முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, October 31, 2017

திறந்தவெளி பாராக மாறி வரும் பேருந்து நிலையம்!!

No comments :
ராமநாதபுரம் புது பஸ் ஸ்டாண்டை இரவு நேரங்களில் குடிமகன்கள் திறந்தவெளி பாராக மாற்றி வருவதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

குடிமகன்கள் ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்டை இரவு நேரங்களில் திறந்தவெளி பாராக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பஸ் ஸ்டாண்ட் வரும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. குடித்து விட்டு பஸ் ஸ்டாண்டின் பிளாட்பாரங்களிலேயே படுத்து விடுகின்றனர்.


போதை அளவுக்கு அதிகமாகி இரவு நேரங்களில் குடிபோதையில் பஸ் ஸ்டாண்டு ரோட்டில் பிரச்னை செய்கின்றனர்.
வெளியிடங்களில் வேலை செய்துவிட்டு இரவு ரயில்களில் திரும்பும் பெண்கள் கூட ரோட்டை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

ரோந்து பணியில் இருக்கும் போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பயணிகள் வலியுறுத்தி உள்ளனர். 


சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனிப்பார்களா?

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

சென்னையில் என்சிசி யில் வேலை வாய்ப்பு!!

No comments :


சென்னையில் என்சிசி நேசனல் கேடட் கார்பஸ் டிபார்ட் மெண்டில் வேலைவாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்.

என்சிசியில் அறிவிப்பட்டுள்ள பணியிடங்களுக்கு எட்டாவது பாஸ் செய்திருந்தால் போதுமானது ஆகும்.
 

என்சிசியில் ஸ்டோர் அஸிஸ்டெண்ட் பணிக்கு ஒரு ஆள் பணியமர்வு மற்றும் ஆஃபிஸ் அஸிஸ்டெண்ட் பணிக்கும் ஒரு பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது . என்சிசியில் வேலை வாய்ப்பு ஸ்டோர் கீப்பர் அத்துடன் ஆஃபிஸ் அஸிஸ்டெண்ட் பணியிடங்களுக்கு மாத சம்பளமாக ரூபாய் 4800 வழங்குவது கிரேடு பே தொகை ரூபாய் 1300 வழங்கப்படுகிறது.



விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும் அந்தந்த பிரிவிற்கேற்ப வயது வரம்பு தளர்வு அளிக்கப்படும் . என்சிசியின் இணையதளத்தில் விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து அவற்றை தேவையான தகவல்களுடன்   பூர்த்தி செய்து முறையான சான்றிதழ் நகல்களை இணைக்க வேண்டும. சுய கையெப்பமிட்ட விண்ணப்பத்தை இணைத்து நவம்பர் 15க்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

அஞ்சல் முகவரி:
தி டெப்புட்டி டைரகடர்,
என்சிசி டைரக்ரேட் (டிஎன் , பி & ஏஎன்)
நேஷனல் கேடடர்டு கார்பஸ் ( என்சிசி ) டிபார்ட்மெண்ட்
ஃபோர்ட் செயிண்ட் ஜார்ஜ்

என்சிசியில் அதிகாரபூர்வ தளத்தின் அறிவிக்கை இணைய இணைப்பை இணைத்துள்ளோம்.

https://drive.google.com/file/d/0B37uB0UyFHsIMjhZcTJwbEg3RnM/view

விண்ணப்ப டவுன்லோடு செய்து கொள்ளவும்  .

என்சிசியில் வேலைவாய்ப்பு பெற விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கவும். 


வாழ்த்துக்கள்!!

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Monday, October 30, 2017

ராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரி வகுப்புகளை அமைச்சர் துவங்கி வைத்தார்!!

No comments :
ராமநாதபுரம் அருகே பெருங்குளம் கிராமத்தில் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் ராமநாதபுரம் மாவட்ட அரசு சட்டக்கல்லூரி தற்காலிகமாக செயல்பட இருக்கும் பெருங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி புதிய கட்டிடத்தினை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.




ராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரி தனிஅலுவலர் முனைவர்.என்.ராமபிரான் ரஞ்சித்சிங் உடனிருந்தார்.

நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பேசியதாவது:-

இராமநாதபுரம் மாவட்டத்தில் நீண்ட நாள் கோரிக்கையான அரசு சட்டக்கல்லூரி அமைவதற்கு ராமநாதபுரம் மக்களின் சார்பாகவும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் தமிழக முதலமைச்சருக்கு நான் விடுத்த கோரிக்கையை ஏற்று தமிழக முதலமைச்சர் கடந்த 25.05.2017 அன்று ராமநாதபுரத்தில் அரசு சட்டக்கல்லூரி தொடங்குவதற்கு அரசானையினை வெளியிட்டார்கள்.


அந்த அரசாணையின்படி 5 ஆண்டு சட்டப்படிப்பிற்கு 80 மாணவர்களும்,3 ஆண்டு சட்டப்படிப்பிற்கு 80 மாணவர்களும் இந்த கல்வி ஆண்டிலேயே வகுப்புகள் தொடங்குவதற்கு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டது. அரசு சட்டக்கல்லூரியினை இக்கல்வியாண்டிலேயே தொடங்குவதற்கு ஏதுவாக ஆரம்பக் கட்டப்பணிகள், கல்வி தளவாடப்பொருட்கள்,ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லா பணியாளர்களின் ஊதியம் ஆகியவற்றினை கவனித்திடும் பொருட்டு தமிழக அரசினால் ரூபாய் 2 கோடியே 26 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.


 ராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரிக்கென்று நிரந்தர இடம் அமையும் வரை, பெருங்குளம் கிராமத்தில் ராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரி வகுப்புகள் தற்காலிகமாக நடத்துவதற்கு ஏதுவாக பெருங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி புதிய கட்டிடம்  திறக்கப்பட்டுள்ளது. இந்தக்கட்டிடத்தில்  நாளை முதல் வகுப்புகள் நடைபெறும். மேலும் இக்கல்வியாண்டில் 5 ஆண்டு சட்டப்படிப்பில் 73 மாணவ மாணவியர்களும், 3 ஆண்டு சட்டப்படிப்பில் 16 மாணவர்களும் இதுவரை சேர்க்கை பெற்றுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் நிரந்தரமாக சட்டக்கல்லூரி அமைவதற்கு உரிய நடவடிக்கைகளை என் சார்பாகவும்,மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும், தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள ராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரி தனி அலுவலர் ஆகியோரிடம் கலந்து ஆலோசித்து உரிய இடத்தினை தேர்வுசெய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. உரிய இடம் தேர்வு செய்யப்படும் வரை இந்தக்கட்டிடத்திலேயே சட்டக்கல்லூரி செயல்படும்.

மேலும் இக்கட்டிடத்தில் சட்டக்கல்லூரி முதல்வர் அறை, அலுவலக அறை, 2 பேராசிரியர்கள் அறை, நூலகம்,மாதிரி நீதிமன்றம், 6 வகுப்பறை,சிறு கலையரங்கம் மற்றும் போதிய கழிவறை வசதியுடன் செயல்பாட்டில் உள்ளது. மாணவர்களுக்கு போதன  வகுப்புகள் நடத்துவதற்கு ஏதுவாக இரண்டு முழு நேரப் பேராசிரியர்களும் மற்றும் 8 கௌரவ பேராசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அலுவலகப் பணிகள் தொய்வின்றி நடத்திட ஏதுவாக உதவியாளர், 2 இளநிலை உதவியாளர்,2 தட்டச்சர்கள்,3 பதிவுறு எழுத்தர் மற்றும் 2 அலுவலக உதவியாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பேசினார்.

நிகழ்ச்சியில் ராம்கோ தலைவர் செ.முருகேசன், மாவட்ட அம்மா பேரசை துணை செயலாளர் மருதுபாண்டியன், ராமநாதபுரம் ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஆ.செல்லத்துரை, உதவி செயற்பொறியாளர் தி.குருதிவேல்மாறன், ராமநாதபுரம் வட்டாட்சியர் நா.சண்முகசுந்தரம், உட்பட அரசு அலுவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி: திரு. தாஹீர், கீழை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ஏர்வாடி பெரிய கன்மாவை தூர் வார கோரிக்கை!!

No comments :

ஏர்வாடியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாராமல் உள்ள பெரிய கண்மாயை மழைநீரை தேக்க உடனே தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஏர்வாடியில் பெரிய கண்மாய் உள்ளது. இக்கண்மாய் மற்றும் அதில் உள்ள கிணற்றால் ஏர்வாடிதொத்தன்மாவடிவெட்டமனைஅடஞ்சேரிசின்னஏர்வாடி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்தது. 



கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கண்மாயை தூர்வாராமல் இருப்பதால் சிறிதளவு மழை பெய்தாலும் தண்ணீர் தேக்க முடியாத நிலையில், சீமை கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் தேவைகளுக்கும் கால்நடைகளுக்கும் தண்ணீர் இல்லாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர்.


அதேபோல் இந்த கண்மாயில் உள்ள கிணறு 1936ம் வருடம் தோண்டப்பட்டு இன்று வரை வற்றாத கிணறாக உள்ளது. இந்த கிணற்றில் தண்ணீர் சுத்தம் செய்யாமல் உள்ளதால், யாரும் பயன் படுத்துவதில்லை. ஆகவே இந்த கிணற்றையும் தூர்வாரினால் 20க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யலாம்.

ஆகவே மாவட்ட நிர்வாகம் மழை கால தண்ணீரை தேக்க உடனே கண்மாயை தூர்வார வேண்டும் என்று கலெக்டருக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

பாம்பன் பாலத்தில் தொடரும் விபத்துகள் , சுற்றுலா வேன் கவிழ்ந்து பலர் படுகாயம்!!

No comments :
திருப்பூரில் இருந்து சகாதேவன் என்பவர் தனது குடும்பத்தை சேர்ந்த 15 பேருடன் ஒரு சுற்றுலா வேனில் ராமேசுவரம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். இவர்கள் நேற்று அதிகாலை 6 மணி அளவில் பாம்பன் ரோடு பாலத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வேகத்தடை அருகே நிலைதடுமாறி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலை தடுப்பில் மோதி பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


இதையறிந்த அக்கம் பக்கத்தினரும், போலீசாரும் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் வேன் டிரைவர் ராஜ்குமார் என்பவருக்கு கால் முறிந்தது. இதேபோல ரஞ்சித் (வயது 30) என்பவருக்கு கை முறிந்தது. மேலும் வேனில் இருந்த சகாதேவன் (45), மணிமேகலை(50), சந்திரமுகி(40) ஆகியோரும் படுகாயம் அடைந்தனர். உடனே காயமடைந்த அனைவரும் ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் 5 பேரும் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.




இந்த விபத்து ஏற்பட அதிக உயரம் கொண்ட வேகத்தடையும், தடுப்புமே காரணம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். முன்பு பாம்பன் பாலத்தில் வழுவழுப்பான சாலையால் அதிக விபத்துகள் நடந்ததாகவும், தற்போது இந்த தடுப்பாலும், உயரமான வேகத்தடையாலும் வாகன ஓட்டுனர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவதுடன், விபத்துகள் நடக்க அதிக வாய்ப்பிருப்பதாகவும் அப்பகுதியினர் தெரிவித்தனர்.

மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Sunday, October 29, 2017

மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்தில் வேலை வாய்ப்பு!!

No comments :

மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்தின் வன மற்றும் சுற்றுசூழல் பணியிடத்தில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .

மத்திய சுற்றுசூழல் திட்டத்தில் பணி செய்ய மொத்தம் நிரப்பபடும் பணியிடங்களின் எண்ணிக்கை 18 ஆகும். தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் சுற்றுச்சூழலில் சயிண்டிஸ்ட் டி, சயிண்டிஸ்ட் சி, சயிண்டிஸ்ட் பி போன்ற பணியடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



இப்பணிகளுக்கு1 லட்சத்து 31 ஆயிரம் முதல் 2 லட்சத்து 16 , 400 வரை அந்தந்த பிரிவுகளுக்கேற்ற சம்பளம் அளிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி : சம்மந்தப்பட்ட பிரிவுகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சயிண்டிஸ்ட் பணிகளுக்கு விண்ணப்பிக்க சயிண்டிஸ்ட் பி, சி பணிகளுக்கு மாதம் 45 வயதுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மத்திய சுற்றுசூழல் பணிக்கு விண்ணப்பிப்போர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினர்க்கு ரூபாய் 100 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்கள் மாற்றுதிறனாளிகள் போன்றோர்க்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த அவசியமில்லை.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :

ஸ்பெஷல் ஆஃபஸர் மினிஸ்ட்ரி ஆஃப் என்வைரண்மெண்ட் ,
ஃபாரஸ்ட் அண்ட் கிளைமேட் சேஞ்ச்
1ஸ்ட் ஃப்ளோர்,
பிளாக் பிருத்வி,
இந்திரா பார்யவரன் பவண்,
ஜோர் பாக் ரோடு,
அல்காஞ்சி,
நியூ டெல்லி 110003,

மேலும் தேவையான விவரங்களை தெரிந்து கொள்ள இணைய http://envfor.nic.in/sites/default/files/ADVT%20NO.%2001022017.pdf  அறிந்து கொள்ளவும்.






(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Saturday, October 28, 2017

ராமநாதபுரம் நகரில் தொடரும் போக்குவரத்து நெரிசல், மக்கள் அவதி!!

No comments :
ராமநாதபுரம் நகரில் சாலை ஒரங்களில் வாகனங்களை நிறுத்தி 
செல்வதால், தொடரும் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் செல்ல முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

மதுரை -ராமநாதபுரம் சாலை, ராமநாதபுரம் -ராமேஸ்வரம் சாலை களில் போக்குவரத்து அதிகளவில் உள்ளன. குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், வாகனங்களில் செல்லும் போது, சாலைகளில் நிறுத்தி பயணிகளை இறக்கும் பஸ்களால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஐந்து நிமிடங்களில் கடக்க வேண்டிய சாலை 30 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்கும் அவல நிலை ஏற்படுகிறது. 

பஜாரில் கடைகளுக்கு வரும் மக்கள் தங்களது நான்கு சக்கர, இரு சக்கர வாகனங்களை வணிக நிறுவனங்களின் முன்பாக நிறுத்தி விட்டு செல்கின்றனர். இடப்பற்றாக்குறை காரணமாக சாலை ஓரங்களில், இந்த வாகனங்கள் ஆக்கிரமிப்பு செய்து விடுகின்றன. 

சாலை ஓரத்தில் நிறுத்தி பயணிகளை இறக்க வேண்டிய பஸ்கள் நடு ரோட்டில் நிறுத்தி பயணிகளை இறக்குகின்றனர். பஸ் நிற்பதால், அதற்கு பின் வாகனங்கள் வேறு வழியில்லாமல் அதன் பின் நிறுத்தப்படுகின்றன. இப்படி தொடர்ந்து வாகனங்கள் நிறுத்தப்படுவதால், கடும் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கி தவிக்கின்றன.

பயணிகளை நடு ரோட்டில் நிறுத்தி இறக்கும் பஸ்களை ஒரமாக நிறுத்த சொல்ல முடியாத நிலையில் போலீசார் உள்ளனர். சாலையோர பகுதிகளில் ஏற்கனவே வாகனங்கள் ஆக்கிரமிப்பு செய்து நிறுத்தப்பட்டு விடுகின்றன. 

இதன் காரணமாகவே போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது. ஒரு புறம் பஸ் செல்வதற்கும், வருவதற்கும் வழி இருந்தும் இரு புறமும் ரோடுகளில் வாகனங்களை நிறுத்திக் கொண்டால், மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளன.
இதனை போலீசார் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

மதுரை, ராமேஸ்வரம் மெயின் சாலையில் திருமண மண்டபங்கள் அதிகளவில் உள்ளன. விசேஷ நாட்களில் திருமண மண்டபத்திற்கு வரும் வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாததால், சாலையோரங்களில் 
நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை போக்குவரத்து போலீசார் முறைப்படுத்த வேண்டும்.

சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களை நிறுத்த விடாமல் செய்ய வேண்டும். வணிக வளாகங்களுக்கு செல்பவர்கள் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். குறுகலான சாலைப்பகுதிகளில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்க கூடாது. 

அரசு, தனியார், மினி பஸ்கள் பயணிகளை இறக்கி, ஏற்றுவதற்கு சாலையோரங்களில் அகலமான இடங்களில் பஸ் நிறுத்தம் மாற்றம் செய்து, சாலையின் ஓரத்தில் நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். சாலையின் நடுவே தடுப்பு கம்பங்கள் அமைத்து, வாகனங்களை முறைப்படுத்தி இயக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Thursday, October 26, 2017

தமிழகத்தில் 2017 -2018 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணை!!

No comments :
மாணவர்களே உங்களுக்கான பொது தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது . தமிழகத்தில் 2017 -2018 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணை பள்ளிக் கல்வித்துறையால வெளியிடப்பட்டுள்ளது.

நடப்பு கல்வி ஆண்டு முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அறிவிப்பு அரசு அறிவித்துள்ளது.

அதனையடுத்து மாணவர்களுக்கு தேர்வு தொடர்பான கேள்வி தொகுப்புகள் மாதிரி அடங்கிய புளு பிரிண்ட் அடங்கியவற்றை வெளியிட்டது .

நடப்பு ஆண்டு முதல் பிளஸ் 1 மாணவர்கள், பிளஸ்2 மாணவர்கள் மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பொதுத்தேர்வு நடத்தும் பொறுப்பு கொண்ட பள்ளிக்கல்வித்துறை அதுகுறித்து விரைந்து செயல்ப்பட்டு வந்தது . தற்பொழுது தேர்வுத்துறை இயக்கம் மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்து மூன்று வகுப்புகளுக்கும் தேர்வு தொடர்பான அட்டவணை விவரங்களை சரியாக தொகுத்துள்ளது .




Class 10th (SSLC) Exam Schedule 2018 announced
Tamil 1st paper – March 16
Tamil 2nd paper – March
 21
English 1st paper – March 26
English 2nd paper – April 4
Maths – April 10
Science – April 17
Social Science – April 20


Class 11th Exam Schedule 2018 announced
Tamil 1st paper – March 7
Tamil 2nd paper –
 March 8
English 1st paper –
 March 13
English 2nd paper –
 March 14
Chemistry, Accountancy – April 13
Commerce, Home Science, Geography – March 23
Maths, Zoology, Micro Biology, Nutrition & Dietetics – March 21
Computer Science, Typewriting, Communicative English, Indian Culture, Bio- Chemistry, Advanced language – April 3
Biology, History, Botany, Business Maths – April 9
Political Science, Nursing, Statistics – April 13
Physics, Economics – March 27



Class 12th Exam Schedule 2018 announced

Tamil 1st paper – March 1
Tamil 2nd paper – March 2
English 1st paper – March 5
English 2nd paper – March 6
Chemistry, Accountancy – March 26
Commerce, Home Science, Geography – March 9
Maths, Zoology, Micro Biology, Nutrition & Dietetics – March 12
Computer Science, Typewriting, Communicative English, Indian Culture, Bio-Chemistry, Advanced language – April 6
Biology, History, Botany, Business Maths – April 2
Political Science, Nursing, Statistics – March 15
Physics, Economics – March 19

வாழ்த்துக்கள்!!

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

அழிந்து வரும் பனை மரங்களால், பாதிக்கபடும் பனைத்தொழில் குடும்பங்கள்!!

No comments :
அழிந்து வரும் பனை மரங்களால், இதனை சார்ந்த தொழில் செய்யும் ஐந்து லட்சம் பனைத்தொழிலாளர் பாதிப்படைந்துள்ளனர்.
தமிழகத்தில் ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாமக்கல், சேலம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் 5 கோடி பனைமரங்கள் உள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 கோடி பனைமரங்கள் இருந்தது. 50 லட்சம் மரங்கள் செங்கல் காளவாசல், சாயப்பட்டறைகளுக்கு எரி பொருளுக்காக அழிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பனை மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. நாளுக்கு நாள் பனை மரத்தின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. பனை மரத்தொழிலும் பாதிக்கப்பட்டு வருகிறது.


ஆண்டுக்கு ஒரு பனை மரத்தில் 10 பாலைகள் வரை வரும். இதனை சீவித்தான் பதநீர் சேகரிக்கப்படும், பனை ஓலைகள் மூலம் பாய், பெட்டி, போன்ற பொருட்கள் செய்ய முடியும். கடந்த கால வறட்சியினால், பாலைகள் விடுவது குறைந்தது. இதன் மூலம் பெட்டிகள், ஓலை பாய்கள், போன்ற பொருட்கள் செய்ய முடியாத நிலை உள்ளது. பனைத்தொழிலை நம்பியுள்ள குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. 

பனை மரங்களை காக்க அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது, சம்பந்தபட்ட் துறைகள் கவனிக்குமா?


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Wednesday, October 25, 2017

பழுதாகி நிற்கும் பேட்டரி கார்கள், அவதிப்படும் பக்தர்கள்!!

No comments :
ராமேசுவரம் கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

கோவிலின் ரத வீதிகளில் அரசு பஸ்கள் உள்ளிட்ட எந்தவொரு வாகனங்களும் செல்ல போலீசாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்கு வரும் பகதர்களின் வசதிக்காக கோவிலின் கிழக்கு வாசல் பகுதியில் இருந்து பக்தர்கள் செல்ல வசதியாக ரத வீதிகளில் நகராட்சியின் சார்பில் பேட்டரி கார்கள் கடந்த வருடங்களுக்கு மேலாகவே இயக்கப்பட்டு வந்தன.
ஒரே நேரத்தில் பேர் அமர்ந்து பயணம் செய்யும் அந்த ஒரு பேட்டரி காரில் ஒருவருக்கு ரூ.கட்டணம் என்ற அடிப்படையில் பேட்டரி கார்கள் ரத வீதிகளில் இயக்கப்பட்டு வந்தன. இதே போல் ராமேசுவரம் கோவில் சார்பிலும் பேட்டரி கார்கள் இயக்கப்பட்டு வருகின்றன.



இந்தநிலையில் ராமேசுவரம் நகராட்சியின் சார்பில் இயக்கப்பட்டு வந்த 5 பேட்டரி கார்களும் பழுதாகி கடந்த 5 மாதத்திற்கு மேலாக நிற்கின்றன. ரூ.25 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்ட பேட்டரி கார்களை நகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் பழுதாகி கிடக்கின்றன. மேலும் பழுதான பேட்டரி கார்களை சரி செய்து இயக்கவோ அல்லது புதிய பேட்டரிகார்கள் வாங்கி இயக்கவோ, நகராட்சி நிர்வாக அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.

இதனால் கோவிலுக்கு வரும் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பு மக்கள் அவதியடைந்து வருகின்றனர். பேட்டரி கார்கள் இயக்கப்படாததால் ரத வீதிகளில் நீண்ட தூரம் நடந்து சென்று அவர்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Tuesday, October 24, 2017

ஓ.என்.ஜி.சி யில் வேலை வாய்ப்பு, விண்ணப்பிக்க கடைசி நாள் 3-11-2017!!

No comments :


இந்தியா முழுவதும் ஓ.என்.ஜி.சி கிளை நிறுவனங்கள் செயல்படுகின்றன. தற்போது சென்னை உள்பட 17 கிளை மையங்களில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.

மொத்தம் 5 ஆயிரத்து 31 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 

இதில் தமிழக கிளைக்கு 105 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மற்ற கிளை வாரியான பணியிட விவரம் :
நாசிரா - 782 பேர், மும்பை - 560 பேர், அங்லேஸ்வர் - 486, மெசனா - 450, ராஜமுந்திரி - 385, டேராடூன் -286, காரைக்கால் - 285, டெல்லி - 284, வதோதரா - 251, அகமதாபாத் - 226, ஜோர்கட் - 224, அகர்தலா - 187, ஹாசிரா - 181, யுரான் - 120, காம்பே -115, காக்கிநாடா - 105.

விண்ணப்பதாரர்கள் 1-11-2017-ந் தேதியில் 24 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

12-
ம் வகுப்பு தேர்ச்சிக்குப் பின், வர்த்தகம், கணிதம், பி.காம் பட்டப்படிப்பு படித்தவர்கள், 10-ம் வகுப்பு தேர்ச்சிக்குப் பின், சிவில், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக், பிட்டர் உள்ளிட்ட பிரிவில் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன.

அந்தந்த பணிக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு ஆகியவற்றை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்த்து விட்டு விண்ணப்பிக்கவும்.

கல்வித்தகுதி மற்றும் திறமை அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிப் பணியில் சேர்க்ப்படுவார்கள்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி, தேவையான சான்றுகள் இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பம் அந்தந்த கிளையின் எச்.ஆர். பிரிவு அதிகாரி முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். தமிழக விண்ணப்பதாரர்கள்

ONGC Cauvery Basin,
I/C HRER,
Thalamuthu Natarajan building,
CMDA towers No.1,
Gandhi Irwin Road,
Egmore,
Chennai 600008

என்ற முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் சென்றடைய கடைசிநாள் 3-11-2017-ந் தேதியாகும்.

விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும், முழுமையான விவரங்களை அறிந்து கொள்ளவும் www.ongc.co.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Monday, October 23, 2017

ரிசர்வ் பேங்க் பணி வாய்ப்புகள், நேர்காணல் இல்லாமல்!!

No comments :
இந்தியாவின் தலைமை வங்கி கிளைகள் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுகிறது. தற்போது இந்த கிளைகளில் உதவியாளர் (அசிஸ்டன்ட்) பணிக்கு 623 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் சென்னையில் 15 பணியிடங்கள் உள்ளன. அதிகபட்சமாக கான்பூர் லக்னோ கிளையில் 44 இடங்களும்புதுடெல்லியில் 47 இடங்களும்கவுகாத்தியில் 36 இடங்களும் உள்ளன.

விண்ணப்பதாரர்கள் 1-10-2017 தேதியில் 24 முதல் 28 வயது உடையவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு ஆண்டுகளும்எஸ்.சி.எஸ்.டி. பிரிவினருக்கு ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது.




ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்து, 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கணினி இயக்கும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும்.

முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

**இந்தப் பணிக்கு நேர்காணல் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.**

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.450 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் முன்னாள் படைவீரர்கள் ஆகியோர் ரூ.50 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 10-11-2017-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். பின்னர் பூர்த்தியான விண்ணப்பத்தை நகல் எடுத்து குறிப்பிட்ட முகவரிக்கு 25-11-2017-ந் தேதிக்குள் கிடைக்கும் படி அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்கவும், இது பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.rbi.org.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)