முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, August 23, 2022

டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கான அறிவிப்பாணை, செப்-21 விண்ணப்பிக்க கடைசி நாள்!!

No comments :

டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி 4 பிரிவுகளில் தலைமை செயலக பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக 161 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

சட்டம் மற்றும் நிதித்துறையை தவிர்த்த தலைமை செயலக பிரிவு அலுவலர் பணியில் 74 பேர்,
நிதித்துறையின் தலைமை செயலக பிரிவு அலுவலர் பணியில் 29 பேர்,
சட்டம் மற்றும் நிதித்துறையை தவிர்த்த தலைமை செயலக உதவியாளர் பணிக்கு 49 பேர்,
நிதித்துறைக்கான தலைமை செயலக உதவியாளர் பிக்கு 9 பேர்

என மொத்தம் 161 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தலைமை செயலக பிரிவு அலுவலர் (சட்டம் மற்றும் நிதித்துறை தவிர), தலைமை செயலக பிரிவு அலுவலர் (நிதித்துறை) பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.36,400 முதல் ரூ.1,34,200 வரையும்,


சட்டம் மற்றும் நிதித்துறையை தவிர்த்த தலைமை செயலக உதவியாளர் மற்றும் நிதித்துறைக்கான தலைமை செயலக உதவியாளர் பணிக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.73,700 வரையும் சம்பளம் கிடைக்கும்.

தலைமை செயலக பிரிவு அலுவலர் (சட்டம் மற்றும் நிதித்துறை தவிர), தலைமை செயலக பிரிவு அலுவலர் (நிதித்துறை) பணி ஆகியவற்றுக்கு விண்ணப்பம் செய்வோர் 35 வயதுக்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

நிதித்துறையை தவிர்த்த தலைமை செயலக உதவியாளர் மற்றும் நிதித்துறைக்கான தலைமை செயலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 30 வயதுக்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். விண்ணப்பத்தாரர்களின் வயதானது 01.07.2022 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.

தலைமை செயலக பிரிவு அலுவலர் (சட்டம் மற்றும் நிதித்துறை தவிர), சட்டம் மற்றும் நிதித்துறையை தவிர்த்த தலைமை செயலக உதவியாளர் மற்றும் நிதித்துறைக்கான தலைமை செயலக உதவியாளர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

 

தலைமை செயலக பிரிவு அலுவலர் (நிதித்துறை) பணிக்கு பிகாம் (B.com), பொருளாதாரம் (Economics), புள்ளியியல் (Statistics) பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பம் செய்யும்போது ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல்லுக்காக ரூ.150,

தேர்வு கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் குரூப் 5 ஏ தேர்வுக்கு இன்று முதல் வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

செப்டம்பர் 26ம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 18 ஆம் தேதி எழுத்துத்தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Wednesday, August 10, 2022

வருகிற 13-ந் தேதி பொதுவினியோகத் திட்ட குறைதீர் முகாம்!!

No comments :

தமிழக அரசின் உத்தரவின் படி மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை மாவட்டத்தின் அனைத்து தாலுகாக்களிலும் ஒரு கிராமத்தில் சுழற்சிமுறையில் பொதுவினியோகத் திட்ட குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தொடர்ச்சியாக இந்த மாதத்தில் கீழ்க்காணும் கிராமங்களில் நடத்தப்பட உள்ளது.

 

ராமநாதபுரம் தாலுகா-தேர்போகி ரேஷன் கடை,

ராமேசுவரம் தாலுகா-சம்பை கிராம சமுதாய கூடம்,

திருவாடானை தாலுகா-கீழ்பனையூர் ரேஷன்கடை,

பரமக்குடி தாலுகா-கோபாலபட்டிணம் ரேஷன்கடை,

முதுகுளத்தூர் தாலுகா-மேலச்சிறு போது நூலக மையக்கட்டிடம், 

கடலாடி தாலுகா-கடுகு சந்தை கிராம சமுதாய மடத்து கட்டிடம், 

கமுதி தாலுகா- து.வாலசுப்பிர மணியபுரம் ரேஷன்கடை,

கீழக்கரை தாலுகா-நல்லிருக்கை கிராம சமுதாயகூடம்,

ஆர்.எஸ். மங்கலம் தாலுகா- ஆய்ங்குடி கிராம சமுதாய கூடம்

ஆகிய கிராமங்களில் நடைபெறுகிறது.

 

இந்த கிராமங்களை சேர்த்த பொதுமக்களுக்கு

மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம் செய்தல்,

குடும்ப அட்டைகளில் பிழைத்திருத்தம்,

புகைப்படம் பதிவேற்றம்,

பெயர் சேர்த்தல், நீக்கல்,

முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் 

மற்றும் புதிய குடும்ப அட்டை நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்து குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

 


மேலும் ரேஷன் கடை களில் பொருள்பெறவருகை தர இயலாத மூத்தகுடி மக்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகாரச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொது செயல் பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறை பாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாக்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் வருகிற 13-ந்தேதி (சனிக்கி ழமை) காலை 10 மணி அளவில் நடைபெறவுள்ள குறைதீர்க்கும் முகாமில் மனுக்களை அளித்து சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Monday, August 1, 2022

ராமநாதபுரத்தில் குரூப்- 1 மற்றும் காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி!!

No comments :

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

 

டி.என்.பி.எஸ்.சி. குரூப்- 1 மற்றும் காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மாநில அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் மற்றும் மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு விண்ணப்பித்து தயாரா கிவரும் இளைஞர்களுக்காக ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் என்ற அமைப்பு தொடர்ந்து செயல்பட்டுவருகிறது.

 

இங்கு பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான நூல்கள், மாதாந்திர இதழ்கள் மற்றும் நாளிதழ்கள் அடங்கிய நூலகம் செயல்பட்டு வருகிறது. தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட பலர் போட்டித்தேர்வில் வெற்றி பெற்று அரசுப் பணியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருகின்றனர்.

 


தற்போது அறிவிக்க ப்பட்டுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி-I) மற்றும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய 2-ம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை), 2-ம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

 

இந்த தேர்வுகளுக்கான அறிமுக வகுப்பு வருகிற 3-ந் தேதி காலை 10.30 மணியளவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.

 

இதில் பங்கேற்க ஆர்வமும், விருப்பமும் உள்ள போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் அறிமுக வகுப்பு நாளில் மார்பளவு புகைப்படம் மற்றும் தேர்வுக்கு விண்ணப்பித்த விவரங்களுடன் கலந்து கொள்ளலாம்.

 

பயிற்சி தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 9487375737 என்ற மொபைல் எண்ணிலோ தொடர்பு கொண்டும் பதிவு செய்து இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயனடையலாம்.

 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.