முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, August 10, 2017

கீழக்கரையில் 12-8-2017 அன்று இலவச கண் பரிசோதனை முகாம்!!

No comments :


கீழக்கரையில் 12-8-2017 அன்று அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் இஸ்லாமியா கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம். அனைவரும் கலந்து பயண்பெற அழைக்கப்படுகிறார்கள்.(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுர மாவட்டத்தில் விஸ்வரூபமெடுக்கும் தண்ணீர் தட்டுப்பாடு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இருப்பினும் தற்போது பல நகராட்சி, ஊராட்சிகளில் முறையாக குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் பல இடங்களில் பொதுமக்களே குடிநீர் டேங்கை திறந்து குடிக்க நீர் எடுத்து வருகின்றனர்.

ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, கீழக்கரை நகராட்சிகளில் 3 நாள் முதல் 7 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது. மண்டபம் பேரூராட்சியில் 5 நாள் முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியிடங்களில் குடிநீரை குடம் ஒன்றுக்கு ரூ.10 வரை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.மாவட்டத்தில் ராமநாதபுரம் ஊரக பகுதிகள், சத்திரக்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள், உச்சிப்புளி பகுதிகளில் கடந்த பல மாதங்களாக குடிநீர் பிரச்னை உள்ளது. ராமநாதபுரத்தை சுற்றியுள்ள கருங்குளம், சித்தார்கோட்டை உள்ளிட்ட பல கிராம பகுதியில் தண்ணீர் வரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இதுகுறித்து புகார்கள் தெரிவித்தாலும் அதிகாரிகள் தற்போது வரை மாற்று நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்டத்தில் மழைக்காலம் ஆரம்பிக்க இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில் தற்போதுள்ள குடிநீர் பிரச்னையை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.


சாலையோரங்களில் அடிக்கடி ஒரு சிலர் தங்கள் சுய லாபத்திற்காக காவிரி குடிநீர் குழாய்களை உடைத்து அருகில் உள்ள வயல், ஊரணிகளுக்கு தண்ணீரை கொண்டு செல்கின்றனர். ஒரு சிலர் டேங்கின் அருகிலேயே குளிப்பது, துணிகளை துவைப்பது போன்ற அநாகரீக செயல்களை செய்கின்றனர். இதனால் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னை விசுவரூபம் எடுத்து வருகிறது.


கிராம பகுதிகளுக்கு ராட்சத சிமென்ட் குழாய்கள் மூலம் காவிரி கூட்டு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. குடிநீர் சீராக சப்ளை செய்ய கிராம பகுதியில் குடிநீர் டேங்குகள் அமைக்கப்பட்டு அதில் வால்வுகள் பொருத்தப்பட்டுள்ளன. குழாய்களில் குடிநீர் வரும்போது பல இடங்களில் வால்வுகள், குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டு தண்ணீர் வீணாக்கப்படுகிறது. மாவட்டத்தில் மண்டபம், வழுதூர், பார்த்திபனூர், முதுகுளத்தூர், பரமக்குடி, நயினார்கோவில், கொடிகுளம் ஆகிய இடங்களில் குடிநீர் தொட்டிகளில் நீர் நிறைந்து வீணாவது வழக்கமாக உள்ளது. 

விழிக்க வேண்டும் அதிகாரிகள், ஒத்துழைக வேண்டும் பொதுமக்கள்!
தண்ணீரை வீண் விரயம் செய்யாமல் சேமிப்போம்!!


செய்தி: திரு. தாஹீர், கீழக்கரை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)