முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, May 29, 2023

ராமநாதபுரம் மாவட்டத்தில் வாகன விற்பனை அங்காடி இயக்க விண்ணப்பிக்கலாம் - கலெக்டர்

No comments :

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

 

ராமநாதபுரம் மாவட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய மதி எக்ஸ்பிரஸ் என்ற வாகனம் வழங்கப்படுகிறது. இந் திட்டத்தில் பயன்பெற தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.

 

மதி எக்ஸ்பிரஸ் வாகன அங்காடி இயக்க விண்ணப்பிக்கும் உறுப்பினர்கள் சுய உதவிக்குழு உறுப்பி னராக இருக்க வேண்டும். முன்னு ரிமை அடிப்படையில் மகளிர் மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப் பட்ட மாற்றுத்தி றனாளிகள், மாற்றுத்தி றனாளி விதவைகள், முதிர் கன்னி மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆண் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு மட்டுமே வாகன விற்பனை அங்காடி வழங்கப்படும்.

 

தேர்வு செய்யப்படும் மாற்றுத்திறனாளி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் சிறப்பு சுய உதவிக்குழு உறுப்பினராக இருக்க வேண்டும். இவர்கள் சிறப்பு சுய உதவிக்குழு தொடங்கி ஓரு ஆண்டிற்கு மேல் தொடர்ந்து உறுப்பினராக இருக்க வேண்டும். வாகன அங்காடிக்கு வாடகை NRLM இணையதளத்தில் பதிந்து செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. வாகன அங்காடியின் உரிமை மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்திடமே இருக்கும்.

 


அங்காடி நடத்துவதற்கான வாய்ப்பு மட்டுமே பயனாளிக்கு வழங்கப்படும். வாகனத்தை விற்பனை செய்யவோ, வேறு நபருக்கு மாற்றவோ உரிமை இல்லை. வாகனத்தில் ஏற்படும் சிறிய அளவிலான பழுதை பயனாளிகளே மேற்கொள்ள வேண்டும். வாகனத்திற்கு பயனாளியே மின்னேற்றம் (Electric Charge) செய்து பயன்படுத்த வேண்டும். வாகன அங்காடி நடத்த இயலாத பட்சத்தில் மீண்டும் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்திடம் வாகனத்தை எவ்வித பழுதுமின்றி ஒப்படைக்க வேண்டும். விதிமுறைகளை மீறி செயல்படும் உறுப்பினரிடம் இருந்து வாகன அங்காடி திரும்ப பெறப்படும். தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு மேல் வாகனம் இயக்கப்படவில்லை எனில் வாகன அங்காடி திரும்ப பெறப்பட்டு தகுதியான வேறு பயனாளிக்கு வழங்கப்படும். தகுதியுள்ள மாற்றுத்தி றனாளிகள் தங்களது விண்ணப்பங்களை வருகிற 31-ந் தேதிக்குள்

திட்ட இயக்குநர்,

மகளிர் திட்டம்,

கலெக்டர் அலுவலகம் வளாகம்,

ராமநாதபுரம்

 

என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள வட்டார இயக்க மேலாண்மை அலகு, (மகளிர் திட்டம்) நகல் களையும் அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Friday, May 19, 2023

''நான் முதல்வன்" திட்டத்தின்கீழ் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் ''நான் முதல்வன்" திட்டத்தின்கீழ் மத்திய அரசு பணிகளுக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளான 

பணியாளர் தேர்வாணையம் (SSC),

ரயில்வே தேர்வு வாரியம் (RRB),

வங்கி பணியாளர் தேர்வு குழுமம் (IBPS) 


உள்ளிட்ட தேர்வுகளை எழுதி வெற்றிபெற தேவையான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

 

மேற்கண்ட மத்திய அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளை தமிழகத்தைச் சேர்ந்த போட்டித்தேர்வர்கள் பெருமளவில் பங்கு கொண்டு வெற்றிபெறும் நோக்கத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த பயிற்சி வகுப்புகள் வருகிற 25-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு 100 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

 


இதில் கலந்து கொள்ள விரும்பும் பட்டப்படிப்பு முடித்த 21 வயது முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்கள் வருகிற 20-ந் தேதிக்குள் தங்களது பெயரை ஆன்லைனில் கீழ்கண்ட லிங்கின் வாயிலாக https://candidate.tnskill.tn.gov.in/CE-NM/TNSDC_REGISTRATION.ASPX தவறாது பதிவு செய்து கொள்ள வேண்டும்.

 

இது குறித்த முழு விவரங்களை https://www.naanmudhalvan.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

 

இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது அலுவலக தொலைபேசி எண் 04567-230160 வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Tuesday, May 9, 2023

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 96.30 சதவீதம் தேர்ச்சி!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 96.30 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் 6,790 மாணவர்கள், 7,516 மாணவிகள் ஆக மொத்தம் 14,306 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். திங்கள்கிழமை தேர்வு முடிவுகள் வெளியானது.

 

இதில் 6,413 மாணவர்கள், 7,364 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதன்படி மாணவர்கள் 94.45 சதவீதம் பேரும், மாணவிகள் 97.98 சதவீதம் பேரும் ஆக மொத்தம் 96.30 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர்.

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் 70 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 18 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. அரசு உதவிபெறும் 37 மேல்நிலைப் பள்ளிகளில் 8 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. 53 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில்,

43 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. மொத்தமாக 160 பள்ளிகளில் 73 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது.

 




ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்தாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் 97.20 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் மூன்றாவது இடம் பெற்றது. நிகழாண்டு 96.30 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 12-ஆவது இடத்துக்கு சென்றது.

 

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுத்து கூறியதாவது:

17 பள்ளிகளில் முழுமையாக பள்ளிக்கு வராத மாணவர்கள் தேர்வு எழுதியதால் கடந்தாண்டை விட தேர்ச்சி சதவீதம் குறைந்தது. இதுகுறித்து அந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் விசாரணை நடத்த உள்ளதாகத் தெரிவித்தார்.

 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.


முகவை முரசு சார்பாக மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.