முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, May 14, 2020

தபால்காரரை அணுகி, ரூ. 10 ஆயிரம் வரை வங்கி கணக்கில் இருந்து பணம் பெறலாம்!!

No comments :
வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்க தபால்காரரை அணுகினால் உடனடியாக பணம் வழங்கப்படும் திட்டம்அஞ்சல் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுஉள்ளது.

மத்திய, மாநில அரசுகள்பயனாளிகளுக்கு வங்கிகள்மூலம் நிவாரணத் தொகையை வரவு வைக்கின்றனர். கொரோனா பாதிப்பால் ஏ.டி.எம்., மற்றும் வங்கிகளில் பணம் எடுக்க முடியாமல் தவிக்கும் நிலை உள்ளது. இதையடுத்து அஞ்சல் துறை மூலம் வீட்டில் இருந்தபடியே அவரவர் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.



இதற்கு ஒவ்வொருவரும்தங்களது வங்கிக் கணக்கை ஆதாருடன் இணைத்திருக்க வேண்டும்.

ஏ.இ.பி.எஸ்., (ஆதார் எனேபில்டு பேமென்ட் சிஸ்டம்) வசதியை பயன்படுத்தி தபால் நிலையங்கள், தபால்காரர், கிராம தபால் ஊழியர்கள் மூலம் பணம் எடுக்க முடியும். அப்போது விரல் ரேகை மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்டு வாடிக்கையாளர் கேட்கும் பணத்தை அளிக்க முடியும். இதன் மூலம் ரூ. 10 ஆயிரம் வரை கட்டணம் இன்றி பெறலாம்.

செய்தி: தினசரிகள்


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

தூய்மையாக காட்சிதரும் அக்னி தீர்த்த கடற்கரை, உரடங்கால் சுத்தமான ஆச்சரியம்!!

No comments :
புண்ணிய தலங்களில் ஒன்றான ராமேசுவரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அக்னிதீர்த்த கடலில் நீராடி விட்டு அதன் பின்னர் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீராடி சாமி தரிசனம் செய்வது வழக்கம். இவ்வாறு அக்னிதீர்த்த கடலில் நீராடும் பக்தர்கள் தங்களது தோஷங்கள் நிவர்த்தியாக ஈர துணிகளை கடலில் வீசிச்செல்வது தொடர்கிறது.

இதையடுத்து கடலில் யாரும் துணிகளை வீசக்கூடாது, கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில்தான் துணிகளை போட வேண்டும் என ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. ஆனாலும் பெரும்பாலான பக்தர்கள் தொட்டிகளில் போடாமல் கடலில் வீசினர். இவ்வாறு பக்தர்கள் வீசிய துணிகள் கடல் மணலில் புதைந்தும், பாறையில் சிக்கியும் அதிகஅளவில் கிடந்தன.

இந்தநிலையில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. ராமேசுவரம் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதனால் கடந்த 1½ மாதத்திற்கு மேலாக ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் கோவில் ரத வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அக்னிதீர்த்த கடற்கரை பகுதி முழுவதும் தூய்மை பணியாளர்களால் தினம் தினம் சுத்தம் செய்யப்பட்டு தற்போது தூய்மையான, அழகான கடற்கரையாக காட்சி தருகிறது. மேலும் கடலுக்குள் வீசிய துணிகளும் அகற்றப்பட்டுள்ளன.



இதுபற்றி நகராட்சி ஆணையாளர் கூறியதாவது:-

ஊரடங்கினால் கிடைத்த பயனாக ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் கடலில் கிடந்த துணிகள் அனைத்தும் அகற்றப்பட்டு அந்த பகுதி முழுவதும் தூய்மையாக காட்சியளித்து வருகிறது.

ஊரடங்கு முடிந்து வழக்கம்போல் பக்தர்கள் அக்னிதீர்த்த கடலில் நீராட வந்தாலும் தயவு செய்து கடலில் யாரும் துணிகளை வீச வேண்டாம். கடல் மற்றும் கடற்கரையை தூய்மையாக வைத்திருக்க பக்தர்களும், பொது மக்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.



செய்தி: தினத்தந்தி

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Wednesday, May 6, 2020

கீழக்கரை மூதாட்டிக்கு கரோனா பாதிப்பு, ராமநாதபுர மாவட்ட எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது!!

No comments :

கீழக்கரை மூதாட்டிக்கு கரோனா பாதிப்பு செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்ட நிலையில், ராமநாதபுரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, கீழக்கரை, மண்டபம், உச்சிப்புளி, ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 21 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இவர்களில், 11 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினர். மீதமுள்ள 10 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


இந்தநிலையில், கீழக்கரை புது கிழக்குத் தெருவைச் சேர்ந்த 70 வயது மூதாட்டிக்கு கபம், சுவாசப் பிரச்னை இருந்துள்ளது. அவர், ராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் திங்கள்கிழமை இரவு சிகிச்சைக்கு வந்துள்ளார். அப்போது, அவருக்கு கரோனா அறிகுறி இருந்ததை அடுத்து, ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு, அவருக்கு கபம் பரிசோதிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை மாலை வந்த பரிசோதனையின் முடிவில், மூதாட்டிக்கு கரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து, அவரை ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது, மூதாட்டி வசித்து வந்த கீழக்கரை புதுகிழக்குத் தெரு கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு, தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும், சிறப்பு சுகாதாரக் குழுவினர் அத்தெருவில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.


செய்தி: தினமணி

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

அனுமதி பெற்று வந்தாலும் வெளிமாவட்டத்தில் இருந்து வருவோரை தனிமைப்படுத்த வேண்டும் - கலெக்டர் உத்தரவு

No comments :

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் வருகிற 17-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளில் போலீசார் சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 
பரமக்குடி அருகேயுள்ள பார்த்திபனூர்-மரிச்சுக்கட்டி சோதனைச்சாவடியில் வெளி மாவட்டங்களில் இருந்து வருவோர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் முன்னிலையில் மருத்துவக்குழுவினரின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

இதனிடையே மாவட்டத்தில் இதுவரை 20 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 11 பேர் குணமடைந்து தங்களது வீடுகளுக்கு திரும்பினர்.

இந்த நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து அரசு அதிகாரிகளின் அனுமதி பெற்று வாகனங்களில் வருபவர்கள் பார்த்திபனூர் சோதனைச்சாவடியில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களை வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் வீரராகவராவ் உத்தரவிட்டுள்ளார். இதனால் வெளிமாவட்டங்களில் இருந்து அனுமதி பெற்று வாகனங்களில் வரும் பலரும் தங்களது ஊர்களுக்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். 


மேலும் சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களிலிருந்து சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, வாணி வழியாக ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வந்துள்ளவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் போலீசார் உதவியுடன் சுகாதாரத்துறையினர் மருத்துவ பரிசோதனை செய்தனர். மேலும் அனுமதி பெறாமல் வருபவர்களை போலீசார் மாவட்ட எல்லையிலேயே தடுத்து நிறுத்தி அவர்களை திருப்பி அனுப்பி விடுகின்றனர். 


எனவே வெளிமாவட்டத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் வருபவர்கள் அந்தந்த மாவட்ட கலெக்டர்களின் அனுமதியுடன் முறையாக வர வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு வருபவர்களும் மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Sunday, May 3, 2020

ராமநாதபுரம் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் 16 ஆக உயர்வு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் தனிமைப்படுத்திய இடங்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 2,029 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், 20 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. 

கீழக்கரை, பரமக்குடி, மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம், ஆனந்தூர் ஆகிய இடங்களில் 11 இடங்களில் பாதிப்புக்கு உள்ளானோர் வசித்ததால் அந்த இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. 

சக்கரக்கோட்டையில் வசிக்கும் உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர், ராமாதபுரம் போக்குவரத்து காவலர், தீயணைப்பு நிலைய வீரர் ஆகியோருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதால் அவர்களது வசிப்பிடமும் தனிமைப்பகுதிகளாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சனிக்கிழமை ஆர்.எஸ்.மங்கலம் நகரில் தீயணைப்பு வீரர் உள்பட 2 பேருக்கு கரோனா உறுதியானதால் அவர்கள் வசிக்கும் இரு பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே கடந்த ஒரே வாரத்தில் 4 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் கூடியதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்காக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் 16 ஆக உயர்ந்துள்ளது. 

மாவட்டத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்களில் 1,734 பேருக்கு தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது. 277 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளன.



(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

முகநூல் மூலம் அவதூறு பரப்பியதாக 7 பேர் மீது வழக்கு!!

No comments :
முன்விரோதத்தில் போலி முகநூல் மூலம் அவதூறு பரப்பியதாக 7 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் வாணி கரிக்கூட்டம் பாத்திமா நகரைச் சேர்ந்தவர் நூர்முகம்மது. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்துவருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ராமபக்தன் எனும் பெயரில் போலி முகநூலை ஆரம்பித்த சிலர் அதில் நூர்முகம்மது குறித்து அவதூறு பரப்பியதாகப் புகார் எழுந்தது.



இதுகுறித்து நூர்முகம்மது அளித்தப் புகாரின் பேரில் கேணிக்கரை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். விசாரணை அடிப்படையில் போலி முகநூல் மூலம் நூர்முகமது மீது அவதூறு பரப்பியதாக அதே பகுதியைச் சேர்ந்த அஜ்மல்கான் உள்ளிட்ட 7 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.

செய்தி: தினமணி

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.