முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, July 31, 2017

கீழக்கரையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை!!

No comments :
கீழக்கரை மக்துாமியா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் உலக நன்மைக்காகவும், மழைபெய்ய வேண்டியும் சிறப்பு தொழுகை நடந்தது.

நேற்று காலை 9:00 முதல் 10:00 மணிவரை ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்று, 'துஆ’ (பிராத்தனை) செய்தனர்.



பழைய குத்பா பள்ளிவாசல் இமாம் சுபைர் அகமது ரஹ்மானி, கல்லுாரி பேராசிரியர் அகமது உசேன், மார்க்க சொற்பொழிவாளர் முகம்மது மன்சூர் அலி ஆகியோர் பயான் சொற்பொழிவு நடத்தினர்.

பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை அனைத்து முஸ்லிம் ஜமாத் மற்றும் சமூக நல அமைப்பினர் செய்திருந்தனர்.


செய்தி: திரு. தாஹிர், கீழக்கரை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Sunday, July 30, 2017

ராமநாதபுரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை, ஒருவர் கைது!!

No comments :
ராமநாதபுரம் பஜார் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மொத்தமாக விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அவருடைய உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு காந்திமதிநாதன் தலைமையில் பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல் உள்ளிட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.


அப்போது கரிக்கடை சந்து பகுதியில் உள்ள ஒரு கடையில் ஏராளமான அளவில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 17 கிலோ புகையிலை பொருட்களையும், 9 கிலோ வாசனை புகையிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக எக்ககுடியை சேர்ந்த தற்போது ராமநாதபுரம் பாரதிநகரில் வசித்து வரும் வியாபாரி ஆசாத்கான்(வயது34) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் தனது கடையில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளுக்கும் புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

53 வருடங்களுக்கு பிறகு தனுஷ்கொடிக்கு அரசு போக்குவரத்து!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தின் தீவுப்பகுதியான ராமேசுவரத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, தனுஷ்கோடி. மிகப்பெரிய தொழில் நகரமாக விளங்கிய தனுஷ்கோடி கடந்த 1964–ம் ஆண்டு டிசம்பர் மாதம் வீசிய புயலால் கடல் கொந்தளித்து, முழுமையாக அழிந்து போனது. 


அதுவரை அங்கிருந்த ரெயில் நிலையம், கோவில், தபால் அலுவலகம், குடியிருப்புகள் என எல்லாமே முற்றிலும் சிதைந்தன.

இலங்கையோடு வர்த்தக தொடர்பு கொண்டிருந்த தனுஷ்கோடி, 1964 புயலுக்குப்பின் மக்கள் வாழ்வதற்கு அஞ்சும் இடமாக மாறி விட்டது. எனினும், சுற்றுலா பயணிகள் மட்டும் அழிந்து போன தனுஷ்கோடியை பார்த்து வருகிறார்கள்.

ராமேசுவரத்தில் இருந்து முகுந்தராயர் சத்திரம் வரை மட்டுமே அவர்களால் வாகனங்களில் செல்ல முடிந்தது. அதற்குப்பின் இருபுறமும் கடல் அலைகள் மோதிக்கொண்டிருக்க, ஒரு நீண்ட வால் பகுதி நிலப்பரப்பு மட்டுமே தனுஷ்கோடியின் கடைக்கோடி பகுதியான அரிச்சல்முனை நீண்டிருந்தது.

எனவே, முகுந்தராயர்சத்திரம் வரை வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் அதன்பின், 9½ கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றோ அல்லது குறைந்த அளவு கடல் நீரில் தட்டுத் தடுமாறிச் செல்லும் ஜீப் அல்லது வேன்களில் சென்றோ தான் தனுஷ்கோடியை பார்த்து வந்தனர்.

இந்தநிலையில், தனுஷ்கோடியை புயல் விழுங்கி 50 ஆண்டுகளுக்குப்பின், அதை புனரமைக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியது. அதன்படி, முகுந்தராயர்சத்திரம் கடற்கரையில் இருந்து தனுஷ்கோடியின் கடைக்கோடி பகுதியான அரிச்சல்முனை கடற்கரை வரை கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக தார்ச்சாலை அமைக்கும் பணி தேசிய நெடுஞ்சாலைத்துறையின் மூலம் ரூ.71 கோடி செலவில் கடந்த 2015–ம் ஆண்டு தொடங்கியது.

முதல் கட்டமாக, முகுந்தராயர்சத்திரத்தில் இருந்து கம்பிப்பாடு வரையும், 2–வது கட்டமாக கம்பிப்பாட்டில் இருந்து அரிச்சல்முனை வரையும் புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டது.

கடந்த 27–ந் தேதி அப்துல்கலாம் மணிமண்டபத்தை திறந்து வைக்க ராமேசுவரம் வந்த பிரதமர் நரேந்திரமோடி, தனுஷ்கோடி சாலையையும் போக்குவரத்துக்காக திறந்து வைத்தார்.

இதையடுத்து புதிய சாலை மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. ராமேசுவரம் கோவிலுக்கு வந்த பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் கார், வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் அரிச்சல்முனை கடற்கரை வரை வந்து சென்றனர்.

சுற்றுலா பயணிகள் இருதிசையிலும் கடலின் அழகைப் பார்த்து வியந்து, கடலில் இறங்கி நின்றும், சாலையில் நின்றும் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். புதிய சாலை திறக்கப்பட்டதையடுத்து, 53 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்கோடிக்கு அரசு பஸ்களும் இயக்கப்பட்டன.

ராமேசுவரம் கோவிலில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை இந்த பஸ்கள் ஓடுகின்றன. 45 நிமிடத்திற்கு ஒரு பஸ் வீதம் இயக்கப்படுகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் இந்த பஸ்களில் பயணம் செய்து தனுஷ்கோடியை பார்த்து திரும்புகின்றனர்.


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Tuesday, July 4, 2017

ராமநாதபுர மாவட்டத்தில் வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கை!!

No comments :
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்ததன் காரணமாக ஏற்பட்ட வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலனை பாதுகாக்கின்ற வகையில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணத் தொகை வழங்கிட 07 மார்ச் 2017 அன்று உத்தரவிட்டுள்ளார்கள்.

அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு மொத்தம் 390 கிராமங்களில் 2,05,482 விவசாயிகளின் வேளாண் பயிர்களுக்கு ரூ.175.19 கோடி, தோட்டக்கலைப் பயிர்களுக்கு ரூ.13.95 கோடி என மொத்தம் ரூ.189.14 கோடி மதிப்பில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணத் தொகை வழங்கப்படவுள்ளன.



இந்நிவாரணத் தொகையானது நெற்பயிர்களுக்கு ஹெக்டர் ஒன்றுக்கு ரூ.13,500 வீதமும், நன்செய் நிலங்களுக்கு ஹெக்டர் ஒன்றுக்கு ரூ.13,500 வீதமும், புஞ்சை ஹெக்டர் ஒன்றுக்கு ரூ.7,410 என்ற விகிதாச்சார அடிப்படையில் வழங்கப்படவுள்ளன. மேலும் இந்த நிவாரணத் தொகையானது தமிழ்நாடு அரசின் மூலம் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படும். என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த மாவட்டத்தில் உள்ள நயினார்கோவில் ஒன்றியம் நகரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மூவலூர், உதயகுடி மற்றும் நகரமங்கலம் ஆகிய ஊர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணத்தொகை கிடைக்கவில்லை, நிவாரண தொகை அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்கள் ஆகியும் இன்னும் பல விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணத்தொகை கிடைக்கவில்லை.

இதில் சில குளறுபடிகளும் நடந்துள்ளது தெரியவந்துள்ளது, இங்கு உள்ள கிராம நிர்வாக அலுவலர் உள்ளூரில் உள்ள சில அரசியல் பிரமுகர்களுடன் சேர்ந்து விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய வறட்சி நிவாரணத்தொகையை கையாடல் செய்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது நகரமங்கலம், பட்டா என்ன 61 புல என் 67, பெயர் முத்து என்பவருக்கு சேரவேண்டிய நிவாரணத்தொகையை அதே கிராமத்தை சேர்ந்த வேறு ஒரு முத்து என்பவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு அவர் மூலம் அந்த தொகை கிராம நிர்வாக அலுவலர்  மற்றும் அவருடன் தொடர்பு உடைவர்களும் பிரித்து கொண்டது தெரியவந்துள்ளது. இதே போல் பல விவசாயிகளின் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது

இதை கேள்விப்பட்டு கிராம நிர்வாக அலுவலரை தொடர்பு கொண்டு கேட்டதற்கு பாதி தொகை வேண்டுமானால் வாங்கிகொள் என்று மிரட்டுவதாகவும் இல்லையெனில் யாரிடம் வேண்டுமானாலும் புகார் தெரிவித்து கொள் என்று ஒருமையில் பேசுவதாகவும் கிராம மக்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்


இதை பற்றி மாவட்ட ஆட்சியர் திரு நடராஜன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி மற்றும் பரமக்குடி வட்டாட்சியர் ராஜகுரு அவர்களிடம் நேரடியாகவும் தொலைபேசி மூலமும் பலமுறை முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையோ அல்லது விசாரணையோ இதுவரை நடக்க வில்லை.


இதை படிக்கும் எதாவது ஒரு நேர்மயான அதிகாரி இந்த கிராம மக்களுக்கு நியாயம் கிடைக்க உதவுவார் என்ற நம்பிகையில் மொத்த கிராம மக்கள் சார்பாக வேண்டுகோள் வைக்கிறோம்.

இப்படிக்கு
கிராம பொதுமக்கள்



செய்தி: ராஜாமணி
நகரமங்கலம்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Monday, July 3, 2017

கீழக்கரை பெண்ணிடம் ரூ.42 ஆயிரம் வழிப்பறி!!

No comments :
கீழக்கரை வடக்குத்தெருவை சேர்ந்தவர் பத்மாவதி, 50. இவர் தனியார் நிதி நிறுவனத்தில் தன்னுடைய அடகு நகைகளை திருப்புவதற்கான தொகை ரூ.42 ஆயிரத்துடன் நேற்று முன்தினம் பகலில் மணல்மேடு தெருவில் நடந்து வந்துள்ளார்.




அப்போது பைக்கில் வந்த 2 இளைஞர்கள் இவரது மீது மோதியதில் நிலைகுலைந்து பத்மாவதி கீழே விழுந்துள்ளார். அவரது பணத்தை பறித்துவிட்டு தப்பினர். இதுகுறித்து கீழக்கரை எஸ்.ஐ., வசந்தகுமார் விசாரிக்கிறார்.

செய்தி: தினமலர்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

இலவச தையல் இயந்திரம் பெற ஏழை பெண்கள் விண்ணப்பிக்கலாம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட சமூக நலத்துறையின் மூலம் விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி ஏழை பெண்களுக்கு மின் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்குவதற்கு தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.

மாவட்ட சமூக நலத்துறையின் வாயிலாக விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி ஏழை பெண்களுக்கு மின் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்குவதற்கு தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


வட்டாட்சியாரிடம் பெற்ற வருமான சான்று ரூ.72 ஆயிரத்திற்குள், வட்டாட்சியாரிடம் பெற்ற இருப்பிட சான்று அல்லது ரேஷன் கார்டு, பதிவு செய்யப்பட்ட தையல் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தையல் பயிற்சி சான்று, (6 மாத கால பயிற்சி), வயது சான்று (20 முதல் 40 வயது வரை), கல்வி சான்று அல்லது பிறப்பு சான்று, சாதி சான்று, பாஸ்போர்ட் அளவு மனுதாரரின் கலர் புகைப்படம் 2, விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றோர், மகளிர் மற்றும் மாற்றுத் திறனாளி பெண் சான்று நகல், ஆதார் அடையாள அட்டை ஆகியவை விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

விண்ணப்பங்களை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலர்,
மாவட்ட சமூகநல அலுவலகம்,
ராமநாதபுரம்

என்ற முகவரிக்கு வரும் 15ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.


இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளவும்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Saturday, July 1, 2017

கீழக்கரை பேருந்து நிலையத்தில் பாதுகாவல் கோரும் பொது ஜனம்!!

No comments :
கீழக்கரை நகரில் உள்ள புதிய பஸ்ஸ்டாண்ட் செல்லும் வழியில் ஆக்கிரமிப்புகளால், வழித்தடம் குறுகிய நிலையில் உள்ளது. 

பஸ்ஸ்டாண்ட் காம்பவுண்ட் சுவருக்கு வெளியே நகராட்சிக்கு சொந்தமான பழுதடைந்த டிராக்டர் மற்றும் தனியார் நிறுவனத்தின் தளவாடப்பொருட்கள் கொட்டி வைக்கும் இடமாக உள்ளது. 

பஸ்கள் உள்ளே செல்லும் வழியில் கான்கிரீட் சிமென்ட் கட்டட கழிவு, கொட்டப்பட்டுள்ளதால், டூவீலர் மற்றும் நடந்து செல்வோர் கீழே விழுந்து காயமடைகின்றனர். காலை முதல் நள்ளிரவு வரை குடிமகன்கள் திறந்த வெளியாக பஸ் ஸ்டாண்டை பயன்படுத்தி வருகின்றனர்.

பயணிகள் அமரும் இருக்கையில் அமர்ந்து ரகளையில் ஈடுபடுகின்றனர். இதனால் பயணிகள் அச்சத்துடன் நின்று, பஸ் ஏறி செல்கின்றனர்.

எனவே கீழக்கரை நகராட்சி நிர்வாகம் மற்றும், போலீசார் இணைந்து குறைகளை நிவர்த்தி செய்ய முன் வர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


செய்தி: தினமலர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)