முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, April 13, 2017

ராமேசுவரம் ரெயில் நிலைய வாயிலில் அடையாளம் தெரியாத முதியவர் இறப்பு, போலீஸ் விசாரனை!!

No comments :


ராமேசுவரம் ரெயில் நிலையம் நுழைவு வாயில் அருகே முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதனை தொடர்ந்து போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் லோகநாதன், பயிற்சி சப்இன்ஸ்பெக்டர் ராஜேஸ் ஆகியோர் அங்கு சென்று பார்த்தபோது சுமார் 75 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.

அவரை சோதனையிட்ட போது, சட்டை பாக்கெட்டில் மருந்து சீட்டு இருந்தது. அதில் குப்பன் (வயது 75), மேல்மருவத்தூர் என்று இருந்தது.

இவர் ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரியில் சர்க்கரை நோய்க்கு தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருவதும் தெரியவந்தது. மேலும் ஆவடியில் இருந்து திரிசூலத்துக்கு பயணம் செய்த டிக்கெட்டும், திரிசூலத்தில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு பயணம் செய்த டிக்கெட்டும் இருந்தது.


இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும்

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக மேல்மருவத்தூர் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)