முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, September 14, 2022

ஆயத்த ஆடைகள் உற்பத்தி குழுவினர் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆயத்த ஆடைகள் உற்பத்தி குழுவினருக்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை சார்பில் நிதியுதவி அளிக்கப்படவுள்ளது என ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

 

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக, அப்பிரிவினைச் சேர்ந்த 10 பேர்களைக் கொண்ட குழுவினருக்கு நிதியுதவி அளிக்கப்படவுள்ளது.

அதனடிப்படையில் 10 பேர் கொண்ட குழு அமைத்து ஆயுத்த ஆடையக உற்பத்தி அலகு அமைப்போருக்கு ரூ. 3 லட்சம் நிதி அளிக்கப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

 


அதனடிப்படையில், தையல் தொழிலில் ஈடுபட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த ஆண், பெண்கள் என 10 பேர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கவேண்டும்.

அந்தக் குழுவிற்கு ஆயத்த ஆடையக உற்பத்தி பிரிவை அமைப்பதற்கான உபகரணங்கள் வாங்க ரூ. 3 லட்சம் நிதி வழங்கப்படும்.

 

குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்றவர்கள் உள்ள குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

 

விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவை பெண்கள் அமைந்துள்ள குழுவிற்கும் முன்னுரிமை வழங்கப்படும். குழுவில் உள்ள 10 பேருக்கும் தையல் தொழில் தெரிந்திருத்தல் வேண்டும். குழு உறுப்பினர்கள் பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினராக இருப்பதுடன், ஆண்டு வருவாய் ரூ.1 லட்சத்துக்குள் இருப்பது அவசியம்.

 

பங்குகொள்ள ஆர்வமுள்ளவர்கள், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தைப் பெறலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.