முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, March 11, 2015

அபுதாபியில் நடைபெற்ற அமீரக காயிதேமில்லத் பேரவை சார்பில் நிறுவன தின கருத்தரங்கம்

No comments :
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 68-வது நிறுவன தினத்தை முன்னிட்டு அமீரக காயிதேமில்லத் பேரவை சார்பில் நிறுவன தின கருத்தரங்கம் நேற்று மாலை அபுதாபியில்  நடைபெற்றது.

அமீரக காயிதேமில்லத் பேரவையின் மக்கள் தொடர்புச் செயலாளர் ஆவை A.S.முஹம்மது  அன்சாரி இல்லத்தில் நடைபெற்ற இக் கருத்தரங்கத்திற்க்கு பேரவையின் துணை தலைவர் கனிமொழிக் கவிஞர் களமருதூர் ஷம்சுத்தீன் ஹாஜியார் தலைமை வகித்தார்.அமீரக தொழிலதிபர் லால்பேட்டை முஹம்மது அலி முன்னிலை வகித்தார். மானியம் ஆடூர் மௌலவி இல்யாஸ் ஃபாஜில் மன்பஈ இறைமறை வசனங்களை ஓதினார்.பேரவையின் அபுதாபி மண்டலச் செயலாளர் அதிரை ஷாஹுல் ஹமீத் வரவேற்புறையாற்ற அதிரை கவியன்பன் கலாம் தாய்ச்சபையைப் பற்றி கவிதை வாசித்தார்.பேரவையின் அமைப்புச் செயலாளர் லால்பேட்டை மௌலவி அப்துர்ரஹ்மான் அறிமுவுரை நிகழ்த்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.


இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைமை நிலைய பேச்சாளர் லால்பேட்டை சல்மான் ஃபாரிஸ் துவக்கவுரை நிகழ்த்தினார். அய்மான் சங்க பொதுச்செயலாளர் S.A.C. ஹமீத்,மௌலவி ஹுசைன் மக்கீ ஆலிம்,பாரதி நட்புக்காக கலீல்,அதிரை காதர் மைதீன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.  சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருந்த தொழிலதிபர் கனியூர் மௌலவி இஸ்மாயில் நாஜி,நீடூர் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபுக்கல்லூரியின் பொதுச்செயலாளர் எஸ்கொயர் சாதிக்,தொழிலதிபர் கும்பகோணம் ஜர்ஜிஸ் ஆகியோரின் கருத்துரைகள் நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தது.

இவர்களோடு நீடூரைச் சார்ந்த முஹம்மது இக்பால்,நஜீர் அஹ்மத் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருந்தனர். பேரவையின் பொருளாளர் S.K.S. ஹமீதுர்ரஹ்மான் தாய்ச்சபையின் கொள்கை கோட்பாடுகளைப் பற்றியும்,அதன் செயல்பாடுகளை விளக்கியும் சிறப்புரையாற்றினார். பேரவையின் மக்கள் தொடர்புச் செயலாளர் ஆவை A.S.முஹம்மது  அன்சாரி நன்றியுரை நிகழ்த்த அபுதாபி காயல்பட்டணம் ஜமாஅத் தலைவர் மௌலவி ஹபீபுர்ரஹ்மான் ஆலிம் அவர்களின் துஆவுடன் கருத்தரங்கம் இனிதே நிறைவுப் பெற்றது. இக்கருத்தரங்கில் அமீரக காயிதேமில்லத் பேரவையினர்,அய்மான் சங்கத்தினர்,பல்வேறு ஊர்ஜமாஅத்தினர்கள், சமுதாயப் பிரமுகர்கள் ஆகியோர் திரளாக பங்கேற்றனர். கருத்தரங்கத்திற்க்கான ஏற்பாடுகளை அமீரக காயிதேமில்லத் பேரவையின் அபுதாபி மண்டல நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.


செய்தி: தினகரன்
பகிர்வு: திரு.ஹமீது ரஹ்மான்

திரு‌ப்​பு‌ல்​லாணி திரு‌க்​‌கோ​யி‌ல் ப‌ங்​கு​னி‌த் திரு​விழா

No comments :
திரு‌ப்​பு‌ல்​லாணி அரு‌ள்​மிகு ஆதி​‌ஜெ​க‌ன்​னா​த‌ப் ‌பெரு​மா‌ள் திரு‌க்​‌கோ​யி‌ல் ப‌ங்​கு​னி‌த் திரு​விழா,​​ மார்ச் 25 ஆ‌ம் ‌தேதி கா‌ப்​பு‌க்​க‌ட்​டு‌தலு​ட‌ன் ‌தொட‌ங்​கு​வ​தாக,​​‌செ‌வ்​வா‌ய்‌க்​கி​ழ‌மை ‌கோயி‌ல் க‌ண்​கா​ணி‌ப்​பா​ள‌ர் க‌ண்​ண‌ன் ‌தெரி​வி‌த்​தா‌ர்.​

இ‌து குறி‌த்‌து,​​ அவ‌ர் ‌மேலு‌ம் கூறி​ய‌து:​ ‌வைண​வ‌த் திரு‌த்​த​ல‌ங்​க‌ள் 108 இ‌ல் திரு‌ப்​பு‌ல்​லாணி ஆதி​‌ஜெ​க‌ன்​னா​த‌ப் ‌பெரு​மா‌ள் திரு‌க்​‌கோ​யி‌ல் 44 ஆவ‌து திரு‌த்​த​ல​மாக திக‌ழ்​கி​ற‌து.​ ராமா​யண கால‌த்தி​லி​ரு‌ந்‌தே ப‌ல்​‌வேறு வர​லா‌ற்​று‌ச் சிற‌ப்​பு‌க்​க​‌ளை​யு​‌டைய இ‌த்​தி​ரு‌க்​‌கோயி​லி‌ல்,​​ ஆ‌ண்​டு​‌தோ​று‌ம் ப‌ங்​கு​னி‌த் திரு​விழா சிற‌ப்​பா​க‌க் ‌கொ‌ண்​டா​ட‌ப்​ப​டு​கி​ற‌து.​
 
இ‌ந்த ஆ‌ண்​டு‌க்​கான திரு​விழா,​​ இ‌ம்​மா​த‌ம் 25ஆ‌ம் ‌தேதி இரவு கா‌ப்​பு‌க்​க‌ட்​டு‌ம் ​ உ‌ற்​ச​வ‌த்​‌து​ட​னு‌ம்,​​ மறுநாள் கா‌லை​யி‌ல் ‌கொடி​‌யே‌ற்​று‌ம்   ‌வைப​வ‌த்​‌து​டனு‌ம் ‌தொட‌ங்​கு​கி​ற‌து.​


ஏ‌ப்​ர‌ல் 3 இ‌ல் ‌தே‌ரோ‌ட்​ட​மு‌ம்,​​ 4 இ‌ல் தீ‌ர்‌த்​த​வாரி நிக‌ழ்‌ச்​சி​யு‌ம் ந‌டை​‌பெ​று​கி​ற‌து.​இத‌ற்​கான ஏ‌ற்​பா​டு​க‌ளை,​​ ராம​நா​த​பு​ர‌ம் சம‌ஸ்​தா​ன‌த்​தி‌ன் திவா‌ன் வி.​ ம‌கே‌ந்​தி​ர‌ன்,​​ சரக அலு​வ​ல‌ர் சி.​ சுவா​மி​நா​த‌ன் ஆகி​‌யோ​ரி‌ன் த‌லை​‌மை​யி​லான குழு​வி​ன‌ர் ‌செ‌ய்‌து வரு​கி‌ன்​ற​ன‌ர் என‌த் ‌தெரி​வி‌த்​தா‌ர்.​

கீழக்ரையில் திருட்டு வி சி டி விற்றதாக இருவர் கைது.

No comments :
கீழக்கரையில் புது பட சி டி க்கள் விற்பனைசெய்யப்படுவதாக கீழக்கரை காவல் துறையினருக்கு தகவல் வந்ததை அடுத்து கீழக்கரை காவல் நிலைய துணை ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் தலைமையிலான காவல் துறையினர் கடைகளில் தீவிர சோதனை நடத்தியதினர்.

அப்போது அளவைகரவாடி பகுதியை சேர்ந்த முத்துகுமார் (34) என்பவரது கடையில் 43  புதுப்பட சீ டீக் களும் இதே போல வள்ளல்  சீதக்காதி சாலையில் முகைதீன் என்பவரது கடையில் 41 புதுபட  சீ டிக்களும் கைப்பற்றப்பட்டன இது தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரையும்  கைது செய்தனர்.

செய்தி: கீழக்கரை நகர் நல இயக்கம்