முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, July 17, 2018

நான்குவழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு; கலெக்டரிடம் மனு அளித்த உச்சிபுள்ளி மக்கள்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி முன்னிலை வகித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி நான்கு வழிச்சாலையால் பாதிக்கப்பட்டோர் நலச்சங்கம் சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:–

தற்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நான்குவழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்த உள்ளனர். உச்சிப்புளி பகுதி என்பது வளர்ந்து வரும் நகரமாகும். சாலையின் இருபுறமும் கடைகள், வணிக நிறுவனங்கள் நிறைந்து உள்ளன.
இந்த நிலங்களை எடுத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஒட்டுமொத்த உச்சிப்புளி நகரமே இல்லாமல் போய்விடும். தற்போது உச்சிப்புளியில் ஒருகிலோ மீட்டர் தூரத்திற்கு விரிவான சாலை உள்ளதால் அதனையே பயன்படுத்தி கொள்ளலாம். அல்லது நகருக்குள் வராமல் குயவன்குடி வழியாக நான்கு வழிச்சாலை அமைக்க முடியும். எனவே நிலத்தை கையகப்படுத்தாமல் மாற்று வழியில் திட்டத்தை நிறைவேற்றி மக்களை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.


தமிழ்நாடு தூய்மை தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் துப்புரவு தொழிலாளர்கள் அளித்த மனுவில், ராமேசுவரம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் வேலைபார்த்து வரும் 68 பேருக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை என்பதால் உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

உச்சிப்புளி அருகே உள்ள நம்பாயிவலசை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் குடியிருப்புகளுக்கு இடையில் மனநல காப்பகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிறுவர், சிறுமியர் அதிகம் உள்ள இந்த பகுதியில் மனநோயாளிகளை தங்க வைத்தால் தேவையில்லாத மனஉளைச்சலும், தொந்தரவுகளும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

எனவே, இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் மனு கொடுத்தனர். இருமேனி அலைகாத்தவலசையை சேர்ந்த சசிக்குமார் என்பவரின் மனைவி அருள்மொழி தனது குழந்தைகளுடன் வந்து, ஊர்கூட்டத்தில் தங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும், டி.கருங்குளம் அருகே உள்ள பா.இலந்தைகுளம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் மனைவி ராஜாமணி என்பவர் தங்களது குடும்பத்தினரை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்து விட்டதாக கூறி மனு கொடுத்தனர்.


இந்த மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் நடராஜன் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

செய்தி; தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Monday, July 16, 2018

10, +2 மாணவர்கள் தங்கள் பள்ளிகளின் மூலமாக வேலைவாய்ப்பு துறையில் பதிவு செய்து அடையாள அட்டை பெறலாம் - கலெக்டர்!!

No comments :
10–ம் வகுப்பு மற்றும் 12–ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதியை தாங்கள் படித்த பள்ளிகளின் மூலமாக 2011–ம் ஆண்டு முதல் நேரடியாக வேலைவாய்ப்பு துறையின் இணையதளத்தில் https://tnvelaivaaippu.gov.in பதிவு செய்து அடையாள அட்டை பெற தமிழக அரசால் உரிய வழிவகை செய்யப்பட்டுஉள்ளது.

வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரியாது நேரடியாக இத்துறையின் இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ள வசதி ஏற்படுத்தியமையால், மாணவர்களுக்கு ஏற்படும் போக்குவரத்து செலவு, காலவிரயம், தேவையற்ற அலைச்சல் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் ஆகியவை தவிர்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தற்போது 2018–ம் ஆண்டிற்கான பிளஸ்–2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் நாளை (திங்கட்கிழமை) முதல் வழங்கப்படுகிறது.


இதைத்தொடர்ந்து 30–ந்தேதி வரை 15 நாட்களுக்கு ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி அவர்கள் படித்த பள்ளியிலேயே இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு பணி நடைபெற சிறப்பு நடவடிக்கைகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் இந்தவசதியை பயன்படுத்தி மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவுகள் மேற்கொள்ளலாம்.

மேலும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதியை வேலைவாய்ப்புத் துறையின் இணையதளத்தில் https://tnvelaivaaippu.gov.in தங்கள் அளவிலேயே ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் அல்லது அவர்கள் தங்களது மாவட்டத்திற்குரிய வேலைவாய்ப்பு அலுவலகத்தையும் அணுகி பதிவு செய்யலாம். எனவே மாணவர்கள் ஏற்கெனவே 10–ம் வகுப்பு கல்வித்தகுதியை பதிவு செய்து இருப்பின் அந்த வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டையுடன் மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று தாங்கள் படித்த பள்ளிகளை அணுகி பிளஸ்–2 கல்வித்தகுதியை கூடுதலாக பதிவு செய்து கொள்ளலாம்.

பிளஸ்–2 தேர்ச்சி பெற்று புதிதாக பதிவு செய்ய விரும்பும் மாணவர்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதி சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளை அணுகி பதிவுகள் மேற்கொள்ளலாம்.


இந்த தகவலை மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

என்சிசி அலுவலகத்தில் வேலை வாய்ப்பு; விண்ணப்பிக்க கடைசி நாள் 10.09.2018!!

No comments :

சென்னையில் உள்ள என்சிசி அலுவலகத்தில் காலியாக உள்ள ஸ்டோர் அட்டெண்ட், ஓட்டுநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் வரும் 10-09-2018 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடம்: 05

பணி: ஓட்டுநர் காலியிடம்: 01 சம்பளம்: ரூ.19,500-62,000
பணி: ஸ்டோர் அட்டெண்ட் காலியிடம்: 01 சம்பளம்: ரூ.15,900-50,400 பணி: ஆபிஸ் அஸிஸ்டென்ட் காலியிடம்: 02 சம்பளம்: ரூ.15,700-50,000 பணி: போட் லஸ்கர் காலியிடம்: 01 சம்பளம்: ரூ.15,900-50,400

கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஓட்டுநர் பணிக்கு கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஆபிஸ் அஸிஸ்டென்ட் பணிக்கு சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். போட் லஸ்கர் பணிக்கு நீச்சல் தெரிந்திருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் தங்களது முழு விபரங்கள் அடங்கிய பயோடேட்டாவை தயார் செய்து பூர்த்தி செய்து அத்துடன் அட்டெஸ்ட் செய்த தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Commander,
NCC Group Headquarters,
Madras 'B', Chennai.


பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 10.09.2018. 

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Sunday, July 15, 2018

தமிழக காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டர் (டெக்னிகல்) வேலை வாய்ப்பு!!

No comments :

தமிழக காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டர் (டெக்னிகல்) வேலை வாய்ப்பு!!




(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு தடை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு தடை குறித்து மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடந்தது.

ராமநாதபுரம் செய்யதம்மாள் மேல்நிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் பயன்பாடு தடை குறித்து மாணவ, மாணவியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.

அப்போது அவர் பேசியதாவது:-

பிளாஸ்டிக் பொருட்களானது எளிதில் மக்காத தன்மை கொண்டவை. சுற்றுச்சூழலுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி,  மண்வளத்தையும் அதிகளவில் மாசுபடுத்தக் கூடியவை. இத்தகைய பிளாஸ்டிக் பொருட்கள் நிலத்தில் தேங்குவதனால் மழைநீர் நிலத்தடிக்குள் செல்வது தடைப்பட்டு நிலத்தடி நீர்; மட்டம் அதிகளவில் பாதிக்கப்படுகிறது. அதேவேளையில் சுற்றுப்புறத்தில் குப்பையாக  கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்களில் தேங்கும் மழைநீர், டெங்கு, மலேரியா போன்ற நோய்களை பரப்பும் கொசுக்களின் உற்பத்திக்கு காரணமாக அமைகின்றது. 

எனவே தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்கள் நலன்கருதி சட்டமன்ற பேரவையில், இவ்வாறான பாதிப்புகளை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு 01.01.2019 முதல் தடை விதிக்கப்படுகிறது  என அறிவித்துள்ளார்.  இந்த அறிவிப்பிற்கு கூடுதல் வலு சேர்த்திடும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 01.07.2018 முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு தடை விதித்து அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.  இந்த அறிவிப்பை மீறி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் ஆகியவற்றிற்கு அபராதம் விதிக்கப்படும் எனவும், அதனையும் மீறி தொடர்ந்து பயன்படுத்துவோரின் நிறுவன உரிமை ரத்து செய்யப்படும் எனவும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.  



மேலும் பொதுமக்களும் இதுபோன்ற பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை தவிர்த்திட வேண்டும்.  கடைகளுக்கு செல்லுதல், உணவுப் பொருட்கள் வாங்குதல் போன்ற அன்றாட நேர்வுகளில் பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்திட வேண்டும்.  நமது மாவட்டத்தில் ஏறத்தாழ 3.50 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன.  அதேபோல ஏறத்தாழ 2.50 லட்சம் பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்கள்  உள்ளனர்.  அந்தவகையில் மாணவ, மாணவியர்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும் எந்தவொரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் முழுமையாக வெற்றி பெறும். அதனடிப்படையில் மாணவ, மாணவியர்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாடு தடை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

மாணவ, மாணவியர்கள் நூறு சதவீதம் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டைத் தவிர்த்து தங்களது குடும்பத்தார் மற்றும் சுற்றத்தாரிடத்திலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்த்திட ஊக்குவித்திட வேண்டும். இவ்வாறு பேசினார். அதன்பிறகு மாவட்ட கலெக்டர் தலைமையில் மாணவ, மாணவியர்கள் அனைவரும் பிளாஸ்டிக் பயன்பாடு தடை குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஆ.செல்லத்துரை, ராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பி.ராஜா, ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர் டி.பிரேம், செய்யதம்மாள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் முகம்மது உள்பட அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.


செய்தி: தினபூமி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Saturday, July 14, 2018

ராமநாதபுரம் மாவட்டத்தில் வீணாகும் காவேரிக் குடிநீர்; குழாய் உடைப்பு சரி செய்யப்படுமா?!!

No comments :
ராமநாதபுரம் யூனியனுக்கு உட்பட்ட முக்கிய பகுதியாக விளங்குவது தேவிபட்டினம். சுமார் 18,000 மக்கள் தொகை கொண்ட இந்த ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. மேலும் ஆன்மிக தலமாக திகழும் இங்கு தினமும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வருகை தந்து கடலுக்குள் அமைந்துள்ள நவபாஷானத்தை வழிபட்டு செல்கின்றனர்.

இந்த நிலையில் தேவிபட்டினம் மற்றும் அருகில் உள்ள கழனிக்குடி, மாதவனூர், வெண்ணத்தூர், பாண்டமங்கலம், நாரணமங்கலம் ஆகிய ஊராட்சிகளுக்கு ராமநாதபுரத்தில் இருந்து திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தேவிபட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு செல்லும் குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையோரம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் 6 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.


தற்போது ராமநாதபுரம்-திருச்சி இடையே புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சாலையோரம் உள்ள காவிரி குடிநீர் குழாய் சேதமடைந்து கடந்த பல நாட்களாக தண்ணீர் வீணாகி வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டும் நடவடிக்கை எடுக்காததால் தினமும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழ்நிலையில் பொதுமக்கள் தள்ளுவண்டிகளில் நீண்ட தூரம் சென்று குடங்களில் தண்ணீர் சேகரித்து வருகின்றனர். மேலும் பல கிராமங்களில் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு குடிநீர் தட்டுப்பாடு நிலவும் சமயத்தில் காவிரி குடிநீர் வீணாக செல்வது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


செய்தி; தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Wednesday, July 11, 2018

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாலை நேர வகுப்புகள்; ஜூலை 9 முதல் விண்ணப்பிக்கலாம்!!

No comments :
முதுகுளத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாலை நேர வகுப்புகளில் சேர திங்கள்கிழமை (ஜூலை 9) முதல் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து பயிற்சி நிலைய முதல்வர் சீராளன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

முதுகுளத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாலை நேர குறுகிய கால தொழிற்பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



இதில் ஃபிட்டிங், வெல்டர், எலக்ட்ரீசியன் பிரிவுகள் உள்ளன. பயிற்சியானது மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், வார இறுதி நாள்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் நடைபெறும்.

பயிற்சிக்கு வந்து செல்ல தினமும் ரூ.100 வழங்கப்படும்.

பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ், வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

இதில் சேர, குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் தங்களது கல்விச் சான்றிதழ், சாதி, இருப்பிடச் சான்று, ஆதார் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றின் 2 நகல்கள், 3 புகைப்படத்துடன் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நேரில் விண்ணப்பிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மறு சீரமைப்பு தொடர்பாக ஆலோசணை கூட்டம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மறு சீரமைப்பு தொடர்பாக ஆலோசணை கூட்டம் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடந்தது.

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்குச்சாவடி மறுசீரமைப்பு பணிகளின் அடிப்படையில் அரசுக்கு இறுதி பிரேரணை சமர்ப்பிப்பது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் பணிகள் தொடர்பான அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.

அப்போது அவர் பேசியதாவது:-

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை, வாக்குச்சாவடி கட்டிடங்களின் உறுதித்தன்மை, அமைவிடங்கள், பொதுமக்களின் கோரிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு பணி மேற்கொண்டு இறுதி வாக்குச்சாவடி பட்டியல் தயாரித்திட இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அதனடிப்படையில் மாவட்டத்தில் உள்ள 1307 வாக்குச்சாவடிகளில், ஊரகப் பகுதிகளில் 1200 மற்றும் நகர்ப் பகுதிகளில் 1400 வாக்காளர்களை விட அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகள், பொதுமக்களின் கோரிக்கை அடிப்படையில் 60 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, இவ்வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரிப்பதற்கும்,  அதேபோல  பொதுமக்களின் கோரிக்கை, வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலும், ஒரே இடத்தில் அமைந்துள்ள 24 வாக்குச்சாவடிகளில், வாக்குச் சாவடிகளுக்கிடையில் பிரிவுகளை மாற்றம் செய்வதற்கும், தற்போதுள்ள வாக்குச்சாவடி கட்டிடங்களின் உறுதித்தன்மை மற்றும் பொதுமக்கள் கோரிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு 24 வாக்குச் சாவடி மையங்களின் கட்டிடம் மற்றும் அமைவிடங்களை மாற்றியமைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 02.07.2018 அன்று வரைவு மறுசீரமைப்பு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது.



அவ்வரைவு பட்டியலின் மீது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து 09.07.2018 வரை கருத்துக்கள் கோரப்பட்டது.
 
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வாக்குச்சாவடிகள் மறுசீரமைக்கும் பணியினை இறுதி செய்து அரசுக்கு முடிவான பிரேரணை அனுப்புவதற்காக இக்கூட்டத்தின் அடிப்படையில், மாவட்டத்தில் உள்ள 1307 வாக்குச்சாவடிகளில் 1200 மற்றும் 1400 வாக்காளர்களைவிட அதிகமாக உள்ள 60 வாக்குச்சாவடிகளை இரண்டாகப் பிரிப்பதற்கும், பொதுமக்களின் கோரிக்கைகளின் அடிப்படையிலும், வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலும் ஒரே இடத்தில் உள்ள 26 வாக்குச்சாவடிகளுக்கிடையில் பிரிவுகளை மாற்றம்  செய்வதற்கும், வாக்குச்சாவடி கட்டிடங்களின் உறுதித்தன்மை மற்றும் பொதுமக்கள் கோரிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் 26 வாக்குச்சாவடி மையங்களின் கட்டிடம் மற்றும் அமைவிடங்களை மாற்றியமைப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு உரிய பிரேரணைகள் அனுப்பி வைக்கப்பட்டு ஆணைகள் பெறப்படும். இவ்வாறு பேசினார்.

இக்கூட்டத்தில் பரமக்குடி சார் ஆட்சியர் பி.விஷ்ணுசந்திரன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் டாக்டர்.ஆர்.சுமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தேர்தல் வட்டாட்சியர் கல்யாணகுமார், உள்பட அனைத்து வட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


செய்தி; தினபூமி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Sunday, July 8, 2018

ராமநாதபுரத்தில் புதிய பஸ்கள்; அமைச்சர் தொடங்கி வைத்தார்!!

No comments :

ராமநாதபுரம் புதிய பேருந்து  நிலைய வளாகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய பேருந்துகளை கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் நடைபெற்ற விழாவில் போக்குவரத்து துறையின் சார்பாக ரூ.134 கோடியே 53 லட்சம் மதிப்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு 515 புதிய பேருந்துகளை துவக்கி வைத்தார்.  அவற்றில் காரைக்குடி மண்டலத்திற்கு 69 பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.  குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 35 பேருந்துகள் ஆகும்.  அதில் முதற்கட்டமாக 12 புதிய பேருந்துகளை அமைச்சர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்துள்ளார்.


புதிதாக துவக்கி வைக்கப்பட்டுள்ள இப்பேருந்துகளில்
ராமநாதபுரம் - மதுரை வழித்தடத்தில் 5 பேருந்துகளும்,

ராமேஸ்வரம்- மதுரை,
ராமநாதபுரம் - குமுளி,
ராமநாதபுரம் - கோயம்புத்தூர்,
ராமேஸ்வரம் - கோயம்புத்தூர்,
முதுகுளத்தூர் - மதுரை,
பரமக்குடி - மதுரை,
கமுதி- மதுரை
ஆகிய வழித்தடங்களில் தலா 1 பேருந்து வீதம் மொத்தம் 12 பேருந்துகள் இயக்கப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்து கீழக்கரை பேருந்து நிலையத்தில் ராமநாதபுரம் நகர் போக்குவரத்து துறையின் சார்பில் கீழக்கரை- உத்திரகோசமங்கை வரை இயக்கப்பட்ட தடம் எண் 18-னை இன்று முதல் நல்லாங்குடி, எக்ககுடி வழியாக கொத்தங்குளம் வரை வழித்தட நீட்டிப்பு செய்து துவக்கி வைத்தார்.

இப்பேருந்தானது தினந்தோறும் காலை, மாலை என இரண்டு வேளையாக இயக்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சிகளில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் பி.செல்வகோமதி குமார், கோட்ட மேலாளர் வி.சரவணன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிதலைவர் பி.ஜெயஜோதி, போக்குவரத்து கழக கிளை மேலாளர்கள் பத்மகுமார், தெய்வேந்திரன் உள்பட அரசு அலுவலர்கள், அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் பங்கேற்றனர்.


செய்தி: தினபூமி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Thursday, July 5, 2018

ராமநாதபுரம் மாவட்டத்தில் இயக்கப்படும் காலாவதியான அரசு பேருந்துகள்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் இயக்கப்படும் காலாவதியான அரசு போக்குவரத்துக்கழக பஸ்களால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கும்பகோணம் மண்டலத்தில், காரைக்குடி கிளை அலுவலகத்தில் இருந்து அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்கள் முறையான பராமரிப்பு இல்லாமலும், காலாவதியான பின்பும் இயக்கப்பட்டு வருகின்றன.

இதில் பயணிக்கும் பயணிகள் திகிலுடன் பயணிக்கும் அவல நிலை உள்ளது. பல பஸ்களில் இருக்கைகள் கயிறுகளால் கட்டப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன. இதில் பல பஸ்கள் பாதி வழியிலேயே பழுதாகி நின்று விடுகிறது. பின் வேறு பஸ்களில் பயணிகள் ஏற்றிவிடப்படுகின்றனர்.



அரசு பஸ்களை கண்டாலே மக்கள் அச்சம் கொள்ளும் நிலையில் தான்
உள்ளன. பல பஸ்களில் பக்கவாட்டு தகரங்கள், உடைந்து சேதமடைந்த நிலையில் இயக்கப்படுகின்றன. இது போன்று காயிலான் கடைக்கு செல்ல வேண்டிய பஸ்களை அரசு போக்குவரத்துக்கழகம் இயக்கி
வருகிறது.

பல பஸ்களில் சேதமடைந்த பகுதிகளை ஒட்டுப்போட்டு, இயக்கி வருகின்றனர்.

இப் பஸ்களால் ரோட்டில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகள் பயந்து கொண்டே செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. பஸ்களை இயக்கும் டிரைவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு ஓட்டும் நிலையும் உள்ளது.

இது போன்ற பஸ்களை இயக்கப்படும் போது, விபத்துக்கள் ஏற்பட்டு, பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள், முறையாக பராமரிப்பு செய்து, மக்களுக்கு இடையூறு இல்லாத பயணம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செய்தி; தினசரி



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Wednesday, July 4, 2018

ராமநாதபுர மாவட்டத்தில் தடையை மீறி பாலிதீன் பைகள்!!

No comments :
ராமநாதபுர மாவட்டத்தில் தடையை மீறி பாலிதீன் பைகள், கவர்கள் தாராளமாக கடைகளில் புழக்கத்தில் உள்ளன.

சுற்றுச்சூழலுக்கும், நிலத்தடி நீருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு 2019 ஜன.,1 முதல் முழுமையாக தடை செய்யப்படும், என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதையடுத்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கேரி பேக்குகள், டீ கப்புகள் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த மாவட்டங்களில் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் நிரந்தர தடை விதித்து கலெக்டர் நடராஜன் உத்தரவிட்டார். ஆனால், நான்கு நாட்களை கடந்தும், பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் கேரி பேக்குகள், கப்புகள் பயன்பாடு தாராளமாக உள்ளது.
குறிப்பாக சிறு ஓட்டல்கள், டீக்கடைகள், பழக்கடைகள், காய்கறி கடைகள், மீன் கடைகள், தெருவோர கடைகளில் மறைத்தும், நேரடியாகவும் பயன்படுத்துகின்றனர். ராமநாதபுரம் அரண்மனை, சாலைத் தெரு, வண்டிக்கார தெருவில் அதிகளவில் இன்னும் புழக்கத்தில் உள்ளன.


பாரதிநகர் பஸ்ஸ்டாப் அருகே உள்ள டீக்கடைகளில் கேரி பைகளில் பார்சல் டீ கொடுப்பது தொடர்கிறது. பிளாஸ்டிக் தடையை முறையாக அமல்படுத்தவும், அபராதம் விதிப்பதை கடுமையாக்கினால் மட்டுமே பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க முடியும்.

இதுகுறித்து, கலெக்டர் நடராஜனிடம் கேட்ட போது, பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க துணை கலெக்டர், உதவி இயக்குனர் நிலையில் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது, பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது, என எச்சரிக்கப்பட்டு வருகின்றனர்.
ஜூலை 15 முதல் முதற் கட்டமாக 500 ரூபாய்க்கும் குறையாமல் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து பயன்படுத்தினால், ஒவ்வொரு முறையும் 1000 ரூபாய்க்கு குறையாமல் அபராதம் விதிக்கப்படும், என்றார்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Monday, July 2, 2018

ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் மாற்றம்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க., மாவட்ட செயலராக 1986 லிருந்து முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் இருந்தார்.
கடந்த 2000ம் ஆண்டில் அவரது மகன் சம்பத் அந்த பொறுப்புக்கு வந்தார். பின் மீண்டும் சுப.தங்கவேலன் நியமிக்கப்பட்டார்.
2014ல் அவரது மற்றொரு மகன் திவாகரன் மாவட்ட செயலரானார்.



நேற்று மாவட்ட செயலர் பொறுப்பிலிருந்து திவாகரன் விடுவிக்கப்பட்டு, கமுதி வடக்கு ஒன்றிய செயலர் முத்துராமலிங்கத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி கொடுக்கப்பட்டது.


செய்தி; தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)