Thursday, March 30, 2017
ஏர்வாடியில் மின் கட்டண வசூல் மையம் கேட்டு மனு!!
ஏர்வாடியில் மின் கட்டண வசூல் மையம் கேட்டு தலைமை
பொறியாளரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
ஏர்வாடி மற்றும் ஏர்வாடி தர்ஹா உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் 7ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளது. இவர்கள் அனைவரும் மின் கட்டணம்
செலுத்துவதற்கு ஏர்வாடியிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில்
உள்ள உத்திரகோசமங்கைக்கு செல்ல வேண்டியுள்ளது. மேலும் உத்திரகோசமங்கைக்கு
ஏர்வாடியிலிருந்து சரியான பஸ் வசதி இல்லை. ஆகவே 100 ரூபாய்
மின் கட்டணம் செலுத்துவதற்கு ரூ.300 ஆட்டோவுக்கு செலவு செய்ய
வேண்டியுள்ளது.
ஆகவே கீழக்கரையில் உள்ளது போல் ஏர்வாடியில் அமைக்கப்பட்டு வரும் உப மின் நிலையத்திலேயே. மின் கட்டணம் வசூல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதை வலியுறுத்தி மதுரை தலைமை பொறியாளர் நல்லம்மாளிடம்
ஏர்வாடி மக்கள் நல சங்கம் மற்றும் கிராம பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
செய்தி: தினகரன்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
மாடித்தோட்டங்களை அமைக்க தோட்டக்கலைத் துறையினர் தீவிரம்!!
வறட்சியால் பாதிக்கப்பட்ட ராமநாதபுரத்தில் மக்கள்
தங்களுக்கு தேவையான காய்கறிகளை வீடுகளில் விளைவிக்கும் வகையில் மாடித்தோட்டங்களை
அமைக்க தோட்டக்கலைத் துறையினர் தீவிரம் காட்டுகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 18 ஆயிரம் எக்டேரில் குண்டு மிளகாய், கொத்தமல்லி, நன்னீர் கிடைக்கும் இடங்களில் மா, கொய்யா, சாப்போட்டா போன்றவை சாகுபடி செய்ய தோட்டக்கலைத் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கமுதி உட்பட நன்னீர் கிடைக்கும் இடங்களில் மா, கொய்யா, சப்போட்டா
சாகுபடிக்கு அரசு மானியம் வழங்கப்படுகிறது.
இந்தாண்டு பருவ மழை பொய்த்ததால் பயிர் சாகுபடியே நடக்கவில்லை. நெல் சாகுபடி முற்றிலும் இல்லை.
15
ஆயிரம் எக்டேரில் பயிரிடப்பட்ட குண்டு மிளகாயும்
பாதிப்பிற்குள்ளானது.
இந்நிலையில், மக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை தாங்களே வீடுகளில் விளைவிக்க ஏதுவாக 'மாடித்தோட்டம் திட்டம்' தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை போன்ற மாநகராட்சிகளில் தோட்டக்கலைத்துறை சார்பில் செயல்படுத்தப்படுகிறது.
இதை மற்ற பகுதிகளிலும் விரிவுபடுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ராமநாதபுரத்தில் இத்திட்டத்தில் வீடுகளில் மாடித்தோட்டங்களை அமைப்பது குறித்து, கலெக்டர் நடராஜன் தலைமையில் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் தமிழ்வேந்தன், உதவி இயக்குனர் இளங்கோவன் மற்றும் அலுவலர்கள் ஆலோசனை நடத்தினர்.
தோட்டக்கலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், முதற்கட்டமாக இத்திட்டத்தின் கீழ் ராமநாதபுரத்தில் 3000 'கிட்டுகள்' வழங்கப்படவுள்ளன. ஒரு 'கிட்' விலை 300 ரூபாய். இதில் மாடித்தோட்டம் அமைக்க தேவையான பொருட்கள் இடம் பெற்றிருக்கும். ஒரு குடும்பத்திற்கு ஐந்து 'கிட்டுகள்' வரை வழங்கப்படும்.
அவர்கள், அந்த 'கிட்டுகளை' பயன்படுத்தி கத்தரி, தக்காளி, வெண்டை குறிப்பாக கீரை வகைகளை பயிரிட்டு பயன்பெறலாம். பயிரிட்ட சில நாட்களில் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை பெற முடியும்.
ஏப்., முதல்வாரம் முறைப்படி இத்திட்டம்
துவக்கி வைக்கப்படவுள்ளது,
என்றார்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Wednesday, March 29, 2017
இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு கட்டுப்பாடு, ஏஐசிடிஇ அதிரடி!!
இன்ஜினியரிங் படிப்பை மாணவர்கள் பாதியில் கைவிட்டால்
அவர்களின் கல்வி கட்டணத்தை 7 நாட்களுக்குள் திருப்பி அளிக்க வேண்டும்
என அகில இந்திய தொழிற்கல்வி இயக்குநரகம் கூறியுள்ளது.
இது தொடர்பாக ஏஐசிடிஇ பிறப்பித்த உத்தரவு:
இது தொடர்பாக ஏஐசிடிஇ பிறப்பித்த உத்தரவு:
மாணவர்கள் கல்லூரியிலிருந்து வெளியேறினால், ரூ.1000 மட்டும் வசூலித்து கொண்டு அவர்கள் கட்டிய மிச்ச பணத்தை திருப்பி கொடுக்க
வேண்டும்.
மாணவர்கள் பாதியில் வெளியேறினாலும், அவர்களிடம்
எஞ்சிய பணத்தை வசூலிக்கக்கூடாது. மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட டிபாசிட் மற்றும்
அவர்களின் சான்றிதழ்களை 7
நாட்களுக்குள் திருப்பி கொடுக்க வேண்டும்.
இந்த விதிகளை மீறும் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை
எடுக்கப்படும். மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட கட்டண தொகையில் இரு மடங்கு
வசூலிக்கப்படும். கல்லூரியில் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Sunday, March 26, 2017
பாம்பன் அருகே ரூ.60 கோடி செலவில் மீன்பிடி துறைமுகம்!!
தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் இலங்கை
கடற்படையினரின் தொல்லையில்லாமல் தொழில் செய்ய தமிழக அரசு மாற்றுத்தொழிலாக ஆழ்கடல்
மீன்பிடிப்புக்கு வழி வகுத்துள்ளது.
இதற்காக ராமேசுவரம், மூக்கையூர், தூத்துக்குடி
ஆகிய ஊர்களில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு ஏற்றவாறு துறைமுகங்கள் அமைக்கப்பட உள்ளன.
இந்த துறைமுகங்கள் அமைய உள்ள இடங்களை பார்வையிடுவதற்காக
நேற்று தமிழக மீன்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, மீன்துறை கூடுதல்
இயக்குனர் மோகனசுந்தரம் மற்றும் அதிகாரிகள் ராமேசுவரம் வந்தனர்.
பின்பு அவர்கள்
மீனவர் சங்க தலைவர்கள் போஸ், தேவதாஸ், சேசு, எமரிட், சகாயம்
உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் பாம்பனை அடுத்துள்ள குந்துகால்
கடற்கரை பகுதிக்கு சென்று துறைமுகம் அமைக்கப்பட உள்ள இடத்தை பார்வையிட்டனர்.
அப்போது தமிழக மீன்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி நிருபர்களிடம்
கூறியதாவது:–
மீனவர்கள் மாற்றுத்தொழிலில் ஈடுபடுவதற்கு முதல் கட்டமாக
ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு தமிழகம் முழுவதும் 170 மீனவர்களுக்கு மானியத்துடன்
கூடிய கடன்உதவி வழங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.60 கோடி செலவில் குந்துகாலில்
துறைமுகம் அமைக்கப்பட உள்ளது. இந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தோம்.
இதேபோல தூத்துக்குடி,
மூக்கையூர் ஆகிய பகுதிகளையும் ஆய்வு செய்து அறிக்கை
சமர்ப்பிக்கப்படும். அரசு அனுமதி வழங்கியவுடன் அதற்கான பணிகள் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Wednesday, March 15, 2017
வானொலி தொகுப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!!
வானொலி தொகுப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
அகில இந்திய வானொலியின் எஃப்.எம். ரெயின்போ பண்பலை ஒலிபரப்பில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கத் தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக அகில இந்திய வானொலி நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அகில இந்திய வானொலியின் எஃப்.எம். ரெயின்போ பண்பலை ஒலிபரப்பில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கத் தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக அகில இந்திய வானொலி நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நல்ல பேச்சாற்றல், கவிதை, கதை, கட்டுரைகள்
படிப்பதில்,
எழுதுவதில் ஆர்வமுள்ள இளைஞர்களிடமிருந்து ஒப்பந்த
அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பக் கட்டணமாக ரூ. 300 செலுத்த
வேண்டும்.
விண்ணப்பிக்க விரும்புவோர் படிவங்களை
விண்ணப்பிக்க விரும்புவோர் படிவங்களை
அகில இந்திய வானொலி நிலையம்,
இந்திரா நகர், கோரிமேடு,
புதுச்சேரி - 6
என்ற முகவரியில் அலுவலக நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 6
மணி வரை நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம்.
தகுந்த சான்றுகளுடன் நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் மார்ச் 31-ஆம் தேதிக்குள் வானொலி நிலையத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுந்த சான்றுகளுடன் நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் மார்ச் 31-ஆம் தேதிக்குள் வானொலி நிலையத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Monday, March 13, 2017
துபாயில் ஈமான் அமைப்பு சார்பில் நாளை (மார்ச்-15) ரத்ததான முகாம்!!
துபாயில் ஈமான் அமைப்பு சார்பில் நாளை ரத்ததான முகாம்
நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரத்த தான முகாமில் பங்கேற்பவர்களுக்கு அமீரக
அடையாள அட்டை அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈமான் கல்சுரல் சென்டர் சார்பில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு துபாய் ரசிதியா அரேபியா டாக்சி அலுவலகத்தில் ரத்ததான முகாமை நடத்த இருக்கிறது. அமீரக சுகாதாரத்துறையுடன் இணைந்து இந்த ரத்ததான முகாம் நடத்தப்படுகிறது.
ஈமான் கல்சுரல் சென்டர் சார்பில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு துபாய் ரசிதியா அரேபியா டாக்சி அலுவலகத்தில் ரத்ததான முகாமை நடத்த இருக்கிறது. அமீரக சுகாதாரத்துறையுடன் இணைந்து இந்த ரத்ததான முகாம் நடத்தப்படுகிறது.
இந்த ரத்ததான முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் 050 51 96433,
052 7778341 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்யலாம்.
052 7778341 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்யலாம்.
மேலும் ரத்த தான முகாமில் பங்கேற்க விரும்பும் நபர்க்ள
கண்டிப்பாக அமீரக அடையாள அட்டை கொண்டு வரவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Sunday, March 12, 2017
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுச்சாவடிகள் 2,099 ஆக அதிகரிப்பு!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான
ஓட்டுச்சாவடிகள் 2,099
ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கான வரைவு பட்டியல் கலெக்டர்
அலுவலகத்தில் அரசியல் கட்சியினர் முன்னிலையில் நேற்று வெளியிடப்பட்டது.
கடந்த அக்., மாதம் நடக்க இருந்த
உள்ளாட்சி தேர்தல் சென்னை உயர்நீதிமன்றம் தடையால்
நிறுத்தப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு சட்டசபை வாக்காளர் பட்டியல்படி
வரைவு ஓட்டுச்சாவடி பட்டியலை இறுதி செய்ய மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.
இதன்படி 2016
செப்., 2017 ஜன., 5ல் வெளியான சட்டசபை வாக்காளர் பட்டியல்படி உள்ளாட்சி, நகராட்சி
வார்டு வாரியான ஓட்டுச்சாவடி பட்டியல் தயாரிப்பு பணி துவங்கியது.
இப்பட்டியலை கலெக்டர் நடராஜன் வெளியிட்டார். இதன்படி, ராமநாதபுரம்
நகராட்சியில் 62,
பரமக்குடியில் 78,
ராமேஸ்வரத்தில் 35,
கீழக்கரையில் 33
வீதம் 208 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.
மண்டபம் பேரூராட்சியில் 18,
சாயல்குடி, அபிராமம், ஆர்.எஸ்.மங்கலம், தொண்டி, முதுகுளத்துõர், கமுதி
பேரூராட்சிகளில் தலா 15
வீதம் 110 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.
ஊராட்சி ஒன்றியங்களில்
ராமநாதபுரத்தில் 124,
திருப்புல்லாணியில் 139,
மண்டபத்தில் 188,
ஆர்.எஸ்.மங்கலத்தில் 148,
திருவாடானையில் 183,
பரமக்குடியில் 145,
போகலுõரில் 94,
நயினார்கோவிலில் 118,
முதுகுளத்துõரில் 178,
கமுதியில் 206,
கடலாடி ஒன்றியத்தில் 258
வீதம் 1,781 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.
மேலும், தலா 102 ஆண், பெண்
ஓட்டுச்சாவடிகள் உள்பட 2,099
ஓட்டுச்சாவடிகள் உள்ளன.
கலெக்டர் நடராஜன் கூறுகையில், கடந்த 2011 தேர்தலில் அனுமதிக்கப்பட்ட ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கையை விட 59 ஓட்டுச்சாவடிகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள், அரசியல்
கட்சிகளின் கோரிக்கை மனு வந்தால் பரிசீலனைக்கு பிறகு உரிய திருத்தங்களுடன் இறுதி
பட்டியல் மார்ச் 21ல் வெளியிடப்படும்,
என்றார்.
ஊராட்சிகளின் உதவி இயக்குனர் செல்லத்துரை, கலெக்டரின்
நேர்முக
உதவியாளர்(தேர்தல்) உமா மகேஸ்வரி, பா.ஜ., சார்பில்
நம்புராஜன்,
ராமச்சந்திரன், காங்., சார்பில்
முருகேசன்,
தேசியவாத காங்., சார்பில் பகுர்தீன், மார்க்சிஸ்ட்
கம்யூ., நிர்வாகி ஜான் சவுந்தரராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Thursday, March 9, 2017
மீனவர் உடலை வாங்க மறுத்து தொடரும் போராட்டத்தில் SDPI கட்சியும் இணைந்தது!!
மீன்
பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தி வந்த
தாக்குதல்களின் உச்சகட்டமாக, கடந்த 6–ந் தேதி
இரவு ராமேசுவரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரிட்ஜோ என்ற மீனவர் சுட்டுக்கொலை
செய்யப்பட்டார்.
இந்த
படுகொலை, ராமேசுவரம்
தீவு மற்றும் தமிழக கடலோர மீனவ கிராமங்களில் பெரும் கொந்தளிப்பை
ஏற்படுத்தியுள்ளது.
மீனவர்
பிரிட்ஜோ படுகொலைக்கு நியாயம் கேட்டும், மீனவர்களின் பாதுகாப்புக்கு
உத்தரவாதம் அளிக்க மத்திய அரசை வற்புறுத்தியும், ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடம்
குழந்தை ஏசு ஆலயம் முன்பு மீனவக்குடும்பத்தினர் நேற்றுமுன்தினம் அறவழிப்போராட்டம்
தொடங்கினார்கள். இந்தப்போராட்டம் நேற்று 2–வது நாளாக நீடித்தது.
முதல்
நாளை விட 2–வது
நாளான நேற்று அதிக அளவில் பெண்களும், மீனவர்களும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக
போராடிய இளைஞர்களும் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அங்கேயே சமையல் செய்து உணவு
வழங்கப்பட்டது.
மத்திய
வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நேரில் வந்து இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள்
நடைபெறாது என்று உறுதி அளிப்பதுடன், இலங்கை சிறைகளில் உள்ள தமிழக
மீனவர்களையும், படகுகளையும்
விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்று வரும் இந்த
போராட்டத்துக்கு அரசியல் கட்சியினர் நேற்று வந்து ஆதரவு தெரிவித்துப்பேசியதுடன், மீனவர் பிரிட்ஜோ குடும்பத்தினரை
சந்தித்து ஆறுதலும் கூறினர்.
உண்ணாவிரத போராட்டத்தில் SDPI கட்சி கிழக்கு மாவட்ட செயலாலர் சகோ. செய்யது இப்ராஹிம் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். உடன் மாவட்ட நிர்வாகிகள்.SDPI செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரத போராட்டத்தில் SDPI கட்சி கிழக்கு மாவட்ட செயலாலர் சகோ. செய்யது இப்ராஹிம் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். உடன் மாவட்ட நிர்வாகிகள்.SDPI செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே, மீனவர் பிரிட்ஜோவின் உடல் பிரேத
பரிசோதனை முடிந்து தொடர்ந்து ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரியிலேயே வைக்கப்பட்டுள்ளது.
தங்கள்
கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை உடலை பெறப்போவதில்லை என்று மீனவர்கள் தொடர்ந்து
போராடி வருகின்றனர்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Wednesday, March 8, 2017
இன்று துவங்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, ராமநாதபுர மாவட்டத்தில் 18,220 பேர் எழுதுகின்றனர்!!
மாவட்டத்தில் இன்று துவங்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை
18,220 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று(மார்ச் 8) துவங்கி மார்ச் 30
வரை நடக்கிறது.
ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் 138 பள்ளிகளைச் சேர்ந்த 5,037
மாணவர்கள், 5,354 மாணவிகள் 42 மையங்களில் எழுதுகின்றனர். பரமக்குடி கல்வி மாவட்டத்தில் 106 பள்ளிகளைச் சேர்ந்த 3,907
மாணவர்கள், 3,922 மாணவிகள் 27 மையங்களில் எழுதுகின்றனர். மாற்றுத்திறன் மாணவர் 34 பேர் தேர்வெழுத தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
10
தேர்வறைக்கு ஒரு நிற்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு
நேரங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைகேடுகள் நடக்காமலிருக்க 69 மையங்களை
ஆய்வு செய்ய 6
மண்டலமாக பிரித்து 6 ஆய்வு அலுவலர்கள்
நியமிக்கப்பட்டுள்ளனர்.
கலெக்டர் நடராஜன், எஸ்.பி., டி.எஸ்.பி.,க்கள், சப்-கலெக்டர், ஆர்.டி.ஓ., தேர்வு
மையங்களை பார்வையிடுகின்றனர் என முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு கூறினார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுரத்தில் மார்ச் 10ல் வேலைவாய்ப்பு முகாம்!!
தனியார் துறை வேலைவாய்ப்பை ஊக்கப்படுத்தும் வகையில், வேலை
வாய்ப்புத்துறை சார்பில் மாவட்டங்களில் மாதந்தோறும் தனியார் வேலைவாய்ப்பு சந்தை
நடத்தப்படுகிறது.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் தனியார் நிறுவனங்களில்
பணியமர்த்தப்படுகின்றனர்.
இதன்படி மார்ச் 10 காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு
சந்தை நடக்கிறது.
5
பாஸ்போர்ட் அளவு போட்டோ, அனைத்து
கல்விச்சான்றுகளுடன் இதில் பங்கேற்க வேண்டும்.
தனியார் துறையில் வேலை பெறுவதனால் வேலைவாய்ப்பு அலுவலக
பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது, என கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Tuesday, March 7, 2017
ஊரணியை தூர்வாரிய இளைஞர் பட்டாளம்!!
ஊரணியில் படர்ந்திருந்த அல்லி, தாமரை
செடிகளை இளைஞர்கள் அகற்றி துார் வாரினர்.
திருப்புல்லாணி ஒன்றியம், வண்ணாங்குண்டு
ஊராட்சி பெரிய ஊரணியில் தாமரை, அல்லிச்செடிகளின் ஆக்கிரமிப்பால் கிராம
மக்கள் குளிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால், தோல்
சம்பந்தப்பட்ட நோய்கள்,
அலர்ஜி ஏற்பட்டது.
3
ஏக்கர் பரப்பளவு கொண்ட வண்ணாங்குண்டு பெரிய ஊரணியில் நேற்று
காலை 8 மணிக்கு 90
இளைஞர்கள் ஒன்றிணைந்தனர். கைகளில்
முள்ளு கரண்டி,
மண்வெட்டி, கடப்பாரை, அரிவாள் சகிதம்
துப்புறவுப்பணியில் ஈடுபட்டு, ஊரணியை ஆக்கிரமித்திருந்த தாமரை, அல்லிச்செடிகளை
குழுக்களாக சென்று அகற்றினர்.
இளைஞர் சங்க தலைவர் அர்ஷத் அலி, 23, கூறுகையில்,
எங்கள் இளைஞர் சங்கத்தில் 120 பேர்
உள்ளனர். பள்ளி,
கல்லுாரிகளில் படித்து வருகிறோம். விடுமுறை நாட்களில் ஒன்று
கூடி பொது விஷயங்கள் குறித்து விவாதித்தும், அதற்கு தீர்வு காண்பதையும்
வழக்கமாக கொண்டுள்ளோம். தற்போது கிணறுகளில் தண்ணீர் வற்றிவிட்ட
நிலையில் குளிப்பதற்கு திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் அன்றாடம்
பயன்படுத்தும் ஊரணியை துார் வாரி செடி, கொடிகளை அகற்றி
பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு பல முறை ஊராட்சி மற்றும் திருப்புல்லாணி ஒன்றிய
நிர்வாகத்திடம் முறையிட்டோம். இரண்டு ஆண்டுகளாக எந்த
நடவடிக்கையும் இல்லாததால்,
இளைஞர்களாகிய நாங்களே களம் இறங்கி துாய்மை பணியில்
ஈடுபட்டுள்ளோம். இதுவரை மூன்று முறை இவ்வாறு அகற்றினாலும், மீண்டும், தாமரை, அல்லி
செடிகள் வளர்வது மட்டும் நிற்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் முழுமையாக அகற்றி
ஊரணியை மராமத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
செய்தி: திரு. அஸ்கர் அலி, வண்ணாங்குண்டு
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் இருக்கைளுக்கு கோரிக்கை!!
ராமநாதபுரம் மாவட்ட தாலுகா அலுவலகத்தில் இருக்கைகள் வசதி
இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ராமநாதபுரம் வண்டிகார தெருவில் தலைமை தாலுகா அலுவலகம்
செயல்பட்டு வருகிறது. உச்சிப்புளி, மண்டபம், தேவிபட்டிணம் உள்ளிட்ட சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான
கிராமமக்கள் தினந்தோறும் பல்வேறு சான்றிதழ் வாங்குவதற்காக அங்கு வருகின்றனர்.
இந்நிலையில் தாலுகா அலுவலகத்தில் மனு அளிக்க வரும்
பொதுமக்களுக்கு போதுமான இருக்கை வசதிகள் இல்லை. இதனால் தினந்தோறும் தாலுகா
அலுவலகம் வரும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இருக்கைகள் இல்லாததால் பொதுமக்கள் அனைவரும் தாலுகா அலுவலகத்தின் முன்பு உள்ள வெளி வளாகத்தில் அமர்ந்து வருகின்றனர். நாளுக்கு நாள் தாலுகா அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் இருக்கைகள் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Monday, March 6, 2017
மூன்று வாரங்களாக பூட்டியிருக்கும் கீழக்கரை “அம்மா” மருந்தகம்!!
கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள அம்மா மருந்தகம்
கடந்த மூன்று வாரங்களாக பூட்டியிருப்பதால் வாடிக்கையாளர்கள் தவிக்கின்றனர்.
கீழக்கரை நகராட்சியில் 55 ஆயிரம் மக்கள்
வசிக்கின்றனர். ராமநாதபுரம், கீழக்கரை, ராமேஸ்வரம், பரமக்குடி
நகராட்சிகளில் 15
சதவீதம் தள்ளுபடியில் ஏழை மக்கள் பயனடையும் வகையில், 'அம்மா மருந்தகங்களை கடந்த 2014 அரசு பயன்பாட்டிற்கு கொண்டு
வந்தது.
கூட்டுறவு மொத்த பண்டகசாலையின் கட்டுப்பாட்டில் உள்ள ராம்கோ
நிறுவனத்தால் மருந்து,
மாத்திரைகள் மொத்தமாக கொள்முதல் செய்யப்படுகிறது.
கீழக்கரையில் உள்ள அம்மா மருந்தகத்தில் பணியாளர்
பற்றாக்குறை உள்ளது.
ஒரு பொறுப்பாளர், ஒரு பெண் பணியாளர் உள்ளனர்.
கடந்த மூன்று வாரங்களாக மருந்தகம் பூட்டியே கிடப்பதால் மருந்துகள் வாங்க முடியாமல்
மக்கள் ஏமாற்றமடைகின்றனர்.
அதிகாரிகளும் இதனை கண்டுகொள்ளவில்லை. மாவட்ட நிர்வாகம்
தலையிட்டு மருந்தகம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செய்தி: தினசரிகள்
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுரம் மாவட்டத்தில் பாதியாக குறைந்த காவிரி குடிநீர் வினியோகம்!!
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு காவிரி குடிநீர் வினியோகம்
பாதியாக குறைந்ததால் மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மக்களின் தாகம் தீர்க்க 'ராமநாதபுரம்
மாவட்ட கூட்டு குடிநீர் திட்டம்' என்ற பெயரில் காவிரி குடிநீர் திட்டம் 2009 ஜூலை 15ல் 616
கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டது.
ராமநாதபுரம்,
ராமேஸ்வரம், பரமக்குடி, கீழக்கரை
நகராட்சிகள்,
ஏழு பேரூராட்சிகள் உள்பட அனைத்து கிராமங்களின் குடிநீர்
தேவை பூர்த்தி செய்யப்பட்டது.
திருச்சி அருகே முத்தரசநல்லுாரில் காவிரி ஆற்றில்
நீரேற்றும் நிலையம் அமைத்து தினமும் 780 லட்சம் லிட்டர் தண்ணீர்
பம்பிங் செய்யப்படுகிறது. இதில் ராமநாதபுரம் மாவட்ட கூட்டு குடிநீர் திட்டத்திற்கு
மட்டும் 480
லட்சம் லிட்டர் பம்பிங் செய்யப்படுகிறது. மீதம்
திருப்பத்துார்,
சிவகங்கை பகுதிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
வறட்சியாலும், மேட்டூர் அணையில்
நீர்மட்டம் குறைந்ததாலும் காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் அளவு
குறைக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திற்கு குடிநீர் பம்ப்பிங் செய்யப்படும்
பகுதி காவிரி ஆற்றின் கடை கோடியில் உள்ளது.
இதனால், மற்ற மாவட்ட குடிநீர் திட்டங்களுக்கு
போக குறைவான நீரே வந்து சேர்கிறது. தற்போது, 480 லட்சம் லிட்டருக்கு
பதில் 230 லட்சம் லிட்டர் தண்ணீர்தான் கிடைக்கிறது. இன்னும் ஒரு மாதத்தில் இதுவும்
கிடைக்காது. எனவே,
மாவட்ட மக்கள் குடிநீருக்காக தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் செல்லத்துரையிடம்
கேட்டபோது,
தற்போது பாதியளவு நீர்தான் பம்பிங் செய்யப்படுகிறது. இதனால், மாவட்டத்தை
இரண்டு பகுதியாக பிரித்து நான்கு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கி வருகிறோம்.
குடிநீரை மக்கள் வீணடிக்க கூடாது.
இதே நிலை நீடித்தால், காவிரி குடிநீரை மட்டுமே
நம்பியுள்ள 300
கிராம மக்கள் அதிகம் பாதிக்கப்படுவர். இங்கு மாற்று
குடிநீர் திட்டங்களையும் செயல்படுத்த வழியில்லை. டேங்கர் மூலம் மட்டுமே குடிநீர்
வழங்க முடியும்,
என்றார்.
செய்தி: திரு. ஷேக், இராமநாதபுரம்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
Saturday, March 4, 2017
ராமநாதபுர மாவட்டம் முழுதும் பரவலாக நல்ல மழை!!
ராமநாதபுரத்தில் பெய்த திடீர் மழையால் மக்கள்
மகிழ்ச்சியடைந்தனர்.
தென்மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
தென்மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை விட்டு விட்டு மழை பெய்தது. ராமநாதபுரம், கடலாடி, திருவாடானை,பரமக்குடி, போகலுார் உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்தது.
இந்த மழையால் பூமி குளிர்ந்தது. மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து இதுபோல் ஒன்றிரண்டு நாட்களாவது மழை பெய்தால் வெப்பம் தணிவதுடன், நிலத்தடி நீர்மட்டம் உயரும், என மக்கள் தெரிவித்தனர்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)