முகவை முரசு

வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே! ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே! நன்றென்று கொட்டு முரசே! இந்த நானில மாந்தருக் கெல்லாம்.

Monday, December 11, 2017

கீழக்கரையில் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டி முற்றுகை போராட்டம்!!

No comments :
கீழக்கரையில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி நேற்று நடந்த முற்றுகை போராட்டத்தில் 25 பெண்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

கீழக்கரை புதிய பஸ் நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைக்கு அருகே இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளது. இது பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதால்மூடக்கோரி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாநில துணை பொதுச்செயலாளர் சந்திரன் தலைமையில் நேற்று முற்றுகை போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தில்லை ரஹ்மான் முன்னிலை வகித்தார். மாநில துணை பொதுச்செயலாளர் சந்திரன் பேசுகையில், கடந்த மே 25ம் தேதி முற்றுகை போராட்டம் அறிவித்தபோது, 4 மாதங்களுக்குள் டாஸ்மாக் கடைகளை அகற்றுவதாக அதிகாரிகள் உறுதிமொழி கொடுத்தனர். அதன்பின்னர் டாஸ்மாக் கடையை மூட எந்த நடவடிக்கையும் எடுக்காததால் டாஸ்மாக் கடையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தியுள்ளோம். இன்னும் 10 நாட்களுக்குள் கடைகளை மூடாவிட்டால், தலைவர் ஜான்பாண்டியன் தலைமையில் மாபெரும் போராட்டம் நடத்துவோம் என்றார்.

போராட்டத்தில் மகளிர் அணியை சேர்ந்த 25 பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


செய்தி: திரு.தாஹீர், கீழை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வைகை நீரை மலர் துாவி வைகை நீரை வரவேற்றார் கலெக்டர்!!

No comments :
வைகை அணையில் இருந்து நிலத்தடி நீர் ஆதாரத்திற்கென திறக்கப்பட்ட தண்ணீர், தொடர்ந்து பார்த்திபனுார் மதகு அணை வழியாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கலெக்டர் நடராஜன் திறந்து வைத்தார். இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் நிலவி வரும் வறட்சியை கருத்தில் கொண்டு டிச., 5 ல் முதல்வர், வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட்டார்.

இதன் படி மாவட்ட பங்கீடான 12,400 கனஅடி நீர், முறையே முதல் 3 நாட்கள் 3 ஆயிரம் கனஅடி வீதமும், அடுத்தடுத்த நாட்களில் 2 ஆயிரம், 1000 மற்றும் 400 கனஅடி என திறக்கப்பட்டது. இது தொடர்ந்து
10 ம் தேதி வரை முறையாக திறக்கப்பட்டது.
இருப்பினும் கடந்த 2016 ஜன., மாதத்திற்கு பின் சுமார் 2ஆண்டுகளுக்கு பின்னர் தண்ணீர் திறக்கப்பட்டதால், எதிர்பார்த்த நாளில் ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் ஆற்றில் மணல் கொள்ளை, கருவேல ஆக்கிரமிப்பு என தடுப்பாக உள்ளன.இதனையடுத்து முதல்வர் நேற்று மீண்டும் இரண்டு மாவட்டங்களுக்கும் சேர்த்து, 1720 கனஅடி கூடுதலாக திறக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் பார்த்திபனுார் மதகு அணையை தண்ணீர் வந்தடைந்தது. தொடர்ந்து நேற்று காலை 10:00 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நடராஜன்,
ஷட்டர்களை திறந்து வைத்து மலர் துாவி வைகை நீரை வரவேற்றார்.

இதன் படி மதகுகளில் மொத்தமுள்ள 25 ஷட்டர்களில் 4 தவிர 21 ஷட்டர்களும் திறக்கப்பட்டு தண்ணீர் வேகமாக ராமநாதபுரம் செல்லும் வகையில் முறைப்படுத்தப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் வைகை அணையில் இருந்து மொத்தம் 14,120 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், பார்த்திபனுாரில் இருந்து வினாடிக்கு 2,400 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
பரமக்குடி தாசில்தார் ஜெயமணி, பரமக்குடி கீழ்வைகை வடிநிலை கோட்ட செயற்பொறியாளர் வெங்கடகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் செய்யதுஹபீப் மற்றும் உதவி பொறியாளர் கார்த்திக், வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர் மதுரைவீரன், செயல்தலைவர் பால்மரியதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தி: தினசரிகள்(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Sunday, December 10, 2017

உரிமம் பெறாத உணவு வணிகர்களுக்கு சிறை தண்டனை – கலெக்டர்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் உணவுபொருள் வணிகம் செய்யும் உணவு வணிகர்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன்கீழ் உரிமம் மற்றும் பதிவு சான்று கட்டாயம் பெறவேண்டும் என மாவட்டம் முழுவதும் உள்ள உணவு வணிகர்களுக்கு அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் மொத்தம் உள்ள 9,715 உணவு வணிக நிறுவனங்களில் 5,156 பேர் மட்டுமே உரிமம் மற்றும் பதிவுசான்று பெற்று உள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உணவகங்கள்மளிகை கடைகள்பேக்கரிகள்இறைச்சி கடைகள்டீக்கடைகள்பால் வியாபாரிகள்சாலையோர உணவு வியாபாரிகள்உணவுப்பொருள் உற்பத்தியாளர்கள்உணவு பொருள் மொத்த விற்பனையாளர்கள்திருமண மண்டபத்தில் உணவு தயாரிப்போர்அரிசி ஆலைகள் மற்றும் பால் எண்ணெய் உள்ளிட்ட அனைத்து உணவு பொருள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள்உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டப்படி உரிமம் பெற வேண்டும். உரிமத்தை பெற விரும்புவோர் www.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
ஆண்டு ஒன்றுக்கு ரூ.12 லட்சத்திற்கு குறைவாக வணிகம் செய்யும் உணவு வணிகர்கள் பதிவுச்சான்று பெற ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். ஆண்டு ஒன்றுக்கு ரூ.12 லட்சத்திற்கு மேல் வணிகம் செய்யும் உணவு வணிகர்கள் உரிமம் பெற ரூ.2000 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். ஒரு டன் உற்பத்தி திறன் உள்ள உணவு வணிகர்கள் ரூ.3000-மும், 2 டன் உற்பத்தி திறன் உள்ள உணவு வணிகர்கள் ரூ. 5000-மும் கட்டணமாக செலுத்த வேண்டும்.

இந்த கட்டணம் ஓராண்டிற்கு மட்டுமே செல்லுபடியாகும். உணவு பாதுகாப்பு துறையின் உரிமத்தை 5 ஆண்டுகள் வரை அதற்குரிய கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பித்த விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து நகல் எடுத்து கையொப்பமிட்டு இணையதளத்தில் விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் மாவட்ட நியமன அலுவலர் உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் இணைப்பில் கூறப்பட்டுள்ள சான்று ஆவணங்களுடன் சமர்ப்பிக்கவேண்டும். ஏற்கனவே உரிமம் பெற்றுள்ள உணவு வணிகர்கள் உரிமம் காலாவதி தேதிக்கு 30 நாட்களுக்கு முன்பாக புதுப்பிக்கவேண்டும். புதுப்பிக்க தவறுபவர்களுக்கு பழைய உரிமம் எண் வழங்கப்படமாட்டாது.

உணவு பாதுகாப்பு துறையின் கீழ் பதிவு சான்று பெற தகுதி உள்ள உணவு வணிகர்கள் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொது இ-சேவை மையங்களில் விண்ணப்பித்து பதிவு சான்று பெற்றுக்கொள்ளலாம். இதற்கு பதிவு கட்டணத்துடன் 30 சதவீதம் கூடுதலாக செலுத்த வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை உரிமம் மற்றும் பதிவுசான்று பெறாத உணவு வணிகர்களிடம் 14 நாட்களுக்குள் உரிமம் மற்றும் பதிவு சான்று பெறக்கோரி முறைப்படி நோட்டீசு வழங்கப்படும்.

இந்த நோட்டீசு அறிவிப்பு பெற்ற பிறகு வருகிற 31-ந்தேதிக்குள் உரிமம் மற்றும் பதிவு சான்று பெறாத வணிகர்களின்மீது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் குற்றவியல் வழக்கு தொடரப்பட்டு 6 மாத சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.

மேலும் உணவுப்பொருள் தொடர்பான புகார்களை 94440 42322 என்ற எண்ணிலோ, 04567- 231170 என்ற மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலக தொலைபேசியிலோ தெரிவிக்கலாம்.
இத்தகவலை மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Friday, December 8, 2017

வாக்காளர் அட்டை திருத்தப்பணி டிச.15ம் தேதி வரை நீட்டிப்பு!!

No comments :
ராமநாதபுரம்டிச.7: ஜன.1, 2018-ஐ தகுதி நாளாக கொண்டு நடந்த வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்தப்பணி தற்போது டிச.15ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையரகத்தின் அறிவுரைகளின்படி ஜன.1, 2018-ஐ தகுதி நாளாக கொண்டு சிறப்பு சுருக்க திருத்தம் கடந்த அக்.3ல் துவங்கி நவ.30 வரை நடந்தது. தற்போது இப்பணி டிச.15ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இக்காலத்திற்குள் சிறப்பு சரி பார்ப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட உள்ளது. இதுவரை விடுபட்ட மற்றும் புதிய தகுதியான வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது, தகுதியான வாக்காளராக உள்ள நபர்களின் விபரம் சேகரிப்பது, நிரந்தரமாக வெளியேறிய மற்றும் இறந்த வாக்காளர்களின் விபரம் சேகரிப்பது. வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள கொடுக்கப்பட்ட படிவம் 8-ஐ பெற்று நடவடிக்கை எடுப்பது, அலைபேசி எண் மற்றும் மின் அஞ்சல் முகவரியை குடும்ப வாரியாக பெறுவது, வெளிநாடு வாழ் இந்தியர்களின் விபரம் பெறப்படுவது, 

ஒவ்வொரு குடும்பத்திற்கான அட்சயரேகை, தீர்க்கரேகை விபரங்கள் அலைபேசி செயலி அல்லது குறுஞ்செய்தி உதவியோடு சேகரிப்பது ஆகியவை இதன் முக்கிய நோக்கமாகும். இவைகள் அனைத்தும் சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் இந்திய தேர்தல் ஆணையரகத்தால் கொடுக்கப்பட்ட பட்டியல் முறையில் பெறப்படும். பொதுமக்கள் அனைவரும் இச்சிறப்பு சரிபார்ப்பு நடவடிக்கைகளை பயன்படுத்தி கொள்ளலாம் என கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Thursday, December 7, 2017

துபாயில் டிச 9-10 தேதிகளில் இந்திய கல்வி பொருட்காட்சி!!

No comments :
துபாயில் டிச 9-10 தேதிகளில் இந்திய கல்வி பொருட்காட்சி!!
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் பாதாள சாக்கடை கழிவுகளை அகற்றுவதில் மெத்தனம்!!

No comments :

ராமநாதபுரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் அந்தந்தப்பகுதிகளில் அடைப்பு ஏற்பட்டால் சுத்தம் செய்வதற்காக மேன் ஹோல் அமைக்கப்பட்டுள்ளன.
அனைத்து வீடுகளில் இருந்து கழிவு நீர் குழாய்கள் அமைக்கப்பட்டு, ரோடுகளின் நடுவில் பள்ளங்கள் அமைக்கப்பட்டு, அதில் நிரப்பப்படுகிறது. இதில் நிரம்பும் கழிவு நீர் மோட்டார் இயந்திரங்கள் மூலம் உறிஞ்சப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் பல இடங்களில் அனைத்து கழிவு நீர்களையும் உறிஞ்சும்,
குதிரைத்திறன் அதிகம் உள்ள பம்பு செட் மோட்டார் இயந்திரம் பயன்
படுத்தப்பட வேண்டும்.திறன் குறைந்த பம்பு செட் மோட்டார்கள் பயன்படுத்துவதால், பல இடங்களில் மேன் ேஹால்களில் உள்ள கழிவு நீர் உறிஞ்சப்படுவதில்லை. இதில் நிறையும் கழிவு நீர் பயன்படுத்தப்படும் வீடுகளில், கழிவு நீர் செல்வதற்காக வைக்கப்பட்ட குழாய்கள் மூலம் மீண்டும் திரும்ப வந்து குளம் போல் தேங்கி விடுகிறது. இதில் கழிவு நீர் செல்ல முடியாமல் பல இடங்களில் மேன் ஹோல்களில் இருந்து கழிவு நீர் வெளியேறி ஆறுகளைப்போல் தெருக்களில் ஓடுகிறது.

இது குறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப்போக்கில் உள்ளனர். இதனால் அப்பகுதிகளில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு, நோய் பரவும் அபாயம் உள்ளது.

அதிகாரிகள் பாதாள சாக்கடை கழிவுகளை அகற்றுவதில் உள்ள பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

சமூக, மத நல்லிணக்கத்திற்கான விருது பெற விண்ணப்பிக்கலாம் -கலெக்டர்!!

No comments :

சமூக, மத நல்லிணக்கத்திற்காக வழங்கப்படும் கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜாதி மோதல்கள், கலவரங்களின் போது துரிதமாக செயல்பட்டு மாற்று ஜாதியினரின் உயிர், உடமைகளை பாதுகாத்தும், உயிரை பணயம் வைத்து மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள், அதற்கான ஆதாரங்களுடன் இந்த விருது பெற விண்ணப்பிக்கலாம்.ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று இந்த விருது வழங்கப்படுகிறது. அவரவர் செய்த செயல்களின் அடிப்படையில்
கிரேடு 1 நிலைக்கு2 லட்சம் ரூபாய் மற்றும் சான்றிதழ்,
இரண்டாம் நிலைக்கு 1 லட்சம் ரூபாய் மற்றும் சான்றிதழ்,
மூன்றாம் நிலைக்கு 50 ஆயிரம் ரூபாய் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.


விருது பெற தகுதியானவர்கள், டிச.,15க்குள் மாவட்ட விளையாட்டு அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும், என கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Wednesday, December 6, 2017

ராமநாதபுரத்தில் ஓர் புதிய உதயம் ”அல் பாரி ”; இஸ்லாமிய புத்தக மற்றும் ஆடை நிலையம்!!

No comments :
ராமநாதபுரத்தில் ஓர் புதிய உதயம் ”அல் பாரி ”; இஸ்லாமிய புத்தக மற்றும் ஆடை நிலையம்!!


தொடர்புக்கு: 9944950588 / albaaribooks@gmail.com
உரிமையாளர்: திரு. செய்யது  ஜவாத்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்படுமா நோய் பரப்பும் கொசுக்கள்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் புயல் அறிவிப்பால் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ராமநாதபுரம் நகர் பகுதியில் தாழ்வான பல இடங்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. மழைநீரில் கொசுக்களின் பெருக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. 

அரசு மருத்துவமனைகளில் தினந்தோறும் 100க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதுதவிர தனியார் மருத்துவமனைகளிலும் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.மாவட்ட சுகாதார துறையில் பணியாற்றும் ஊழியர் பற்றாக்குறையினால் நகர், கிராமப் பகுதிகளில் கொசு மருந்து தெளிக்கும் பணியில் மந்தம் ஏற்பட்டு வருகிறது.


மாவட்ட சுகாதார துறையினர் கொசு ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)