முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, June 12, 2024

ராமநாதபுரம் மாவட்டத்தில் விலையில்லா மரக்கன்றுகள்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடவு செய்திட விலையில்லா மரக்கன்றுகள் வழங்கப்படும் என மாவட்ட வன அலுவலர் ஹேமலதா செவ்வாய்கிழமை தெரிவித்தார்.

 

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது:

 

ராமநாதபுரம் வன விரிவாக்கச் சரகத்தின் கீழ் பரமக்குடி அருகே கமுதகுடி கிராம வனத் துறை மத்திய நாற்றங்காலில்

மகாகனி,

மா,

வேங்கை,

கொய்யா,

புளி,

வேம்பு,

மாதுளம்,

சொர்க்கம்

ஆகிய மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர்.

 


ராமநாதபுரம் மாவட்ட மக்கள் விவசாய நிலம், பள்ளிக் கூடம், பொது இடம், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்து வளர்க்க, தங்களது ஆதார் அட்டை, புகைப்படம், சிட்டா (தேவைப்படின்)ஆகியவற்றை சமர்பித்து விலையில்லா மரக்கன்றுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

 

தொடர்புக்கு,

வனசரக அலுவலர் வெ.நாகராஜன் 6383940433.

வனவர் கேசவன் 9976969370.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Thursday, June 6, 2024

ராமநாதபுர மக்களவை தொகுதியை தக்கவைத்தது திமுக கூட்டணி!!

No comments :


திமுக கூட்டணியில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முஸ்லிம் லீக் எம்.பி நவாஸ்கனி செய்தியாளரிடம் கூறும்போது,

‘‘முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சி மற்றும் மக்கள் நலன் சார்ந்த சிறப்பான திட்டங்களுக்காக மக்கள் கொடுத்த மாபெரும் வெற்றியாகும். இங்கு சாதியையும், மதத்தையும் வைத்து அரசியல் செய்தவர்களுக்கு இந்த தேர்தல் முடிவு சரியான பாடம் புகட்டி உள்ளது.
  

பாசிச பாஜக ஆட்சிக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். ராமநாதபுரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கிழக்கு கடற்கரை சாலையோர ரயில் போக்குவரத்து திட்டம் துவங்கவும், படித்த இளைஞர்கள் பெண்களின் நலனுக்காக வேலை வாய்ப்பு உருவாக்க தொழிற்சாலை அமைக்கவும், ராமேஸ்வரம் ஆன்மீக தேசிய சுற்றுலா தளம் என்பதாலும், ராமநாதபுரம் மாவட்டம் வர்த்தக மாவட்டமாக இருப்பதாலும் விமான போக்குவரத்து துவங்கவும் நடவடிக்கை எடுப்பேன்’’ என்றார்


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.