முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, September 25, 2018

ராமநாதபுரம் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தள்ளுபடி விற்பனை!!

No comments :
ராமநாதபுரம் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் 30 சதவீதம் தள்ளுபடியில் தீபாவளி விற்பனையை கலெக்டர் வீரராகவ ராவ் துவக்கி வைத்தார்.

அவர் கூறியதாவது:

கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க தமிழக அரசு ஆண்டுதோறும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் 30 சதவீதம் தள்ளுபடி விற்பனை செய்கிறது.தீபாவளியை முன்னிட்டு பட்டு, பருத்தி, கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

கடந்த தீபாவளிக்கு 70.91 லட்சம் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு 85 லட்சத்திற்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, என்றார்.


கோ_ஆப்டெக்ஸ்(அரசு திட்டம்) மேலாளர் பழனிச்சாமி, வடிவமைப்பு மற்றும் உற்பத்தி பிரிவு மேலாளர் செல்வராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Thursday, September 20, 2018

சப்-இன்ஸ்பெக்டர் பணி வாய்ப்பு, BE,B.Tech, B.Sc தேர்ச்சி பெற்றவர்கள் செப்-28க்குள் விண்ணப்பிக்கலாம்!!

No comments :

பணி மற்றும் காலிப் பணியிடங்கள் விபரம்:-

பணி : உதவி ஆய்வாளர் - ஃபிங்கர் பிரிண்ட்

காலியிடங்கள் : 202

ஊதியம் : ரூ.36,900 முதல் ரூ.116600 வரை.

கல்வித் தகுதி : பி.இ, பி.டெக், பி.எஸ்சி. (ஏதேனும் அறிவியல் சார்ந்த துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்)

வயது வரம்பு : 20 வயது முதல் 28 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

உடல் தகுதி : ஆண்கள் குறைந்தது 163 செ.மீ உயரமும், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 154 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tnusrbonline.org என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 செப்டம்பர் 28


தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத்தேர்வு, உடற்தகுதித் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணி குறித்த மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க http://www.tnusrbonline.org/SI_Fingerprint_Notification.pdf அல்லது http://www.tnusrbonline.org/ லிங்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளவும்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Monday, September 17, 2018

ராமநாதபுர மாவட்ட குடிநீர் தேவைக்காக மதகு அணையில் இருந்து வைகை நீர் திறந்து விடப்பட்டது!!

No comments :
ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வைகை அணையில் இருந்து கடந்த 10–ந் தேதி முதல் வருகிற 27–ந்தேதி வரை தண்ணீர் திறந்து விடப்படும் என முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று பார்த்திபனூர் மதகு அணையை வந்தடைந்தது. மாலையில் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்தின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விட்டார். பின்பு மதகு அணைகளின் வழியாக ஓடிய தண்ணீரை மலர் தூவி வரவேற்றார்.இதைதொடர்ந்து மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நிருபர்களிடம் கூறியதாவது:–

பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் ராமநாதபுரம் பெரிய கண்மாய் வரை சென்றடையும். இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, போகலூர், நயினார்கோவில் மற்றும் ராமநாதபுரம் ஆகிய யூனியன்களுக்கு உட்பட்ட வைகை ஆற்று பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி சப்–கலெக்டர் விஷ்ணுசந்திரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வெங்கடகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர்கள் பிரபு, சிவராமகிருஷ்ணன், பரமக்குடி யூனியன் ஆணையாளர் சந்திரமோகன், தாசில்தார் பரமசிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Monday, September 10, 2018

ராமநாதபுர மாவட்டத்தில் ஊரணி துார் வாருகின்ற அனுமதி பெற்று மணற் கொள்ளை, நிலத்தடி நீராதார பாதிப்பு!!

No comments :

ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணியில் மணல் கொள்ளையர்களால் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் கண்டு கொள்ளாத அவல நிலை உள்ளது.

திருப்புல்லாணி பகுதியில் வானம் பார்த்த பூமியான இப்பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரத்திற்காக பிள்ளையார் கூட்டம், மதகு கூட்டம், கூத்தியார் கூட்டம், சக்கரை தீர்த்தம், பி.குட்டம்,செட்டிய ஊரணி, அய்யா ஊரணி ஆகிய ஊரணிகள் உள்ளது. மழை நேரங்களில் இதில் தேங்கும் தண்ணீர் மக்கள் பயன்பாட்டிற்கும், கால்நடைகளுக்கு குடி நீராகவும், நிலத்தடி நீர் ஆதாரமாகவும் பயன்பட்டு வருகிறது.

பிள்ளையார் கூட்டம் ஊரணியில் துார் வார கீழக்கரை தாசில்தார் ராஜேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். ஊரணியின் உள் பகுதியில் 3 அடி மட்டுமே துார் வார வேண்டும்.
இந்த விதிமுறைகளை மீறி மணல் கொள்ளையர்கள் கடந்த ஒரு மாதமாக இப்பகுதியில் மணல் எடுத்து வருகின்றனர். 15 அடி ஆழம் வரை மணல் அள்ளும் இயந்திரம் மூலம் இரவு, பகலாக தொடர்ந்து மணல் எடுத்து வருகின்றனர்.

(File photo)


விதி முறைகளை மீறி மண் எடுப்பது குறித்து அப்பகுதி மக்கள் தாசில்தார், கலெக்டர் அலுவலக மனு நீதிநாளில் புகார் மனு கொடுத்துள்ளனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். மணல் கொள்ளையர்கள் ஊரணியை துார் வாருகிறோம் என்ற பெயரில் மணல் கொள்ளையடித்து வருகின்றனர்.


தாசில்தார் ராஜேஸ்வரி கூறுகையில்,''ஊரணி துார் வாருவதற்கான அனுமதியை வழங்கினேன். 3 அடி ஆழத்திற்கு மேல்மணல் எடுப்பது தெரியாது. இது குறித்து ஊரணியை பார்வையிடுகிறேன்,'' என்றார்.

துார் வார உத்தரவிடுவதோடு அதிகாரிகள் நிறுத்தி கொள்கின்றனர். உரிய அளவு ஆழம் தோண்டப்படுகிறதா, விதி மீறல்கள் உள்ளதா, என்று கண்காணிப்பது இல்லை.

அதிகாரிகள் உத்தரவு கிடைத்தவுடன் மணல் கொள்ளையர்கள் தங்களது வேலையை தெளிவாக செய்கின்றனர். இது தெரியாதது போல் அதிகாரிகள் நடிக்கின்றனர்.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.


செய்தி: தினமலர்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Sunday, September 9, 2018

ராமநாதபுரம் மாவட்ட விவசாய சாகுபடிக்காக வைகை நீர் திறக்கப்படுகிறது!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட விவசாய சாகுபடிக்காக வைகை அணையிலிருந்து திங்கள்கிழமை (செப்.10) முதல் வினாடிக்கு 1559 கன அடி தண்ணீ ர் திறக்கப்படும் என தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மு.மணிகண்டன் தெரிவித்தார்.

ராமநாதபுரம் அருகே உள்ள அச்சுந்தன்வயல் பகுதியில் பெரியகண்மாய் தென்கலுங்கிலிருந்து வைகை அணை தண்ணீர் வரும் பகுதிகளை சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்த அவர், இதுகுறித்து மேலும் கூறியதாவது:

வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு தண்ணீர் வர வேண்டுமானால், வினாடிக்கு 1800 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும். ஆனால், திங்கள்கிழமை (செப்.10) முதல் வரும் 27 ஆம் தேதி வரை வினாடிக்கு 1559 கன அடி தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது. செப்டம்பர் 27 ஆம் தேதிக்கு பிறகும் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தால் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது திறந்து விடப்படும் அளவைவிட மேலும் 300 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள் அனைத்தும் நிரம்பி, விவசாயம் செழிக்கும்.இதுதொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து, கோரிக்கை விடுத்துள்ளேன். ராமநாதபுரத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் எந்த கிராமங்களுக்கு வரவில்லை என்றாலும் என்னிடம் தெரிவிக்கலாம். ராமநாதபுரம் சக்கரக்கோட்டை கண்மாய் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.1 கோடி மதிப்பில் தூர்வாரப்பட்டுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதானவர்களை விடுவிப்பது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றார்.

ஆய்வின்போது, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், பொதுப்பணித்துறை கீழ்வைகை வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் வெங்கடகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் தஞ்சி.சுரேஷ் ஆகியோர் உள்பட அதிகாரிகள், அதிமுக பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.9) முதல் அக்டோபர் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பரமக்குடியில் வரும் 11 ஆம் தேதி, இமானுவேல் சேகரன் நினைவு தினமும், பசும்பொன்னில் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி தேவர் குருபூஜையும் நடைபெறவுள்ளது. எனவே, சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளை கருத்தில் கொண்டு, ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 9) முதல் அக்டோபர் 30 ஆம் தேதி வரை 2 மாத காலத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்தவோ, 5-க்கும் மேற்பட்டோர் கூடுவதற்கோ தடை விதிக்கப்படுகிறது. அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்த கட்டாயம் முன் அனுமதி பெற வேண்டும். இம்மாதம் 15 ஆம் தேதி வரையும், அக்டோபர் 25 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையும் வெளி மாவட்டங்களிலிருந்து வாடகை வாகனங்கள், சரக்கு வாகனங்கள், டிராக்டர்கள், இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களில் நினைவிடங்களுக்கு அஞ்சலி செலுத்த வரவும் தடை விதிக்கப்படுகிறது.


அதேபோல் நினைவிடங்கள் அமைந்துள்ள பகுதிகளில் ஒரு கிலோ மீட்டருக்குள் மட்டுமே மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதி பெற்று ஜோதி எடுத்து வர வேண்டும். அஞ்சலி செலுத்த வரும் வாகனங்களுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதி பெற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Wednesday, September 5, 2018

ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 பேர் சிறந்த ஆசிரியர்களாக தேர்வு!!

No comments :
தமிழக அரசு சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி வருகிறது.

அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 11 பேர் சிறந்த ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

எம்.மோகனதாஸ்,தலைமை ஆசிரியர் சக்கரக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி

வி.விஜயாபாய், அரசுமேல்நிலைப்பள்ளி, சுந்தரபாண்டியபட்டணம்

லீலாவதி, தலைமை ஆசிரியை, திருப்பாலைக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி

எஸ்.நவநீதகிருஷ்ணன், முதுகலை ஆசிரியர் உத்தரகோசமங்கை அரசு மேல்நிலைப்பள்ளி

எஸ்.கருணாகரன், இடைநிலை ஆசிரியர் செங்குடி புனித மிக்கேல் மேல்நிலைப்பள்ளி

பிரேமலதா.பட்டதாரி ஆசிரியை வ.உ.சி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,மஞ்சள்பட்டினம் வளையனேந்தல்

ஜெ.அந்தோணி அமலோற்பவதாஸ், தலைமை ஆசிரியை,கடம்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிஎம்.வேலுச்சாமி தலைமை ஆசிரியர் , ஆனந்துார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

சி.மாணிக்கம்,தலைமை ஆசிரியை, முத்துராமலிங்கபட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

சாந்தி, தலைமை ஆசிரியை, தொண்டி மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

ராமச்சந்திரன்,தலைமை ஆசிரியர், கமுதி ஒன்றியம் உடைகுளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி

இவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டனி, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டனி மற்றும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டனி சார்பில் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்டத்தில் மூன்று நகராட்சிகளில் கமிஷனர் இல்லை; பணிகள் தேக்கம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் மூன்று நகராட்சியில் கமிஷனர் இல்லை. ராமநாதபுரத்தில் அடுத்த நிலையில் உள்ள பொறியாளர் பணியிடமும் காலியாக இருப்பதால், வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் ராமநாதபுரம், ராமேஸ்வரம், கீழக்கரை, பரமக்குடி ஆகிய நான்கு நகராட்சிகள் உள்ளன. இதில் கீழக்கரையில் பணியாற்றிய கமிஷனர் வசந்தி ஒரு ஆண்டுக்கு முன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இன்று வரை இந்தப்பணியிடத்தில் கமிஷனர் நியமிக்கப்படவில்லை.

சில நாட்களுக்கு முன் போடப்பட்ட பதவி உயர்வில் பரமக்குடி கமிஷனர் நாராயணன் பதவி உயர்வுக்காக பழனி நகராட்சி ஆணையாளராகவும், ராமநாதபுரம் நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி தேனி நகராட்சிக்கும் பணியிட மாறுதல் செய்து உத்தரவிடப்பட்டது.
இதில் ராமநாதபுரம் நகராட்சி கமிஷனர் பணியிட மாறுதல் உடனடியாக ரத்து செய்யப்பட்டு ஆம்பூர் நகராட்சிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார்.


இதன் காரணமாக நான்கு நகராட்சிகளில் மூன்று நகராட்சிகளுக்கு கமிஷனர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது ராமேஸ்வரம் கமிஷனர் வீரமுத்துக்குமார் மட்டுமே பணியில் உள்ளார். மூன்று நகராட்சிகளில் கமிஷனர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

மாவட்ட தலைநகரமான ராமநாதபுரத்தில் கமிஷனருக்கு அடுத்த நிலையில் உள்ள பொறியாளர் நடராஜன் 4 மாதங்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அந்தப்பணியிடத்தில் பொறியாளர் நியமிக்கப்படாத நிலை உள்ளது. இது போன்று நிர்வாகத்தை நடத்தும் அதிகாரிகள் இல்லாத நிலையில் நகராட்சிகளில் வளர்ச்சிப்பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது வாக்காளர்பட்டியல் சுருக்க திருத்தப்பட்டியல் செப்.,1 ல் வெளியிடப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. 31.10.2018 ல் வரைவு வாக்காளர் பட்டியலும்,5.1.19 ல் இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்படுகிறது. இந்த நேரத்தில் கமிஷனர்களை பணியிட மாற்றம் செய்ய முடியாது. அப்படியே அவசரம் கருதி பணியிட மாறுதல் செய்ய தேர்தல் கமிஷன் ஒப்புதல் பெற்றே மாற்ற முடியும். இனி கமிஷனர்கள் பணி நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பதவி உயர்வு பெற்றவர்களை ஆக., 31ல் பணியில் சேர அறிவுறுத்தப்பட்டதால், அந்த நாளில் அனைவரும் பணியில் சேர்ந்துவிட்டனர்.
பாதிக்கப்படுவது பொதுமக்களே, ஆக, அதிவிரைவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர் பொதுமக்கள்.


நன்றி: திரு. தாஹீர், கீழை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

8ம் வகுப்பு 10ம் வகுப்பு படித்தவர்கள் அரசு கோட்டாவில் ஐ.டி.ஐ -ல் சேர செப்-12க்குள் விண்ணப்பிக்கலாம்!!

No comments :
அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ.,களில் 50 சதவீதம் அரசு ஒதுக்கீட்டிற்கான மூன்றாம் கட்ட கலந்தாய்விற்கு செப்.,12 வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம், என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பரமக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் எஸ்.ரமேஷ்குமார் கூறியிருப்பது:

மாவட்டத்தில் அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி தொழிற்பயிற்சி நிலையங்களால் ஒப்படைப்பு செய்யப்படும் 50 சதவீதம் அரசு இட ஒதுக்கீட்டிற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. மீதம் உள்ள காலியிடங்கள் மற்றும் ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்துார் ஆகிய மூன்று இடங்களில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தற்போது அங்கீகாரம் பெறப்பட்டுள்ள தொழிற்பிரிவுகளுக்கும் சேர்த்து மூன்றாம் கட்ட கலந்தாய்வுக்காக விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பங்களை இணையதளத்தில்(ஆன்லைன்) செப்.,12 வரை பதிவு செய்யலாம்.

பரமக்குடி, ராமநாதபுரம் அரசு ஐ.டி.ஐ.,களில் எலக்ட்ரீசியன் தொழிற்பிரிவிலும்,
முதுகுளத்துார் அரசு ஐ.டி.ஐ.,யில் கம்மியர் மோட்டார் வண்டி தொழிற்பிரிவிலும் சேரலாம்,
எட்டாம் வகுப்பு தகுதியில் இன்ஜினியரிங் (பொது) 2 இடங்கள், எட்டாம் வகுப்பு இன்ஜினியரிங் அல்லாத பிரிவில் 46 இடங்கள்,
பத்தாம் வகுப்பு தகுதியில் இன்ஜினியரிங்(பொது) 74 இடங்கள், பத்தாம் வகுப்பு இன்ஜினியரிங் அல்லாத பிரிவில் 36 இடங்கள் உள்ளன.


இவ்வாறு கூறியுள்ளார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Monday, September 3, 2018

ராமேஸ்வரம் கோயில் தீர்த்த குளத்தில் சுகாதராமில்லை என்று பக்தர்கள் அதிருப்தி !!

No comments :
ராமேஸ்வரம் கோயில் தீர்த்த குளத்தில் பாலிதீன் பை, பிளாஸ்டிக் கழிவு தேங்கி கிடப்பதால், பக்தர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடி தரிசனம் செய்தால் பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும் என்பது ஐதீகம். 

கோயிலில் தீர்த்தக்குளம், கிணற்றை சுற்றி படிந்து கிடக்கும் பாசியை, கோயில் துப்புரவு ஊழியர்கள் அகற்றி பராமரிக்காமல் கிடப்பில் போடுவதால், பக்தர்கள் நீராட வரும் போது வழுக்கி விழுந்து காயம் அடைகின்றனர்.மேலும் 2ம் பிரகாரத்தில் பக்தர்கள் நீராடிய பிறகு தேங்கும் கழிவு நீர்,பக்தர்கள் விட்டு சென்ற துணிகளை அகற்றாமல் அப்படியே விடப்படுகிறது. 

கோயிலில் பிரசித்தி பெற்ற சேதுமாதவர் தீர்த்த குளத்தில் ஏராளமான பிளாஸ்டிக் பாட்டில்கள்பாலிதீன் பைகள் மிதந்தும், இங்குள்ள படிக்கட்டுகளில் மண்சகதி, பாலிதீன் பை கழிவுகளை அகற்றாமல் உள்ளதால், நீராட வரும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.புனித தீர்த்த குளம், கிணறுகளை சுற்றி பாசி, குப்பையை தினமும் அகற்றி சுகாதாரம் பராமரித்து கோயில் புனிதம் காக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செய்தி: தினமலர்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ஜெருசலேம் புனித பயணம் செல்ல அரசு நிதியுதவிக்கு விண்ணப்பிக்கலாம்!!

No comments :


ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கிறிஸ்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த விண்ணப்ப படிவங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெறலாம். இதற்கான நிபந்தனைகள், விதிமுறைகள் மற்றும் விண்ணப்பப்படிவம் ஆகியன www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான அனைத்து இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் ‘ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம்“ என்று குறிப்பிட்டு வருகிற 10–ந்தேதிக்குள்
மேலாண்மை இயக்குனர்,
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம்,
807 (5–வது தளம்), அண்ணாசாலை,
சென்னை –600 002
என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.


இந்த தகவலை கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Sunday, September 2, 2018

ராமநாதபுர மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!!

No comments :
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனை கலெக்டர் வீரராகவராவ் வெளியிட்டார்.

அதன் பின்னர் அவர் கூறியதாவது:–

இந்திய தேர்தல் ஆணையத்தின் அட்டவணையின்படி 1.1.2019–ம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் 2019–ல் மேற்கொள்ளப்பட உள்ளது. அதனடிப்படையில் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

மாவட்டத்தில் 5 லட்சத்து 56 ஆயிரத்து 614 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 57ஆயிரத்து 369 பெண் வாக்காளர்களும், 65 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 11 லட்சத்து 14 ஆயிரத்து 48 வாக்காளர்கள் உள்ளனர்.

மாவட்டத்தில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். மேலும் 11.1.2018 முதல் 31.8.2018 வரையிலான நாட்களில் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் 4 ஆயிரத்து 795 வாக்காளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 5 ஆயிரத்து 895 வாக்காளர்கள் இறப்பு காரணமாகவும், 951 வாக்காளர்கள் இரட்டை பதிவு காரணமாகவும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

புகைப்பட வரைவு வாக்காளர் பட்டியல், வாக்குப்பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களில் அதாவது வருவாய் கோட்டாட்சியர் மற்றும் சப்–கலெக்டர் அலுவலகங்களிலும், தாலுகா அலுவலகம் மற்றும் நகராட்சி ஆணையாளர் அலுவலகங்களிலும், வாக்குச்சாவடி அமைவிடங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.நகரப்பகுதிகளில் குடியிருப்போர் நலச்சங்கங்களுக்கும், ஊரகப்பகுதிகளில் கிராம சபைகளுக்கும் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமும் வாக்காளர் பட்டியலின் உரிய பாகத்தின் நகல் அளிக்கப்பட்டுள்ளது. வாக்களார் பட்டியல் பெயரை சேர்ப்பதற்கு, இந்திய குடியினராய் இருத்தல் வேண்டும். 1.1.2019 அன்று 18 வயது நிரம்பியவராகவும், பதிவு செய்யக்கோரும் பகுதியில் சாதாரணமாக வசிப்பவராகவும் இருத்தல் வேண்டும்.

முதன் முறையாக பெயர் சேர்க்கப்பட அல்லது ஒரு சட்டமன்ற தொகுதியில் இருந்து மற்றொரு சட்டமன்ற தொகுதிக்கு வசிப்பிடம் மாறியிருந்தால் படிவம் 6–ம், வெளிநாட்டில் வசிக்கும் இந்திய குடிமக்கள் பெயர் சேர்க்கப்பட படிவம் 6ஏ–வும், ஒரு சட்டமன்ற தொகுதிக்குள்ளேயே வசிப்பிடம் மாறியிருந்தால் படிவம் 8–ம், பெயரை நீக்க படிவம் 7–ம், பெயர், வயது, பாலினம், உறவுமுறை ஆகிய பதிவுகளில் திருத்தம் அல்லது சரியான உருவப்படம் இடம் பெறச்செய்ய படிவம் 8ம் பூர்த்தி செய்து வழங்க வேண்டும். மேலும் 1.09.2018 முதல் 31.10.2018 வரை விண்ணப்பங்கள் பெறப்படும்.

இதேபோல வருகிற 8, 22 ஆகிய தேதிகளிலும், அக்டோபர் 6, 13 ஆகிய தேதிகளிலும் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைகள் நடத்தப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்களுக்கு வாசித்து காண்பிக்கப்படும்.

இதுதவிர வருகிற 9, 23, அக்டோபர் 7, 14 ஆகிய தினங்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு படிவங்கள் பெறப்படும். அனைத்து மனுக்கள் மீதும் உரிய விசாரணை மேற்கொண்டு வாக்காளர் பதிவு அதிகரியால் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு 2019 ஜனவரி 4–ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்ஸிலீமா அமாலினி, பரமக்குடி சப்–கலெக்டர் விஷ்ணுசந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் காளிமுத்து, வருவாய் கோட்டாட்சியர் சுமன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, தேர்தல் தாசில்தார் கல்யாணக்குமார் உள்பட அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Saturday, September 1, 2018

ராமேஸ்வரம் கோயிலில் மாதாந்திர காணிக்கை ரூ.71லட்சத்து 93 ஆயிரத்து 220!!

No comments :
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.71லட்சத்து 93 ஆயிரத்து 220 இருந்தது.


ராமேஸ்வரம் திருக்கோயிலில் 30 நாட்களுக்கு பிறகு நேற்று சுவாமி, பர்தவர்த்தினி அம்மன், பஞ்சமூர்த்திகள் சன்னதிகள் முன்புள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு, கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி முன்னிலையில் எண்ணப்பட்டன. 

இதில் ரொக்க பணம் 71 லட்சத்து 93 ஆயிரத்து 220 ரூபாயும், தங்கம் 82 கிராம், வெள்ளி 2 கிலோ 381 கிராம் காணிக்கையாக கிடைத்தது.

 கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர் கக்காரின், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன், கலைசெல்வன், கோயில் ஊழியர்கள் மற்றும் பர்வதவர்த்தினி, விவேகானந்தா பள்ளி மாணவிகள் பலர் காணிக்கையை எண்ணினர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)