முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, October 27, 2021

வீரதீரச் செயல்களில் ஈடுபட்ட குழந்தைகள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் வீரதீரச் செயல்களில் ஈடுபட்ட குழந்தைகள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து மாவட்ட ஆட் சியர் சங்கர்லால் குமாவத் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

 

சமூகநலம் சத்துணவு திட்டத் துறை மூலம் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தைத் திருமணங்களைத் தடுக்கவும், பாடுபட்டு வீரதீரச் செயல் புரிந்துவரும் 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் வகையில், அதற்கான மாநில விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 


சேவை புரிந்த குழந்தைக்கு தேசிய பெண் குழந்தை தினத்தில் (ஜன.24) பாராட்டுப் பத்திரமும், ரூ.1 லட்சத்துக்கான காசோலையும் வழங்ப்படுகிறது.

 

எனவே, தகுதியான பெண் குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

விண்ணப்பங்களை தலைமையாசிரியர் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர், காவல்துறை, தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அலுவலர்கள் வாயிலாக, மாவட்ட சமூகநல அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

விவசாயிகள் அங்ககச்சான்று பெற விண்ணப்பிக்கலாம்!!

No comments :

மாவட்டத்தில் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை மட்டும் பயன்படுத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் அங்ககச்சான்று பெற விண்ணப்பிக்கலாம்.

 

விவசாயிகள் தனி நபராகவோ அல்லது குழுவாகவோ பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அங்கக விளை பொருட்களை பதப்படுத்துவோர், விற்பனை, ஏற்றுமதி செய்பவரும் பதிவு செய்யலாம். 


இதற்கு பண்ணையின் பொது விபரகுறிப்பு, பண்ணையின் வரைபடம்,ஆண்டு பயிர்த்திட்டம், மண், பாசன நீர் பரிசோதனை விபரம், நில ஆவணம், ஆதார் அட்டை நகல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றுடன் கட்டணம் செலுத்த வேண்டும்.கால்நடை வளர்ப்பு, தேனி வளர்ப்பு, வனப்பொருள் சேகரிக்கும் நபர்களும் பதிவு செய்யலாம். 



சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ரூ.2700, 

பிற விவசாயிகள் ரூ.3200, 

விவசாயிகள் குழுப்பதிவிற்கு ரூ.7200 

மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ரூ.9400 

என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.விபரங்களுக்கு விதைச்சான்று உதவி இயக்குனரை அணுகலாம்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Sunday, October 24, 2021

TENDER MEAT கடை திறப்பு விழா அழைப்பு!!

No comments :
கீழக்கரை மீனாட்சிபுரம் சாலையில்  இயங்கி வரும் ஆமினா ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் புதிய இறைச்சி கடை திறப்பு விழா வரும் அக்டோபர் 25ம் தேதி நடைபெறுகிறது. 

இயற்கை முறையில் வளர்த்து பராமரிக்கப்பட்டு வரும் கிடா கறி மற்றும் கோழிக்கறி, டோர் டெலிவரியும் செய்யப்படும்.

அனைவரும் வருகை தந்து விழாவினை சிறப்பித்து, வியாபாரத்துக்கு ஆதரவு தருமாரு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.


அழைப்பாளர்: திரு. ஜாஹிர், ஆமினா ஃபார்ம்ஸ்



(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

கீழையில் ஒர் புதிய உதயம் KABABEQUE!!

No comments :


கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் புதிய உணவகம் திறக்கப்பட்டுள்ளது.











இதன் நிறுவனர் கூறுகையில் உலக தரம் வாய்ந்த ஷவர்மா, கபாப் வகைகள் அறிமுகம் செய்துள்ளோம்.

குறைந்த விலையில் நிறைவான் தரம் தருவதே எங்கள் முதல் நோக்கம்.

விழாக்காலங்களில், மொத்த ஆர்டர்கள் செய்து தருவதற்கும், நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கே வந்து உணவு தயார் செய்து தருவதற்கும் தயார் நிலையில் இருக்கிறோம்.

என்று கூறினார்.

நிறுவனத்தாருக்கு முகவை முரசு சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தகவல்: திரு. ஹமீது ராஜா, கீழக்கரை

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Tuesday, October 19, 2021

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக திரு. சங்கர்லால் குமாவத் பொறுப்பேற்பு!!

No comments :

ராமநாதபுரம் புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ள சங்கர்லால் குமாவத் நேற்று காலை தனது பணி பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். மக்களின் குறைகளை கேட்டு நிறைவேற்ற எனது அலுவலக கதவு 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்று உறுதி அளித்தார்.

 

ராமநாதபுரம் புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ள சங்கர்லால் குமாவத் நேற்று காலை தனது பணி பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். மக்களின் குறைகளை கேட்டு நிறைவேற்ற எனது அலுவலக கதவு 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்று உறுதி அளித்தார்.

 

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த சந்திரகலா விடுமுறையில் சென்ற நிலையில் அவருக்கு பதிலாக மாவட்ட வருவாய் அதிகாரி காமாட்சி கணேசன் கூடுதல் பொறுப்பாக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக சங்கர்லால் குமாவத் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டராக சங்கர்லால் குமாவத் தனது பணி பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். 

 


முன்னதாக ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்த அவரை கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி காமாட்சி கணேசன் ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர். பணி பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் நிருபர்களிடம் கூறிய தாவது:-

 

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுள்ளதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மாவட்ட மக்கள் எளிமையானவர்கள், நல்ல உழைப்பாளிகள் என்பதை அறிந்து கொண்டேன். இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக் காகவும், மக்களின் நலனுக்காகவும் நான் பாடுபடுவேன். பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கை களுக்காக எந்த நேரமும் தயங்காமல் என்னை நேரில் சந்திக்கலாம். 

 

இதற்காக எனது அலுவலக கதவு 24 மணி நேரமும் திறந்திருக்கும். அரசின் திட்டங்களை மக்களுக்கு முழுமையாக கொண்டுசெல்ல பாடுபடுவதோடு மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் திட்டங்களை கேட்டுப்பெற்று நிறைவேற்ற பாடுபடுவேன்.

 

இவ்வாறு கூறினார். கலெக்டராக பொறுப்பேற்றுக்கொண்ட சங்கர்லால் குமாவாத்திற்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

 

ராமநாதபுரம் கலெக்டராக பொறுப்பேற்றுக்கொண்ட சங்கர்லால் குமாவாத் ராஜஸ்தான் மாநிலம், சிகார் மாவட்டத்தில் உள்ள ஹாதுஸ்யாம்ஜி கிராமத்தில் பிறந்தவர். ராஜஸ்தான் மாநிலத்தில் இளங்கலை உயிரியல் பட்டமும், முதுகலை வரலாறு பட்டமும் பெற்றவர். 2010-ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்று நெல்லை மாவட்டத்தில் சப்-கலெக்டராக பயிற்சி பெற்று நாகர்கோவில் மாவட்டத்தில் உள்ள கன்னியாகுமரி சப்-கலெக்டராக பணியாற்றியவர்.

 

இதனை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் சென்னை பெருநகர மாநகராட்சியில் இணை ஆணையர் (கல்வி) மற்றும் வணிகவரித் துறையில் இணை ஆணையர் (பெரும் வரி செலுத்துவோர் பிரிவு) ஆகியவற்றில் பணியாற்றி உள்ளார். இதன்பின்னர் தற்போது ராமநாதபுரம் கலெக்டராக நியமிக்கப்பட்டு தனது பணி பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Monday, October 18, 2021

போலி குளிர்பானங்கள்; பலியாகும் பிஞ்சுகள்…குறட்டை விடும் உணவு பாதுகாப்பு துறை!!

No comments :



 

தமிழகமெங்கும் பெட்டிக்கடைகள் மற்றும் பஸ் ஸ்டாண்ட் கடைகளை இலக்காக கொண்டு விற்கப்படும் போலி குளிர்பானங்களால் அப்பாவி பிஞ்சு குழந்தைகள் உடல்நல பாதிப்புக்கு ஆளாகின்றனர். ஒரு சில இடங்களில் தரமற்ற குளிர்பானங்களை அருந்துவதால் நிலைமை உயிரிழப்பு வரை செல்கிறது.

 

பிரபல குளிர்பான நிறுவனங்களின் ஸ்டிக்கர்களை தழுவி அதே போல் போலியாக அச்சிடப்பட்ட பாட்டில்களிலும், பாக்கெட்களிலும் தரமற்ற முறையில் தயாரிக்கப்படும் குளிர்பானங்கள் அதிகம் விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளன. குடிசைத் தொழில் போல் ஆங்காங்கு இதனை தயாரித்து பெட்டிக்கடைகளிலும், பஸ் ஸ்டாண்ட் கடைகளிலும் விற்பனைக்கு கொடுக்கப்படுகிறது. விவரம் அறியாத கிராமப்புற பெற்றோர் தங்கள் பிள்ளை கேட்கிறதே என ஆசையாய் அந்த தரமற்ற குளிர்பானங்களை வாங்கிக் கொடுப்பதால் வினை உருவாகிறது. பிரபல பிராண்டுகளின் குளிர்பானங்களை காட்டிலும் இது போன்ற டுபாக்கூர் குளிர்பான விற்பனையில் லாபம் அதிகம் கிடைப்பதால், வியாபாரிகள் சத்தமின்றி வாங்கி வைத்து விற்கத் தொடங்கியுள்ளனர். போலி குளிர்பானங்களில் சேர்க்கப்படும் முறையற்ற வேதிப்பொருட்களால் வாந்தி, பேதியில் தொடங்கி உயிரிழப்புகள் வரை நீள்வது குறித்த விழிப்புணர்வு இல்லாததும் இதற்கு காரணம்.

 


அண்மையில் கூட சென்னை புது வண்ணாரப்பேட்டையில் மலிவு விலை குளிர்பானம் அருந்திய 2 சிறுவர்கள் வாந்தி மற்றும் பேதியால் பாதிக்கப்பட்டனர். மேலும், சென்னை பெசண்ட் நகரில் டொகிடோ என்ற 10 ரூபாய் குளிர்பான அருந்திய சிறுமி ஒருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல் நேற்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பேருந்து நிலைய கடை ஒன்றில் குளிர்பானம் வாங்கி அருந்திய 6 வயது சிறுவன் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளான். இது கண்ணுக்கு தெரிந்த செய்தி, இதேபோல் கண்களுக்கு எட்டாத பல பாதிப்புகள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கின்றன.

 

இவற்றையெல்லாம் புயல் வேகத்தில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளோ, ஒரு சம்பவம் நடந்தால் அடுத்த 2 நாட்களுக்கு அதிரடி காட்டுவதும் பிறகு பெட்டி பாம்பாய் அடங்கிக் கிடப்பதுமாக உள்ளனர்.

 

இனி வரும் நாட்களிலாவது ஆய்வு செய்து போலி குளிர்பான நிறுவனங்களை கண்டறிந்து அவற்றின் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அப்பாவி பிஞ்சு குழந்தைகளின் நலனை காக்க முடியும் என்பது ஒவ்வொரு பெற்றோரின் கோரிக்கையாக உள்ளது.

 

செய்தி: ஒன் இண்டியா

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Thursday, October 14, 2021

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

 

தமிழக அரசால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தும் வேலைவாய்ப்பின்றிகாமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ.200,

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300,

பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400,

பட்டதாரிகளுக்கு (பொறியியல் போன்ற தொழிற்கல்வி தவிர) மாதம் ரூ.600

என 3ஆண்டுகளுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

 


உதவித்தொகை நேரடியாக மனுதாரர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். ஆகவே, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தொடர்ந்து வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பித்திருக்கவேண்டும்.

 

ஆதிதிராவிடர் மற்றும்பழங்குடியினருக்கு 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

 

மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 (எழுபத்திரண்டாயிரத்திற்கு) மிகாமல் இருக்கவேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலுவோருக்கு உதவித் தொகை வழங்கப்படாது. தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். இந்த உதவித்தொகை மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும். அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது.

 

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டுகள் நிறைவு பெற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.

பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு மாதம் ரூ.600, பிளஸ் 2 தேர்ச்சிக்கு ரூ.750,

பட்டதாரிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும்.

 

அரசின் வேறு திட்டத்தில் உதவித்தொகை பெறாதவர்களுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்படும்.

 

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் சென்று இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ராமநாதபுரத்தில் 35 ஆவது தேசிய புத்தகக் கண்காட்சி!!

No comments :
ராமநாதபுரத்தில் 35 ஆவது தேசிய புத்தகக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.

 

குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாமின் 90 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தேசிய புத்தக நிறுவனம், பள்ளிக் கல்வித்துறை, நியூ செஞ்சுரி புத்தக நிலையம் மற்றும் பத்திரிகையாளர்கள் இணைந்து இப்புத்தகக் கண்காட்சியை நடத்துகின்றனர். ராமநாதபுரம் சுவாட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் 10 நாள்கள் நடைபெறும் இந்த புத்தகக் கண்காட்சியின் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷினி தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் (பொ) ஆ.ம.காமாட்சிகணேசன் புத்தகக் கண்காட்சியைத் தொடக்கிவைத்தார். பின்னர் அவர் பேசியது:

 

தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்ந்த அப்துல்கலாமின் வழியில் மாணவர்கள் பயணிக்க, அவர் எழுதிய புத்தகங்களை வாசிக்க வேண்டும். அவரது புத்தகங்கள் இளைஞர்களுக்கு வழிகாட்டும் விளக்குகளாக உள்ளன என்றார்.



முதல் விற்பனை நூல்களைப் பெற்றுக்கொண்டு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் பேசியது: தேசத்துக்கு சேவை செய்ததன் மூலம் தனக்கான அடையாளத்தை அப்துல்கலாம் விட்டுச்சென்றுள்ளார். ஆகவே மாணவர்கள் பிறப்பால் ஏற்பட்ட அடையாளத்தை விட சமூக முன்னேற்றத்துக்கு பாடுபட்டு புதிய அடையாளத்தை ஏற்படுத்தவேண்டும். வாய்ப்புகளைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேறவேண்டும். சாதாரண வேலைக்குச் சென்றால் கூட குற்ற வழக்குகள் உள்ளனவா என சரிபார்க்கும் நிலை உள்ளது. ஆகவே மாணவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருடன் நட்பு கொள்ளக்கூடாது என்றார்.

 

கண்காட்சியில் முதல் நூல் விற்பனையைத் தொடக்கிவைத்து கூடுதல் ஆட்சியர் கே.ஜே.பிரவீன்குமார் பேசியது:

 

புத்தகங்கள் நல்ல நண்பர்களாக இருப்பதை படித்தால் உணரலாம். அப்துல்கலாமின் புத்தகங்களை பள்ளி மாணவர்கள் படித்து அதைக் கடைப்பிடிக்கவேண்டும் என்றார். ராமநாதபுரம் நகர் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் சு.கணேசபாண்டியன், வர்த்தக சங்கத்தலைவர் ஜெகதீசன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற செயலர் ந.சேகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

தலைமை ஆசிரியர் பா.ஞானலெட் சா.சொர்ணகுமாரி வரவேற்றார். நியூ செஞ்சுரி புத்தக நிலைய மண்டல மேலாளர் அ.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

 

புத்தகக் கண்காட்சியானது வரும் 23 ஆம் தேதி வரை தினமும் காலை 9 முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். 

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Wednesday, October 13, 2021

அரசு ஐ.டி.ஐ.,களில் நேரடி மாணவர்கள் சேர்க்கை அக்.,30 வரை நீட்டிப்பு!!

No comments :

ராமநாதபுரம் , பரமக்குடி, முதுகுளத்துார், ஆகிய அரசு ஐ.டி.ஐ.,களில் நேரடி மாணவர்கள் சேர்க்கை அக்.,30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

 

மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்துார் ஆகிய அரசு ஐ.டி.ஐ.,களில் 2021ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலமாக கலந்தாய்வு நடந்தது. அதன்பிறகு காலியாக உள்ள அனைத்து தொழிற்பிரிவுகளுக்கும் நேரடி மாணவர்சேர்க்கை அக்.,10 வரை நடந்தது, மேலும் அக்., 30 நீட்டிக்கப்பட்டுள்ளது.

 


எட்டு, பத்தாம்வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 14வயது முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் பெண்களுக்கு வயதுவரம்பு இல்லை.

 

 

பயிற்சில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் நேரடியாக வந்து காலியாக உள்ள தொழிற்பிரிவை தேர்வு செய்யலாம்.

 

கல்வி உதவித்தொகை மாதந்தோறும் ரூ.750, அரசு சலுகைகள் வழங்கப்படும். தனியார் நிறுவனங்களில் பயிற்சிவழங்கப்படும் என மாவட்டதிறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உரம் விநியோகம் தொடர்பாக புகார் அளிக்க மொபைள் எண்கள் அறிவிப்பு!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் உரம் விநியோகம் தொடர்பாக விவசாயிகள் புகார் அளிப்பதற்காக, அதிகாரிகளின் செல்லிடப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

இது குறித்து மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) ஆ.ம. காமாட்சி கணேசன் செவ்வாய்க்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு:

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் சம்பா பருவ நெல் விதைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது வரை மாவட்டத்தில் 543 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. இதுவரை 1,08,000 ஹெக்டேரில் நெல் சாகுபடி நடந்துள்ளது. தற்போது, நெல் 25 நாள்கள் பயிராக வளர்ந்துள்ளன.




இப்பயிருக்கு அடியுரமாக இட யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள், கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனையாளர்களிடம் இருப்பு வைத்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

மாவட்டத்தில் 134 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் 127 தனியார் உர விற்பனை நிலையங்கள் உள்ள நிலையில், உரத் தட்டுப்பாடு ஏதுமில்லை.

 

யூரியா 2,416 மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி. 1,240 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 172 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ் 1,306 மெட்ரிக் டன்னும், சூப்பர் பாஸ்பேட் 127 மெட்ரிக் டன்னும் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் இருப்பு உள்ளன.

 

விவசாயிக்கு அதிகபட்சம் 5 மூட்டை உரங்கள் மட்டுமே விற்கவேண்டும்.

 

மாவட்டத்தில் 82 உர விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், விதி மீறிய 4 கடைகளுக்கு உர விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் உரிமம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

 

உர விநியோகம் தொடர்பாக விவசாயிகள் புகார்களை தெரிவிக்க, மாவட்ட அளவில் வேளாண்மை உதவி இயக்குநர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) - 9443094193,

வேளாண்மை அலுவலர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) -9443861390. வட்டார அளவில் வேளாண்மை உதவி இயக்குநர், ராமநாதபுரம் - 978856733,

வேளாண்மை உதவி இயக்குநர் (திருப்புல்லாணி மற்றும் உச்சிப்புளி) - 9443226130,

வேளாண்மை உதவி இயக்குநர் (திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம்) -9750052410,

வேளாண்மை உதவி இயக்குநர் (பரமக்குடி) - 9443619721, வேளாண்மை உதவி இயக்குநர், (நயினார்கோவில் மற்றும் சத்திரக்குடி) - 9443090564,

வேளாண்மை உதவி இயக்குநர் (கமுதி) - 8870167153,

வேளாண்மை உதவி இயக்குநர் (முதுகுளத்தூர்) - 9443642248, வேளாண்மை உதவி இயக்குநர் (கடலாடி) -9942237653

 

ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Tuesday, October 12, 2021

சொத்துக்களை மீட்டுத்தரக்கோரி ஆம்புலன்சில் வந்து கலெக்டரிடம் மனு!!

No comments :
 சொத்துக்களை எழுதி வாங்கிவிட்டு பராமரிக்காத மகனிடம் இருந்து சொத்துக்களை மீட்டுத்தரக்கோரி ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்சில் வந்து ராமநாதபுரம் கலெக்டரிடம் முதியவர் மனு அளித்தார்.

  

ராமநாதபுரம் மாவட்டம் பொட்டகவயல் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 75). இவர் நேற்று ஆம்புலன்சில், படுத்த படுக்கையாக ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்துக்கு தனது மனைவியுடன் வந்து மனு அளித்தார்.

 

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

 

நான் வெளிநாட்டில் சம்பாதித்து கே.கே.நகரில் வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டு அதில் கிடைக்கும் வருவாயில் குடும்பம் நடத்தி வந்தேன். எனது மகள்களை திருமணம் செய்து கொடுத்த நிலையில் எனது ஒரே மகன் முனீஸ்வரன் மற்றும் அவரின் மனைவி ஆகியோர் கடந்த 2016-ம் ஆண்டு, உங்களை பார்த்து கொள்கிறோம். வீடுகளை பேரன்களின் பெயரில் உயில் எழுதி வையுங்கள் என்று கூறினர்.

 


அவர்கள் கேட்டுக்கொண்டபடி உயில் எழுதி கையெழுத்திட்ட பின்னர் பத்திரத்தை பார்த்தால், இனாம் செட்டில்மெண்ட் எழுதி வாங்கி மோசடி செய்து விட்டனர். 

இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன். இதன்பின்னர் எங்களை கவனிக்காமல் வீட்டைவிட்டு வெளியேற்றி விட்டனர். இதனால் நாங்கள் உறவினர் வீட்டில் தங்கி இருக்கிறோம். தற்போது சாப்பிடக்கூட வழியின்றி, முதுமை காரணமாக நோய்வாய்ப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறேன். சிகிச்சைக்கு கூட பணம் தரவில்லை.

 

 

சொத்தினை எழுதி வாங்கிவிட்டு எங்களை பராமரிக்காமல்விட்ட எனது மகனிடம் இருந்து நான் சுயமாக சம்பாதித்த சொத்துக்களை திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னை ஏமாற்றி சொத்துக்களை பெற்றுக்கொண்டது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன். இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதால் சொத்துக்களை மீட்டு கொடுத்து நாங்கள் வாழ வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

 

இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் (பொறுப்பு) காமாட்சி கணேசன் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

 

செய்தி: தினசரிகள்   

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Monday, October 11, 2021

குழந்தைகள் திருடப்படுவதைத் தடுக்க அரசு மருத்துவமனைகளில் கண்காணிப்பு கேமராக்கள்!!

No comments :

குழந்தைகள் திருடப்படுவதைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத அரசு மருத்துவமனைகளில் அவற்றை பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 ஆம் கட்ட கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை 671 இடங்களில் நடைபெற்றது. இதில், மண்டபம் இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் உள்ள அரசு மருத்துவமனையில் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் முகாமை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார்.

பின்னர், தேவிப்பட்டினம் பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை தொடக்கி வைத்து ஆய்வு செய்தார். இதன்பின் நடைபெற்ற நிகழ்ச்சியில், கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

 


பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 61 ஆயிரத்து 707 ஆகும். இதில் 6 லட்சத்து 28 ஆயிரத்து 450 பேருக்கு (59.19 சதவீதம்) முதல் தவணை கரோனா தடுப்பூசியும், 1 லட்சத்து 98 ஆயிரத்து 948 பேருக்கு (18.74 சதவீதம்) இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. இதுமாநில அளவில் சராசரியை விட குறைவாகும். எனவே பொதுமக்களுக்கு தடுப்பூசியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் திருடப்படுவதை தடுக்க பிரசவத்துக்கு வரும் பொதுமக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இல்லாத இடங்களில் அவற்றைப் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். 


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Sunday, October 10, 2021

மதுரை-ராமேசுவரம் பாசஞ்சர் ரெயில் மீண்டும் இயக்கம்!!

No comments :

1½ ஆண்டுகளுக்கு பிறகு மதுரை-ராமேசுவரம் இடையே நேற்று முதல் மீண்டும் பாசஞ்சர் ரெயில் இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கொரோனா தொற்று குறைந்த பின்னர் படிப்படியாக ரெயில் போக்குவரத்து தொடங்கியது. 

 

ராமேசுவரத்தில் இருந்து சென்னை, திருச்சி உள்ளிட்ட ஊர்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், ராமேசுவரத்தில் இருந்து மதுரைக்கு பாசஞ்சர் ரெயில் போக்குவரத்து மட்டும் கடந்த ஒன்றரை ஆண்டுகளை கடந்தும் தொடங்கப்படவில்லை. ராமேசுவரம்-மதுரை பயணிகள் ரெயிலை மீண்டும் இயக்க பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதனிடையே ராமேசுவரம்-மதுரை பயணிகள் ரெயில் அக்டோபர் 7-ந் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என்று தென்னக ரெயில்வே சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது.

 


காலை 5.40 மணி அளவில் ராமேசுவரத்திலிருந்து 12 பெட்டிகளுடன் மதுரைக்கு அந்த ரெயில் புறப்பட்டது. பாம்பன் ரெயில்வே தூக்கு பாலத்தை கடந்து மெதுவாக பாலத்தில் சென்றபடி மண்டபம், உச்சிப்புளி, ராமநாதபுரம், சத்திரக்குடி, பரமக்குடி, சூடியூர், மானாமதுரை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று காலை 9.30 மணி அளவில் மதுரை வந்தடைந்தது.

 

இதேபோல் மதுரையிலிருந்து மாலை 6.10 மணிக்கு ராமேசுவரத்திற்கு புறப்பட்ட பயணிகள் இரவு 10 மணிக்கு ராமேசுவரம் சென்றடைந்தது.

 

கிட்டத்தட்ட 1½ ஆண்டுக்கு பின்னர் மதுரை-ராமேசுவரம் பாசஞ்சர் ரெயில் இயக்கப்பட்டதால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதுபோல் ராமேசுவரம்-மதுரை இடையே பகல் நேரத்தில் இயக்கப்பட்ட பயணிகள் ரெயிலையும் வழக்கம்போல் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள், தென்னக ரயில்வேக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

 

செய்தி: தினசரிகள்


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Thursday, October 7, 2021

கீழக்கரையில் திருட்டு சம்பவங்களை தடுக்க CCTV கேமராக்கள்!!

No comments :

கீழக்கரையில் திருட்டு சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

 

கீழக்கரை பகுதியில் கடந்த 2 மாதங்களாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. போதை பழக்கத்திற்கு அடிமையான சமூக விரோதிகளால் குற்ற சம்பவங்கள் நடந்து வருவதால் பொதுமக்களிடையே ஏற்பட்டு உள்ள திருட்டு அச்சத்தை போக்கவும், போலீசாருக்கு உதவும் வகையிலும் கீழக்கரை மேலத்தெரு உஸ்வதுன் ஹசனா முஸ்லிம் சங்கம் சார்பில் வாக்கி-டாக்கி தகவல் பரிமாற்ற சாதன வசதியுடன் 6 தனியார் செக்யூரிட்டி காவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 



தற்போது மேலத்தெரு, சின்னக்கடை 500 பிளாட், சங்குவெட்டி தெரு ஆகிய பகுதிகளில் இரவு மற்றும் பகல் நேரங்களில் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். மேலும் இதேபோல் கிழக்குத்தெரு ஜமாத்திற்கு சொந்தமான பகுதியில் 25 கண்காணிப்பு கேமராக்களும் தெற்கு தெரு முஸ்லிம் பொது நலச் சங்கத்தின் சார்பில் 4 கேமராக்களும் பொருத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர். 

 

கண்காணிப்பு கேமரா விரைவில் நகரின் மற்ற அனைத்து பகுதிகளிலும் இரவு நேர காவலர்களை நியமிக்க முடிவு செய்து உள்ளனர். தற்போது மேலத்தெரு பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க முடிவு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்று கிழக்குத் தெரு, வடக்கு தெரு, நடுத்தெரு, தெற்கு தெரு ஜமாஅத், தெற்குதெரு முஸ்லிம் பொது நலச் சங்கம், மற்றும் உஸ்வதுன் ஹஸனா முஸ்லிம் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 

நன்றி: தினத்தந்தி


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Sunday, October 3, 2021

பத்தாம் வகுப்பு தேறிய மாணவர்களுக்கு அந்தந்தப் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேறிய மாணவர்கள், அந்தந்தப் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, ஆட்சியர் பொறுப்பு காமாட்சி கணேசன் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் சனிக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

 

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு செய்யலாம். அக்டோபர் 4 ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுப் பணிகள் தொடங்கப்படும்.

 


வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை, செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை எடுத்து வரவேண்டும்.

அக்டோபர் 18 ஆம் தேதி வரையில் வேலைவாய்ப்புப் பதிவு பணி அந்தந்தப் பள்ளிகளிலேயே நடைபெறும்.

 

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு பணி நடைபெறும் 15 நாள்களும், மதிப்பெண் சான்று வழங்கத் தொடங்கிய முதல் நாளையே பதிவு மூப்பு தேதியாக வழங்கப்படும்.

 

மேலும், வேலைவாய்ப்புத் துறை இணையதளம் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.