முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, June 20, 2015

அபுதாபி Atkins நிறுவனத்தில் Design Engineer வேலை வாய்ப்பு!!

No comments :

Senior Water Design Engineer

Atkins Middle East

Abu Dhabi, UAE

Posted 5 days ago 
Ref: HP331-837

The Role

We are currently looking for a Water Engineer with a minimum of 6 years experience in the water industry. Candidates shall have a high level of expertise in water and drainage network design.

The Water Engineer will be responsible for the carrying out of modelling, analysis and design of drainage, sewerage and water supply networks. He will report to a design manager in the Infrastructure Department. The successful candidate will take a leading role in the department, particularly with respect to network modelling and design. He will be capable of providing planning, leadership and technical expertise in management of complex and interdisciplinary projects.

Requirements

- Degree in Civil Engineering or other appropriate qualification.
- Minimum of 6 years post graduate experience in drainage design consultancy work.
- Ideally, shall be proficient in the use of both pressure and gravity network software.
- Able to produce technical reports in English in a clear and concise form.
- Able to communicate effectively with both colleagues and clients
- Demonstrate a high level of expertise in drainage network modelling and design
- Competent in using IT including Word, Excel, Power-point, emails and the Internet
- Able to work with and manage technicians
- Good presentational skills

About the Company

Atkins is one of the leading providers of professional, technology based consultancy and support services to the industry, commerce and governments in all of the worlds major economies. With over 17,000 staff operating in Europe, the Middle East, Asia Pacific and the Americas, Atkins has a broad range of skills and resources and provides Clients with a comprehensive service throughout the entire life cycle of the projects in the built environment.
We aim to be the international first choice supplier of technical and integrated services. Shaped by our customers' needs, our vision is to: focus on quality seek world class design and excellence strive to add value be flexible to the evolving needs of a changing society
Atkins first carried out design and supervision commissions in the Gulf area in 1967. From its regional head office in Dubai, U.A.E. Atkins Middle East now employs over 2000 staff located in Dubai, Abu Dhabi, Sharjah, Oman (Muscat ), Qatar (Doha) Bahrain (Manama), Kuwait (Kuwait City) and India (Bangalore).

TO APPLY: CLICK HERE

சித்தார்கோட்டை கிராம முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள் 50 பேர் மீது வழக்குப் பதிவு!!

No comments :
ராமநாதபுரம் அருகே முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த தனது காதலியை இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற இளைஞர் மீது தாக்குதல் நடத்தியதாக, சித்தார்கோட்டை கிராம முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள் 50 பேர் மீது புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே துத்திவலசை கிராமத்தைச் சேர்ந்த ரவியின் மகன் மாரிசங்கர் (23). இவர், புதன்கிழமை மாலை முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த தனது காதலியை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சித்தார்கோட்டை கிராமம் வழியாகச் சென்றுள்ளார்.

அப்போது, அந்த கிராமத்தைச் சேர்ந்த கமருதீன், ரஸ்தாலி, சுல்தான், முகம்மது ரபி மற்றும் ஜமாஅத் தலைவர் தீனுல்லாகான் உள்ளிட்ட 50 பேர் சேர்ந்து, மாரிசங்கரை வழிமறித்து சரமாரியாகத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது குறித்து, மாரிசங்கர் தேவிபட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், சித்தார்கோட்டை ஜமாஅத் தலைவரின் தூண்டுதலின்பேரில், 50 பேர் தன்னைத் தாக்கியதாகவும், தன்னிடம் இருந்த செல்போன் மற்றும் ரொக்கம் ரூ.1800 ஆகியவற்றையும் பறித்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.


புகாரின்பேரில், காவல் நிலைய சார்பு-ஆய்வாளர் முருகபூபதி, பெயர் தெரிந்த 10 பேர் உள்பட 50 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். தாக்குதலில் காயமடைந்த மாரிசங்கர், ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

செய்தி: தினமணி

எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்தில் இளைஞர் சுடப்பட்டு இறந்த சம்பவம் தொடர்பாக காவலர் கைது!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்தில் கடந்த 2014 இல் இளைஞர் சுடப்பட்டு இறந்த சம்பவம் தொடர்பாக சார்பு-ஆய்வாளரை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
 எஸ்.பி.பட்டினம் அம்ஜத் நகரில் இரு சக்கர வாகனம் பழுது நீக்கும் கடை நடத்தி வருபவர் சி. அருள்தாஸ்.

இவரிடம், அதே ஊரைச் சேர்ந்த முகம்மது சாலிபு என்பவர் தனது வாகனத்தை பழுதுநீக்கம் செய்யக் கொடுத்திருந்தார். அந்த வாகனத்தை அதே பகுதியைச் சேர்ந்த காட்டுவா ராவுத்தர் மகன் செய்யது முகம்மது, தன்னிடம் தருமாறு கேட்டுள்ளார். இதனால், அருள்தாஸýக்கும், செய்யது முகம்மதுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

 இதுகுறித்து, அருள்தாஸ் எஸ்.பி.பட்டினம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.  சார்பு-ஆய்வாளர் காளிதாஸ் விசாரணைக்காக செய்யது முகம்மதுவை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தார்.

 அப்போது, சார்பு-ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதில் செய்யது முகம்மது உயிரிழந்தார். தன்னைக் கத்தியால் குத்த வந்ததால் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதாக சார்பு-ஆய்வாளர் தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் கடந்த 14.10.2014-இல் நடந்தது. இதனைத் தொடர்ந்து காளிதாஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

 இதுகுறித்து எஸ்.பி.பட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர், 17.10.2014 இல் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.  கடந்த ஏப்ரலில் இதை கொலை வழக்காக மாற்றி சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரணை நடத்தினர்.


 இந்நிலையில், ராமநாதபுரம் ஆயுதப்படை வளாகத்தில் தங்கியிருந்த சார்பு-ஆய்வாளர் காளிதாஸ், சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வெள்ளிக்கிழமை கைது செய்து ராமநாதபுரம் 2 ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். அவரை ஜூலை 2 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி வேலுச்சாமி உத்தரவிட்டார். பின்னர் காளிதாஸ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

செய்தி: தினமணி


வண்ணாங்குண்டு கிராமத்தில் ரமலான் மாதத்தின் சிறப்பு பிராத்தனை!!

No comments :
இராமநாதபுரம் மாவட்டத்தில் ரமதான் (நோன்பு) மாதம் தொடங்கியதையடுத்து பள்ளிகளில் தராவீஹ் தொழுகை சிறப்பாக நடைபெற்றது.

வண்ணாங்குண்டு கிராமத்தில் ஜும்மா பள்ளிவாசலில் இமாம் சிராஜீதீன் ஆலிம் தராவீஹ் தொழுகை நடத்த ஜமாத் தலைவர் அப்துல்ஹக் உட்பட ஏராளமோனோர் கலந்து கொண்டனர்.

(வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பொழிவுடன் விளங்க்கும் வண்ணாங்குண்டு ஜும்மா பள்ளி)


செய்தி: திரு. அஸ்கர் அலி, வண்ணாங்குண்டு