Thursday, January 28, 2021
இளையான்குடியில் நடந்த கைப்பந்து போட்டியில் கீழக்கரை அணிகள் (MYFA & JVC) பரிசுகள் வென்றன!!
Tuesday, January 19, 2021
அரியமான் கடற்கரையில் ஜன. 23லம் தேதி விளையாட்டு திருவிழா!!
ராமநாதபுரம்
மாவட்ட நிர்வாகம் சார்பில் அரியமான் கடற்கரையில்ஜன. 23ல் விளையாட்டு திருவிழா நடைபெறுகிறது.
விழாவில்
ஆடவர்களுக்கான கால்பந்து, வாலிபால் போட்டி நடக்கிறது.
வாலிபால்
போட்டியில் முதலிடம் பெறும் அணிக்கு ரூ. 6 ஆயிரம், இரண்டாவது ரூ.4 ஆயிரம், மூன்றாமிடம்
ரூ. 2ஆயிரமும்,
கால்பந்து
போட்டியில் முதலிடம் ரூ.15ஆயிரம், இரண்டாமிடம் ரூ. 10ஆயிரம், மூன்றாமிடம் ரூ.5ஆயிரம்
பரிசு வழங்கப்படும்.
இப்போட்டிகளில்
பங்கேற்ற தகுதி சுற்றுத் தேர்வு ஜன.,22 அரியமான் கடற்கரையில் நடைபெற உள்ளது.
விருப்பமுள்ள
அணிகள் ஆதார் அட்டை,பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் கொண்டு வர வேண்டும்.
தேர்வாகும்
அணிகள் ஜன.,23ல் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
மேலும்
விபரங்களுக்கு வாலிபால் போட்டிக்கு
ரமேஷ்பாபு
- 81482 59600,
கால்பந்து
- குலசேகரபாண்டியன் - 94437 83327,
மாவட்ட
விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலர்- 74017 03509
தொடர்பு
கொள்ளலாம்.
செய்தி:
தினசரிகள்
Sunday, January 10, 2021
மினி கிளினிக் களில் சித்தா டாக்டர்களை நியமிக்க கோரிக்கை!!
தமிழக அரசு செயல்படுத்தி வரும் அம்மா மினி கிளினிக் களில் சித்தா டாக்டர்களை நியமிக்க Ayush welfare organization முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளது.
இது சம்பந்தமான கோரிக்கை விபரம்:
பொதுவாக
அனைவருக்கும் நல வாழ்வு என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு நோய்த்தடுப்பு மற்றும்
சிகிச்சைக்கான அனைத்து மருத்துவ முறைகளில் நல்ல விஷயங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த
சிகிச்சை முறையாக அமைவதே சாலச்சிறந்தது.
ஏற்கனவே
மத்திய அரசு கொண்டுவந்த தேசிய ஊரக சுகாதாரத் திட்டம் 2005 மற்றும் தேசிய நகர்புற சுகாதார
திட்டம் 2013 இவற்றை உள்ளடக்கிய தேசிய நலவாழ்வு இயக்கம் 2015 மற்றும் மத்திய சுகாதாரத்துறை
அறிவித்துள்ள ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்கள் ஆகியவற்றில்
நோய் தடுப்புக்கு மற்றும் தொற்றா நோய்கள் கட்டுப்பாடு மற்றும் சிகிச்சைக்கு விரிவான
கருத்துரையில் பாரம்பரிய மற்றும் சித்தா உள்ளிட்ட இந்திய முறை மருத்துவங்கள் முதன்மைப்
படுத்தப்பட வேண்டும் என்ற கொள்கை முடிவை ( Mainstreaming of Ayush in primary
healthcare)தேசிய நலவாழ்வு ஊரக மற்றும் நகர்புற இயக்கம் கொண்டுள்ளது - கடந்த 2010ஆம்
ஆண்டு முதல் இதுவரை 10 ஆண்டுகளாக தமிழக அரசு கொண்டுவந்துள்ள பல்வேறு அனைவருக்கும் நலவாழ்வு
திட்டம் என்பது சித்தா மற்றும் இந்திய முறை ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகளை உள்ளடக்கியதாக
அமையாதது வேதனையளிக்கின்றது.
கடந்த
2010ஆம் ஆண்டில் சுமார் 470 இந்திய முறை சிகிச்சை சேவைகளை ஆரம்ப சுகாதார நிலையங்களில்
தேசிய ஊரக சுகாதார நிதியில் கொண்டுவந்ததோடு அதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளாக இந்திய முறை
மருத்துவ சேவைகள் மற்றும் சித்த சிகிச்சை முறைகளுக்கான பணியிடங்கள் ஒன்றுகூட உருவாக்கப்படவில்லை.
இதனால்
சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் சித்த சிகிச்சை முறைகள்
ஏழை மற்றும் கிராமப்புற நடுத்தர மக்களுக்கு கிடைக்க இயலாத சூழல் உள்ளது.
இந்நிலையில்
தமிழக அரசு சமீபத்தில் அறிவித்த மினி கிளினிக்ஸ் திட்டத்தில் சித்தா உள்ளிட்ட ஆயுஸ்
மருத்துவர்களை பணியமர்த்த வேண்டும் என முதலமைச்சருக்கு பார்வையில் கண்டுள்ள 1 மற்றும்
2 மனுக்களின் மூலமாக கோரிக்கை விடுக்கப்பட்டது ஆனாலும் இந்த மனுக்கள் தற்பொழுது இந்திய
மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குனரகத்தில் மனுக்கள் மீது தீர்வு காண முதலமைச்சரின்
தனிப் பிரிவு அலுவலகம் இந்த கோரிக்கைகளை அனுப்பி வைத்துள்ளது.
இந்நிலையில்
பார்வையில் கண்ட அரசாணையின்படி தமிழக சுகாதாரத்துறை மினி கிளினிக்ஸ் திட்டத்தை செயல்படுத்த
தொடங்கியிருப்பதை அறியமுடிகின்றது. இந்த மினி கிளினிக்ஸ் திட்டத்தை செயல்படுத்துவதில்
பல்வேறு இடையூறுகள் இருப்பதாகவும் ஆதலால் சீர்திருத்தம் செய்யவேண்டும் என்றும் மற்றும்
சலுகைகளை எதிர்பார்த்து பல்வேறு நலச் சங்கங்கள் முழு மனதுடன் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு
அரசு வழிகாட்டிய நெறிமுறைகளின்படி பணியாற்ற முழு மனதுடன் இல்லாமல் பல்வேறு கோரிக்கைகளை
வைத்துள்ளதாகவும் அதன்மூலம் இந்தத் திட்டத்தை நீர்த்துப்போகச் செய்ய சூழல் ஏற்பட்டுள்ளதையும்
இந்த அமைப்பு நன்கு அறிந்துள்ளது.
கிராமங்களில்
முழுமனதுடன் பணியாற்ற போக்குவரத்து வசதி குறைவு,தொலைதூரம் ஆக உள்ளது மினி கிளீனிக்
பணி நேரங்கள் இரவு 8 மணி வரை நீடிப்பதால் இரவு வரை பணி புரிய வேண்டுமா? எனவும் அடிப்படை
வசதிகள் உள்ளதா? காலை மாலை இரண்டு நேரங்களில் நீண்ட நேரம் காத்திருந்து பணிபுரிய வேண்டுமா?
ஆகவே மருத்துவர்களுக்கு வாகன வசதி வேண்டும் ஞாயிற்றுக்கிழமை விடுப்பு வேண்டும், பணிப்
பாதுகாப்பு வேண்டும், ஒரு கட்டமைப்பை உருவாக்கி தர வேண்டும் மினி கிளினிக்குகளில் இரவு
நேரங்களில் பணிபுரிய வேண்டி இருப்பதால் 25% Non practice allowance வேண்டுமெனவும்
,மினி கிளினிக் நடைமுறை உத்தரவுகளை மாற்றி உத்தரவிட வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை
விடுத்து முழு மனதுடன் பணியாற்ற முன்வராமல் இந்தத் திட்டத்தை நீர்த்துப்போகச் செய்ய
முயற்சிகள் நடைபெறுவது வருந்தத்தக்கது
இந்நிலையில்
ஆயுஸ் மருத்துவர்களை இந்த மினி கிளினிக்குகளில் பணியமர்த்தும் பட்சத்தில் அரசு அறிவித்துள்ள
காலை மாலை இரண்டு பணி நேரங்களிலும் அரசின் வழிகாட்டுதலின்படி எந்தவிதமான நிபந்தனையும்
இன்றி அரசின் நல்ல திட்டத்தை ஏழை எளிய மக்களுக்கு கொண்டு சேர்க்க உறுதி கொள்வோம் என்றும்
இந்த அமைப்பு நமது சுகாதாரத்துறை செயலாளர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவருகின்றது.
மேலும் மத்தியிலும் மற்றும் பல்வேறு மாநிலங்களிலும் துணை சுகாதார மற்றும் ஆரம்ப சுகாதார
கிராமப்புற மையங்களை ஆயுஷ் மருத்துவர்களை கொண்ட சுகாதார நலவாழ்வு கட்டமைப்புகளை உருவாக்கி
இருக்கும்பொழுது தமிழகத்திலும் அரசு தனது கொள்கை முடிவுகளில் இருந்து பின்வாங்காமல்
ஏழை எளிய மக்களை காக்க மக்களை தேடி மருத்துவர்களை அனுப்பும் அனைவருக்கும் நலவாழ்வு
திட்டத்தை ஆயுஸ் மருத்துவர்களை கொண்டு செயல்படுத்தினால் இத்திட்டம் இன்னும் கூடுதல்
பலத்துடன் மக்களைச் சென்றடையும். அனைவருக்கும் ஒருங்கிணைந்த மருத்துவ சிகிச்சையை உறுதி
செய்ய வாய்ப்பு ஆயுஷ் மருத்துவர்களுக்கு அமையுமென கோரிக்கை விடுத்து மேற்கண்ட பார்வையில்
காணும் மனுக்களின் மீது இந்திய மருத்துவ இயக்குனருடன் விரிவான ஆலோசனை செய்து மனுக்களின்
மீது இறுதி முடிவெடுக்க தமிழக சுகாதாரத்துறை செயலாளர் அவர்களை மிகவும் தாழ்மையுடன்
கேட்டுக்கொள்கிறோம்.
With
kind regards,
AFAAQ
Tamilnadu (Ayush welfare).
Wednesday, January 6, 2021
ராமேசுவரம்-திருச்சி ரெயில் 9 மாதத்துக்கு பிறகு மீண்டும் இயக்கம்!!
தமிழகம்
முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம்
23-ந் தேதி முதல் அனைத்து ரெயில்களும் முழுமையாக ரத்து செய்யப்பட்டன. அதன் பின்னர்
படிப்படியாக பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட்டு வருகின்றன. ராமேசுவரத்தில்
இருந்து தினமும் சென்னைக்கு 2 ரெயில்களும், வாரத்தில் ஒரு முறை ஒடிசா மாநிலம் செல்லும்
ஓகா எக்ஸ்பிரஸ் மற்றும் புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
கடந்த
9 மாதத்துக்கு பிறகு ராமேசுவரம்-திருச்சி இடையே நேற்று முதல் மீண்டும் இயக்கப்பட்டது.
நேற்று காலை 7 மணி அளவில் திருச்சியில் இருந்து 10 பெட்டிகளுடன் புறப்பட்ட இந்த ெரயில்
காரைக்குடி, தேவகோட்டை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம் மற்றும் பாம்பன்
ரெயில் பாலம் வழியாக பகல் 12 மணி
அளவில் ராமேசுவரம் ெரயில் நிலையம் வந்தடைந்தது.
பின்னர்
இந்த ரெயில் மீண்டும் பிற்பகல் 2.50
மணி அளவில் ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் இருந்து அதே வழியாக திருச்சிக்கு புறப்பட்டது.
9
மாதத்திற்கு பிறகு ராமேசுவரம்-திருச்சி இடையே இயக்கப்பட்டுள்ள இந்த ரயில் சிறப்பு ரெயிலாகவும்,
அதுபோல் முன்பதிவு செய்து மட்டுமே பயணம் செய்யும் வகையிலும் இயக்கப்படுகிறது.
இதே
போல் ராமேசுவரம்-மதுரை வழித்தடத்திலும் வழக்கம்போல் பயணிகள் ரெயிலை இயக்க வேண்டும்
என்று பயணிகளும், பொதுமக்களும் ரெயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sunday, January 3, 2021
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையின் 8 டாக்டர்களில் 7 பேர் விடுமுறையில், அதிரடி ஆய்வு நடத்திய கலெக்டர்!!
ராமநாதபுரத்தில்
மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி உள்ளது. இது மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு,
தற்போது மருத்துவ கல்லூரி கட்டிட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த
ஆஸ்பத்திரியில் அனைத்து நவீன மருத்துவ வசதிகள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் என அனைத்தும்
ஏற்படுத்தப்பட்டு தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு இணையாக மாற்றப்பட்டு உள்ளது. இந்தநிலையில்
ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை தங்களின் ஆஸ்பத்திரிகளுக்கு புரோக்கர்கள்
மூலம் சில டாக்டர்கள் அழைத்து செல்வதாகவும், அறுவை சிகிச்சையை தாமதம் செய்வதோடு, பல்வேறு
காரணங்களை கூறி மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க பரிந்துரை செய்வதாகவும்,
ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியானது புரோக்கர்களின் பிடியில் சிக்கி இருப்பதாகவும் புகார்கள்
எழுந்தன.
இதற்கு ஆஸ்பத்திரியில் உள்ள சில தூய்மை பணியாளர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் உள்ளிட்டோர் உடந்தையாக இருப்பதாகவும் புகார்கள் வந்தன.
சில
ஆம்புலன்ஸ் டிரைவர்கள் நோயாளிகளை அழைத்துக்கொண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு வராமல் தன்னிச்சையாக
தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதாகவும் கூறப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக
மாவட்ட கலெக்டருக்கு தொடர்ந்து ஆதாரங்களுடன் புகார்கள் வந்ததாக கூறப்பட்ட நிலையில்
நேற்று காலை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் திடீர்
ஆய்வு மேற்கொண்டார். அப்போது, 8 டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டிய நிலையில் 7 டாக்டர்கள்
விடுமுறையில் சென்றிருப்பதாக கூறப்பட்டது. ஒரு டாக்டர் மூலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதும், இதன்காரணமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத
அவலமும் ஏற்பட்டிருப்பதை கலெக்டர் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மாவட்ட
அரசு ஆஸ்பத்திரியில் 8 பேரில் 7 பேருக்கு விடுமுறை கொடுத்தது ஏன்? ஒருவர் எவ்வாறு அனைவருக்கும்
சிகிச்சை அளிக்க முடியும்? என்று விசாரணை நடத்தினார்.
இந்த
விசாரணை அரைமணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. பின்னர் தூய்மை பணியாளர்களையும் அழைத்து
விசாரித்து எச்சரித்தார். புகார்களுக்கு ஆஸ்பத்திரி பணியாளர்கள் யாருக்காவது தொடர்பு
இருப்பதாக தெரியவந்தால் அவர்கள் யாராக இருந்தாலும் துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதோடு,
காவல்துறை மூலம் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
அரசு
ஆஸ்பத்திரி வேலையே வேண்டாம், இந்த வேலையை விட்டுவிடலாம், கிளினிக் நடத்திக்கொள்ளலாம்
என தப்பித்து செல்லலாம் என நினைத்தால், அதற்கும் வழியில்லாமல் நடவடிக்கை எடுக்கும்
நிலைக்கு என்னை ஆளாக்கி விடாதீர்கள். இன்றோடு 2020-ம் ஆண்டு முடிகிறது. புத்தாண்டில்
இருந்தாவது அனைவரும் திருந்தி, தங்கள் பணியை ஒழுங்காக செய்யுங்கள். உங்களின் வேலையை
நீங்கள் சரியாக செய்தால் நான் தொந்தரவு செய்ய மாட்டேன். இனி இவ்வாறு நடக்காமல் பார்த்து
கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தினார்.
கலெக்டரின்
இந்த அதிரடி ஆய்வு மற்றும் கடுமையான எச்சரிக்கை காரணமாக அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில்
பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆய்வின்போது அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் அல்லி, கண்காணிப்பாளர்
ஜவகர்லால் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.