முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, December 28, 2017

துவங்கியது ராமநாதரம் பொருட்காட்சி, ஏராளமானோர் கண்டுகளிப்பு!!

No comments :
ராமநாதபுரத்தில் குழந்தைகள், பெரியவர்களை மகிழ்விக்கும் வகையில் பொருட்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையொட்டி ராமநாதபுரத்தில் முதன் முறையாக ராட்சத கழுகு பொருட்காட்சி ரயில்வே கேட் அருகே தொண்டியப்பா எஸ்டேட் பகுதியில் கடந்த 24ம் தேதி முதல் நடந்து வருகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் வகையில் ஜுராசிக் பார்க், நீர் சறுக்கு, செயற்கை அருவி, படகு சவாரி, உள்ளிட்ட பல விளையாட்டுகள் உள்ளன.


இதுதவிர 3டி ஜாலங்கள், அதிவேக பைக் சாகசம், திகிலூட்டும் பேய் வீடு, எலக்ட்ரிக் பெண்மணி என பொழுதுபோக்கிற்கு அனைத்து அம்சங்களும் உள்ளன. புதுமையான மேஜிக் ஷோ நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. சிறப்பு உணவு வகைகளும் தயாரிக்கப்படுகின்றன.

பொருட்காட்சிக்கு வருபவர்களுக்கு மெஹந்தி, வண்ண மீன்கள், ஸ்டேசனரி, முகமுடி உள்ளிட்ட பொருட்களில் ஏதேனும் ஒன்று இலவசமாக வழங்கப்படுகிறது. மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை பொருட்காட்சி நடைபெறும். வரும் ஜன. 28 வரை இந்த பொருட்காட்சி நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள், குழந்தைகள் பொருட்காட்சியை ரசித்து வருகின்றனர்.


செய்தி: தினகரன்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

திருஉத்திரகோசமங்கை கோவில் திருவிழாவை முன்னிட்டு 02.01.2018 அன்று உள்ளூர் விடுமுறை!!

No comments :
ராமநாதபுரம்  மாவட்டம், கீழக்கரை வட்டம்,  திருஉத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு 02.01.2018 அன்று செவ்வாய்;கிழமை  ஒருநாள் மட்டும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறைஆகவும்;, அதனை ஈடு செய்யும் பொருட்டு வரும் 20.01.2018 அன்று சனிக்கிழமை பணிநாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும்  20.01.2018 அன்று வழக்கம்போல் இயங்கும்.

இந்த உள்ளுர்; விடுமுறை நாள் செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், 02.01.2018 செவ்வாய்;கிழமை அன்று ராமநாதபுரம்  மாவட்டத்திலுள்ள  கருவூலம், சார்நிலை கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான  அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.


மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்.நடராஜன் தெரிவித்துள்ளார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்ட வார்டு மறுவரையறை பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில், உள்ளாட்சி தேர்தலுக்கான வார்டு மறுவரையறை பட்டியலை கலெக்டர் நடராஜன் வெளியிட்டார்.

உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம், அக்.,2016ல் முடிவடைந்த நிலையில், செப்.,ல் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்தல் நடத்த இருந்த நிலையில், உள்ளாட்சி வார்டு எல்லைகளை மறு வரையறை செய்தபின்,தேர்தல் நடத்த வேண்டும், என்றஉயர்நீதிமன்ற உத்தரவால் தேர்தல்ரத்து செய்யப்பட்டது.

தமிழ்நாடு மறுவரையறை ஆணைய ஒழுங்குமுறைகளின் படி 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு, ஏற்கனவே உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள வார்டு எண்ணிக்கையில் மாற்றங்களின்றி, சராசரி மக்கள் தொகையை கணக்கில் கொண்டு வார்டு எல்லைகள் மறு வரையறை செய்யப்பட்டது.

அதன்படி, மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில், கிராம ஊராட்சி வார்டுகள் எண்ணிக்கையில் 25 சதவீதம் கூடுதலாகவோ, அல்லது குறைவாகவோ இருக்கலாம். ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கு 10 சதவீதம் கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கலாம்.

அதன்படி, மாவட்டத்தில் 3,075 கிராம ஊராட்சி வார்டுகளும், 170 ஊராட்சி ஒன்றிய வார்டுகளும், 17 மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கான மறுவரையறைபட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் நடராஜன் பட்டியலை வெளியிட்டார்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Wednesday, December 27, 2017

இந்திய விமானப்படை வேலை வாய்ப்புகள், விண்ணப்பிக்க கடைசி நாள் ஜன-10!!

No comments :
இண்டியன் ஏர்போர்ஸ் ரெக்ரூட்மெண்ட்டில் பல்வேறு பணியிடங்களுக்கு விருப்பமுள்ளோர் வின்ணப்பிக்கலாம்.

இந்தியன் ஏர்போர்ஸ் ரெக்ரூமெண்ட் பணியிடத்தில் வேலை வாய்ப்பு பெற மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 2 ஆகும்.
ஏர்போர்ஸ் ரெக்ரூட்மெண்டில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க இறுதிநாள் ஜனவரி 10 , 2018.

இண்டியன் ஏர்போர்ஸில் ஹவுஸ் கீப்பிங் ஸ்டாப் பணிக்கு மெட்ரிகுளோசன் படிப்பினை முடித்திருக்க வேண்டும். 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். லெவல் 18000 சம்பளத் தொகை பெறலாம்.


இண்டியன் ஏர்போர்ஸில் ஹிந்தி டைபிஸ்ட் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 12 ஆம் வகுப்பு அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்திருக்க வேண்டும். 18 முதல் 25 வயதுகுள் இருப்பர் விண்ணப்பிக்க வேண்டும். சம்பளத் தொகையாக ரூபாய் 19,900 தொகை பெறலாம்.

ஏர் இண்டியன் பணிக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி , சர்டிஃபிகேட் இருப்ப்பிச்சான்றிதழ் நகழ் மற்றும் அனுபவச் சான்றிதழ் போன்றவையுடன் சுயவிவரங்கள் இணைத்து இருக்க வேண்டும் . ஒபிசி பிரிவினருக்கு சில ஒதுக்கீட்டு அந்த பிரிவினருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் தகவல்களை பெற ஆன்லைன் இணைய இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம்

http://indianairforce.nic.in/ விருப்பமுள்ளோர் அதனை பயன்படுத்தலாம்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

கீழக்கரை “ஃபில்சா புர்கா”, புதுப்பொலிவுடன் புதிய ஸ்தலத்தில்!!

No comments :

கடந்த சில வருடங்களாக கீழக்கரை பழைய போலீஸ் ஸ்டேஷன் அருகில் இருந்த ஃபில்சா புர்கா, வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப தற்பொழுது நடுத்தெரு ஜும்மா பள்ளி அருகில் குயின் டிராவல்ஸ் எதிரி்ல் புதுப் பொலிவுடன் இடம் மாற்றம் செய்யப்பட உள்ளது.
இன்ஷாஅல்லாஹ் வரும் 29/12/2017 வெள்ளிக்கிழமை ஜூம்-ஆ விற்கு பிறகு  திறப்பு விழா நடைபெருகிறது.

திறப்பு விழாவை முன்னிட்டு முதல் மூன்று நாட்களுக்கு புர்கா மற்றும் தாவனி வகைகள் தள்ளுபடி விலைக்கு விற்கப்படும.

அனைவரும் வருகை தந்து விழாவை சிறப்பிக்க அழைக்கின்றனர்

அன்வர் பாதுஷா & ரபீக் மரைக்கா


தொடர்பு எண் 8220966427 / 7339378700


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Sunday, December 24, 2017

கீழக்கரை சாலையில் வழிந்தோடும் சாக்கடை, அதிகாரிகள் கவனிப்பார்களா?!!

No comments :

கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் குறிப்பாக வடக்குத்தெரு பகுதி 19ம் மற்றும் 20ம் வார்டுகளில் கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் தெருக்களில் நிறைந்து பாதசாரிகளுக்கு சிரமத்தை கொடுத்துள்ளது.


இதைப்பற்றி அப்பகுதியைச்சார்ந்த திரு.நசுருதீன் கூறுகையில்:

இந்த கால்வாய் அடைப்பைப்பற்றி பலமுறை நகராட்சியில் புகார் செய்தும் நடவடிக்கையில்லை. தேங்கும் கழிவுநீர் அருகிலுள்ள பெண்கள் தொழுகைப்பள்ளிக்குள் வழிகிறது(வீடியோ பதிவு)தொழுகைக்கு வருபவர்களும், பள்ளிக்கு செல்லும் மாணவர்களும், அவ்வழி செல்லும் பாதசாரிகளும் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். இதன் காரணமாக நோய் பரவும் அபாயமும் இருக்கிறது.


சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்க எடுக்க வேண்டும் என்பதே எங்கள் பகுதி மக்களின் கோர்க்கை என்று கூறினார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் போதுமான இருக்கை வசதி இல்லாததால் பயணிகள் அவதி!!

No comments :
ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்டில் போதுமான இருக்கை வசதி இல்லாததால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

ராமநாதபுரம் நகரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.  தினமும் 500க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.  நகர பஸ்களில் சுமார் 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் தினமும் வந்து செல்கின்றனர். 

இதனால் பஸ்களில் கூட்டம் எப்போதும் நிரம்பி வழிகிறது. ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்டில் தற்போது டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. 

அங்கு பயணிகள் வசதிக்காகப் போதுமான இருக்கை வசதிகள் இல்லை. இதனால் பயணிகள் உட்காருவதற்கு இடம் இல்லாமல் தரையில் உட்கார வேண்டியுள்ளது.  இதனால் கூட்ட நேரங்களில் பஸ்சிற்காக காத்து நிற்கும் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  


நகராட்சி நிர்வாகத்தினர் பயணிகளின் நலன் கருதி விரைவில் இருக்கை வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Thursday, December 21, 2017

சௌத் இண்டியன் வங்கி வேலை வாய்ப்பு, விண்ணப்பிக்க கடைசி நாள் டிச-30!!

No comments :


சௌத் இண்டியன் வங்கி பணியிடத்திற்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும். சௌத் இண்டியன் வங்கி பணிக்கான கிளார்க் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சௌத் இண்டியன் வங்கி பணிக்கு மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள 468 கிளார்க் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

சௌத் இண்டியன் கிளார்க் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கிளார்க் பணியிட விவரங்கள்
கேரளா
தமிழ்நாடு
ஆந்திர பிரதேசம்
தெலங்கானா
டெல்லி என்சிஆர்


சௌத் இண்டியன் வங்கியில் வேலை வாய்ப்பு பெற தேர்வானது 2018 ஜனவரியில் நடைபெறும். 

நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித் தகுதியானது ஜனவரி 1992 ஜனவரி 1க்குள் பிறந்திருக்க வேண்டும். மேலும் டிசம்பர் 31, 1997 மேல் பிறந்தவர்கள் விண்ணப்பிக்க இயலாது. 

சௌத் இண்டியன் பணிக்கு விண்ணப்பிக்க மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகள் , ஆங்கிலம் தவிர தெரிந்திருக்க வேண்டிய மொழிகள் ஆகும்.

கல்வித்தகுதி : பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு அத்துடன் இளங்கலை பட்டம் ரெகுலர் கோர்ஸில் பெற்றிருக்க வேண்டும்.

சௌத் இண்டியன் வங்கியில் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் முழு விவரம் தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்

விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 600 தொகை செலுத்த வேண்டும் . எஸ்சி, எஸ்டி பிரிவினர்கள் ரூபாய் 150 செலுத்தினால் போதுமானது ஆகும். விண்ணப்பிக்க அறிவிக்கையை உடன் இணைத்துள்ளோம்.


சௌத் இண்டியன் பணிக்கு விண்ணப்பிக்க இறுதி தேதி டிசம்பர் 30, 2017 ஆகும். 


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Tuesday, December 19, 2017

எய்ம்ஸ் மருத்துவமனை வேலை வாய்ப்பு, விண்ணப்பிக்க கடைசி நாள் டிச-25!!

No comments :
எய்ம்ஸ் என அழைக்கப்படடும் இந்திய புவனேஸ்வர் கிளையில் காலியாக உள்ள 1096 சீனியர் நர்சிங் ஆபிசர், ஸ்டாப் நர்ஸ் ஆபிசர், ஸ்டாப் நர்ஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை அனுப்பலாம்.
ஸ்டாப் நர்சிங் ஆபீசர் , நர்சிங் ஆபிசர், ஸ்டாப் நர்ஸ் (கிரேடு 2) போன்ற பணியிடங்களுக்கு வயது 25.12.2017 தேதி முதல் கணக்கில் எடுத்து கொள்ளப்படும். நர்சிங் பிரிவில் 4 ஆண்டு பிஎஸ்சி பட்டம் பெற்றவர்கள் டிப்ளமோ நர்சிங் முடித்தவர்கள் , நர்சிங் மிட்வைபரி முடித்து நர்சிங் கவுன்சிலில் பெயரை பதிவு செய்தவங்க வேலை வாய்ப்பு பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள் .விண்ணப்பத்தை செலுத்த அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் தேவையான தகவல்களை பெறலாம். ஒடிசா புவனேஸ்வர் கிளையின் இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம்.


தேவையான தகவல்களை பெறலாம். விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 1000 செலுத்த வேண்டும். எஸ்எசி, எஸ்டி மற்றும் மாற்றுதிறனாளிகள் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமணையில் வேலை வாய்ப்பு பெற எழுத்து தேர்வு மற்றும் கணினி தேர்வு வைத்து அவற்றில் வெற்றி பெறுபவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 25, 2017 ஆம் நாள்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Monday, December 18, 2017

ராமேசுவரத்தில் மார்கழி மாத அமாவாசை முன்னிட்டு பக்தர்கள் புனித நீராடினர்!!

No comments :
ராமேசுவரத்தில் மார்கழி மாத அமாவாசை முன்னிட்டு   அக்னிதீர்த்தக்கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்  புனித நீராடினர்.

ராமேசுவரத்தில் மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில்  ஆயிரத்துக்கு  மேலான பக்தர்கள் ரயில் மற்றும் அரசு பேருந்து, தனியார் வாகனம் மூலம் வந்து குவிந்தனர். அதன் பின்னர் அக்னிதீர்த்தம் கடல் பகுதியி்ல் முன்னோர்களுக்கு வருடாந்திர திதி பூஜையும்,தர்பணபூஜைகள் மற்றும் சிறப்பு  பூஜைகள் செய்து முன்னோர்களை வழிபட்டு அக்னிதீர்த்தக்கடலிலும், ராமநாதசுவாமி திருக்கோயிலுள்ள  22 தீர்த்தக்கிணற்றில் புனித நீராடினார்கள்.

அமாவாசையை முன்னிட்டு திருக்கோயிலில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி குடிநீர் வசதிகள், ஓய்வு இடங்கள்,வழக்கத்தைவிட பக்தர்களுக்கு கூடுதாலக அன்னதானம் உள்பட சிறப்பான முன் பாதுகாப்பு ஏற்பாடுகளை திருக்கோயில் இணை ஆணையர் மங்கையர்க்கரசி  உத்தரவின்பேரில் உதவிக்கோட்ட பொறியாளர் மயில்வாகனன் ஆலோசணைப்படி அலுவலர்களும்.ஊழியர்களும் செய்திருந்தனர். ராமேசுவரம் கோயிலில் மார்கழி மாதத்தையொட்டி நடைகள் திறப்பு நேரம் மாற்றம்.
 ராமேசுவரம்,டிச,17:ராமேசுவரம் கோயிலில் மார்கழி மாதத்தையொட்டி பக்தர்களின் வசதிக்காக மார்கழி மாதம் 1 ஆம் தேதி முதல் திருக்கோயில் நடைகள் திறக்கப்படும் நேரம் கோயில் நிர்வாக அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதிகாலையில் 3 மணிக்கு கோயில் நடைகள் திறக்கப்பட்டு தொடர்ந்து அதிகாலையில் 4 மணி முதல் 5 மணிவரை பூஜை நடைபெறும். அதனை தொடர்ந்து காலபூஜைகளும், சிறப்பு பூஜைகளும்,தீபாரதனை வழிபாடுகளும் நடைபெறும்.அதன் பின்னர் இரவு 8 மணிக்கு கோயில் நடைகள் சாத்தப்படும். அதுபோல பக்தர்கள் கோயிலுள்ள புனித தீர்த்தத்தில் நீராடுவதற்காக அதிகாலை 5 மணிக்கு தீர்த்தக்கவுண்டர்கள் திறக்கப்படும் என கோயில் இணை ஆணையர் மங்கையர்க்கரசி தெரிவித்தார். 


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரத்தில் ஜன்சேவா கூட்டுறவு சங்கத்தின் சார்பில் வட்டியில்லா கடன்!!

No comments :
ராமநாதபுரத்தில் ஜன்சேவா கூட்டுறவு சங்கத்தின் சார்பில் தொழில் முனைவோருக்கு  வட்டியில்லாமல் தொழில் கடன் வழங்கப்படுகிறது.

ராமநாதபுரத்தில் ஜன்சேவா கூட்டுறவு கடன் சங்க தலைவர்  நஜ்முதீன், செயலாளர் காஜிஅலி, பொருளாளர் காதர்மீரான் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசின் வேளாண் மற்றும் கூட்டுறவு அமைச்சகத்தின் அங்கீகாரத்துடன் இந்தியாவில் 12 மாநிலங்களில் 33 கிளைகளுடன் செயல்பட்டு வரும் ஜன்சேவா கூட்டுறவு கடன் சங்கம் ராமநாதபுரத்தில் முகம்மது சதக் சென்டர் வளாகத்தில் தனது புதிய கிளை தொடங்கி வட்டியில்லா கடன் வழங்கி வருகிறது. இந்த கடன் சங்கத்தில் ஏதேனும் ஒரு அடையாள சான்றுடன் உறுப்பினராக சேர்பவர்களுக்கு அவர்களின் உத்தரவாதத்தின் அடிப்படையில் சேவை கடன் மற்றும் தொழில் கடன் வழங்கப்படுகிறது.  ஜன்சேவா கூட்டுறவு கடன் சங்கத்தில் வழங்கப்பட்ட கடன் தொகையில் 98 சதவீத கடன் தொகை முழுமையாக திருப்பி பெறப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் பல்வேறு வைப்பு நிதி, சேமிப்பு திட்டங்களின் மூலம் ரூ.5 லட்சத்தில் தொடங்கி ரூ.1 கோடியே 10 லட்சம் வரை பண பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. மருத்துவம், கல்வி முதலியவற்றிற்கு உடனடி கடன் உதவியும், தொழில்கடன் உள்ளிட்டவைகளுக்கு பயனாளி அளிக்கும் திட்ட அறிக்கையின் அடிப்படையிலும் கடன் வழங்கப்படுகிறது. 
 


வீட்டு உபயோக பொருட்களுக்கான கடன் ஒரு நபருக்கு ரூ.ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரையிலும், குழுக்கடன் ஒரு குழுவிற்கு ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது. தொழில் கடன் மேம்பாட்டு பயிற்சி பெற்று அதனை நிறைவு செய்த குழுக்களுக்கு ரூ.10 லட்சம் முதல் 50 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படும். தனிநபர் தொழில் கடன் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது.

ராமநாதபுரத்தில் கிளை தொடங்கப்பட்டு கடந்த 6 மாதத்தில் 200 பேருக்கு ரூ.60 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது.  கடன் வாங்கியவர்கள் தாங்கள் பெற்ற கடன் தொகையில் தொடங்கப்பட்ட தொழில் முறையாக நடத்த முடியாமல் போனால் அவர்களின் கடன் தொகையை இருக்கும் தொழில் பொருட்களை விற்பனை செய்து பங்கிட்டு கொள்ளும் வசதி உள்ளதால் பயனாளிகளை மேலும் கடனாளியாக்கும் அவல நிலை இந்த கூட்டுறவு சங்கத்தில் இருப்பதில்லை. எந்த ஒரு மதத்தினருக்கு மட்டுமல்லாமல்அனைத்து மதத்தினருக்கும் பாரபட்சமின்றி ஜன்சேவா கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள், தொழில் முனைவோர்கள் இந்த சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து தங்களின் தொழில் வாய்ப்பினை பெருக்கி கொள்ளலாம். வட்டியில்லாமல் கடன் வழங்குவதால் இந்தியா முழவதிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஜன்சேவா கூட்டுறவு கடன் சங்கம் தற்போது ராமநாதபுரத்திலும் மக்களின் பேராதவை பெற்று வருகிறது.


செய்தி: தினபூமி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Sunday, December 17, 2017

ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!!

No comments :

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகிற 23–ந்தேதி ராமேசுவரம் வருகை தர உள்ளார்.

விமானம் மூலம் மதுரை வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் மண்டபம் முகாமில் உள்ள ஹெலிபேட் தளத்தில் வந்திறங்குகிறார். பின்னர் தேசிய நெடுஞ்சாலை வழியாக காரில் ராமேசுவரம் செல்கிறார்.

ஜனாதிபதியின் வருகையையொட்டி மாவட்ட கலெக்டர் நடராஜன், போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ராமேசுவரம் வந்தனர். அப்போது மண்டபம் முகாம் ஹெலிகாப்டர் தளம், அப்துல் கலாம் நினைவிடம், கோவில் ரத வீதிகள் போன்ற பகுதிகளில் பார்வையிட்டு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.


அப்போது கடைகள் முன்பு ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த நிழற்கூரைகள், பிளாட்பாரங்கள் போன்றவை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. இந்த பணியில் வருவாய்த்துறையினர், நகராட்சி பணியாளர்கள், தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்பு அகற்றத்தையொட்டி பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதேபோல தங்கச்சிமடம், பாம்பன் ஆகிய பகுதிகளிலும் துணை தாசில்தார் அப்துல் ஜப்பார் தலைமையில் அதிகாரிகள் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

செய்தி: தினத்தந்தி(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Wednesday, December 13, 2017

ஏர்போர்ட் இந்தியா அத்தார்ட்டி வேலை வாய்ப்புகள்!!

No comments :


ஏர்போர்ட் இந்தியா அத்தார்ட்டியில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஜூனியர் அஸிஸ்டெண்ட் மற்றும் கன்சல்டண்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுட்டுள்ளது.

இந்தியாவில் சிவில் ஏவியேசன் துறையானது மேலாண்மை , பாதுகாப்பு நிர்வாகம் போன்றவற்றில் முழு கவனம் செலுத்துகின்றது. இந்த சிவில் ஏவியேசன் துறையிலன் கீழ் 132 விமான நிலையங்கள் கண்காணிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

கல்வித்தகுகுதி :

ஏர்போர்ட் அத்தார்ட்டி இந்தியாவில் விண்ணப்பிக்க அறிவிக்கையில் நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதியானது டிகிரி, டிபளமோ , 10, 12 ஆம் வகுப்புகள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணியட்ங்களின் விவரங்கள் : ஏர்போர்ட் அத்தார்ட்டி ஆஃப் இண்டியாவில் வேலை வாய்ப்பு பணிகள் மும்பையில் பணியிடம் கொண்டது . இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க பத்து மற்றும் டிப்ளமோ மெக்கானிக்கல், ஆட்டோ மொபைல் பாடத்தில் 50% தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மொத்தம் பணியிடங்கள் நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கையானது 170 ஆகும் ஏர்போர்ட் அத்தார்ட்டி ஆஃப் இந்தியாவில் வேலை வாய்ப்பு பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது வரம்பானது 18 முதல் 30 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏர்போர்ட் அத்தார்ட்டியில் ஆஃப் இந்தியாவில் பணியிடம் பெற மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேஷ் மற்றும் கோவா போன்ற இடங்களுக்கு விண்ணப்ப்பிக்கலாம். ஏர்போர்ட் இந்தியாவில்

கன்சல்டண்ட் :

ஏர்போர்ட் இந்தியாவில் கன்சல்டண்ட் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் ஒன்றாகும். கன்சல்டண்ட் பணியிடத்திற்கு பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஏரோநாட்டிக்ஸில்  பணிகள் பெற  அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு இணைத்துள்ளோம்.
அவற்றில் படித்து அறிந்து கொள்ளவும்.

ஏர்போர்ட் அத்தார்ட்டி ஆப் இந்தியாவில் கன்சல்டண்ட் பணியிடத்திற்கு ரூபாய் 65,000 சம்பளத் தொகை பெறலாம். 1500 கன்வேயன்ஸ் தொகையும் பெறலாம். ஏர்போர்ட் அத்தார்ட்டியில் பணி வாய்ப்பு பெற விண்ணப்பிக்க டிசம்பர் 25 ,2017 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)