முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, January 14, 2016

ஊட்டி தாவரவியல் பூங்காவில் இலவச வை–பை வசதி!!

No comments :
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அரசு தாவரவியல் பூங்கா உள்ளது. சுமார் 450 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவுக்கு தினந்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.

அரசு தாவரவியல் பூங்காவில் பசுமையான புல்வெளிகள்வண்ண வண்ண மலர்கள் இடம் பெற்று உள்ளன. இவை அருகே நின்று புகைப்படம் எடுக்கும் சுற்றுலா பயணிகள் தங்களது புகைப்படங்களை உறவினர்களுக்கும்நண்பர்களுக்கும் அனுப்ப இணையதள வசதி இல்லாமல் தவித்து வந்தனர்.

குறிப்பாக ஊட்டி மலைப்பிரதேசமாக இருப்பதால் சிக்னல் கிடைப்பதில் இடையூறுகள் நிலவி வந்தன. இந்த நிலையில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பழமை வாய்ந்த பூங்காக்களை நவீன மயமாக்கும் சர்வதேச இணைய திட்டத்தில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவும் இணைக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து அரசு தாவரவியல் பூங்காவை நவீனப்படுத்தும் விதமாக தடையில்லா இணையதள இலவச வைபை வசதி இன்று முதல் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இன்று காலை நடைபெற்ற விழாவில் நீலகிரி மாவட்ட கலெக்டர் சங்கர் இணைய வசதியை தொடங்கி வைத்தார்.

இதன்மூலம் சுற்றுலா பயணிகள் அரசு தாவரவியல் பூங்காவில் இருந்தபடியே தங்களது புகைப்படங்களை எடுத்து உறவினர்களுக்கும், சமூக வளைதளங்களான பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்டவைகளில் பகிர்ந்து கொண்டனர்.

இதுகுறித்து சுற்றுலா பயணி ஒருவர் கூறும்போது ஊட்டிக்கு சுற்றுலா வரும்போது இயற்கை காட்சிகளை படம் பிடித்து உறவினர்களுக்கு அனுப்ப விரும்புவோம். ஆனால் செல்போனில் சிக்னல் கிடைக்காத காரணத்தால் இணையதள மையங்களை தேடி அலைந்த நிலை இருந்தது. இந்த நிலையில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள தடையில்லா இணைய தள வசதி மூலம் உடனுக்குடன் இணைய வசதியை பயன்படுத்தி வருகிறோம். இது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்வு: திரு. ஃபைசுர், துபாய்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் அருகே காஞ்சிரங்குடியில் எருதுக்கட்டுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!!

No comments :
ராமநாதபுரம் அருகே காஞ்சிரங்குடியில் எருதுக்கட்டுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி கிராமப் பொதுமக்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெரும்பாலான கிராமங்களில் எருதுக்கட்டு எனப்படும் மாடு பிடித்தல் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம்.

காளைமாட்டின் கழுத்தில் நீண்ட வடக் கயிற்றினைக் கட்டி, அதன் மற்றொரு பகுதியை ஒருவர் கையில் வைத்திருப்பார். காளை மாடு வயலில் வேகமாக  ஓடும் போது அதைப் பிடிப்பது எருதுகட்டு எனப்படுகிறது.

இதற்கு அனுமதி வழங்கிட வலியுறுத்தி ராமநாதபுரம் அருகே காஞ்சிரங்குடியில் உள்ள அய்யனார் கோயில் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், எருதுக்கட்டு பேரவையின் மாவட்ட தலைவர் கே.ஆதித்தன் தலைமை வகித்தார். காஞ்சிரங்குடி ஊராட்சிமன்றத் தலைவர் காளிமுத்து, துணைத் தலைவர் வீரம்மாள் மற்றும் அன்வர் உள்பட மேலவலசை, கஸ்தூரிபுரம், காஞ்சிரங்குடி, கிருஷ்ணாபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் எருதுக்கட்டு விழாவை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கோஷமிட்டனர்.

செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)