முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, November 1, 2023

ரோட்டரி கிளப் நடத்திய மாவட்டம் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள்!!

No comments :

இராமநாதபுரம் மாவட்டம் அளவில் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் , ரோட்டரி கிளப் மூலம் நடைபெற்றது.

 வேலுமனோரன் பெண்கள் கலை கல்லூரியில் நடைபெற்ற இப்போட்டியில் 14 வயது பிரிவில் கீழக்கரை இஸ்லாமியா பள்ளியை சேர்ந்த 
H.Hameed Al Zehran ,6 ஆம் வகுப்பு, 3 வது இடம் பெற்றார்.

ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிகள் அடிப்படையில் அவர் மூன்றாம் இடம் பெற்றார்.


 

இந்த நிகழ்வில் ரோட்டரி கிளப் சேர்ந்த திரு. சுந்தரம் மற்றும் மருத்துவர் ராசிக்தீன் கலந்து கொண்டு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினர்.

 

செய்தி: ஹமீது ராஜா, விளையாட்டு பயிற்சியாளர்

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு!!

No comments :

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.
இந்த தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு இன்று தொடங்கியுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பு மற்றும் பி.எட். முடித்திருக்க வேண்டும். மேலும் 'டெட்' எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு 2-ம் தாளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதியானவர்கள் trb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Wednesday, October 18, 2023

கீழக்கரையில் நடைபெற்ற ராமநாதபுரம் ஓபன் மாவட்ட மகளிர் கைப்பந்துப் போட்டி!!

No comments :

முகமது சதக் அறக்கட்டளை மற்றும் VTeam இணைந்து 15.10.2023 அன்று கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரியில், பெண்களுக்கு இடையே விளையாட்டுத் தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக ராமநாதபுரம் ஓபன் மாவட்ட மகளிர் கைப்பந்துப் போட்டி நடந்தது.


 

முதல் இடம் - ஆர்.எஸ்.வி.சி., பரமக்குடி,10000/- ரூபாய் மற்றும் கோப்பை,பதக்கங்கள்,சான்றிதழ்கள்.

 2வது இடம் - வேலுமனோகரன் கல்லூரி,இராமநாதபுரம்,8000/- ரூபாய் மற்றும் கோப்பை,பதக்கங்கள்,சான்றிதழ்கள்.

 3வது இடம் -தாசிம் பீவி அப்துல் காதர் கல்லூரி ,கீழக்கரை 6000/- ரூபாய் மற்றும் கோப்பை,பதக்கங்கள்,சான்றிதழ்கள். 

 4வது இடம் - செய்யது அம்மாள் கல்லூரி,இராமநாதபுரம், 4000/- ரூபாய் மற்றும் சான்றிதழ்கள்.
 

சிறந்த கைப்பந்து நடுவர் விருது:

1.கார்த்தி, தமிழ்நாடு மாநில நடுவர்.

2. நாகூர்கனி, தமிழ்நாடு மாநில நடுவர்.

3. சாமுவேல், தமிழ்நாடு மாநில நடுவர். 

 

சிறந்த பயிற்சியாளர் விருது:

1. ஹமீத் ராஜா, ஜே.வி.சி,கிழக்கரை.

2. கார்த்தி, ஆர்எஸ்விபி, பரமக்குடி.

3. சுமதி, வேலுமனோகரன் கலைக் கல்லூரி, ராம்நாடு.

4. சவரி, செய்யது அம்மாள் கல்லூரி, ராம்நாடு. 

 


மேலும் சிறந்த 9 வீராங்கனைகளை  தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ரொக்கப் பரிசு ரூபாய் 13000 வழங்கினார் Dr.P.R.L சதக் அப்துல் காதர்

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக, P.R.L சதக் அப்துல் காதர், S.S.A ஹுசைன் ஜலால், யூசுப் சாஹேப், S.M.Yஅஸ்லம் ஹுசைன், M.M.K முகமது காசிம் , M.M.K மொஹைதீன் இப்ராஹிம், ஷேக் உசேன், ESM பைசல், SMY சதக் ஆகியோர் கலந்து கொண்டு வீராங்கனைகளை வாழ்த்தி பரிசுகள் வழங்கினர்.

வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோர்க்கு முகவை முரசு சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்துகொள்கிறோம்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Thursday, October 5, 2023

ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 7-ந்தேதி நெடுந்தூர ஒட்டப்போட்டி!!

No comments :

மாரத்தான் ஓட்டப்போட்டிக்கு இணையாக அண்ணா நெடுந்தூர ஒட்டப்போட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 7-ந்தேதி நடத்தப்படுகிறது.

 

அதன்படி 2 பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடைபெற உள்ளது.

 

ஆண்கள்

17 முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்கள் 8 கி.மீ,
5 வயதிற்கு மேற்பட்டவர்கள் 10 கி.மீ,

 

பெண்கள்

17 முதல் 25 வயதிற்குட்பட்டவர்கள் 5 கி.மீ,
25 வயதிற்கு மேற்பட்டவர்கள் 5 கி.மீ.

தூரத்திற்கு நெடுந்தூர ஒட்டப்போட்டி நடத்தப்படும்.

இந்த போட்டிகள் ராமநாதபுரம் பட்டணம்காத்தான் இ.சி.ஆர். சாலை பிரிவில் 7-ந்தேதி காலை 6 மணியளவில் நடைபெற உள்ளது.

 

போட்டியில் பங்குபெறும் அனைவரும் உடற்தகுதி குறித்து சுயஉறுதிமொழி படிவம் தரவேண்டும். 17 முதல் 25 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வரிடம் வயது சான்றிதழ் பெற்று வர வேண்டும். ஆதார்கார்டு, பள்ளி, கல்லூரி அடையாள அட்டை கொண்டு வரவேண்டும். 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் பிறப்பு சான்றிதழ், ஆதார்கார்டு கொண்டு வர வேண்டும்.

 

இப்போட்டியில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு தொகையாக ரூ.5000, ரூ..3000, ரூ.2000


வீதமும் 4 முதல் 10-ம் இடம் வரை வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.1000 வீதம் வழங்கப்படும்.

 

இதில், கலந்து கொள்ளும் ஆண்கள், பெண்கள் உடல் தகுதி குறித்து சுய உறுதிமொழி படிவம் பூர்த்தி செய்திட மற்றும் வயது சான்றிதழ் சரிபார்ப்பதற்கு நாளை(வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்குள் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கிற்கு நேரில் வந்து பதிவுசெய்து கொள்ள வேண்டும். இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

செய்தி: தினத்தந்தி


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Wednesday, October 4, 2023

கீழக்கரையில் நடைபெற்ற JVC கைப்பந்து போட்டி!!

No comments :

கீழக்கரை வடக்கு தெரு, மணமேட்டில், JVC கைப்பந்து கழகம் சார்பாக ,18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான, கைப்பந்து போட்டி சிறப்பாக நடைபெற்றுது.

                  

 

27 அணிகள் கல்ந்து கொண்ட இந்த போட்டித்தொடரில் அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

 

இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று ஏர்வாடி EIFA மற்றும் கீழக்கரைJVC சிறப்பாக விளையாடினர். 

முடிவுல் ஏர்வாடி EIFA வெற்றிக்கோப்பையை வென்றது.

 


கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு பெற்றா அணிகளின் விபரம்:

1 PRIZE -ஏர்வாடி EIFA

2 PRIZE-கீழக்கரைJVC

3 PRIZE- ஏர்வாடி RASITH FRIENDS

4 PRIZEகீழக்கரைJVC-B

5 PRIZE கீழக்கரை CVC

6 PRIZE கீழக்கரை CVC

7 PRIZE மதுரை

8 PRIZE மண்டபம்

               

 

தகவல்: ஹமீது ராஜா, கைப்பந்து பயிற்சியாளர்


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Friday, September 15, 2023

இராமநாதபுரத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான, பெண்கள் கைப்பந்து போட்டி!!

No comments :

முதலமைச்சர் கோப்பைக்கான, பெண்கள் கைப்பந்து பிரிவு போட்டி இராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டரங்கில் நடைபெற்றது.

 

இப்போட்டியில்,
இராமநாதபுரம் செய்யதம்மாள் பொறியியல் கல்லூரி முதல் இடம் பெற்று, கோப்பையை வென்றது. ரொக்கப்பரிசாக ரூ.36,000/- வழங்கப்பட்டது

கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதிர் பெண்கள் கல்லூரி,இரண்டாம் இடம் பெற்றது ரொக்கப்பரிசாக ரூ.24,000/- வழங்கப்பட்டது

 இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய வீராங்கனைகள் பாத்திமா நவ்ரா மற்றும் தீபிகா இருவரும் மாநில அளவில் விளையாடுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 

செய்தி: VTeam Social Trust


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

பெண் குழந்தைகளுக்கான மாநில அரசு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

 

தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24-ல் பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக பங்காற்றும் 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மாநில அரசின் விருது வழங்கப்பட உள்ளது.

 

இதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தகுதியான பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம். இந்த விருதுக்கு விண்ணப்பிக்க வருகிற டிசம்பர் 31-ன்படி 13 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.

 


பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திரும ணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான/தனித்துவமான சாதனை, பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகள் ஆகிவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வு ஏற்படுத்துவது, ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் போன்ற வற்றின் அடிப்படையில் விருது வழங்கப்படும்.

 

இந்த விருதுக்கான விண்ணப்பங்களை வருகிற அக்டோபர் 27-ந் தேதிக்குள்

மாவட்ட சமூகநல அலுவலர்,

மாவட்ட சமூகநல அலுவலகம்,

மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம்,

ராமநாதபுரம்

என்ற முகவரியில் நேரில் சமர்ப்பிக்கலாம்.

 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Tuesday, August 29, 2023

ராமநாதபுரத்தில் வரும் 31-ந் தேதி மாராத்தான் போட்டி!!

No comments :

மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இளைஞர்தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

 

இந்த ஆண்டு வினாடி வினா, நாடகம், ரீல்மேக்கிங் நடத்தப்பட்டன.

 

தொடர்ந்து மாரத்தான் போட்டி 31-ந் தேதி நடைபெற உள்ளது.

 


இதில் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் திருநங்கைகள் என மொத்தம் 100 பேர் இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

 

போட்டி காலை 7 மணிக்கு ராமேசுவரம் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு முதல் பேராவூர் வரை 5 கிலோ மீட்டர் தூரம் நடைபெற உள்ளது. போட்டியை கலெக்டர் தொடங்கி வைக்கிறார்.

 

வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-வது பரிசு ரூ.7 ஆயிரம், 3-வது பரிசு ரூ.5 ஆயிரம் மற்றும் 7 மாணவர்களுக்கு தலா ரூ.ஆயிரமும் வழங்கப்படும்.

 

போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். போட்டிகளில் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளலாம்.

 

இந்த தகவலை கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்தார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Saturday, August 5, 2023

ராமநாதபுரம் மாவட்டத்தில் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், ஆதரவற்றோர், பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிர், மாற்றுத் திறனாளி ஏழைப் பெண்கள் மின் மோட்டர் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பா. விஷ்ணுசந்திரன் தெரிவித்தார்.

 

இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

 

ராமநாதபுரம் மாவட்ட சமூக நலத்துறையின் வாயிலாக விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்றோர், பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிர், மாற்றுத்திறனாளி ஏழைப் பெண்களுக்கு மின் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது.

 

இதற்கு தையல் தைக்க தெரிந்த தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 


விண்ணப்பத்துடன் வருமானச் சான்று ரூ.72,000-க்குள்,

இருப்பிடச் சான்று ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

தையல் பயிற்சி சான்று (பதிவு செய்யப்பட்ட தையல் பயிற்சி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டது),

6 மாத கால பயிற்சி, வயது சான்று (20 முதல் 40 வயது வரை) அல்லது கல்விச் சான்று அல்லது பிறப்புச் சான்று,

ஜாதிச் சான்று,

கடவுச் சீட்டு

விண்ணப்பதாரரின் வண்ணப் புகைப்படம்-2,

விதவை, கணவரால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றோர், மகளிர், மாற்றுத் திறனாளி பெண் சான்று நகல்,

ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை இணைக்க வேண்டும்.

 

விண்ணப்பங்களை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் அடுத்த மாதம் செப். 15- ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தகுதி வாந்த நபர்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Saturday, July 22, 2023

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறை!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் நகர் பகுதிகளில் அரசு மருத்துவமனைகள், கிராமப்பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பெரும்பாலும் நிர்ணயிக்கப்பட்ட பணி இடங்களில் முழுமையாக டாக்டர்கள், நர்சுகள் பணிபுரிய வில்லை. பெரும்பாலான இடங்களில் பணியிடங்கள் காலியாகவே உள்ளது.

 

அரசு மருத்துவமனைக்கு தினமும் குறைந்தது 400-க் கும் மேற்பட்ட நோயாளிகள், ஆரம்ப சுகாதார நிலையங் களில் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். தவிர உள் நோயாளிகளாகவும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவ்வாறு வருபவர் களுக்கு டாக்டர், நர்சுகள் பற்றாக்குறையால் உடனடியாக சிகிச்சை அளிக்க வழி இல்லை.

 


இது தவிர பெரும் பான்மையான மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்க மகப்பேறு டாக்டர்களும் பற்றாக்குறையாக உள்ளனர். இதனால் ஆரம்ப சுகா தார நிலையங்களுக்கு வரும் கர்ப்பிணிகளை மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனர்.

 

இந்த கால விரயத்தாலும் உரிய நேரத்தில் வாகனங்கள் கிடைக்காததாலும் அசம்பா விதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

 

எனவே அரசு மருத்துவ மனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள், நர்சுகள் பற்றாக்குறையை தீர்த்து, கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்க மகப்பேறு டாக்டர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

செய்தி: தினசரிகள்


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Thursday, July 20, 2023

ராமநாதபுரம் பஸ் நிலையம் தற்காலிகமாக இடமாற்றப்படுகிறது!!

No comments :

ராமநாதபுரம் ரூ.20 கோடியில் ராமநாதபுரம் பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால் இன்று முதல் பஸ் நிலையம் இடமாற்றப்படுகிறது. பயணிகள் வசதிக்காக தற்காலிகமாக 2 இடங்களில் இருந்து பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் நகரின் மையப்பகுதியில் பஸ் நிலையம் இயங்கி வந்தது. இந்த பஸ் நிலைய கட்டிடம் மிகவும் பழுதடைந்து அடிக்கடி பயணிகள் மீது இடிந்து விழுந்ததால் இந்த பஸ் நிலையத்தை முழுவதுமாக இடித்து விட்டு ரூ.20 கோடி செலவில் புதிதாக கட்ட அரசு உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே 22 பஸ்கள் நிறுத்தக்கூடிய இடம், 45 கடைகளுடன் இயங்கி வந்த இந்த பஸ் நிலையம் இடிக்கப்பட்டு விரிவாக்கம் செய்து 35 பஸ்கள் நிறுத்தும் இடம், 90 கடைகள் கட்டப்பட உள்ளது.

இதற்காக பஸ் நிலையத்தில் இருந்த கடைகள் காலி செய்யப்பட்டு பாதி கட்டிடம் இடிக்கப்பட்டு விட்டது. மாற்று இடம் தேர்வு செய்ய வேண்டி இருந்ததால் நேற்று வரை இந்த பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.


இந்தநிலையில் ராமநாதபுரத்தில் இருந்து சென்னை, ராமேசுவரம், திருச்சி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருச்செந்தூர், சாயல்குடி, கீழக்கரை, ஆர்.எஸ்.மங்கலம், தேவகோட்டை, காரைக்குடி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் இன்று(வியாழக்கிழமை) முதல் ரெயில் நிலையம் எதிரில் உள்ள நகராட்சி பழைய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது. மேலும் மதுரை, மானாமதுரை, பரமக்குடி, கோவை, ஈரோடு, சேலம், முதுகுளத்தூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் தற்போதைய பஸ் நிலையம் அருகே சந்தை திடலில் இருந்து தற்காலிகமாக இயக்கப்பட உள்ளது.

இந்த பஸ்கள் விரைவில் மதுரை ரோட்டில் உள்ள வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான இடத்திற்கு மாற்றப்பட உள்ளது. இந்த தகவலை ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், ஆணையாளர் அஜிதா பர்வீன் ஆகியோர் தெரிவித்தனர். இன்று முதல் பஸ்கள் இயக்கப்பட உள்ள நகராட்சி பழைய பஸ் நிலையத்தில் பல லட்ச ரூபாய் செலவில் சிமெண்டு தளம், கழிப்பறை, தற்காலிக கடைகள், மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இதனை கலெக்டர் விஷ்ணுசந்திரன், பயிற்சி சப்-கலெக்டர் நாராயணசர்மா, காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் கார்மேகம், ஆணையாளர் அஜிதாபர்வீன் மற்றும் அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

செய்தி: தினத்தந்தி

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Thursday, June 15, 2023

ராமநாதபுரத்தில் வரும் ஜூன் 16ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்!!

No comments :

தமிழக அரசின் சார்பில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைதேடும் இளைஞர்களுக்காக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

 

இந்த முகாமில் 10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள், ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் கலந்துகொண்டு பணி நியமனம் பெறலாம். இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்துகொண்டு இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.

 


தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதினால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்பட மாட்டாது.

 

மேலும் தமிழக அரசால் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் TamilNadu Private Job Portal tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள சேவை வழங்கப்படுகிறது. இதில் பதிவு செய்து தனியார் துறை நிறுவனங்களும் வேலைதேடும் இளைஞர்களும் பயன்பெறலாம்.

 

இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Monday, May 29, 2023

ராமநாதபுரம் மாவட்டத்தில் வாகன விற்பனை அங்காடி இயக்க விண்ணப்பிக்கலாம் - கலெக்டர்

No comments :

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

 

ராமநாதபுரம் மாவட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய மதி எக்ஸ்பிரஸ் என்ற வாகனம் வழங்கப்படுகிறது. இந் திட்டத்தில் பயன்பெற தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.

 

மதி எக்ஸ்பிரஸ் வாகன அங்காடி இயக்க விண்ணப்பிக்கும் உறுப்பினர்கள் சுய உதவிக்குழு உறுப்பி னராக இருக்க வேண்டும். முன்னு ரிமை அடிப்படையில் மகளிர் மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப் பட்ட மாற்றுத்தி றனாளிகள், மாற்றுத்தி றனாளி விதவைகள், முதிர் கன்னி மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆண் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு மட்டுமே வாகன விற்பனை அங்காடி வழங்கப்படும்.

 

தேர்வு செய்யப்படும் மாற்றுத்திறனாளி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் சிறப்பு சுய உதவிக்குழு உறுப்பினராக இருக்க வேண்டும். இவர்கள் சிறப்பு சுய உதவிக்குழு தொடங்கி ஓரு ஆண்டிற்கு மேல் தொடர்ந்து உறுப்பினராக இருக்க வேண்டும். வாகன அங்காடிக்கு வாடகை NRLM இணையதளத்தில் பதிந்து செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. வாகன அங்காடியின் உரிமை மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்திடமே இருக்கும்.

 


அங்காடி நடத்துவதற்கான வாய்ப்பு மட்டுமே பயனாளிக்கு வழங்கப்படும். வாகனத்தை விற்பனை செய்யவோ, வேறு நபருக்கு மாற்றவோ உரிமை இல்லை. வாகனத்தில் ஏற்படும் சிறிய அளவிலான பழுதை பயனாளிகளே மேற்கொள்ள வேண்டும். வாகனத்திற்கு பயனாளியே மின்னேற்றம் (Electric Charge) செய்து பயன்படுத்த வேண்டும். வாகன அங்காடி நடத்த இயலாத பட்சத்தில் மீண்டும் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்திடம் வாகனத்தை எவ்வித பழுதுமின்றி ஒப்படைக்க வேண்டும். விதிமுறைகளை மீறி செயல்படும் உறுப்பினரிடம் இருந்து வாகன அங்காடி திரும்ப பெறப்படும். தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு மேல் வாகனம் இயக்கப்படவில்லை எனில் வாகன அங்காடி திரும்ப பெறப்பட்டு தகுதியான வேறு பயனாளிக்கு வழங்கப்படும். தகுதியுள்ள மாற்றுத்தி றனாளிகள் தங்களது விண்ணப்பங்களை வருகிற 31-ந் தேதிக்குள்

திட்ட இயக்குநர்,

மகளிர் திட்டம்,

கலெக்டர் அலுவலகம் வளாகம்,

ராமநாதபுரம்

 

என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள வட்டார இயக்க மேலாண்மை அலகு, (மகளிர் திட்டம்) நகல் களையும் அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Friday, May 19, 2023

''நான் முதல்வன்" திட்டத்தின்கீழ் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் ''நான் முதல்வன்" திட்டத்தின்கீழ் மத்திய அரசு பணிகளுக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளான 

பணியாளர் தேர்வாணையம் (SSC),

ரயில்வே தேர்வு வாரியம் (RRB),

வங்கி பணியாளர் தேர்வு குழுமம் (IBPS) 


உள்ளிட்ட தேர்வுகளை எழுதி வெற்றிபெற தேவையான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

 

மேற்கண்ட மத்திய அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளை தமிழகத்தைச் சேர்ந்த போட்டித்தேர்வர்கள் பெருமளவில் பங்கு கொண்டு வெற்றிபெறும் நோக்கத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த பயிற்சி வகுப்புகள் வருகிற 25-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு 100 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

 


இதில் கலந்து கொள்ள விரும்பும் பட்டப்படிப்பு முடித்த 21 வயது முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்கள் வருகிற 20-ந் தேதிக்குள் தங்களது பெயரை ஆன்லைனில் கீழ்கண்ட லிங்கின் வாயிலாக https://candidate.tnskill.tn.gov.in/CE-NM/TNSDC_REGISTRATION.ASPX தவறாது பதிவு செய்து கொள்ள வேண்டும்.

 

இது குறித்த முழு விவரங்களை https://www.naanmudhalvan.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

 

இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது அலுவலக தொலைபேசி எண் 04567-230160 வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Tuesday, May 9, 2023

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 96.30 சதவீதம் தேர்ச்சி!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 96.30 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் 6,790 மாணவர்கள், 7,516 மாணவிகள் ஆக மொத்தம் 14,306 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். திங்கள்கிழமை தேர்வு முடிவுகள் வெளியானது.

 

இதில் 6,413 மாணவர்கள், 7,364 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதன்படி மாணவர்கள் 94.45 சதவீதம் பேரும், மாணவிகள் 97.98 சதவீதம் பேரும் ஆக மொத்தம் 96.30 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர்.

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் 70 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 18 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. அரசு உதவிபெறும் 37 மேல்நிலைப் பள்ளிகளில் 8 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. 53 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில்,

43 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. மொத்தமாக 160 பள்ளிகளில் 73 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது.

 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்தாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் 97.20 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் மூன்றாவது இடம் பெற்றது. நிகழாண்டு 96.30 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 12-ஆவது இடத்துக்கு சென்றது.

 

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுத்து கூறியதாவது:

17 பள்ளிகளில் முழுமையாக பள்ளிக்கு வராத மாணவர்கள் தேர்வு எழுதியதால் கடந்தாண்டை விட தேர்ச்சி சதவீதம் குறைந்தது. இதுகுறித்து அந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் விசாரணை நடத்த உள்ளதாகத் தெரிவித்தார்.

 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.


முகவை முரசு சார்பாக மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Wednesday, April 5, 2023

BESPOKE DESIGNER ஷோரூம்; மதுரையில் ஓர் புதிய உதயம்!!

No comments :

 

மதுரையில் ஓர் புதிய உதயம்.


கே. கே. நகர், ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் அருகில் கீழக்கரை சேர்ந்த FB குழுமம் மற்றும் மதுரை சேர்ந்த சகோதரர் ரபீக் அவர்களால்  BESPOKE DESIGNER ஷோரூம் திறக்கப்பட்டு உள்ளது.தாங்கள் அனைவரும் வருகை தந்து, ஆதரவு தந்து சிறப்பிக்குமாறு அழைக்கின்றனர் உரிமையாளர்கள்.

முகவை முரசு சார்பாக வாழ்த்துக்கள்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Friday, March 10, 2023

கீழக்கரையில் மார்ச் 11-12 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சதக்கல்வி குழுமங்கள் மற்றும் நடிகர் விஐய் சேதுபதியின் வள்ளலார் வேலைவாய்ப்பு சேவை இயக்கம் ஆகியவற்றின் சார்பில் கீழக்கரை முகம்மது சதக் என்ஜினீயரிங் கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

 

நாளை (11-ந்தேதி) மற்றும் 12-ந்தேதிகளில் நடைபெற உள்ள இந்த முகாமில் தலைசிறந்த 150-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் தங்களின் பணியாளர் தேவைக்காக சுமார் 15 ஆயிரம் பேரை தேர்வு செய்ய உள்ளன.

 


10-ம் வகுப்பு முதல், ஐ.டி.ஐ., டிப்ளமோ, டிகிரி, பொறியியல் மற்றும் மேலாண்மைதுறை, எம்.பி.ஏ, கணினி அறிவியல், மருத்துவம் சார்ந்த இதர படிப்புகள் படித்த அனைவரும் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தங்களின் எதிர்கால வாழ்விற்கான சிறந்த வேலைவாய்ப்பினை பெற்று பயன்அடையலாம்.

 

இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள http://jobfair.vvvsi.com என்ற இணைப்பில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பதிவு இலவசம் என்பதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டு பயனடையலாம் என்று முகமது சதக் கல்வி குழுமங்களின் தலைவர் முகமது யூசுப் சாஹிப், இயக்குனர் ஹாமீது இப்ராகிம் ஆகியோர் தெரிவித்தனர்

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.