முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, November 29, 2017

ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனைகளில், கூடுதல் டாக்டர்கள் நியமிக்க கோரிக்கை!!

No comments :


ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் கூட்டம் அலைமோதுவதால், கூடுதல் டாக்டர்கள், மருந்தாளுநர்களை நியமிக்க வேண்டும். ஆன்லைன் கம்ப்யூட்டர் பதிவையும் துரிதப்படுத்த வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சர்க்கரை நோயாளிகள், உயர் அழுத்த நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்களுக்கு என தனியாக நோட்டுகள் பதிவு செய்யப்பட்டு அதில் 15 நாட்களுக்கு ஒரு முறை மாத்திரை மருந்துகள் வழங்கப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை வரும் இந்த நோயாளிகளை டாக்டர்கள் பரிசோதனை செய்து மீண்டும் மருந்து, மாத்திரைகள் வழங்க பரிந்துரை செய்வர்.

நாளுக்குநாள் மருத்துவமனையில் நோயாளிகள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் இவர்களை பரிசோதிக்கும் டாக்டர்களும், மாத்திரைகள் வழங்கும் மருந்தாளுநர்களும் சிரமப்படுகின்றனர். மருந்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளதால் டாக்டர்கள் நோயாளிகளை பரிசோதிக்காமலேயே மருந்து, மாத்திரைகளுக்கு பரிந்துரைக்கும் நிலை உள்ளது. மருந்தாளுநர்களுக்கு ஏற்கனவே பணிச்சுமை உள்ள நிலையில் தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் மூலம் தற்போது பணியாற்றும் மருந்தாளுநர்களை குறைக்கும் திட்டத்தையும் அரசு அறிவித்துள்ளது. அதனால் மேலும் நோயாளிகள் அவதிப்பட நேரிடுவர்.

தற்போது நோயாளிகளுக்கு சீட்டு வழங்குவது முதல் மருந்து, மாத்திரைகள், ஊசி வழங்குவது வரை ஆன்லைனில் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படுவதால் அதற்கு காலதாமதம் ஆகிறது. அதனால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. அதனால் ராமநாதபுரம் உட்பட மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு போதிய டாக்டர்கள், மருந்தாளுநர்களை நியமித்து சிகிச்சை அளிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து நோயாளிகள் கூறுகையில், அரசு மருத்துவமனைக்கு சுற்றிலும் உள்ள கிராமங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான நோயாளிகள் வருகின்றனர். அதற்கேற்ப டாக்டர்கள் மருத்துவமனையில் பணியில் கிடையாது. ஒருசிலர் விடுமுறை எடுத்துசென்று விடுவதால் அவர்களுக்கு மாற்று ஏற்பாடும் மருத்துவமனை நிர்வாகம் செய்வது இல்லை. இதனால் நோயாளிகள் கடும் சிரமம் அடைகின்றனர். நோயாளிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதல் டாக்டர்களை அரசு நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


செய்தி: தினகரன்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Monday, November 27, 2017

கீழக்கரைக்கு நேரடி பஸ் வசதி கோரும் எக்குடி ஊராட்சி மக்கள்!!

No comments :

ராமநாதபுர மாவட்டம், எக்ககுடி ஊராட்சியில்
4 ஆயிரத்து 200 பேர் வசித்து வருகின்றனர். முன்னர் ராமநாதபுரம் தாலுகாவில் இருந்த எக்ககுடி, நல்லிருக்கை, மாலங்குடி, பனைக்குளம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் 12 கி.மீ., தொலைவில் உள்ளராமநாதபுரம் தாலுகா அலுவலகம் சென்று வந்தனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டில் புதிய தாலுகாவாக அறிவிக்கப்பட்ட கீழக்கரையுடன் இணைக்கப்பட்டதால், பஸ்வசதி இல்லாமல் சிரமத்திற்குள்ளாகின்றனர்.ராமநாதபுரம் தாலுகாவில் உள்ள 6க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை கீழக்கரை தாலுகாவில் 26 வருவாய் கிராமங்களாக சேர்க்கப்பட்டதில்,சான்றிதழ் மற்றும் அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்காக கீழக்கரைக்கு செல்ல வேண்டியுள்ளது.




கீழக்கரைக்கு நேரடியாக பஸ்வசதி இல்லாததால், 12 கி.மீ., தொலைவிற்கு ராமநாதபுரம் வந்து, அங்கிருந்து 17 கி.மீ., தொலைவிற்கு வேறு பஸ்சில் செல்லவேண்டியுள்ளதால், கூடுதல் நேரமும், பணவிரயமும் ஏற்படுகிறது.

எனவே எக்ககுடி, களரி, சுமைதாங்கி, கும்பிடுமதுரை வழியாக கீழக்கரைக்கு சென்றால் 10 கி.மீ.,யில் அடையலாம். எனவே மாவட்ட நிர்வாகம், புதிய வழித்தடத்தில் பஸ்களை இயக்கினால், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 30 கிராம மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று ஊர்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரில் கவனிக்க வேண்டுகிறோம்!!

செய்தி: திரு. தாஹிர், கீழை



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Sunday, November 26, 2017

சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட ராமநாதபுரம்; எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் முதல்வர் அறிவிப்பு!!

No comments :

ராமநாதபுரத்தில் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா நடந்தது. முதல்வர்
பழனிசாமி எம்.ஜி.ஆர்., உருவப்படத்தை திறந்து வைத்து 81.09 கோடி ரூபாய் மதிப்பிலான, பணிகள் நிறைவு பெற்ற 135 திட்டங்களை துவக்கி வைத்தார்.

மேலும் 2.62 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல்
நாட்டி 26,849 பயனாளிகளுக்கு 161.20 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


விழாவிற்கு சபாநாயகர் தனபால் தலைமை வகித்தார். துணை முதல்வர் பன்னீர்செல்வம், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர். தமிழ் வளர்ச்சிதுறை செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார்.

ராமநாதபுரத்தில் நடந்த எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், ராமநாதபுரம் நகராட்சியை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தி முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார்.

அவரது புதிய அறிவிப்புகள்:-

பட்டினம்காத்தான், சக்கரக்கோட்டை, அச்சுந்தன்வயல் மற்றும் சூரன்கோட்டை ஆகிய நான்கு ஊராட்சிகளை இணைத்து ராமநாதபுரம் நகராட்சி சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது.

திருவாடானை தாலுகாவில் 37 வருவாய் கிராமங்கள், பரமக்குடி தாலுகாவில் 2 வருவாய் கிராமங்களை சேர்த்து ஆர்.எஸ்.மங்கலத்தை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா உருவாக்கப்படும்.

மிளகாய் பயிருக்காக பரமக்குடி, முதுகுளத்துார், கமுதி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் அனைத்து வசதிகளுடன் முதல்நிலை சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்படும்.

தேசிய வேளாண் சந்தை திட்டத்தில், மிளகாய், பருத்தி விவசாயிகள் பயனடையும் வகையில், பரமக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கணினி வசதிகள், தரம் பிரிக்கும் அறை 1.33 கோடி ரூபாயில் உருவாக்கப்படும்.

மாவட்டத்தில் நிலத்தடி நீரில் உப்புத்தன்மை அதிகம் உள்ள 50 இடங்களில் 7.75 கோடி ரூபாய் செலவில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியத்தில் கற்காத்தகுடி கிராமத்தில் புதிய கால்நடை கிளை நிலையம் அமைக்கப்படும்.

ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான், உப்பூர் மற்றும் கீழக்கரை ஆகிய 3 இடங்களில் புதிய துணை மின் நிலையங்கள்.


முதுகுளத்துார், அபிராமம், கமுதி, கடலாடி, பரமக்குடி மற்றும் பெருங்குளம் துணை மின் நிலையங்களில் புதிய மின்மாற்றிகள் நிறுவப்படும்.

வேதாளை ஊராட்சியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம்.

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ.,ஸ்கேன், சி.டி.ஸ்கேன், டயாலிசிஸ், எக்கோ கார்டியோகிராம் உள்ளிட்ட மருத்துவ கருவிகள் வாங்கப்படும். விபத்து காய சிகிச்சை மையம், மூப்பியல் பிரிவு துவக்கப்படும்.

பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு நவீன மருத்துவ கருவிகள், அறுவை அரங்கு அமைக்கப்படும்.

தேவிப்பட்டினம் அரசு மருத்துவமனையில் நவீன கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை மையம் அமைக்கப்படும்.

பார்த்திபனுார், கமுதி மற்றும் முதுகுளத்துாரில் புறவழிச்சாலைகள்.

ராமநாதபுரம்-கீழக்கரை சாலையில், ராமநாதபுரம்-உச்சிப்புளி சாலையில் ரயில் நிலையங்களுக்கிடையே ரயில்வே மேம்பாலம்.

புத்தேந்தல்-ஏர்வாடி சாலையில் பாலம்.

ராமநாதபுரம்-எமனேஸ்வரம் சாலைமுதல் பி.கொடிக்குளம் சாலையில் பாலம்.

முதுகுளத்துார்-உத்தரகோசமங்கை சாலையில் ஒரு பாலம்.

நத்தம்-நெடியமாணிக்கம் சாலையில் பாலம்.

கிழக்கு கடற்கரை சாலையான நாகூர்-நாகப்பட்டினம்-ராமநாதபுரம்-துாத்துக்குடி சாலையில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட 120 கி.மீ., சாலை மேம்பாடு செய்ய பணிகள் துவக்கப்பட்டு இதுவரை 56 கி.மீ.,க்கு 19.04 கோடி மதிப்பில் பணிகள் முடிந்துள்ளது. மீதம் 64 கி.மீ., 21.76 கோடியில் நடைபெற்று வருகிறது.

மேலபார்த்திபனுார் கிராமத்தில் பரளையாற்றின் குறுக்கே,அணைக்கட்டு கட்டி கீழச்சிவன்குளம் கண்மாய் மற்றும் இதர கண்மாய்களுக்கு பாசன வசதி.

பெரிய யானைக்குளம் கிராமத்தில் பரளையாற்றின் குறுக்கே அணைக்கட்டு கட்டி பெரியயானைக்குளம் கண்மாய் மற்றும் இதர கண்மாய்களுக்கு பாசன வசதி அளிக்கப்படும்.

கட்டியவயல் கிராமத்தில் விருசுழி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டு கட்டி மல்லனுார் கண்மாய் உள்ளிட்டவைகளுக்கு பாசனம்.

கமுதி தாலுகா காக்குடி அருகே குண்டாற்றின் குறுக்கே தடுப்பணை.

சாயல்குடி குண்டாற்றின் குறுக்கே தடுப்பணை.


நிகழ்ச்சியில் ராமநாதபுரம் எம்.பி., அன்வர் ராஜா, அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், சீனிவாசன்,செல்லுார் ராஜூ,எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், எம்.சி. சம்பத்,ஜி.விஜயபாஸ்கர்,ஆர்.பி.உதயக்குமார், கடம்பூர் ராஜூ,வெ.சரோஜா, ஆர்.காமராஜ், என்.நடராஜன், கே.சி.கருப்பணன்,கே.டி.ராஜேந்திரபாலாஜி, க.பாண்டியராஜன்,கே.சி.வீரமணி, முன்னாள் மாவட்ட செயலாளர் ஆர்.தர்மர், இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ஆர்.பால்பாண்டியன், உட்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Saturday, November 25, 2017

பள்ளி செல்ல தினமும் ஆபத்தான ஆட்டோ பயணம், பரிதவிக்கும் பெற்றோர்கள்!!

No comments :

  
ள்ளி குழந்தைகளை ஆட்டோக்களில் அதிகளவில் ஏற்றி செல்லும் அவல நிலை தொடர்ந்து வருவதால் பெற்றோர்கள் கவலை அடைந்து வருகின்றனர். பள்ளி குழந்தைகளை வாகனங்களில் ஏற்றி செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.

குறிப்பாக,
வாகனத்தில் அனுமதிக்கப்பட்ட அளவில் ஆட்களை ஏற்ற வேண்டும், வேக கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும், முதலுதவி பெட்டி வைத்திருக்க வேண்டும் உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 





இருப்பினும் ராமநாதபுரம் மற்றும் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பள்ளி வாகனங்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றி செல்லும் வாடகை வாகனங்களில் இதுவரை அரசின் விதிமுறைகள் கடைபிடிக்கப்பட வில்லை. பள்ளி, கல்லூரி வாகன ஓட்டுநர்கள் குழந்தைகளை அதிகளவில் ஏற்றி கொண்டு அதிவேகத்தில் ஓட்டி செல்கின்றனர். நகர் பகுதிகளில் ஆட்டோக்களில் மாணவ, மாணவிகளை அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக ஏற்றி செல்கின்றனர். ஆட்டோக்களின் வெளிப்புறம் மாணவ, மாணவிகளின் புத்தக பைகளை தொங்கவிட்டு செல்கின்றனர். 

இதனால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. நகரில் பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்களில் ஒருவர் மீது ஒருவர் உட்கார வைத்தும், டிரைவர் சீட்டில் இரண்டுக்கும் மேற்பட்ட மாணவர்களை உட்கார வைத்து கொண்டும் செல்வதும் தொடர்கிறது. இதுபோன்ற நிகழ்வுகளை போக்குவரத்து போலீசார் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

செய்தி: திரு. தாஹீர், கீழை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Thursday, November 23, 2017

யூபிஎஸ்சியின் இந்திய ராணுவ பணிகளுக்கான சிடிஎஸ் தேர்வு அறிவிப்பு!!

No comments :

மத்திய ஆட்சி ஆணையம் நடத்தும் இந்திய இராணுவத்திற்கான சிடிஎஸ் தேர்வு குறித்து அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

யூபிஎஸ்யின் பணியிடம் நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் மொத்தம் 414 ஆகும்

யூபிஎஸ்சியின் சிடிஎஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதியாக பிளஸ் 2 தேர்ச்சி பெற்று மற்றும் பிஇ மற்றும் பிடெக் படித்தவர்கள் 24 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

யூபிஎஸ்சியின் சிடிஎஸ் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் முதண்மை மற்றும் 5நாள் எஸ்எஸ்சி தேர்வுக்கான விண்ணப்பபிப்பவர்களுக்கான பணியிடங்கள் குறித்து அறிவித்துள்ளோம்.


1 இந்தியன் மிலிட்டரி அகாடமியில் 100 பணியிடங்கள்
2 இண்டியன் நேவல் அகாடமி ஐஎன்ஏ எழிமலா 45 பணியிடங்கள்
3 ஏர்போஸ்ட் அகாடமி ஹைதிராபாத்
4 ஆஃபிஸர்ஸ் டிரெயினிங் அகாடமி சென்னை ஆண்கள் 225
5 ஆஃபிஸர்ஸ் டிரெயினிங் அகாடமிக்கு விண்ணப்பிக்க சென்னை 12



யூபிஎஸ்சியின் தேர்வுக்கு விண்ணப்பிக்க அதிகாரபூர்வ அறிவிக்கையை அறிய இணையதளத்தில் அறிந்து கொள்ள வேண்டும்.விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 200 பொது பிரிவினர் பிற்ப்படுத்தப்பட்டோர் செலுத்த வேண்டும்.

மத்திய ஆட்சிப்பணி ஆணையம் நடத்தும் தேர்வில், மாற்றுதிறனாளிள் விண்ணப்ப கட்டணம் செலுத்த அவசியம் இல்லை. மேலும் இரு தவறான விடைகளுக்கு ஒரு சரியான விடையின் மதிபெண் இழக்க நேரிடும். யூபிஎஸ்சியின் போட்டிகளன சிடிஎஸ் தேர்வை வென்றவர்கள் எஸ்எஸ்பி எனப்படும் இண்டர்வியூவில் பங்கேற்க அழைக்கப்படுவார்கள் . அத்தேர்வில் வெல்பவர்கள் பணிக்கு அமர்த்தப்படுவார்கள் .

யூபிஎஸ்சியின் விண்ணப்ப அறிவிக்கையை உடன் இணைத்துள்ளோம்.
அத்துடன் ஆன்லைனில் அப்பளை செய்ய இணைப்பையும்
இணைத்துள்ளோம்.
இந்திய ஆர்மியான தடைப்படை, நேவல் எனப்படும் கப்பற் படை மற்றும் வான்ப்படை போன்ற மூப்படைகளுக்கும் ஒரு சேர நடத்தும் இந்த தேர்வை எழுதி வெற்றி பெறலாம்.

விண்ணப்பிக்க இறுதி தேதி டிசம்பர் 4ஆகும். தேர்வு நடைபெறும் நாள் பிப்ரவரி  2 தேதி நடைபெறும்.


வாழ்த்துக்கள்!!

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Wednesday, November 22, 2017

அண்ணா பல்கலைக்கழகம் வழங்கும் 6 மாத இலவச ஏ.சி பயிற்சி!!

No comments :


அண்ணா பல்கலைக்கழகம் வழங்கும் 6 மாத இலவச ஏ.சி பயிற்சி!!
விண்ணப்பிக்க கடைசி நாள் 27-11-2017.




(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Tuesday, November 21, 2017

இரண்டாக பிரிகிறதா ராமநாதபுரம் மாவட்டம்..?!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தைப் பிரித்து கமுதி மாவட்டத்தை உருவாக்குவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுவாக பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் அதிகமாக உள்ள பெரிய மாவட்டங்களை நிர்வாக ரீதியான சிறப்பான செயல்பாடுகளுக்காக பிரிப்பது வழக்கம்.

அதனடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம், ராமேஸ்வரம், திருவாடானை, பரமக்குடி, கடலாடி, முதுகுளத்தூர், கமுதி ஆகிய வருவாய் வட்டங்களை உள்ளடக்கியது. சுமார் 7 வட்டங்களை உள்ளடக்கிய ராமநாதபுரம் மாவட்டத்தில், கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றுவர வேண்டும் என்றாலே பல கிராம மக்கள் ஒரு நாளை செலவிட வேண்டியுள்ளது.



இதனால், சிறப்பான நிர்வாகத்தை வழங்கும்பொருட்டு ராமநாதபுரம் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் உள்ளன.

இதுதொடர்பாக வருவாய் கோட்டாட்சியர், உதவி ஆட்சியர் ஆகியோருக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன் கடிதம் எழுதியுள்ளார். அதில், கமுதி, கடலாடி, முதுகுளத்தூர், திருச்சுழி மற்றும் புதிதாக தோற்றுவிக்கக் கோரியுள்ள பார்த்திபனூர் ஆகிய வட்டங்களை இணைத்து கமுதி மாவட்டம் உருவாக்கக்கோரி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பாக முதலமைச்சரிடம் கடிதம் வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 25-ம் தேதி நடைபெறவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் பங்கேற்க உள்ளதால், புதிய மாவட்டம் பிரிப்பது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து விரிவான அறிக்கையை அளிக்குமாறு ஆட்சியர் கடிதம் எழுதியுள்ளார்.


இதையடுத்து வரும் 25-ம் தேதி ராமநாதபுரத்தில் நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கமுதி மாவட்டம் தொடர்பான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரத்தில் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நவ.,28 முதல் நடக்கிறது.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பயிற்சி வகுப்பு நடக்கிறது.



இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், பெயர் மற்றும் முகவரியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நவ.,25க்குள் பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்த அனைவரும், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நவ.,28 முதல் நடைபெறும் இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம்.


மேலும் விபரங்களுக்கு 99449 32477 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற மாரத்தான்போட்டியை அமைச்சர் தொடங்கி வைத்தார்!!

No comments :
ராமநாதபுரத்தில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற மாரத்தான்போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் டாக்டர் மணிகண்டன் புகைப்படக்கண்காட்சியை திறந்து வைத்தார்.

ராமநாதபுரம் நகரம் புதிய பேருந்து நிலையம் அருகே, பாரத ரத்னா டாக்டர்.எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மாரத்தான் ஓட்டம் போட்டியினையும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பாக மூன்று நாட்கள் நடைபெறும் பாரத ரத்னா டாக்டர்.எம்.ஜி.ஆர்
  நூற்றாண்டு விழா புகைப்படக் கண்காட்சியினையும் தொடங்கி வைத்தார். 
 
தமிழ்நாடு அரசின் சாhர்பில், பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழா அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாட திட்டமிடப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் 30.06.2017 அன்று மதுரை மாவட்டத்தில் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தொடக்க விழா நடைபெற்றது. அதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து இவ்விழா நடைபெற்று வருகின்றது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகின்ற 25.11.2017 அன்று பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளது. இதற்காக ராமநாதபுரம் டி-பிளாக்கில் உள்ள அம்மா பூங்கா மைதானத்தில் கடந்த 03.11.2017 அன்று பந்தல் கால் நடும் விழா நடைபெற்றது. தொடர்ந்து, பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். வரலாற்று சிறப்புகள் குறித்து பள்ளி, கல்லூரிகளிடையே பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியப் போடம்டி ஆகிய போட்டிகளும், விளையாட்டு மற்றும் தடகள போட்டிகளும் நடைபெற்று வருகின்றன.   

இந்நிலையில் ராமநாதபுரம் நகரம் புதிய பேருந்து நிலையம் அருகே தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன்
  மாவட்ட அளவிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மாரத்தான் ஓட்டம் போட்டியினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இம்மாரத்தான் போட்டியானது சிறுவர், சிறுமியர் என இரு பாலருக்கும் தனித்தனியே நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றி பெறும் மாணாக்கர்களுக்கு 25.11.2017 அன்று நடைபெறவுள்ள பாரத ரத்னா டாக்டர்.எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பரிசுகளை வழங்குவார்கள்.

மாரத்தான் போட்டியினை தொடர்ந்து, ராமநாதபுரம் நகரம் புதிய பேருந்து நிலையம் அருகே செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த பாரத ரத்னா டாக்டர்.எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா புகைப்படக் கண்காட்சியினைதகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் துவக்கி வைத்து பார்வையிட்டார். இக்கண்காட்சியானது வரும் 21.11.2017 வரையிலான மூன்று நாட்கள் நடைபெறுகின்றது. இக்கண்காட்சியில் பாரத ரத்னா டாக்டர்.எம்.ஜி.ஆர் சிறப்புகளை விளக்கிடும் வகையிலான பல அரிய புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. பொது மக்கள் ஏராளமானோர் இக்கண்காட்சியினை ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, ராம்கோ தலைவர் மாவட்ட அவைத்தலைவர் செ.முருகேசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் பிராங்க்பால் ஜெயசீலன், ராமநாதபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் நடராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை,  ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஆ.செல்லத்துரை, ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரி முதல்வர் குருசாமி  ஆகியோர் உட்பட பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி: தினபூமி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

மின் விளக்குகள் எரியாததால் இருளில் மூழ்கும் கீழக்கரை கடற்கரைப் பூங்கா, அச்சப்படும் மக்கள்!!

No comments :
கீழக்கரை கடற்கரை பூங்கா, மீன் பிடி துறைமுகம் பகுதியில் இரவு நேரங்களில் இருளில் இருப்பதால், கடற்கரைப்பகுதியில் நடமாட முடியாமல் அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.

இப்பகுதியில் மீன் பிடி துறைமுகமும், அதனையொட்டிய பகுதிகளில் கடற்கரைப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் மாலை நேரங்களில் நடை பயிற்சி, உடற்பயிற்சியும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடற்கரைப்பகுதியில் மக்கள் அமருவதற்கு இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


மீன் பிடி துறைமுகத்தில் மீனவர்கள் படகுகளை நிறுத்தியுள்ளனர். இப்பகுதியில் மின் விளக்குள் அமைக்கப்பட்டுள்ளன. மின் விளக்குகள் எரியாததால், கடற்கரைப் பூங்காவிற்கு வருகைதரும் பெண்கள் அச்சத்தில் இருள் வருவதற்குள் கடற்கரைப்பகுதியை விட்டு செல்லும் நிலை ஏற்படுகிறது. அதே போல் கடலில் மீன் பிடி தொழிலுக்கு செல்லும் மீனவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இருளில் கடற்கரைப்பகுதியில் சமூக விரோத செயல்களில் இளைஞர்கள் ஒரு சிலர் ஈடுபடுவதால், அமைதியாக கடற்காற்று

வாங்க வருகை தருபவர்கள் எரிச்சலடைகின்றனர் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்து கடற்கரைப் பூங்காவை பொதுமக்கள் இரவு நேரங்களில் பயன் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி: திரு. தாஹீர், கீழை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Monday, November 20, 2017

முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கான புதிய வரைவு பாடத்திட்டம் வெளியீடு!!

No comments :

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு நீட் தேர்வில் வெற்றி பெறுவது அவசியம் என்ற நிலை உள்ளது. 

இந்த நிலையில், தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளுக்கு தமிழக மாணவர்கள் தயாராகும் வகையில் வரைவு பாடத்திட்டம் உருவாக்கப்படும் என அரசு அறிவித்தது.

இந்த நிலையில், தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி 1 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கான புதிய வரைவு பாடத்திட்டத்தினை இன்று வெளியிட்டார்.


புதிய பாடத்திட்டம் 200 ஆசிரியர்கள் அடங்கிய குழுவினரால் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாடத்திட்டம் வரும் ஜனவரியில் இறுதி செய்யப்பட்டு அடுத்த கல்வியாண்டு முதல் படிப்படியாக நடைமுறைக்கு வரவுள்ளது.

1 முதல் 10 வகுப்புகளுக்கு 7 ஆண்டுகளுக்கு பின்னரும், 11 மற்றும் 12வது வகுப்புகளுக்கு 14 ஆண்டுகளுக்கு பின்னரும் புதிய பாடம் இருக்கும்.

புதிய வரைவு பாடத்திட்டங்கள் பற்றி 15 நாளில் பெற்றோர், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் தங்களது கருத்துகளை கூறலாம்.
   
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

தீரன் - அதிகாரம் ஒன்று – தமிழ் திரை விமர்சனம்!!

No comments :


தமிழ் சினிமாவில் 'Heist' ஜானரில் எத்தனையோ திரைப்படங்கள் வந்திருந்தாலும் கூட, இயக்குனர் H.வினோத்தின் 'சதுரங்க வேட்டை' அவற்றில் ரொம்பவே சுவாரஸ்யமான ஒரு திரைப்படம். தனது முதல் படத்திலேயே ஊடகங்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பினரிடமும் ஏகோபித்த வரவேற்பை பெற்ற வினோத், தனது இரண்டாவது திரைப்படத்தை ஒரு 'க்ரைம் த்ரில்லர்' ஆக எடுத்துள்ளார்.

1990களில் தமிழகத்தையே அச்சுறுத்திய ஒரு வடநாட்டு கொள்ளைக்கூட்டத்தை தமிழக அதிகாரிகள் அயராது உழைத்து தேடிப் பிடிக்க முயன்ற உண்மை சம்பவங்களை மையப்படுத்தி பரபரப்பான ஒரு திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். கொள்ளை நடக்கும் வீடுகளில் இருப்பவர்களை கொடூரமாக அடித்துக் கொல்லும் ஒரே மாதிரியான கொலைகள் மற்றும் குற்றவாளிகளின் கைரேகையைத் தவிர வேறு எந்த தடயங்களுமே இல்லாத நிலையில், தமிழக காவல் அதிகாரிகளின் முயற்சிகளையும் குற்றவாளிகள் பிடிபட்டனரா இல்லையா என்பதையும் விறுவிறுப்பாக சொல்கிறது 'தீரன் - அதிகாரம் ஒன்று'.


தமிழ் சினிமாவில் காவல் அதிகாரிகளை முழுக்க முழுக்க நல்லவர்களாகவோ அல்லது முழுக்க முழுக்க கெட்டவர்களாகவோ மட்டுமே சித்தரித்த திரைப்படங்களே மிக அதிகம். அவர்களது இயல்பு வாழ்க்கையையும், அவர்கள் நேர்மையாக இருக்க முடியாமல் போவதற்கான காரணங்களையும், அவர்களை தங்கள் கடமைகளிலிருந்து தவற செய்யும் விஷயங்களையும், அவர்கள் தரப்பு நியாயத்தையும் பேசிய திரைப்படங்களை எல்லாம் விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த வகையில், 'தீரன் - அதிகாரம் ஒன்று' சற்றே ஸ்பெஷல் ஆன ஒரு போலீஸ் திரைப்படம். இது ஒரு வழக்கமான கமர்ஷியல் போலீஸ் திரைப்படம் அல்ல என்பதே இத்திரைப்படத்தின் தனித்துவம்.

காவல் அதிகாரிகள் தங்கள் தினசரி வேலைகளில் சந்திக்கும் நடைமுறை பிரச்சினைகளையும், காவல்துறைக்குள்ளேயே இருக்கும் அரசியலைத் தாண்டி அவர்கள் தொடர்ந்து முயற்சிப்பதையும் காட்டிய விதமே மிகவும் புதிதாக இருந்தது. 'அக்யூஸ்டுக்கு சாப்பாடு, ஸ்டேஷனுக்கு தேவையான எழுதுபொருட்கள், பெட்ரோல் காசுன்னு அதுவே 2, 3 லட்சம் ஆகுது. அதுக்கு ஒரு வழியை சொல்லிட்டீங்கன்னா, இனிமே லஞ்சமே வாங்கமாட்டோம்' என ஒரு போலீஸ் சொல்ல 'இருக்கவங்ககிட்ட வாங்கிக்குங்க.. இல்லாதவங்களுக்காக வேலை பாருங்க' என சொல்வது, ஆரம்பத்திலிருந்தே 'இந்த கேஸில் குற்றவாளிகளை பிடிக்கவே முடியாது' என தொடர்ந்து மட்டம் தட்டும் ஒரு காவல் அதிகாரியிடம் 'பிடிச்சிடலாம், சார்... உங்களை மாதிரி ஒரு முக்கியமான ஆளை போட்டுத்தள்ளுனா, சீக்கிரமே பிடிச்சிடலாம்' 'அக்யூஸ்ட்கிட்ட இருந்த பப்ளிக்கை காப்பாத்துற போலீஸ் வேலையைப் பார்க்காம, பப்ளிக் கிட்ட இருந்து அக்யூஸ்ட்டை தப்பிக்க வைக்குற அடியாள் வேலையைத்தானே பார்க்குறோம்' என சொல்வது என எல்லா விதமான போலீஸ் முகங்களையும் நமக்கு காட்டுகிறார் வினோத்.



அவ்வளவு கஷ்டப்பட்டு பிடித்த குற்றவாளியிடம் வாக்குமூலம் வாங்க முடியாததால், 'எம்.எல்.ஏ கொலை கேஸ்ல குற்றவாளியை பிடிச்சாச்சுன்னு யாராச்சும் 2 பேரை சரண்டர் ஆக வெச்சு கேஸை முடிங்க' என உயராதிகாரி சொல்வது போன்ற காட்சிகளில் நிஜம் சுடுகிறது. படம் முடிந்த பின், இறுதியில் வரும் 'இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க, ஒன்றரை ஆண்டுகள் கடுமையாக உழைத்த அதிகாரிகள் யாருக்கும் எந்த வித பதவி உயர்வோ விருதுகளோ வழங்கப்படவில்லை' என்கிற உண்மை இதயத்தை கனக்க செய்கிறது.

அதிகம் தொடப்படாத, ரொம்பவே புதிய கதைக்களம் என்பதால் இயல்பாகவே ஒரு சுவாராஸ்யம் தொற்றிக்கொள்கிறது. படத்தின் இறுதி வரையிலுமே, அந்த பரபரப்பு நீடிக்கிறது. 'சதுரங்க வேட்டை' திரைப்படத்தில் இருந்த ஒரு தெளிவும், சின்ன சின்ன விஷயங்களில் கூட குறைகளின்றி விரிவாக சொல்ல வேண்டும் என்கிற முனைப்பும் இந்த படத்தின் திரைக்கதையிலும் காணப்பட்டது. கொள்ளைகள் நடக்கும் விதம், கொள்ளை கும்பலின் நெட்வொர்க் மற்றும் அவர்கள் தப்பிக்கும் விதம் என ஒவ்வொரு விஷயத்தையும் திரையில் காட்டியதன் பின்னணியில் எக்கச்சக்க ஆராய்ச்சி இருந்திருக்கிறது. ஒரு குறையற்ற திரைப்படத்தைக் கொடுக்க வேண்டுமென முயற்சித்த இயக்குனர் மற்றும் குழுவிற்கு வாழ்த்துக்கள்! கொள்ளையடிப்பதையே தொழிலாக கொண்ட மக்களை 'குற்றப் பரம்பரை' என பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்தது முதல், ராஜ்புட் போர்களில் அம்மக்களின் பங்களிப்பு பற்றியும், 'மூட்டைப்பூச்சி' ட்ரீட்மென்டிற்கு கூட அசராமல் தாக்குபிடிப்பது பற்றியும், குழந்தைகளைக் கூட ஈவு இரக்கமின்றி கொல்வதைப் பற்றியும் காட்டிய விதத்திலேயே மிரட்டலான வில்லன் கதாபாத்திரங்களை வலுவாக படைத்துவிட்டார் இயக்குனர்.

படம் முழுக்கவே பல இடங்களில் ஆக்ஷன் காட்சிகள் சீட்டின் நுனிக்கு நம்மை கொண்டுவந்துவிடுகிறது. குறிப்பாக, இடைவேளைக்கு முன்னால் வரும் காட்சிகளும், இரண்டாம் பாதியில் பனே சிங்கை பிடிக்க முயற்சிக்கையில் பேருந்தில் வரும் துரத்தல் காட்சியும் அற்புதமாக படமாக்கப்பட்டிருக்கிறது (பனே சிங்கின் கிராமத்திலிருந்து கார்த்தியும் மற்ற அதிகாரிகளும் தப்பிப்பது போன்ற, சில நம்ப முடியாத ஸ்டண்ட்களும் படத்தில் உண்டு). பனே சிங்கிடம் உண்மையை வரவழைப்பது போன்ற, நல்ல மாஸ் ஹீரோயிஸ காட்சிகளும் ஆங்காங்கே உண்டு.

நடிகர் கார்த்தியின் கேரியரில் 'பருத்திவீரன்', 'ஆயிரத்தில் ஒருவன்', 'மெட்ராஸ்' போன்ற தரமான படங்களின் வரிசையில் 'தீரன் - அதிகாரம் ஒன்று' திரைப்படமும் நிச்சயமாக இடம்பிடிக்கும்! மிடுக்கான காவல் அதிகாரி வேடத்தில், கார்த்தி படம் நெடுக கம்பீரமாக வலம் வருகிறார். 'சிறுத்தை' என்கிற திரைப்படத்தில் ரத்தினவேல் பாண்டியன் என்கிற ரொம்பவே சினிமாத்தனமான போலீஸ் வேடத்தில் நடித்த கார்த்திக்கும், இந்த படத்தில் போலீஸாக நடித்திருக்கும் கார்த்திக்கும் நூறு வித்தியாசங்களை சொல்லலாம். எந்தவொரு சின்ன குறையும் கூட சொல்ல முடியாத அளவிற்கு, பிரமாதமாக நடித்திருக்கிறார் கார்த்தி. ராகுல் ப்ரீத்தி சிங் அழகு சிலை போல இருக்கிறார், தமிழ் சினிமா கதாநாயகிகளுக்கே உரிய அப்பாவித்தனமான பாவனைகளோடு குறும்புத்தனங்கள் செய்கிறார். அவர் வரும் ஒரு சில காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும் கூட, படத்தின் வேகத்திற்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. போஸ் வெங்கட் உள்ளிட்ட அனைத்து குணச்சித்திர நடிகர்களும், வடநாட்டு நடிகர்களும் நன்றாக நடித்திருக்கின்றனர். சத்யன் சூரியனின் ஒளிப்பதிவும், சிவநந்தீஸ்வரனின் படத்தொகுப்பும், கிப்ரான் அவர்களின் பின்னணி இசையும் படத்தின் வேகத்திற்கு தோள் கொடுக்கும் வகையில் பக்கபலமாக அமைந்துள்ளது. சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு, பல காட்சிகளில் பிரமிக்க வைக்கிறது.

எந்த அவசியமுமே இல்லாமல் இரண்டாம் பாதியில் வரும் தேவையற்ற ஐட்டம் சாங், சற்றே தொய்வடையும் கடைசி இருபது நிமிடங்கள், இரண்டாம் பாதியின் நீளம் உள்ளிட்ட ஒரு சில குறைகளைத் தாண்டி, 'தீரன் - அதிகாரம் ஒன்று' இந்த ஆண்டின் தரமான பொழுதுபோக்கு திரைப்படங்களில் ஒன்று!


விமர்சனம்: எண்டிடிவி மூவீஸ்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)