஹன்சிகா மற்றும் அவரது அப்பாவின் முன்பாகே நண்பர்களின் கேலி கிண்டல் எல்லை மீறிப் போகஉதயநிதியை கண்டபடி திட்டிவிடுகிறார் ஹன்சிகா.
மனசு நொந்துபோய் சென்னைக்கு வந்து அங்கு வக்கீலாக உள்ள உறவினர் விவேக்குடன் சேர்ந்து வழக்குக்காக அலைகிறார். ஒரு வழக்கும் கிடைக்காமல் விரக்தியடைந்த நிலையில்அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. நள்ளிரவில் குடிபோதையில் சொகுசு கார் ஒன்றை ஓட்டி வரும் பெரிய கோடீஸ்வரனின் வாரிசுநடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றி பேரைக் கொல்கிறார். ஆனால் வக்கீல் பிரகாஷ்ராஜ் அந்த வாரிசுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்து விடுகிறார். இந்த விவகாரத்தில் ஒரு பொது நல வழக்குத் தொடர்ந்தால்நாமும் பிரபலமாகலாம்பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஏதாவது நல்லது நடக்கும் என்று திட்டமிட்டு பொது நல வழக்குத் தொடர்கிறார் உதயநிதி. அதன் பிறகுதான் அவருக்கு பல பிரச்சினைகள். இவற்றை எப்படிச் சமாளிக்கிறார்ஹன்சிகாவைக் கைப்பிடிக்கிறாராபொது நல வழக்கில் வென்றாராஎன்பது சுவாரஸ்யமான பிற்பகுதி.



வாழ்த்துகள் உதயநிதி. முதல் முறையாக மிகவும் சின்சியரான ஒரு கேரக்டரில் இயல்பாக நடித்ததற்காக! ஒருபக்கம் ஜாம்பவான் ராதாரவி, மறுபக்கம் அட்டாக் ஆதிசேஷனாக நிற்கும் பிரகாஷ்ராஜ்.. இருவருக்கும் இடையில் நின்று தன்னாலும் கச்சிதமான நடிப்பைத் தர முடியும் என்று காட்டியிருக்கிறார். ஒரு காட்சி... நடைபாதையோரம் சிறு நீர் கழிக்கப் போவார் உதயநிதி. அப்போது ஒரு கூட்டம் வரும்... 'அய்யா கொஞ்சம் தள்ளிப் போங்க.. நாங்க படுக்கிற இடம் இது' என்று அவர்கள் இரந்து நிற்கும்போது மனசு கரைந்துபோகிறது. அதை உதயநிதி மிக அருமையாக வெளிப்படுத்தியிருப்பார். பார்ப்பவர் மனசுக்கு ரொம்ப நெருக்கமான காதல் காட்சிகள். நீதி மன்றக் காட்சிகளில் ராதாரவி, பிரகாஷ்ராஜுக்கு இணையாக ஸ்கோர் செய்கிறார் உதயநிதி. ஹன்சிகாவுக்கு டீச்சர் வேடம். வெறும் அழகுப் பொம்மையாக வந்து போகாமல் காதலனுக்கு பொறுப்பையும் சொல்லிக் கொடுக்கும் பாத்திரம். இந்த மாதிரி வேடத்தில் அவரைப் பார்ப்பது நிஜமாகவே ஒரு மாறுதல்தான்.

படத்தில் கட்டாயம் சொல்லியே தீர வேண்டிய பாத்திரம் ராதா ரவி. மனசில் ஆழப் பதிந்துவிட்டார், தனபால் என்ற நீதிபதி வேடத்தில். காது கிழிய பிரகாஷ்ராஜ் கத்தினாலும், 'உட்காருங்க ஆதிசேஷன்' மிக மென்மையாய் அவரைக் காலி பண்ணும் இடம் செம. நீதிபதியான தன் உத்தரவை மதிக்காமல் பிரகாஷ்ராஜ் திரும்பத் திரும்ப கத்திக் கொண்டிருக்க, அப்போது எடுக்கிறாரே ஒரு விஸ்வரூம்... 'இதான்யா ராதாரவி.. இதான்டா அனுபவம் என்பது... இதுக்குப் பேர்தான் உடல்மொழி..' என்றெல்லாம் சொல்ல வைத்துவிட்டார். ராதாரவி சார்... நடிகர் சங்கம் கிடக்கட்டும்.. நீங்கள் இதுபோல மாறுபட்ட வேடங்களில் வந்து எங்களோடு இருங்கள்! பிரகாஷ் ராஜ் சத்தம் கொஞ்சம் ஓவர்தான். ஆனால் ஷார்ப்பான ப்ளேடு மாதிரி கச்சிதமான பர்ஃபார்மென்ஸ்! க்ளைமாக்ஸில் சாட்சியாய் வந்து நம்மை கலங்க வைக்கும் அந்த வந்தவாசி நபரின் நடிப்பு, போலீசின் கவனத்தை மாற்றும் டீக்கடைக்காரர், உதயநிதிக்கு நோஞ்சான் பாதுகாவலராக வந்து, சட்டென்று ஒரு திருப்பம் தரும் அந்த காவலர்... அருமை!

உண்மையில் நடந்தது என்னவென்று அந்த ஏழை விவரித்து முடித்த பிறகு, நீதிபதி ராதாரவி, சோம்பல் முறித்து இன்னிக்கு கேஸ் சுவாரஸ்யமா போச்சில்ல... என்று கேட்டிருக்க வேண்டாமே.. கேட்கும்போதே கண்ணீரை வழிய வைக்கும் ஒரு காட்சிக்குப் பிறகு இது தேவையில்லையே! அதேபோல அந்த முதல் பகுதியின் ஆமை வேகம். வசனங்கள் இன்னும் கூர்மையாக இருந்திருக்க வேண்டும், க்ளைமாக்ஸ் வாதங்களில். இந்த நடைபாதைவாசிகள் யாருங்க? என்று நீதிபதி, எதிர்தரப்பு வக்கீல் மற்றும் பார்வையாளர்களை நோக்கி உதயநிதி கேட்டு முடித்ததும், ஏதோ பெரிய திருப்பு முனை வசனம் இருக்கப் போகிறது என்று பார்த்தால் சப்பென்ற விடை தருகிறார். அதைவிட அழுத்தமான விளக்கமும் இருக்கிறதே..!

கச்சிதமாக இந்தத் திரைக்கதைக்கு எந்த வகையிலும் உதவவில்லை சந்தோஷ் நாராயணனின் இசையும் பாடல்களும். ஆனால் மதியின் ஒளிப்பதிவு காட்சிகளை மனசுக்கு நெருக்கமாக்கிவிடுகிறது. இந்த மாதிரி ப்ளாட்பாரத்தில் படுத்திருந்த ஏழைகளை காரேற்றிக் கொன்ற கோடீஸ்வர சென்னைவாசி கதையே நிஜத்தில் இருக்கிறதே... அதைவிட்டு அகமது ஏன் பாலிவுட் ரீமேக்கை நாடினார்?

எல்லாம் ஒரு பாதுகாப்புணர்வு... நல்லது!
இந்த மனிதனை அவசியம் பாருங்கள்!


விமர்சனம்: ஒண் இண்டியா



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் MLA அவர்களின் திருப்புல்லாணி ஒன்றிய தேர்தல் பிரச்சார தேதிகள்!!

No comments :
பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் MLA அவர்களின் திருப்புல்லாணி ஒன்றிய தேர்தல் பிரச்சார தேதிகள்!!


தகவல்: திரு. அஸ்கர் அலி, திமுக, திருப்புல்லாணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவதற்கு 31 பேர் பேர் வேட்பு மனு தாக்கல்!!

No comments :
ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவதற்கு, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 31 பேர் பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 22 ஆம் தேதி தொடங்கி, 29 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.

கடந்த 27 ஆம் தேதி, திமுக கூட்டணியிலுள்ள மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளரான எம்.ஹெச். ஜவாஹிருல்லா, தேமுதிக வேட்பாளரான சிங்கை. ஜின்னா, பாமக வேட்பாளரான அப்துல் லத்தீப், எழுச்சி தமிழர்கள் முன்னேற்றக் கழக வேட்பாளரான மு. வீரராகவன் ஆகியோர் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 6 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 

அதன்பின்னர், 28 இல் அதிமுக சார்பில் டாக்டர் முரு. மணிகண்டன், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ராமலிங்கம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தாமஸ்  ஜெரோன்குமார், அகில இந்திய பார்வார்டு பிளாக் சார்பில் சிந்துபாண்டியன், மற்றும் சுயேச்சைகள் என வெள்ளிக்கிழமை மட்டும் 14 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 


ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவதற்கு, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் 11 பேர் உள்பட மொத்தம் 31 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் சில அரசியல் கட்சி வேட்பாளர்கள் கூடுதலாக 2 அல்லது 3 வேட்பு மனு தாக்கலும்,
மாற்று வேட்பாளர்களாக சிலரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இன்று சனிக்கிழமை, வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறவுள்ளது. இதன் பிறகே, இறுதி வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள் குறித்து அறிவிக்கப்படும்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

Wednesday, April 27, 2016

ராமநாதபுரம் அதிமுக பிரமுகர் வீட்டில் பணம் பதுக்கலா? : அதிகாரிகள் வீட்டை பூட்டி சீல்!!

No comments :

ராமநாதபுரத்தில் அதிமுக பிரமுகர் வீட்டில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பணம் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், செவ்வாய்க்கிழமை அங்கு சென்ற வருமான வரித் துறை அதிகாரிகள், உரிமையாளர் வெளியூர் சென்றிருந்ததால், வீட்டைப் பூட்டி சீல் வைத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சிறுபான்மைப் பிரிவு துணைச் செயலர் எஸ்.எம். நூர்முகம்மது. இவர், சக்கரக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவராகவும் இருந்து வருகிறார். இவரது வீடு, ராமநாதபுரம் அருகே வாணி கிராமத்தில் உள்ளது. இங்கு, இவர் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பணம் பதுக்கி வைத்திருப்பதாக, தேர்தல் அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில், மதுரை வருமான வரித் துறை துணை இயக்குநர் மைக்கேல் ஜெரால்டு தலைமையில் 9 பேர் அடங்கிய குழுவினர், எஸ்.எம். நூர்முகம்மது வீட்டில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தச் சென்றனர்.

அப்போது வீடு பூட்டியிருந்தது. வீட்டு வராந்தாவில் இருந்த பணியாளர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.


ராமநாதபுரம் மாவட்டத்துக்கென தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் செலவின சிறப்புப் பார்வையாளரான பிரதாப் நாராயண் சர்மா, ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், வங்கி மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் ஆகியோர், காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

வீட்டின் உரிமையாளரான எஸ்.எம். நூர்முகம்மது வெளியூரில் இருப்பதாகவும், புதன்கிழமை வருவதாகவும் அதிகாரிகளுக்கு தகவல் வந்ததையடுத்து, அந்த வீட்டைப் பூட்டி அதிகாரிகள் சீல் வைத்து விட்டுச் சென்றனர்.

இது குறித்து விசாரணை அதிகாரி ஒருவர் கூறியது: தற்போது வீட்டைப் பூட்டி சீல் வைத்து, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புதன்கிழமை காலையில் எஸ்.எம். நூர்முகம்மது வந்தால், அவர் முன்பாக வீட்டைத் திறந்து சோதனையிடப்படும். இல்லையெனில், சீல் வைக்கப்பட்டுள்ள பூட்டை உடைத்து வீட்டுக்குள் சென்று சோதனையிட முடிவு செய்துள்ளோம்.

வீட்டில் சோதனை நடத்திய பின்னரே வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் வைத்திருக்கிறாரா, இல்லையா என்பது குறித்து தெரியவரும் என்றார்.

ராமநாதபுரம் ஏ.எஸ்.பி. எஸ். சர்வேஷ்ராஜ் தலைமையிலும், கேணிக்கரை காவல் நிலைய ஆய்வாளர் சீனிவாசகன் மேற்பார்வையிலும், எஸ்.எம். நூர்முகம்மது வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

Tuesday, April 26, 2016

ராமநாதபுரம் மாவட்டத்தில் அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சியை கலெக்டர் நடராஜன் நேரில் ஆய்வு செய்தார்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சியை மாவட்ட தேர்தல் அலுவலர் நடராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்றது. இதனை மாவட்ட தேர்தல் அதிகாரி நடராஜன் ஒவ்வொரு சட்டமன்ற பகுதிக்கும் நேரடியாக சென்று பார்வையிட்டு வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை கையாளும் முறைகள் குறித்து விளக்கினார்.
ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சியை தொடங்கி வைத்தார்.

அதன்பின் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பரமக்குடி கீழமுஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் திருவாடணை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பி.கே.மங்கலம் செயின்ட் பிரான்சிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெற்ற அந்தந்த சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சியை நேரில் பார்வையிட்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் கையாளும் முறைகள் குறித்து விளக்கினார்.


பின்னர் மாவட்ட கலெக்டர் நடராஜன் கூறியதாவது:

சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நாள் நெருங்குவதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவிற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி நடைபெறுகிறது.

பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் 28 மண்டல அலுவலர்கள், 644 வாக்குச்சாவடி அலுவலர்களும், திருவாடனை சட்டமன்ற தொகுதியில் 30 மண்டல அலுவலர்கள், 1,280 வாக்குச்சாவடி அலுவலர்களும், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் 57 மண்டல அலுவலர்கள், 1,137 வாக்குச்சாவடி அலுவலர்களும், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 35 மண்டல அலுவலர்கள், 1,891 வாக்குச்சாவடி அலுவலர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடும் மண்டல அலுவலர்களுக்கு முன்னதாக 3 கட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டுஉள்ளன.


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

Monday, April 25, 2016

திமுக தேர்தல் அறிக்கையில் கீழக்கரைக்கு பாதாள சாக்கடை திட்டம், பொதுமக்கள் வரவேற்பு!!

No comments :
கீழக்கரைக்கு 2006-2011ம் ஆண்டு திமுக ஆட்சியில் பாதாள சாக்கடை திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அப்போதைய திமுக நகராட்சி தலைவர் பசீர்அகமது அதற்கான ஆய்வு பணிகளையும் முதற்கட்ட ஆயத்த பணிகளையும் மேற்கொண்டார். ஆனால் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு பாதாள சாக்கடை திட்டம் கிடப்பில் போடப்பட்டது.  தற்போது வரை இத்திட்டத்திற்கான எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வில்லை.


இந்நிலையில் திமுக தேர்தல் அறிக்கையில் கீழக்கரை, பரமக்குடி, ராமேஸ்வரம் ஆகிய நகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் என கூறப்பட்டுள்ளது. இதற்கு கீழக்கரை பொதுமக்கள், சமூகநல ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

இது தொடர்பாக திமுக நகர செயலர் பசீர்அகமது கூறியதாவது, நகராட்சி தலைவராக நான் இருந்த போது வலியுறுத்தியதன் விளைவாக கீழக்கரைக்கு பாதாள சாக்கடை திட்டம் அறிவிக்கப்பட்டது. பின்னர் ஆட்சிக்கு வந்த அதிமுக இத்திட்டத்தை கிடப்பில் போட்டதால், கீழக்கரை நகர் முழுவதும் கழிவுநீர் தெருக்களில் ஓடி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்டத்தை பொதுமக்களுடன் சேர்ந்து திமுக.வினரும் வரவேற்கின்றனர் என்றார்.


செய்தி: திரு. தாஹிர், கீழக்கரை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமேஸ்வரம் கோயிலில் பல ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கும் நூலகத்தை திறக்க கோரிக்கை!!

No comments :
ராமேஸ்வரம் கோயிலில் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் பூட்டிக் கிடக்கும் நூலகத்தை, திறக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் வளாகத்தில் நீண்டகாலமாக தேவஸ்தான நிர்வாகத்தின் சார்பில், இந்து அறநிலையத்துறை சமய நூலகம் செயல்பட்டு வந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு வரை கோயிலுக்குள் ஒரு பகுதியில் இயங்கி வந்த இந்த நூலகத்தில் மதம் சார்ந்த நூல்கள், புராண, வரலாற்று நூல்கள், ராமேஸ்வரம் தொடர்புடைய பழமையான நூல்கள், ஏடுகள் உள்ளிட்ட ஏராளமான புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தது.

ஆன்மிகம் சார்ந்த மாதாந்திர புத்தகங்களும் இருந்தது. இதனால் ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்கள், கல்வியாளர்கள் என பல தரப்பினரும் இந்த நூலகத்தை பார்வையிட்டு பயன்படுத்தி வந்தனர். நூலகத்தை பராமரித்து, பார்வையிட வருபவர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் தமிழ் புலமையில் பட்டம் பெற்ற நபரும் கோயில் நிர்வாகத்தினால் பணி அமர்த்தப்பட்டார்.

சிறப்பாக இயங்கி வந்த நூலகம் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோயிலில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் கோயில் வளாகத்தில் ஒரு பகுதியில் இயங்கி வந்த நூலகம் தற்காலிகமாக பூட்டப்பட்டு பணிகள் நடைபெற்றது. தொடர்ந்து கோயிலுக்கு வெளியில் கிழக்குரத வீதியில் அமைந்துள்ள கோயிலுக்கு சொந்தமான கட்டிடத்திற்கு நூலகம் மாற்றப்பட்டு அங்குள்ள ஒரு அறையில் நூலகத்திலிருந்த புத்தகங்கள் உட்பட அனைத்து பொருட்களும் பூட்டி வைக்கப்பட்டது. 

தற்போது பூட்டப்படட அறைக்குள் பழமையான புத்தகங்கள் உட்பட அனைத்து நூல்கள் தூசு படிந்து கேட்பாரற்று யாருக்கும் பயன்படாமல் உள்ளது. மேலும் நூலகத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த கிரந்தம், சமஸ்கிருதம் மொழி சார்ந்த பழமையான அரிய நூல்கள் பலவும் காணாமல் போய்விட்டதாகவும் கூறப்படுகிறது. பக்தர்களுக்கும், கல்வியாளர்களும் பயன்படுத்தி வந்த நூலகம் பல ஆண்டுகளாக திறக்கப்படாத நிலையில் நூலகத்திற்கென்று பணி அமர்த்தப்பட்ட தமிழ் புலவர் டிக்கெட் கவுண்டரில் பக்தர்கள் தீர்த்தமாட டிக்கெட் கொடுப்பது, சுவாமி சன்னதியில் தரிசன டிக்கெட் கொடுப்பது போன்ற பணிகளை செய்து வருகிறார். 


இதில் கூடுதல் வருவாய் கிடைப்பதால் நூலகத்தை திறப்பதை மறந்து டிக்கெட் கொடுக்கும் பணியில் ஆர்வம் காட்டி வருகிறார். 
இதனால் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ராமநாத சுவாமி கோயிலில் இயங்கி வந்த வரலாற்று சிறப்பு மிக்க நூலகம் யாருக்கும் பயன்படாமல் உள்ளது. ஆனால் கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்படும் பட்டியலில் நூலகம் சிறப்பாக இயங்கி வருவதாக கூறப்பட்டுள்ளது. பூட்டப்பட்ட நூலகத்தை திறந்து அனைவரும் பயன்பெறும் வகையில் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேணடும் என்று பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

செய்தி: தினகரன்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் - சட்டமன்ற தொகுதி விபரம்!!

No comments :
பெரிய மாவட்டமாக இருந்த ராமநாதபுரத்தை நிர்வாகக் காரணங்களுக்காக மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் கடந்த 14.7.1984இல் சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் என மூன்றாகப் பிரித்தார்.

ராமேசுவரம் கோயிலின் மூன்றாம் பிரகாரம், கடலில் கப்பல்கள் செல்லும் போது திறந்து மூடும் வகையில் வடிவமைக்கப்பட்ட பாம்பன் ரயில்பாலம், இந்திரா மேம்பாலம், ஏர்வாடி தர்கா,சிகாகோ பயணம் முடித்து சுவாமி விவேகானந்தர் தாயகம் திரும்பி வந்து முதலில் கால்பதித்த குந்துகால் கடற்கரை, திருஉத்தரகோசமங்கை பச்சைமரகத நடராஜர் திருக்கோயில், 108 வைணவத் திருத்தலங்களில் 44 ஆவது திருத்தலமாக விளங்கும் திருப்புல்லாணி ஆதிஜெகன்னாதப் பெருமாள் கோயில் ஆகியன இத்தொகுதியின் சிறப்புகள்.



ராமநாதபுரம், ராமேசுவரம், கீழக்கரை உள்ளிட்ட 3 நகராட்சிகள், மண்டபம் பேரூராட்சி ஊராட்சி ஒன்றியங்களில் ராமநாதபுரத்தில் உள்ள 9 ஊராட்சிகள், மண்டபத்தில் உள்ள 25 ஊராட்சிகள்,திருப்புல்லாணியில் உள்ள 29 ஊராட்சிகள் உள்பட மொத்தம் 69 ஊராட்சிகளை உள்ளடக்கியது. மேலும், ராமநாதபுரம், ராமேசுவரம்,கீழக்கரை நகராட்சிகள், மண்டபத்தில் உள்ள 18 வார்டுகள், 69 கிராம ஊராட்சிகள், ராமநாதபுரம் ஒன்றியத்தில் சித்தூர், இளமனூர், கழனிக்குடி, காருகுடி, மாதவனூர், மாடக்கொட்டான், பேராவூர், தெற்குத்தரவை கிராமங்களும், மண்டபம் ஒன்றியத்தில் ஆற்றங்கரை, என்மணங்கொண்டான், காரான், இருமேனி உள்ளிட்ட கிராமங்களும்,திருப்புல்லாணி ஒன்றியத்தில் முத்துப்பேட்டை, நல்லிருக்கை, நயினாமரைக்கான், பனையடியேந்தல், தில்லையேந்தல், திருப்புல்லாணி உள்ளிட்ட கிராமங்களும் அடங்கியுள்ளன.


மொத்த வாக்காளர்கள்
மொத்தம் வாக்காளர்கள் 2,81,563
ஆண்கள் 1,41,031
பெண்கள் 1,40,514
திருநங்கைகள் 18
வாக்குச் சாவடிகள் 321

தேர்தல் அலுவலர்
ராம். பிரதீபன். (கோட்டாட்சியர்)
செல்லிடப்பேசி எண்: 94455 00472.


முந்தைய தேர்தல்களில்
1952  சண்முகராஜேஸ்வர சேதுபதி (காங்)  26,131
1957  சண்முகராஜேஸ்வர சேதுபதி (காங்)  40,577
1962  சண்முகராஜேஸ்வர சேதுபதி (காங்)  44,942
1967  டி .தங்கப்பன் (திமுக)            35,880
1971  எம்.எஸ்.கே. சத்தியேந்திரன் (திமுக) 40,690
1977  டி.ராமசாமி (அதிமுக)            33,048
1980  டி.ராமசாமி (அதிமுக)           46,987
1984 டி.ராமசாமி(அதிமுக)             56,342
1989 எம்.எஸ்.கே.ராஜேந்திரன் (திமுக)    38,747
1991 தென்னவன் (அதிமுக)            62,004
1996 ரகுமான்கான் (திமுக)            59,794
2001 அன்வர்ராஜா(அதிமுக)            59,824
2006 ஹசன்அலி(காங்கிரஸ்)            66,922
2011 ஜவாஹிருல்லா(மமக)             65,831


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

Saturday, April 23, 2016

முதுகுளத்தூர் சட்டமன்ற SDPI வேட்பாளர் பயொடேட்டா!!

No comments :
பெயர் : முகம்மது இஸ்ஹாக்

தந்தை : சதக்கத்துல்லா

தாய் : பாத்திமா பீவி

மனைவி : ரிஸ்வானா பாத்திமா

வயது : 33 (இளைஞர்)

சமூக களம் : 18 வருடங்கள் 

சிறை : 40 நாட்கள்

உண்ணாவிரதம் : ஒரு நாள் (ரோடு ஓர தொழிலாளிக்காக)



போராட்டம் : மதுவிலக்கிற்கு ஆதரவாக, கூடங்குளத்திற்கு எதிராக , சேதுசமுத்திர திட்டத்திற்கு ஆதரவாக , கட்சத்தீவை மீட்டிட, மணல் கொள்ளை,காடு அழிப்பு,கூலி தொழிலாளி, கல்வி கொள்ளை,மற்றும் பல

முற்றுகை போராட்டம் : புகைவண்டி மறியல்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,அரசு மருத்துவமனை,சாலை மறியல்.

SDPI கட்சியின் இராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர். மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர்.
என பன்முகம் கொண்டவர்.

2016 சட்டப்பேரவை தேர்தலில், SDPI சார்பில், இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)